சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை!

“சாணக்யன் ஒரு துரோகி’ : பா.ம.க., ராமதாஸ் பேச்சு

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

குறிச்சொற்கள்: , , , ,

3 பதில்கள் “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை!” க்கு;

  1. vedaprakash சொல்வதென்னவென்றால்:

    ஆதரவின்றி ஆட்சியில் அமர முடியாது:தி.மு.க.,வுக்கு குரு மறைமுக சவால்
    பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:32 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13983

    வேதாரண்யம்:”"தமிழகத்தில் வன்னியர் ஆதரவின்றி யாரும் ஆட்சியில் அமர முடியாது,” என்று, வன்னியர் சங்க மாநில தலைவர் குரு, தி.மு.க.,வுக்கு மறைமுக சவால் விடுத்து பேசினார்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு ஓரடியம்புலத்தில், கட்சியின் பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

    வன்னியர் சங்க மாநில தலைவர் குரு பேசியதாவது:தமிழகத்தில் தி.மு.க., – அ.தி.மு.க., – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வன்னியர்கள் ஆதரவுடன் தான் முதல்வராக முடிந்தது. ஆனால், வன்னியர்கள் முன்னேற்றத்துக்கு இக்கட் சிகள் எதுவும் செய்யவில்லை. ஆறு கோடி தமிழர்கள் உள்ள தமிழகத்தில், இரண்டு கோடி வன்னியர் கள் உள்ளனர். அவர்களை ஒன்று திரட்டி எங்கள் பலத்தை நிரூபிப்போம்.வன்னிய சமுதாயத்தினர் முன்னேற, கல்வி கிடைக்க வேண்டும். வேலைவாய்ப்பில் முன்னுரிமை வேண்டும். இது குறித்து, மத்திய, மாநில அரசுகளிடம், தனி இட ஒதுக்கீடு வேண்டும் என போராடி வருபவர் ராமதாஸ்.

    நடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு அனைத்து தொகுதியிலும் தோல்வியுற்றதால், “பாட்டாளி மக்கள் கட்சி அழிந்து விடும், வன்னியர்கள் அழிந்து விட்டனர்’ எனக் கூறினர். ஆனால், பென்னாகரம் இடைத் தேர்தலில் பணபலத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டது.

    இரண்டு கோடி வன்னியர்களின் மானம் காப்பாற்றப்பட வேண்டும்; அதற்கு, நாங்கள் பணமா, மானமா எனக் கேட்டோம். பணத்தை விட, இரண்டு கோடி வன்னியர்களின் மானம் தான் பெரிது என, அந்த இடைத்தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. எத்தனை கோடி ரூபாய் செலவு செய்தாலும் வன்னியர் இனத்தை அழிக்க முடியாது.எங்களை அழிக்க திட்டம் போட்டு செயல் பட்டால், யார் அழியப்போகின்றனர் என்பதை காலம் பதில் சொல்லும். தமிழகத்தில் வன்னியர் ஆதரவின்றி யாரும் ஆட்சியில் அமர முடியாது.இவ்வாறு குரு பேசினார்.

  2. vedaprakash சொல்வதென்னவென்றால்:

    தி.மு.க., உறவு: பா.ம.க., செயற்குழு நாளை முடிவு
    பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010,01:36 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13988

    சென்னை:ராஜ்யசபா எம்.பி., பதவிக்காக தி.மு.க., விதித்துள்ள நிபந்தனையை ஏற்று, தி.மு.க., கூட்டணியில் இணைவதா என்பது குறித்து முடிவு செய்ய, பா.ம.க., செயற்குழு நாளை கூடுகிறது.பா.ம.க., நிறுவனர் ராமதாசின் மகன் அன்புமணியின் ராஜ்யசபா எம்.பி., பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, அவர் மீண்டும் எம்.பி.,யாக, தி.மு.க.,வின் ஆதரவை பா.ம.க., கோரியது. தி.மு.க., கூட்டணியில் இடம் பெற விரும்புவதாகவும், அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்க வேண்டுமென கேட்டு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், முதல்வர் கருணாநிதிக்கு இரு கடிதங்களை எழுதினார்.பா.ம.க.,வின் இந்த வேண்டுகோள் குறித்து, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக்குழுவில் விவாதிக்கப் பட்டது. “2011ம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலுக்கு பின் வரும் ராஜ்யசபா தேர்தலில் பா.ம.க.,விற்கு ஒரு சீட் வழங்கப் படும்; இதை பா.ம.க., ஏற்க வேண்டும்’ என உயர்நிலை செயல்திட்டக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ராமதாஸ் தலைமையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் குழுவினர் முதல்வரை சந்தித்துப் பேசினர்.

    ராஜ்யசபாவிற்கான தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, அவர்கள் மனுவும் தாக்கல் செய்ததால், பா.ம.க.,வின் ஆசை நிராசையானது.தி.மு.க.,வின் நிபந்தனையை ஏற்று கூட்டணியில் சேர்ந்து, 2013ல் ராஜ்யசபா சீட் பெறுவதா, தி.மு.க., கூட்டணியில் சட்டசபை பொதுத் தேர்தலை சந்திக்க ஒப்புதல் கொடுப்பதா, அவ்வாறு ஒப்புதல் கொடுத்தால் எவ்வளவு தொகுதிகளைக் கேட்பது என்பது குறித்து கட்சியின் முன்னணி நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் நேற்று ஒன்று கூடி, ஆலோசனை நடத்தினர்.இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. பா.ம.க.,வின் செயற்குழு நாளை கூடுகிறது. தி.மு.க., கூட்டணியில் தொடர்வது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு அறிவிக்கப் படுமென பா.ம.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

  3. சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது! « பகுத்தறிவு தீவிரவாதம சொல்வதென்னவென்றால்:

    [...] [2] http://rationalisterrorism.wordpress.com/2010/06/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0… [...]

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s


Follow

Get every new post delivered to your Inbox.