புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு, பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்” !

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு, பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்” !

புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு

இன்ஜின் அதிர்வுடன் சென்ற ரெயில்: விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. டிரைவரின் முன்னெச்சரிக்கை அறிவிப்பால் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து தப்பியது. தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்களின் மூலம், இந்தக் கொடூரத் திட்டம், புலி ஆதரவாளர்களின் கை வரிசையா என்பதன் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர். சேலத்திலிருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (1064) விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து நேற்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டது. டிரைவர் சேகரன் ரயிலை ஓட்டி வந்தார். விக்கிரவாண்டி ரயில் நிலையத்தை கடந்து பேரணி ரயில் நிலையத்திற்கு முன் உள்ள சித்தணி கிராமம் அருகே சென்ற போது (சென்னையில் இருந்து 145வது கிலோ மீட்டரை அடுத்து 300வது மீட்டர் தூரம் அருகே) ரயில் பாதையில், அதிகாலை 2.10 மணிக்கு ரயில் இன்ஜின் அதிர்வுடன் செல்வதை உணர்ந்தார். அடுத்த ரயில்வே ஸ்டேஷனான பேரணி ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் ருத்திரபாண்டியிடம், தண்டவாளத்தில் அதிர்வு உள்ளதாகவும் அடுத்த ரயிலுக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பும்படியும் கூறி விட்டுச்சென்றார். இதையடுத்து ஸ்டேஷன் மாஸ்டர் ருத்திரபாண்டி, ரயில்வே கண்ட்ரோல் ரூமிற்கு தகவல் தெரிவித்தார்.

எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலை சமயோஜிதமாக நிறுத்தினார்: அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் விழுப்புரம் ரயில் நிலையத்தை கடந்திருந்தது. உடனே அதிகாரிகள் அடுத்ததாக உள்ள முண்டியம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் அதிகாலை 2.20 மணிக்கு ராக்போர்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி இன்ஜின் டிரைவரிடம் எச்சரிக்கை நோட்டீஸ் வினியோகித்து பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து ராக்போர்ட் ரயில் இன்ஜின் டிரைவர் கோபிநாத் ராவ், ரயிலை மெதுவாக செலுத்தி தண்டவாளத்தை கூர்ந்து கவனித்து வந்தார். அதிகாலை 2.43 மணிக்கு எதிரே தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருப்பது தெரிந்து ரயிலைசமயோஜிதமாக நிறுத்தினார். பள்ளம் இருந்த இடத்திற்கு அருகே 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. டிரைவர் கோபிநாத்ராவ், உதவி டிரைவர் ராஜ்குமார் ஆகியோர் இறங்கி வந்து தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் 2,500 பயணிகள் உயிர் தப்பினர்.

பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்”: விழுப்புரம் டி.ஐ.ஜி., மாசானமுத்து, எஸ்.பி.,பகலவன் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். ரயில் தண்டவாளம் மற்றும் சிலிப்பர் கட்டைகள் டெட்டனேட்டரை பயன்படுத்தி வெடி வைத்து தகர்க்கப்பட்டிருந்தன. தண்டவாளத்தைத் தகர்க்க சதிகாரர்கள், அருகிலுள்ள சித்தணியை சேர்ந்த சீனுவாசன் மகன் செந்தாமரைக் கண்ணன் என்பவரது நிலத்திலுள்ள விவசாய மின் இணைப்பு பெட்டியின் பூட்டை உடைத்து பியூஸ் கேரியரை கழற்றி மின்சார ஒயர் மூலம் டெட்டனேட்டரை வெடித்திருப்பது தெரிய வந்தது. டெட்டனேட்டர் வெடித்தவுடன் தண்டவாளம் 3.5 அடி நீளத்திற்கு நான்கு துண்டுகளாக வெடித்துச் சிதறி அருகே 500 மீட்டர் தூரத்தில் கிடந்தது. சிமென்ட் சிலிப்பர் கட்டைகள் இரண்டு பாதியளவிற்கு உடைந்து சிதறி கருங்கற்கள் நிலத்தில் கிடந்தன. ரயில்வே மின் கம்பியும் சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே வெள்ளைத் தாளில் பேனாவால் எழுதப்பட்டிருந்த கடிதம் கிடந்தது. அதில் “இந்திய அரசே,ரத்த வெறி பிடித்த ஓநாய் ராஜபக்ஷே இந்திய வருகையை கண்டித்தும், தமிழின அழிப்புக்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம். தமிழா, இனியும் மவுனம் காத்தால் புரியாது நமது மவுன வலி. இவண் மேதகு பிரபாகரன் தம்பிகள் என எழுதப்பட்டிருந்தன.

விழுப்புரம் (12-06-2010): ரயில்வே தண்டவாளத்தை தகர்த்த வழக்கில் தமிழ் ஆர்வலர்கள் ஆறு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி அருகே நேற்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் ரயில்வே தண்டவாளத்தை தகர்த்தனர். இதனால், விழுப்புரம் – சென்னை மார்க்கமாக ஆறு மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வந்தனர். இருப்பினும், சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த கடிதத்தின் அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான இயக்கத்தினர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர்.அதன் பேரில், தமிழ் தேசிய இயக்க விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், தமிழ் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஜோதிநரசிம்மன், ஏழுமலை, இளங்கோ, கருணாநிதி, பாபு ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்[1].

வெடிவைத்து தகர்த்த விதம்: விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி- பேரணி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள, சித்தணி கிராமத்தின் அருகே நேற்று அதிகாலை நாசகாரர்களால் வெடி வைத்து, ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டது[2]. இதில், ஒரு தண்டவாளத்தின் பாதை மட்டும் 3 அடி தூரத்திற்கு சேதமாகியது. தண்டவாளத்தை தகர்க்க, மர்ம நபர்கள் சித்தணி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை கண்ணன் விவசாய பம்ப் செட்டிலிருந்து, மின் இணைப்பு மூலம் வெடி குண்டை வெடிக்க செய்து, ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளனர். இதில் மர்ம நபர்கள் முதல் முயற்சியாக, மின்கம்பத்தின் கீழே வைத்திருந்த மின் இணைப்பு பெட்டிக்கு, நேர் கிழக்கே உள்ள தண்டவாளத்தின் மூன்று சிலிப்பர் கட்டைகளின் மீதிருந்த, ஜல்லி கற்களை இரு புறத்திலும் அப்புறப்படுத்தி வெடி வைக்க முயன்றுள்ளனர். இருப்பினும், இந்த பகுதியில் மற்றொரு ரயில் பாதை அமைக்க, ஜல்லிகள் உயரமாக கொட்டியிருந்ததால் அப்பகுதியை தவிர்த்து விட்டு, தெற்கு புறமாக சமமான பகுதியில் மின் ஒயர் பயன்படுத்தி, மின் இணைப்பை செலுத்தி வெடிக்கச் செய்துள்ளனர்.மேலும், ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் குண்டு வைத்து ரயில் தண்டவாளத்தை தகர்க்க, மர்ம நபர்கள் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மின் இணைப்பு கொடுக்க பயன்படுத்திய சில்க் ஒயரை மழை நீரால் நனைந்திருந்த நிலத்தின் மண் மீது அமிழ்த்தியும், சில இடங்களில் ஜல்லிகளை வைத்து ஒயரை பிசைவு ஏற்படாமல் இருக்கவும் செய்திருந்தனர்.இந்த செயலில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் ஒரு சில நாட்கள் திட்டமிட்டு, இந்த இடத்தை தேர்வு செய்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

சிதம்பரத்திற்கு வைத்த குறியாக இருக்குமோ? விக்கிரவாண்டி : விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வைக்கப்பட்ட குறியா என, போலீசார் விசாரிக்கின்றனர். தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் உயரதிகாரிகள் விசாரணையில், “திடுக்’ தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று முன்தினம் இரவு திருச்சியிலிருந்து புறப்பட்ட மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை சென்று அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் மத்திய அமைச்சரின் ரயில் பயணம் ரத்து செய்யப்பட்டது. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்தியாவிற்கு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, “இலங்கையில் தமிழினம் அழிவதற்கு துணை போன இந்திய அரசையும், தமிழக அரசையும் கண்டிக்கிறோம்”, என, வாசகங்கள் கிடந்தது. இதனால் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் நடவடிக்கையாக மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய இருந்த மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வைத்த குறியாக இருக்குமோ என, போலீசார் விசாரிக்கின்றனர்[3].

பழைய வெடிப்பு சம்பவங்கள், முயற்சிகள்: கடந்த 1996ம் ஆண்டு ஏப்., 12ம் தேதி இரவு பேரணி ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மாஸ்டரை வெளியே அனுப்பி விட்டு பைப் குண்டு வைத்து ஸ்டஷனை தகர்க்க சதி நடந்தது. அதே போல் 1993ம் ஆண்டு நவ., 25ம் தேதி விழுப்புரம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள காந்தி சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. 2002 நவ., 19ம் தேதியில் திருநாவலூர் அருகே உள்ள தொப்பையங்குப்பத்தில் போன் டவர் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. கடந்த ஜூன் 9ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இந்திய வருகையை கண்டித்து அவரது உருவ பொம்மைக்கு விக்கிரவாண்டி அண்ணாதுரை சிலை அருகே செருப்பு மாலை போடப்பட்டிருந்தது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட தமிழர் விடுதலை அமைப்புக்கு சம்பந்தம் உள்ளதா என, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரும் விபத்து தவிர்ப்பு ராக்போர்ட் டிரைவர் பேட்டி : விபத்து தவிர்க்கப்பட்டது குறித்து ரயில் டிரைவர் கோபிநாத் ராவ் கூறியதாவது:கும்பகோணத்திலிருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பணியில் இருந்தேன். விழுப்புரத்தில் அதிகாலை 2.20 மணிக்கு புறப்பட்டேன். முண்டியம்பாக்கத்தில் ரயிலை நிறுத்தி, வழியில் தண்டவாளத்தில் அதிர்வு இருப்பதாக முன்னால் சென்ற சேலம் எக்ஸ்பிரஸ் டிரைவர் புகார் கூறியுள்ளார். அதனால் ரயிலை பாதுகாப்பாக செலுத்தி செல்லுமாறு அறிவுறுத்தினர்.ரயிலை மெதுவாக செலுத்தி வந்த போது விக்கிரவாண்டியை தாண்டி பேரணி ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையில் தண்டவாளத்தில் பள்ளம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது. உடனே ரயிலை நிறுத்தினேன். 15 மீட்டர் தூரத்தில் ரயில் நின்றது. இறங்கி வந்து பார்த்த போது ரயில் தண்டவாளம், இடது புறத்தில் 3 அடி அளவிற்கு தகர்க்கப்பட்டு, 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது.இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். ரயில் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பியதாலும், முன்னெச்சரிக்கையாக ரயிலை செலுத்தியதாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு 2,500 பயணிகள் காப்பாற்றப்பட்டது குறித்து ஆண்டவனுக்கு நன்றி.இவ்வாறு கோபிநாத் ராவ் தெரிவித்தார்.


[1] தினமலர், தண்டவாளம் தகர்ப்பு தொடர்பாக ஆறு பேரிடம் போலீசார் விசாரணை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17918

[2] தினமலர், இரண்டு இடங்களில் தண்டவாளங்களை தகர்க்க திட்டம்?, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17892

[3] தினமலர், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்குகுறி?’ தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தில் தகவல், http://www.dinamalar.com/News_Detail.asp?Id=17891

குறிச்சொற்கள்: , , ,

9 பதில்கள் to “புலி ஆதரவாளர்கள் கொடூர திட்டம் : விழுப்புரம் அருகே குண்டு வைத்து ரயில் தண்டவாளம் தகர்ப்பு, பொறுப்பேற்கும் “மேதகு பிரபாகரன் தம்பிகள்” !”

  1. vedaprakash Says:

    விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?
    பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010,23:44 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=18501

    கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ள விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை போலீசார் கண்காணிக்காமல் விட்டதால், தற்போது பிரபாகரன் பெயரில் வெடிகுண்டு சம்பவம் நடந்துள்ளது. இதனால், புலிகள் ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கும் அபாயம் உருவாகியுள்ளது. இரு மாவட்ட போலீசாரும் கலக்கத்தில் உள்ளனர்.

    இலங்கையில் தனி நாடு கோரி போராடி வந்த விடுதலைப் புலிகளுக்கு, தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். சில அமைப்பினர் நிதி திரட்டியும் அனுப்பி வந்தனர். கடந்த 91ல் நிகழ்ந்த ராஜிவ் படுகொலைக்குப் பின், புலிகள் அமைப்பை, மத்திய அரசு தடை செய்தது.இருப்பினும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பழ நெடுமாறனின் தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்கம், தமிழர் படை, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம், தமிழிளைஞர் கூட்டமைப்பு, தமிழர் விடுதலை படை, தமிழர் விடுதலை இயக்கம், மக்கள் உரிமை கூட்டமைப்பு, உலக தமிழர் கூட்டமைப்பு, தமிழர் தேசிய இயக்கம், தமிழர் கழகம், தமிழர் மீட்சி படை உள்ளிட்ட சில அமைப்பினர், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இயங்கி வந்தனர்.கடந்தாண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், போரை நிறுத்த வலியுறுத்தியும், இலங்கை ராணுவத்திடம் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வலியுறுத்தியும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புலிகள் ஆதரவு அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்தின.

    இலங்கை தமிழர்களை காத்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கடலூரில் ஜோதி என்கிற தமிழ்வேந்தன் என்ற வாலிபர் கலெக்டர் அலுவலகம் முன், தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் எதிரொலியாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன.அதேபோல், 2009 ஜனவரி 29ம் தேதியன்று, தீக்குளித்து இறந்த முத்துக்குமார் மரணத்தைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் “ஆயுத எழுத்து’ என்ற அமைப்பு சார்பில், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. அதில், “இன்று இலங்கைத் தமிழனுக்கு குண்டு, நாளை இந்திய தமிழனுக்கும் உண்டு’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

    இலங்கை போரை தடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்புகள், மத்தியில் ஆட்சியில் இருந்த காங்., கட்சியையும், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.,வை கடுமையாக சாடின.அத்துடன் கடந்த லோக்சபா தேர்தலின் போது, “இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த இவ்விரு கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்’ என, திண்ணை பிரசாரம் செய்ததோடு, பொதுமக்களுக்கு “சிடி’யும் வழங்கினர். இந்த செயல்களை எல்லாம், கியூ பிரிவு மற்றும் சி.ஐ.டி., போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்நிலையில், கடந்தாண்டு மே மாதம் புலித் தலைவர் பிரபாகரன், ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதை, இம்மாவட்டங்களில் உள்ள புலி ஆதரவு அமைப்புகள் மறுத்தன. “பிரபாகரன் உயிரோடு உள்ளார். தேர்தலில் காங்., கூட்டணி தோல்வி அடைந்ததும் மீண்டும் பிரபாகரன், இயக்கத்தை வழி நடத்தி செல்வார்” என, பிரசாரம் செய்து வந்தன.புலிகள் ஆதரவு அமைப்புகளின் இப்பிரசாரத்தால் பிரதான கட்சிகள் கலக்கமடைந்தன.

    ஆனால், தேர்தல் முடிவுகள் எதிர்மறையாக இருக்கவே, புலிகள் ஆதரவு அமைப்பினரின் செயல்பாடு மந்தமடைந்தது. அமைப்புகள் முற்றிலுமாக முடங்கி விட்டதாகக் கருதி, அவர்களின் செயல்பாட்டை கண்காணிப்பதை காவல்துறையினர் கைவிட்டனர்.இதனால், கடந்த 8ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்ததை கண்டித்து நடந்த போராட்டங்களில் ஈடுபட்டவர்களை, பெயரளவிற்கு கைது செய்து உடனே விடுவித்தனர்.இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் சித்தணி அருகே நேற்று முன்தினம் அதிகாலை ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட இடத்தில் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் பெயரில் கிடந்த துண்டு பிரசுரங்கள் “கியூ’ பிரிவு போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடந்தாண்டு வரை தீவிரமாக செயல்பட்டு வந்த புலிகள் ஆதரவு அமைப்பினரை பிடித்து, தற்போதைய வெடிகுண்டு சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.புலிகள் ஆதரவு அமைப்புகள் மீண்டும் தலை தூக்கத் துவங்கி விட்டனவோ என்ற அச்சமும் போலீசார் மத்தியில் உருவாகியுள்ளது. அதைத் தடுக்க இப்போதே போலீசார் முனைப்போடு செயல்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழாது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

    நமது சிறப்பு நிருபர், –

  2. vedaprakash Says:

    தண்டவாளம் தகர்ப்பு “சதி’ குறித்து விசாரணை : இதுவரை முக்கியபுள்ளி சிக்கவில்லை

    * குண்டு வெடிப்பால் ரயில்கள் ஏழு மணி நேரம் தாமதம்
    * விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு: ரயில் சேவை பாதிப்பு

    பதிவு செய்த நாள் : ஜூன் 13,2010,23:47 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=18508

    விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் வெடி வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில், கியூ பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், பாதைகள் மற்றும் ரயில் பாலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சித்தணி கிராமத்தில், நேற்று முன்தினம் அதிகாலை 2.15 மணிக்கு ரயில்வே தண்டவாளம் மர்ம நபர்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ரயில்வே அதிகாரிகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால், மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திலிருந்து தப்பியது. ரயில் டிரைவர் கோபிநாத் ராவின் சமயோசிதத்தால், விபத்து தவிர்க்கப்பட்டு பயணிகள் காப்பாற்றப்பட்டனர்.விபத்து நடந்த இடத்திற்கு அருகேயுள்ள சித்தணி கிராமத்தில், கடந்த சில நாட்களாக அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் வாகனங்கள் ஏதாவது வந்ததா எனவும், இரவு வேளைகளில் வேறு ஏதாவது சத்தம் கேட்டதா எனவும் மாடு மேய்ப்பவர்கள் மற்றும் கிராம மக்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வெடி வைக்க பயன்படுத்தப்பட்ட மின் மோட்டார் கொட்டகையின் உரிமையாளர் சீனுவாசனிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கை கியூ பிரிவு போலீசின் விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. வழக்கின் முதல் தகவல் அறிக்கையை விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், விழுப்புரம் எஸ்.பி., பகலவனிடம் சமர்ப்பித்தார். பின், கியூ பிரிவு போலீசாரிடம் நேற்று வழக்கு ஒப்படைக்கப்பட்டது. சென்னை கியூ பிரிவு டி.ஐ.ஜி., சங்கர் ஜூவால் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை துவங்கியது.நேற்று மதியம் 12.45 மணிக்கு சென்னை கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமையில், மூன்று பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அங்கு சிதறிக் கிடந்த வெடிபொருட்கள், சந்தேகப்படும்படியான பொருட்களைச் சேகரித்தனர். அங்கு பணியில் இருந்து கீமேன் கிருஷ்ண காளியப்பனிடம் விசாரணை நடத்தினர். போலீஸ் மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து வந்து வி.சாலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள திருவேங்கடம், தாமோதரன் ஆகியோரது கடைக்கு அருகில் வந்து நின்றதால், அங்கும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.ஆனால், இந்த சம்பவத்திற்கு யார் முக்கிய காரணம் அல்லது தொடர்புடைய முக்கிய குற்றவாளி யாரும் சிக்கவில்லை.

    பாதுகாப்பு அதிகரிப்பு: ரயில் தண்டவாளம் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து,தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் ரயில் பாலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகே, ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ரயில்கள், “யார்டில்’ இருந்து நிலையத்திற்கு கொண்டு வரும்போது, ரயில்வே போலீசாரால் அனைத்து பெட்டிகளும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்யப்பட்டன. பார்சல்கள், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே ரயிலில்களில் ஏற்றப்படுகின்றன. எழும்பூரிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மூவரும், நான்கு ரயில்வே பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை – விழுப்புரம் – திருச்சி இடையே ரயில் பாதையில், “கேங்மேன்’கள் பணியிலிருந்தாலும், கூடுதலாக ரயில்வே பாதுகாப்பு படையினரும், உள்ளூர் தலையாரிகளும் இரவு நேரத்தில் பாதையை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர்கள், மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 6 மணி வரை ரயில் பாதையை கண்காணிப்பர். இந்தப்பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் 70 பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் பாதைகள் மற்றும் பாலங்களில் சந்தேகத்திற்கு இடமாக யாரும் தென்பட்டால் உடனடியாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    பழைய குற்றவாளிகளின் பட்டியல் சேகரிப்பு : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், புலிகள் அமைப்பிற்கு முன்னர் வெடிகுண்டுகள் கடத்தியவர்களின் பட்டியலை தயாரித்து, கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு தயாரிக்க அலுமினியக் கட்டிகள் கடத்திய கும்பல், அகதிகள் போர்வையில் வந்த படகோட்டிகள், போரில் காயமடைந்து தப்பி வந்தவர்கள், புலிகள் அமைப்பில் தொடர்புள்ள அகதிகள், செங்கல்பட்டு முகாமுக்கு மாற்றப்பட்டவர்கள் என, நீண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, தற்போது அவர்களின் நிலை குறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.இதுகுறித்து, கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, “”கடற்கரை மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தபட்டுள்ளது. வெடிகுண்டு வழக்கில் தொடர்புள்ள பழைய குற்றவாளிகள் தற்போது எங்குள்ளனர், என விசாரித்து வருகிறோம்’ என்றார்.

  3. vedaprakash Says:

    பழைய குற்றவாளிகளின்பட்டியல் சேகரிப்பு
    பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010,01:02 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=18599

    ராமநாதபுரம்:விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தில், புலிகள் அமைப்பிற்கு முன்னர் வெடிகுண்டுகள் கடத்தியவர்களின் பட்டியலை தயாரித்து, கியூ பிரிவு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிகுண்டு தயாரிக்க அலுமினியக் கட்டிகள் கடத்திய கும்பல், அகதிகள் போர்வையில் வந்த படகோட்டிகள், போரில் காயமடைந்து தப்பி வந்தவர்கள், புலிகள் அமைப்பில் தொடர்புள்ள அகதிகள், செங்கல்பட்டு முகாமுக்கு மாற்றப்பட்டவர்கள் என, நீண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, தற்போது அவர்களின் நிலை குறித்து விசாரிக்க துவங்கியுள்ளனர்.இதுகுறித்து, கியூ பிரிவு அதிகாரி ஒருவர் கூறும்போது, “”கடற்கரை மாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்தபட்டுள்ளது. வெடிகுண்டு வழக்கில் தொடர்புள்ள பழைய குற்றவாளிகள் தற்போது எங்குள்ளனர், என விசாரித்து வருகிறோம்’ என்றார்.

  4. vedaprakash Says:

    விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரம் : ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி மீது புகார்
    பதிவு செய்த நாள் : ஜூன் 15,2010,13:04 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19857

    விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ரயில்வே தண்டவாளம் தகர்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விழுப்பரம் கோர்ட் வக்கீல் கண்ணன் , சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., மீது டி.ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். முன்னதாக நிருபர்களுக்கு வக்கீல்கள் அளித்த பேட்டியில் : விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு விவகாரத்தில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலிக்கு தொடர்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்கான ஆதாரங்கள் தங்களி‌டம் இருப்பதாகவும். ஆனால் அதை வெளியிட்டால் வழக்கின் புலன் விசாரணைக்கு பாதகமாகிவிடும் என தெரிவித்தனர்.

  5. vedaprakash Says:

    ஈழ மக்கள் ஆதரவு எழுச்சியை அடக்க நடக்கும் நாடகமா ரயில் பாதை தகர்ப்பு?-சீமான் கேள்வி
    திங்கள்கிழமை, ஜூன் 14, 2010, 14:35[IST]
    http://thatstamil.oneindia.in/news/2010/06/14/villupuram-rail-track-blast-seeman-clarification.html

    சென்னை: தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு என்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.
    இதுகுறித்து சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

    விழுப்புரம் அருகே சித்தணியில் மர்ம நபர்கள் சிலர் ரயில் தண்டவாளத்தை வெடி வைத்துத் தகர்த்ததாகவும் விழிப்புணர்வுடன் துரித கதியில் ரயில்வே ஊழியர்கள் செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் ராஜபக்சேவின் வருகைக்கு எதிரான துண்டுப் பிரசுரம் ஒன்று கிடந்ததாகவும் அப்பிரசுரத்தில் பிரபாகரனின் தம்பிகள் என்று எழுதப்பட்டிருந்ததாகவும், ஆகவே பிரபாகரனின் ஆதரவாளர்கள் அல்லது ஈழ விடுதலை ஆதரவாளர்கள் இந்த தண்டவாளத் தகர்ப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் கூறியதாக நாளிதழ்களில் செய்திகள் வருகின்றன.

    ஆனால் இந்த தண்டவாளத் தகர்ப்பு தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பல்வேறு தகவல்கள் வெளிவருகின்றன.இதனை தெளிவு படுத்த வேண்டியது அரசின் கடமை.

    முதலாவதாக ரயில் தடம் புரள்வதையும், மோதலையும், நூற்றுக் கணக்கான மக்கள் அழிவையும் எதிர்பார்த்து குண்டு வெடிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு சிறிய காகிதத்தில் எழுதப்பட்ட சில வரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வியெல்லாம் தொக்கு நிற்கிறது. அப்படித்தான் உரிமை கோர வேண்டுமானால், சிறிய காற்றுக்குக் கூடத் தாக்குப்பிடிக்க முடியாத கையால் எழுதப்பட்ட காகிதத் துண்டு தான் அவர்களுக்கு கிடைத்ததா? மின்னியல் யுகத்தில் இவையெல்லாம் சோடிக்கப்பட்ட சிறுபிள்ளத் தனமானவையாகவே தோன்றுகின்றன. இப்படி இருக்கையில் சம்பவ இடத்தில் கிடந்த துண்டுப் பிரசுரத்தின் அடிப்படையில் விசாரணையைக் கொண்டு செல்வதாக போலீசார் கூறும் போது விசாரணை நேர்மையாக நடைபெறுமா? என்கிற அச்சம் எழுகிறது.

    அதே போல மாநிலக் காவல்துறைத் தலைவர் லத்திகா சரண் முழுமையான விசாரணை நடைபெறும் முன்பே சம்பவம் நடைபெற்ற ஒரு சில மணி நேரத்தில் இந்தச் சம்பவத்துக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்பு இல்லை என்று அவசர அவசரமாக அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை.

    புலனாய்வுத் துறை ஐ.ஜி.யான ஜாபர் சேட், இது விடுதலைப்புலி ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட செயல்தான் என்று விசாரணைக்கு முன்பே அறிக்கை கொடுத்தது ஏன் என்பதும் புரியவில்லை.

    சம்பவ நடந்த இடத்தில் கிடந்ததாக இவர்களால் சொல்லப்படும் துண்டுக் காகிதத்தை வைத்து இவர்களாகவே முடிவைச் சொலவது எவ்வாறு சரியாகும்? விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளம் தகர்ப்பு விஷயத்தில் காவல் துறையினர், முழுமையான விசாரணை செய்து, குற்றவாளிகளைப் பற்றிய தகவல்கள் பெறுவதற்கு முன்பே சம்பவம் நடந்த ஒருசில மணி நேரங்களில் அவசரப்பட்டு கருத்துத் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது என்பது புரியவில்லை.

    அதே போல முந்தைய சேலம் வண்டியின் டிரைவர் பயங்கர வெடிச் சத்தம் கேட்டவுடன் நிலைய அதிகாரி ருத்ரபாண்டிக்கு தெரியப்படுத்தியதாகவும் அவர் பேரணிக்கு முந்தைய ரயில் நிலையமான முண்டியம்பாக்கம் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தினார் என்றும் அதன் பின்பு திருச்சி வண்டியின் டிரைவர் 10 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இது நம்ப முடியவில்லை. ஏனென்றால் வெடிச் சத்தம் கேட்டவுடன் ரயிலை நிறுத்துவார்களே தவிர இயக்க மாட்டார்கள். இது போன்று பல சந்தேகங்கள் எழுகின்றன.

    சித்தணி தண்டவாளத் தகர்ப்பில் உண்மை நிலையை அரசு விளக்க வேண்டும். அதை விட்டு விட்டு பேரினவாத இலங்கை அரசிற்கு எதிராக போராடுகிறவர்களை அச்சுறுத்தும் நோக்கோடு முன்கூட்டியே திட்டமிட்டு விசாரணையை முன்னெடுப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் விஷயமாக உள்ளது.

    போர் நிறுத்தம் கேட்டுப் போராடிய போது தமிழர்கள் [^] தங்களைத் தாங்கள்தான் தீயிட்டுக் கொளுத்திக் கொண்டார்களே தவிர பொது மக்களுக்கு இடைஞ்சல் செய்ததில்லை. தவிறவும் பிரபாகரனின் தம்பிகள் யார் என்பதையும் இங்கே அடக்குமுறைச் சக்திகளுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    ஈழத் தமிழ மக்கள் மீதான வன்னி யுத்தத்தை பேரினவாத இலங்கை அரசு கட்டவிழ்த்து விட்ட போது தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்டு நாமெல்லாம் போராடினோம். தன்மானத் தமிழனும் வீரத்தியாகியுமான முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீர வேங்கைகள் தங்களின் இன்னுயிரை ஈந்தனர். பிரபாகரனின் உண்மையான தம்பியான முத்துக்குமார் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற பாடம் அதுதான். தன்னுயிரைக் கொடுத்து, தன்னை வதைத்து, தன்னை எரித்து பேரினவாதிகளை எதிர்ப்பதுதான் பிரபாகரன் [^] தம்பிகளின் போராட்ட மரபே தவிற அடுத்தவர் உயிர்களைப் பறிப்பதல்ல.

    பேரெழுச்சியோடு முத்துக்குமாரின் ஊர்வலத்தில் திரண்டு கண்ணீரோடு முத்துக்குமாரை வழியனுப்பிய தாய்மார்களும் பொதுமக்களும் தங்களுக்காக, தங்களின் இனத்துக்காக தன்னுயிர் ஈந்தவன் முத்துக்குமார் என்பதால் அவனை ஒரு மகனாக நினைத்து தமிழ்த் தாய் வணங்கி நிற்கிறாள். அப்படி தமிழ் தாய்மார்களின் வணக்கத்திற்குரியார்கள்தான் பிரபாகரனின் தம்பிகள் என்பதை நாம் தன்னலமற்ற தியாகத்தால் உலகுக்கிற்கு உணர்த்தியிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

    இதை எல்லாம் விட மிகச் சிறந்த வரலாற்று முன்னுதாரணமாக எம்மினத் தலைவர் அண்ணன் பிரபாகரனும் சான்றாகி நிற்கிறார். எதிரிக்கும் கூட கருணை காட்டு என்கிற விடுதலைப் போர் மரபுத் தத்துவத்தில் நம்பிக்கையுள்ள ஈழ விடுதலைப் போராளிகளே அதற்குச் சான்று. அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு [^] வலையத்திற்குள் அப்பாவி தமிழ் மக்களை அழைத்து வந்து லட்சம் லட்சமாக கொன்றொழித்தது பேரினவாத இலங்கை அரசு.

    தம் கண்ணெதிரே எந்த மக்களின் பாதுகாப்பிற்காக ஆயுதமேந்தினரோ அந்த மக்களே கொன்றொழிக்கப்பட்ட போது கூட தங்களிடம் இருந்த கனரக ஆயுதங்களாலோ, நவீன விமானங்களாலோ புலிகள் சிங்களர்களான பொது மக்களைத் தாக்கியதில்லை. பேரிவனவாத இலங்கை அரசின் பொருளாதார நலன்களையும், ராணுவக் கட்டமைப்பையும் சிதைப்பதாகத்தான் புலிகளின் தாக்குதல் [^] இருந்தது. ஏழு விமானத் தாக்குதல் நடத்தப்பட்டும் கூட அதில் ஒரு சிங்கள பொதுமகனாவது கொல்லப்பட்டிருப்பனா? என்பதை நான் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    போரை முன்னெடுத்த இலங்கை அரசிற்கும், போருக்கு துணை போன காங்கிரஸ் அரசிற்கும் எதிராக ஜனநாயக ரீதியாக தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டத் துவங்கியதும் பேரினவாத யுத்தக் குற்றவாளிக்கு டில்லியில் சிகப்புக் கமபள வரவேற்போடு, விருந்து கொடுத்து கௌரவித்ததையும் நினைத்து தமிழ் மக்கள் மனக் கொந்தளிப்புக்குளாகியுள்ளனர். தமிழகமெங்கிலும் பல்லாயிரம் பேர் ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து போராடி கைதாகினர். தமிழ் மக்களின் இந்த மனக்கொதிப்புகளை அடக்கியும் ஈழ மக்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சியையும் அடக்கி விடும் அற்ப நோக்கத்தோடு இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் சீமான்.

  6. K. Venkatraman Says:

    Nowadays, he has become another pasycho in Tamilnadu. He has been a rabble-rouser wherever, he goes with his filthiness. I do not know how people tolerate.

    • vedaprakash Says:

      கீழேயுள்ள வக்கில்களின் வாதமும், மேலேயுள்ள செபாஸிடியனின் வாதமும் ஒரே மாதிரியாக இருப்பதைக் காணவும்.

  7. vedaprakash Says:

    ரயில் பாதை தகர்ப்பு விவகாரம் : காங்., எம்.எல்.ஏ., மீது பகீர் புகார்
    பதிவு செய்த நாள் : ஜூன் 15,2010,23:15 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19928

    விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த சித்தணி அருகே, ரயில் பாதை தகர்ப்பு குறித்த வழக்கில் ராமநாதபுரம் காங்., எம்.எல்.ஏ., ஹசன்அலிக்கு தொடர்பு இருப்பதாக டி.ஐ.ஜி., அலுவலகத்தில் வக்கீல்கள் இருவர் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    விழுப்புரம் வைகுந்தவாசர் தெருவில் வசிக்கும் வக்கீல் கண்ணன், பூந்தோட்டம், கீழ் தெருவில் வசிக்கும் சென்னை ஐகோர்ட் வக்கீல் பாபு ஆகியோர் நேற்று மதியம் 1 மணிக்கு விழுப்புரம் டி.ஐ.ஜி., அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: விழுப்புரம் அடுத்த சித்தணி அருகே கடந்த 12ம் தேதி நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக, போலீசார் தமிழீழ விடுதலை ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.உண்மையில் இது போன்ற சதியினால் பயன் பெற்றதும், பயன் பெறப் போவதும் ஈழ விடுதலைக்கு எதிரான சக்திகள் மட்டுமே. ஈழ விடுதலைக்காக அவர்களின் துயரங்களை கண்டு போராடும் மக்களை பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தி பொதுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் முயற்சியாகவே இந்த சதித் திட்டம் நடந்துள்ளதாக நாங்கள் நம்புகிறோம். இச்சதித் திட்டத்தில் காங்., கட்சியைச் சேர்ந்த ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன்அலி ஈடுபட்டுள்ளதாக உறுதியாக நம்புகிறோம். எனவே ஹசன் அலியை விசாரணைக்கு உட்படுத்துவது அவசியம். அதற்கான காரணங்களை இங்கு விளக்குவது வழக்கின் புலன் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    வக்கீல்கள் கண்ணன் மற்றும் பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஹசன் அலி எம்.எல்.ஏ.,இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆதரவாளர். அடிக்கடி ராஜபக்ஷேவை சந்திக்கிறார். மேலும் இலங்கை தூதரக அதிகாரியாக இருக்கும் அம்சாவிடமும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்

  8. vedaprakash Says:

    விழுப்புரம் தண்டவாளம் தகர்ப்பு சம்பவம் : 8 பேர் விடுவிப்பு
    பதிவு செய்த நாள் : ஜூன் 16,2010,08:59 IST
    http://www.dinamalar.com/News_Detail.asp?Id=20478

    விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சித்தணி அருகே ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் ‌தொடர்பாக இலங்கை தமிழர் ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 3 நாட்களாக புறநகர் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் 8 பேரின் உறவினர்களும் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் ஜோதி நரசிங்கம், எழில் இளங்கோ, பாபு, கணேசன், ஜெயராமன், பாலமுருகன், ஏழுமலை, குமார் உள்ளிட்ட 8 பேரும் விடுவிக்கப்பட்டனர். தேவைப்படும் போது விசாரணைக்காக அழைக்கப்பட்டால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டனர்.

பின்னூட்டமொன்றை இடுக