மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசை முழங்க உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி: அறிவுலக ஆசான் சிலை திறப்பு விழா: தமிழர் தலைவருக்கு பேண்டு வாத்தியம் இசை முழங்க வரவேற்பு

பகுத்தறிவு போர்வையில் எதையுமே மாறாக – எதிர்மறையாக செய்யும் இவர்கள் வீரமணி வரும் போது ஒப்பாரி வைக்கலாமே?

ஐயோ, ஐயய்யோ, வந்துட்டாரய்யா, வந்துட்டாரய்யா, என்று கூவலாமே?

மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசைகளுக்குப் பதிலாக பறைமேளம் அடிக்கலாமே?

மாலை-சால்வைக்கு பதிலாக வேறு ஏதாவது போடலாமே?

சிரிப்பதற்கு பதிலாக அழலாமே?

பகுத்தறிவு, தன்மானம், சுயமரியாதை, இனமானம் முதலியவை அப்பொழுது மழுங்கிவிடடகின்றனவோ?

தூத்துக்குடி, மே 20_ தூத்துக்குடியில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவில் கலந்து-கொள்ள தூத்துக்குடி வந்த தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலை-வர் கி. வீரமணி அவர்-களுக்கு ரயில் நிலை-யத்-தில், மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மேள தாளங்கள் முழங்க உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

இன்று பெரியார் சிலை திறப்பு: தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை தென்பாகம் காவல் நிலையம் அருகில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா இன்று மாலை சுமார் 6 மணி-யளவில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழர் தலைவரும், திரா-விடர் கழகத் தலைவரு-மான கி. வீரமணி அவர்-கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

மாலை பேரணி: முன்னதாக மாலை 4 மணியளவில் கழகத் தோழர்கள் பங்கேற்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீமிதி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்-சிகளை தலைமை நிலை-யச் செயலாளர் வீ. அன்பு-ராஜ் 3 ஆவது மைல் என்ற இடத்தில் தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச் சிறப்பு-மிக்க இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (20.5.2010) காலை தூத்-துக்குடி வந்து சேர்ந்த தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு, பெரியார் சிலை அமைப்-புக் குழு புரவலரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகிக்க, மாவட்ட திரா-விடர் கழகத் தலைவர் பேரா. கனகராசு வர-வேற்புரை வழங்குகிறார்.  நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழகப் பொதுச்செய-லாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செய-லாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்-ணன், மேயர் கஸ்தூரி தங்கம், தென் மாவட்ட திராவி-டர் கழகப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் தே.எடிசன் ராஜா ஆகி-யோர் முன்னிலை வகிக்-கின்றனர். திராவிடர் கழகம் நடத்தும் சமூக விழிப்பு-ணர்வூட்டும் நிகழ்ச்சியை-யொட்டி தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் முனிய-சாமி நன்றியுரை நிகழ்த்து-கிறார்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில், பேண்டு வாத்திய இசை முழங்க தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு கொடுக்கப்-பட்டது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுடன் தலைமை நிலைய செயலா-ளர் வீ. அன்புராஜ் அவர்-களும் உடன் சென்றிருந்-தார்.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக