பகுத்தறிவு தீவிரவாதம் – திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!

பகுத்தறிவு என்ற போர்வையில் பலவிதமான தீவிரவாதங்கள் வெளிப்படுவது ஆச்சரியமாக உள்ளது.

ஒரு திருமணத்தில், திருமண நிகழ்ச்சியில், அதற்குண்டான விளம்பரத்தில், இப்படி இருக்கிறது!

இதன் ஆசிரியர், ஒரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் – வீரமணி!

இதில் என்ன நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளது?

ஏற்கெனவே சாவு நிகழ்ச்சிகளில்கூட – அதாவது – “கருமாந்திரம்” – பாகுபாகு பார்க்கிறது, இந்த “பகுத்தறிவு”க்கூட்டம்!

பகுத்தறிவா, வெறியா

பகுத்தறிவா, வெறியா

மகிழ்ச்சிகரமான வேலையில் எப்படி இத்தகைய எண்ணங்கள் வரும்?

சூத்திரப்பட்டம் ஒழிய

கோயிலுக்குப் போகாதீர்!

நெற்றிக்குறிகளை இடாதீர்கள்!

பார்ப்பானை பிராமணன் என அழையாதீர்!

31-01-2010 ஞாயிறு காலை 11 மணி மதுரை PTR அரங்கில்  எங்கள் இல்ல திருமணத்தை நடத்தி வைக்க வருகை தரும் தமிழர் தலைவர் கி. வீரமணி அய்யா அவர்களை வருக வருக எனனான்புடன் வரவேற்கிறோம்!

அதாவது திருமண அழைப்பிதழில் இப்படி இருக்கிறது!

இப்பொழுது, மணத்தில் இத்தகைய நாற்றம், முட நாற்றம்!

இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா?

பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்?

பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா?

பொட்டு-பூ-வைத்து நடத்தும் பகுத்தறிவு கல்யாணம்!

பொட்டு-பூ-வைத்து நடத்தும் பகுத்தறிவு கல்யாணம்!

“சேலம் சங்கர் நகரில் உள்ள வன்னிய குல சத்திரியர் திருமண மண்டபத்தில் 27.1.2010 அன்று காலை 9.30 மணிக்கு டி.கவுதமன்-டி.சுஜாதா ஆகியோரின் வாழ்க்கை இணை ஏற்பு விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி நடத்தி வைத்தார்” – இது விடுதலை செய்தி-படம், பக்கம்.4

திராவிட புரோகிதர், பகுத்தறிவு ஐயர், தமிழ் பார்ப்பனராக மாறியுள்ள வீரமணி முதலில் பென்களின் நெற்றியிலுள்ளதை அழித்து திருமண இணைப்புச் சடங்கை ஆரம்பித்து இருக்கலாமே?

அங்கு வந்த பெண்களின் தாலிகளைக் கழட்டச் சொல்லியிருக்கலாமே?

ஆமாம், அதென்ன, “வன்னிய குல சத்திரியர் திருமண மண்டபம்“? பிறகு வைசிய திருமண மண்டபம், சூத்திர திருமண மண்டபம் என்றெல்லாம் கூட இருக்குமா?

முதலில் அந்த பெயரை மாற்ற வேண்டாமா?

அதுதான் கருணாநிதியே வழிகாட்டிவிட்டாரே, கல்யாணம் நடக்கும்போதே, மாப்பிள்ளையின் பெயரை மற்றுகிறார்!

இதனை எதற்கு  திராவிட புரோகிதர் சகித்துக் கொண்டார்?

அந்த ஜாதி மட்டும் இனிக்கிறதா அல்லது பயமாக இருக்கிறதா?

எதற்கு பொய்கள்? பித்தலாட்டங்கள்?

குறிச்சொற்கள்: , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக