Archive for the ‘கும்மிருட்டு’ Category

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

செப்ரெம்பர் 11, 2010

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[1]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களும், வியாபாரமும்: விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுள் என்றால், அல்லா, முஹமது, ஜேஹோவா, மேரி, ஏசு, ………………..முதலியவை என்ன ரகத்தில் வரும்? இவையெல்லாம் என்ன இந்தியாவில் இருந்தனவா? நாத்திகம் என்றால் அறிவு தேவையில்லையா? பகுத்தறிவு என்றால் புத்தி வேண்டாமா?

மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகமா, மக்களை ஏமாற்றும் வேலையா? மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகத்தை மெய்ப்பிக்க ரம்ஜானுக்கு, பக்ரீதுக்கு, கிருஸ்துமஸுக்கு………………………இத்தகைய துண்டு அறிக்கைகள் வளியிடுவார்களா? அதிலுள்ளவற்றை எடுத்துக் காட்டி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவார்களா?

கோவையில் விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ்[1] : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர் மீது கோவை போலீசில், இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பொதுமக்களும் பக்தியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்து அமைப்புகள் போலீஸாரிடம் புகார்: இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்,” முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு[2]:திண்டுக்கல்: கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய வாசகம்,போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகித்த தி.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் முன்பு நேற்று முன்தினம் சிலர் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்தனர். இதில் பார்வதியின் அழுக்கு உருண்டையில் பிள்ளையார் பிறந்ததுள்ளார்.பகவான் பிறப்பு இவ்வளவு அசிங்கமா சிந்திப்பீர். யானை தலையை மனிதருக்கு வைத்தால் பொருந்துமா என்று விநாயகர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.விநாயகர் பிறப்பை கேவலப்படுத்தியது, போட்டோக்கள் வெளியிட்டது, கெட்ட வார்த்தையால் திட்டியது, விநாயகர் சதுர்த்தியில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது ஆகிய குற்றத்திற்காக தி.க., மாவட்ட தலைவர் வீரபாண்டி உட்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்துள்ளார்.


[1] தினமலர், விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ் : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83176

[2] தினமலர், கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81504


[1] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

ஜூலை 18, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா: 11-07-2010 அன்று மியூக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம்[1] சார்பில் நடந்த நாடக விழாவில் நாத்திகர் முதல்வர் கருணாநிதி முதல் ஆத்திகர்கள் வரை பலர் கலந்து கொண்டது தமிழகத்தில் ஒரு விசித்திரமான நிகழ்ச்சிதான். அதைவிட விசித்திரமானது, ஓரளவிற்கு பிராமணர்களும், அதாவது திராவிடக் காழ்ப்புடன் சொல்வதானால், “பார்ப்பனர்”களும்[2] வந்திருந்தது அதைவிட அதிசயம். அதைவிட அதிசயமாக மேடையில், இந்த நாத்திக கருணாநிதி இரண்டு பார்ப்பனர்களுடன் உட்கார்ந்திருந்த காட்சி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட, நாம் தவறவிட்டுவிட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ள விழாவாக இருந்தது.

“ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”: பொதுவாக, நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, குறிப்புகள் எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுவது வழக்கம். ஆனால், சில காரணங்களுக்காக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே, தினமலரில் வந்த செய்தியை[3] அப்படியே போட்டுவிட்டு, அடைப்புக்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்து “ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”, என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்திருந்தேன்[4]. ஆனால், அதற்கு பலவிதமாக பதில்கள் வர ஆரம்பித்தன. ஒரு நிலையில் சில நண்பர்களிடம் அவர்களுடைய கருத்தைக் கேட்டேன். பிறகு, அந்நிகழ்ச்சியின் பின்னணியில் பலவித விஷயங்கள் இருந்ததை அறிந்தேன். முக்கியமாக, அரசியலாக்க நினைக்கும் போக்கு தேவையில்லாத ஒன்று என்பதனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

கருணாநிதி, தமிழ்-பாண்டித்யம், தமிழகம்: விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியின் எழுத்துகளைப் படித்து பார்க்கும்போது, அவரது தமிழ்பிரயோகம், நடை, சொல்லாக்கம், தமிழிலுள்ள பாண்டித்யம் முதலியவற்றை மறுக்கமுடியாது. ஆனால், நிச்சயமாக உண்மையான தமிழுணர்வு உள்ளவர்களுக்கு, அவர் பல நேரங்களில் தமிழை பாதுகாக்கத் தவறவிட்டார் அல்லது தமிழ் மொழியை இழிவு படுத்துபவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார் என்ற வருத்தங்கள் எல்லாம் அதிகமாகவே உள்ளது[5]. செம்மொழி மாநாட்டில் கூட, காலரீதியில் பாகுபாடு செய்து சைவ-வைணவ குறிப்பாக இந்துமதத்திற்கு இடங்கொடுக்காமல் செய்துவிட்டார் என்ற குறையுள்ளது[6].

இந்திய மாநில முதல்வர் என்றால் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் முதல்வர் என்ற ரிதியில் செயல்படுவதில் தவறிவிட்டார்: கருணாநிதி தமிழ்நாட்டிற்கு, இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வர் என்பதை அவர் பலமுறை மறந்து விடுகிறாரா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்து வந்துள்ளரா என்பதனை அவரே சொல்லவேண்டிய நிலை வந்துள்ளது. இவர் நாத்திகராக, ஏன் இந்து-விரோதி என்று மற்றவர்களால் குற்றஞ்சாட்டப் படக்குடிய நிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள 80% மேலாக உள்ள இந்துக்களுக்கும் முதல்வராவார். ஆனால், இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், கோவில் விவகாரங்களில் தலையிட்டு பிராமண-பிராமண துவேஷம், சமஸ்கிருதம்-தமிழ் என்ற விரோதம்[7], கோவில் நிலத்தை இந்துஅறநிலையத்துறை வழியாகவே விற்றது முதலிய பல காரிங்கள், இவரின்மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது[8] அந்த உண்மையை, மக்களின் உணர்வை எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கையுள்ள திக-திமுக-இந்துக்கள்கூட, “என்ன இவ்வளவு வயசாகியும், நம்ம தலைவர், இப்படி பேசராரே, நடந்து கொள்கிறரே”, என்று விசனித்துள்ளனர், வருந்தியுள்ளனர்[9].

கருணாநிதியின் பேச்சுகளும், அரசியலும், செக்யூலரிஸமும்: 40 வருடங்களாக இவர் பேசுவதைக் கேட்டிருப்பவர்கள், இவரது பேச்சின் தொணி, தோரணை, உருவகம், உயர்வு புகழ்ச்சி, சிலேடை, நையாண்டி………முதலியவற்றை தாராளமாகவே அறிந்திருப்பர், புரிந்து கொண்டிருப்பர். ஆக, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பாரம்பரியம், தமிழ் பண்பாடு, தமிழ் விழாக்கள், தமிழ் சடங்குகள், தமிழ் காரியங்கள் / கிரியைகள், தமிழ் நம்பிக்கைகள் என்றெல்லாம் பார்த்தால் இந்திய-இந்து தாக்கத்தை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. முதலில் சங்க இலக்கியத்தை படித்தவர்கள் அவ்வாறு சொல்லமாட்டார்கள்[10]. இருப்பினும், பொய் என்றும், மாயையென்றும், கட்டுக்கதையென்றும் சரித்திர ஆசிரியர்களால், உலகம் முழுவதும் குப்பைத் தொட்டியில் போர்ட்டுவிட்ட ஆரிய-திராவிட இனவாத கோட்பாட்டுகளை வைத்துக்  இந்து காரணிகளை வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள், வேறோடழிக்கத் துடிப்பவர்கள் ஏன் அதே காரணிகளை வைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொண்டு, சூடிக்கொண்டு உலாவரவேண்டும்?

வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள்: இனி தினமலரில் இன்று வெளிவந்துள்ள செய்தியின்படி என்ன என்று பார்ப்போம்: “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்”, என்ற செய்தியின்கீழுள்ளது[11]: “சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் முதல்வரை வானளாவப் புகழ்கின்றனர். புகழ்ச்சியை முதல்வர் விரும்புகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில், “என்னை புகழ்வதை விட்டுவிட்டு, தலைப்பை ஒட்டி பேசுங்கள்’ என முதல்வரே கடிந்து கொள்ளுமளவிற்கு, “புகழ் பா’ பாடுவதில் போட்டா, போட்டி நிலவியது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதியின், “போர்வாளும், பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் பங்கேற்ற இந்த விழா மேடையில், இதுவரை இல்லாத புதுமையாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்றனர். வழக்கமான புகழ்ச்சியுரை இன்றி, இயல்பான நோக்கில் விழா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதல்வருக்கு ஏற்றவாறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தங்களது பேச்சை மாற்றியமைத்துக் கொள்வார்களா? ஆன்மிகவாதிகளின் பேச்சை முதல்வர் எப்படி எதிர்கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது”.

திருச்சி கல்யாணராமன் பேசியது: குழப்புவது தினமலரா, நிருபரா? தினமரில் தொடர்கிறது, “இந்த எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கும் வகையில், திருச்சி கல்யாணராமனின் பேச்சு அமைந்தது”, என்று தினமலர் சொல்லிவிட்டு, “துவங்கியதில் இருந்து, இறுதி வரை முதல்வரை புகழ்வதிலேயே குறியாக இருந்தார் அவர். முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தனக்கு சம்பந்தமில்லாத அரசியலையும் தொட்டார். கல்யாணராமன் பேசும்போது, “கம்ப ராமாயணத்தின், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்ற பாடலைச் சொல்லி, அந்த பாட்டின் இறுதியில் வரும், “அன்னவருக்கே சரண் நாங்களே‘ என்று இறைவனுக்கு சொல்லப்பட்ட வார்த்தையை முதல்வரைக் காட்டி சொல்லி முடித்தார். இறைவனை விட மிக உயர்ந்தவர் எனும் பொருள்படும்படியாக, இறைவனின்இரு அவதாரங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார் என்றெல் லாம் கல்யாணராமன் முதல்வரை புகழ்ந்துரைத்தார். அதோடு, ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்தால்தான், முதல்வர் மகிழ்ச்சியடைவார் (!) என்ற எண்ணத்தில், “பிள்ளை இல்லாதவர்களை, எல்லாம் அம்மா என்று சொல்கின்றனர்‘ என்றது எல்லை தாண்டிய உச்சம்”, என்று முடித்திருப்பது நிருபரின் குழப்பம் என்றே தெரிகிறது.

வேளுக்குடி கிருஷ்ணன் பேசியது: தினமலர் தொடர்கிறது, “இதனால், அவருக்கு பின் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணனுக்கு, தேவையற்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஆட்படாதவராக வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது. இதை முதல்வர் கருணாநிதி பேச்சிலும் காண முடிந்தது.”

“அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ என்ற கருணாநிதி: தினமலர் தொடர்கிறது, “அவர் பேசும் போது, “வேளுக்குடி கிருஷ்ணனையும், திருச்சி கல்யாணராமனையும் முதன் முதலாக இந்த மேடையில் தான் பார்க்கிறேன். தேனினும் இனிய தமிழால் இங்கே அவர்கள் பேசியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை இத்தனை நாள் கேட்காமல் இருந்து விட்டோமோ என தோன்றுகிறது. அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ எனப் புகழாரம் சூட்டினார். “”பல்வேறு தரப்பினரின் விழாக்களில் பங்கேற்பதன் மூலம், பல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் முதல்வர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், விழா நடத்துபவர்களோ, முதல்வரைப் புகழ்வதில் குறியாய் இருந்து அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் முந்தைய செய்தி[12] (ஜூலை, 12, 2010,): முன்பு கருணாநிதி பேசியதாக வெளியிட்டுள்லதில், சில வரிகளுக்கு உள்-அர்த்தம் தெரியாமல் இருந்தது. ஏனெனில், வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பேசியதை அப்பொழுது வெளியாகவில்லை.

சென்னை, ஜூலை, 11, 2010,: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது.

“எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

“அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது”.

இப்படியிருக்கும்போது, ஈ-மெயிலில் நண்பர் அனுப்பினார், என்று, ஒரு நண்பர் அனுப்பியதில் இப்படியிருந்தது. பத்திகளாகப் பிரித்து தலைப்புகளை மட்டும் கொடுக்கிறேன்.

ஆழ்வார்களை, நாயன்மார்களை ஒதுக்கிவிட்டு நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு: தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அழக்கப்பட்டதேன்? அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரைஆழ்வார்என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

திரு.வேள்குடி கிருஷ்ணன் பேசியது: துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார். திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்துஇந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்என்று பேசியுள்ளார் கலைஞர்.

திருச்சி கல்யாணராமன் விமர்சனிக்கப்படுதல்: அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால் புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

தேவையில்லாமல் கூட்டப்பட்ட கமென்ட்: நண்பர் கூட இதையும் சேர்த்திருக்கிறார், “இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்”, என்று முடித்திருப்பதாக தெரிகிறது. ஏனனில், கடைசியில் “[edited]” என்றுள்ளது. சில இந்துக்களுக்கு, தமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அத்கமாகவே இருக்கிறது. வேதங்களில் பல சாகைகள் பெண் ருஷிகளால் / பண்டிதர்களால் இயற்றப்பட்டது[13] என்ற உண்மையை அறிந்தால், இப்படி யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில், இந்துக்களே இப்படி உளறினால், மற்ற இந்து-விரோத சக்திகள் இதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு கதையடிக்க ஆரம்பித்துவ்டுவார்கள்.

“பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியம், இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் என்றெல்லாம் எழுதியுள்ள தமிழர்கள்”: பார்ப்பனர்களே, இவ்வாறு தவறான தகவல்களைக் கொடுத்தால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? இதோ ஒரு தமிழர், இப்படி எழுதியுள்ளார்[14], “தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள்…………. இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி………………”. குறிப்பான வரிகள் மட்டும் இங்கு மேற்கோளாகக் காட்டப் படுகின்றன. அதாவது, ஈழப்பிரச்சினை, கருணாநிதி-எதிர்ப்பு, சாதிப்பிரச்சினை, உள்ளூர்-பிரச்சினை…….இப்படி எது இருந்தாலும், சம்பந்தமேயில்லாமல் பார்ப்பன-எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம், தூஷணம்………..முதலியவை இருப்பதும் வேடிக்கையே!

வேதபிரகாஷ்

18-07-2010


[1] ஜெகத்ரெக்ஸகன் “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” என்று வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக, ஆண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பண்டிதர்களை கௌரவித்து வருகிறார். இம்முறை, இது அரசியலாக்கப்பட்டுவிட்டது தெரிகிறது.

[2] “பார்ப்பனர் / பார்ப்பான்” என்ற சொற்பிரயோகம், திராவிட சித்தாந்திகளால் இழிவாக உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.

[3] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[4] வேதபிரகாஷ், ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

https://rationalisterrorism.wordpress.com/2010/07/13/ஆத்திக-நாமதாரிகளும்-நாத/

[5] இதை பல கட்டுரைகள் வாயிலாக பதிவு செய்துள்ளேன். குறிப்பாக திருக்குறள் விஷயத்தில், இவர் கிருத்துவர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டது.

வேதபிரகாஷ், திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்,

https://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

…………………………………., திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?, http://chemozhi.wordpress.com/2010/06/21/திருவள்ளுவரை-திருக்குறள/

[6] இதை பல தமிழறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டியிருந்தனர். இருப்பினும், இந்துமதத்தைப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றரீதியில்தான் செயல்பட்டது, என்பது மாநாடே மெய்ப்பித்துவிட்டது.

வேதபிரகாஷ், சமயம் வளர்த்த தமிழ்கருத்தரங்கு, http://chemozhi.wordpress.com/2010/06/25/தமிழை-வளர்த்த-தமிழ்-கருத/

[7] இது இவ்வரசே கிளப்பி விட்டுள்ளப் பிரச்சினை. ஆழ்வார்கள்-நாயன்மார்களோ, தமிழக அரசர்களோ இதனை பிரச்சினையாகவே கருத்வில்லை. அதாவது, அத்தகைய நினைப்பு அவர்களுக்கு இல்லை. ஆனால், திராவிட இயக்கம் தோன்றியபிறகு, இத்தகைய வெறுப்பு, பாகுபாடு….வளர்க்கப்பட்டது. இப்பொழுதைய கருணாநிதி ஆட்சியில் மறுபடியும் கிளப்பிவிடப்பட்டுள்ளது.

[8] சமீபத்தில் கூட, ஓரு வழக்கு இவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன.

வேதபிரகாஷ், கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!, http://lawisanass.wordpress.com/2010/07/14/கருணாதியின்-மீது-நிலுவ/

[9] ஒரு தொண்டர் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டபோது விமர்சனம் செய்தது, ஒரு அமைச்சர் தீ-மிதித்தபோது கண்டித்தது ………..முதலியன.

[10] ஆகையால்தான், சங்ககாலத்திலிருந்தே, பிராமணர்கள் தங்களது “ஆரிய மயமாக்கும்” சூழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டனர் என்று வாதிப்பர். ஆனால், பிராமணன், திராவிடன் வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இல்லை என்பது கூட அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது.

[11] தினமலர், முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன், ஜூலை 17,2010, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=41671

[12] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு,, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: ஜூலை, 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[13] வேதங்களைப் பற்றிப் படிக்காமலே, திராவிட சித்தாந்திகள் பல கதைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளாமல், யாரோ இப்படி எழுதியுள்ளனர், பேசியுள்ளனர் என்று, ஒருவர் மேற்கோள் காட்ட, அதை மற்றவர் காப்பியடித்து எழுத, அதனை இன்னொருவர் மேற்கோள்காட்டா……………………இப்படியே ஆராய்ச்சி நடக்கிறது!

[14] http://inioru.com/?p=14983 தொகுப்பாசிரியர்கள் : அசோக் யோகன் – பிரான்ஸ்: சபா நாவலன் –இங்கிலாந்து; : டி.அருள் எழிலன் –இந்தியா; மின்னஞ்சல் : info@inioru.com, inioru@gmail.com, inioru@yahoo.co.uk

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

ஜூலை 13, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

இது பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலரில் வந்த செய்தியை அப்படியே போட்டுவிட்டு,அடைப்புக்க்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்திருந்தேன்.

இப்பொழுது, விவாதம் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் செல்வதால், இதனை மாற்றாமல் அப்படியே வைத்து, இன்னொரு பதிவை செய்ய விரும்புகிறேன்.

எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்: சென்னை: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். [உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டாம் என்று தமிழில் யோரோ சொல்லியிருக்கிறார்களே?]

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது. [ஜகத்ரெக்ஸகன் இப்படி ஜகஜாலக் கில்லாடியாக, எல்லாரையும் வைத்து சிண்டு முடித்து விடுகிறாரா அல்லது திட்டமிட்டே இப்படியொரு நாடகம் அரங்கேறுகிறதா, என்று கூடிய சீக்கிரத்தில் தெரிந்துவிடும்.]

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது: “அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் [இப்படியெல்லாம் பொய் சொல்லுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியேதான்]. கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் [இதுதான் கொழுப்பு என்பது. அம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், மறுக்கப் பட்டவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தும் ஒதுக்கப் பட்டவர்கள் முதலியவர்கள் மவுனமாக இருப்பதே இந்த ஆள் தொந்தரவைத் தாங்க முடியாது என்பதால்தான்]. வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். [இந்துக்களை அவதூறு பேசியபோது, ஸ்ரீராமனை தூஷித்த போதும், அந்த பண்பாடு இல்லாமல் போனது ஏனோ?]

கருணாநிதி-நாட்டியம்-2010

கருணாநிதி-நாட்டியம்-2010

[திருப்பதி லட்டு கொடுத்தால்கூட சுவைத்து சாப்பிடும் ஆட்கள் உள்ளனர்]: விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் இருக்கும் பண்பாடு ஏன் இப்பொழுதைய மனிதர்களை இப்படி வைத்திருக்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது.

சிறீ ரவிசங்கர், ஸ்ரீ ரவிசங்கர், வீரமணி, நாத்திகம்…………….

ஜூன் 7, 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

http://www.viduthalai.com/20100607/news06.html

வீரமணி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்ற பல கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டவர். திகவின் இப்பொழுதைய தலைவர். ஆளும் திராவிட கட்சிகளுடன் மாறி-மாறி உறைவை வைத்துக் கொண்டுப் பிழைத்து வரும் போலி அரசியல்வாதி. விடுதலை என்ற நாளிதழின் ஆசிரியர், இதத பெரும்பாலாக இந்து விரோத சித்தாந்தத்தையேக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுகாக அதை நான் கடுமையாக விமர்சித்து, ஈ-மெயில்களை அனுப்பி வந்தேன். அதற்கு பதில் இல்லை என்றாலும், மறைமுகமாக எனக்கு எதிர்ப்பு வந்தது. தனது “நாத்திக செக்யூலரிஸத்தை” மெய்பித்துக் கொள்ள சில மேனாட்டு இஸ்லாமிய-கிருத்துவ விமர்சனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. “மின்தமிழ்” எனக்கு தடை விதித்தது. இப்பொழுது, குறிப்பிட்ட இந்து சந்நியாசிகள், குரு முதலியவற்றை மட்டும் இலக்காகத் தாக்கி வருவது தொடர்கிறது. உலகளவில், ஏன் இந்தியாவிலும் கிருத்துவ-இஸ்லாம் மதங்களில் மிகக்கொடுமையான தீவிரவாதம், அடிப்படைவாதம், மக்கள் உரிமைகள் மீறல், பாலியல் வன்மம், சிறுவர்-சிறுமியர்களை கலவியில் ஈடுபடுத்தும் குரூரங்கள் முதலியவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய பாட்டுகளைப் பாடிவரும் போலித்தனத்தை காட்டவே, அத்தகைய படித்த, பகுத்தறிவுள்ள வீரமணி எழுது தனது விடுதலையில் தலையங்கமாக வந்துள்ளதை இங்கு வெளியிடப்பட்டு அலசப் படுகிறது

பார்ப்பனர் / பிராமணர் ரவிசங்கர்: வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி துறவியா, கிரஸ்தரா? ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ – சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெங்களூரைத் தேர்ந்தெடுப்பது ஏன்? பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரவிசங்கரின் பூர்வோத்திரம் என்ன? இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

சாமியாருக்கு  நெருக்கடி ஏற்படுவது ஏன்?: நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது. ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

சாயிபாபாவை கொலை செய்ய முயன்றது: இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்றது: அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா? ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது. தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

சாமியார்களிடம் எப்படி கோடிகள் வருகின்றன? அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும். இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சாமியார்கள் மீது விச்சரணை தேவை: சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

வீரமணியின் பின்னணி என்ன?

  1. வீரமணி எப்படி திகவின் தலைவர் ஆனார்?
  2. வீரமணி பெரியாரின் வாரிசு என்று அந்த டிரஸ்டின் தலைவர் ஆனாரா இல்லை, வலுக்கட்டயமாக பறித்துக் கொண்டாரா?
  3. நாத்திகம் பேசும் வீரமணியிடம் எப்படி கோடிகள் வருகின்றன?
  4. தான் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் தகுதியற்றது என்று உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப் பட்டது குறித்து வெட்கமாக இல்லையா?
  5. பெரியார் மணியம்மை பல்கழகம் மற்ற ஊழல்களில் மாட்டிக் கொண்டது அழகாக இருக்கிறதா?
  6. உள்ள நிலையைக் காப்பாற்றக் கொள்ள லட்சங்களில் சேகரிக்க – வசூலில் இறங்கியிருப்பது நியாயமானதா?
  7. தமிழ்நாடு சரித்திர பேரவை மாநாட்டின்போது, பேராளர்களை சரியாக உபசரிக்காமல், குளிக்கக் கூட வழியின்றி அலையவிட்டது முதலியன நன்றான விஷயங்களா?
  8. நாத்திக வேஷத்தில் இந்து விரோத பிரச்சாரத்தை மட்டும் செய்துவருவது “சமதர்மம்” / செக்யூலரிஸம் ஆகுமா? இதனை அவர் பல்கலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு கேட்டால், என்ன செய்வார்?
  9. ………………………………………

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

ஜூன் 2, 2010

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

செம்மொழியில் எழுதப் பட்டுள்ள சங்க இலக்கியத்தின் படி, “கழகம்” என்பது, திருடர்கள், கொள்ளைக்காரர்கள் கூடும் இடம். அவ்வாறே, அடலேறுக்கழகக் கண்மணிகள் தங்களது சுயரூபத்தைக் காண்பிக்கத் தொடங்கிவிட்டனர்.

செம்மொழி மாநாடே கோடிகளில் புரண்டு, ஊழலில் மிதக்கும் இந்நேரத்தில் அருமை கவுன்சிலர்கள் தமது வீரத்தை காட்டி, போர்களத்தில் இறங்கிவிட்டனர். தாம்புக்கயிறும் நாணிக்குனியும் அளவிற்கு தடித்தத் தங்கச் செயிகளையும், கைகளில் வளையல்கள் மற்ற அணிகளை அணிந்த இந்த திராவிட போர்வாள்கள், இன்று காலிகளைப்போல், நாற்காலிகளைத் தூக்கிக் கொண்டு அடித்துக் கொள்கிறார்கள்!

அன்று சேர, சோழ, பாண்டியர்கள் எவ்வளவு ஒற்றுமையாக சண்டை போட்டுக் கொண்டனரோ, அதே மாதிரி, இந்த கழகங்களின் வீரர்கள் ஆயுதங்களுடன் போராடியது மெய்சிலிர்க்க வைத்தது. இதை பொறுமையாக படம் வேறு பிடிக்கிறார்கள்! நாளை அவர்களுக்கும் அத்தகைய உபசரிப்புக் கிடைக்கலாம்.

இனி கருணாநிதி, இதைப்பற்றியும் கவிதைகள் எழுதலாம், கதைகள் எழுதலாம்,

எந்த காளியும் / காலியும் வந்து நாக்கில் எழுத வேண்டாம், நாற்காலியாலேயே எழுதிவிடுவார்கள்.

பல்கலை துணைவேந்தர்கள் முதலியோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கலாம், பாராட்டு விழாக்கள் நடத்தலாம், பட்டங்கள் கொடுக்கலாம்……….

அம்மா, திருக்குவலை அங்காள பரமேஸ்வரியே, ஈரோடு ஃபர்ப் ரோடு மாரியம்மனே, மயிலை கற்பகவல்லியே…………………………………ஜாக்கிரதை, எச்சரிக்கை……………………………

அன்று சீமான் உள்ளே நுழைந்தான் என்று புரளி, இதில் பொய்யான படங்கள் வேறு!

தாயே, தமிழ் பேசி, செம்மொழி என்று சொல்லி உன்னைத் தாக்க வருகின்றனர்,

திராவிட ஆட்சியில் நீ கல்லாகவே இருந்துவிட்டபடியால், கயவர்கள், கொள்ளைக்காரர்கள், கொலையாளிகள், ……………….எல்லோருமே கருவறைக்குள் நுழைந்து விட்டனர்.

இன்னும் நுழையப் பார்க்கின்றனர்.

காளி, நீலி, சூலி………………………………..உண்மையாகவே நீ என்று கண் திறப்பாயோ தெரியவில்லை!

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து

ஜூன் 1, 2010

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து

http://www.viduthalai.com/20100601/news18.html

தமிழகத்தைப் பொருத்த வரைக்கும் திராவிட அரசியலும் லஞ்சமும், நகமும்-சதையும் போன்றது, பிரிக்க முடியாதது.

கார்பரேஷன் லஞ்சத்தின் சின்னமாக இருக்கிறது என்றால் மிகையாகாது. அதுபோலத்தான், மின்சார வாரியம், எல்லாமே……

பிறப்பிலிருந்து, இறப்பிற்கு வரை லஞ்சம் வாங்கும் தமிழகத்தை, திராவிடத்தை யாராலும் மாற்ற முடியாது.

கடவுளுக்கே லஞ்சம் லஞ்சத்தை எப்படி ஒழிக்கமுடியும்? காவல்துறை அதிகாரி கருத்து என்றால், அந்த கோவில்களை ஆட்டிப் படைப்பது இந்த நாத்திக பேய்கள்தாம்.

எப்படி ஆர்.டி.எக்ஸ் உள்ளே நுழைய லஞ்சம் வாங்கப் பட்டதோ, அதுபோலத்தான், இந்த நாத்திக அரசும் கடவுளைப் பார்க்க, காசு கேட்கிறது.

சென்னை, ஜூன் 1-_ கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் நாட்டில் லஞ்சத்தை ஒழிப்பது என்பது அவ்வளவு சுலப-மல்ல என்று சி.பி.அய்.-அதிகாரி ஈசுவரமூர்த்தி தெரிவித்தார் லஞ்சத்தை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் என்று முகா-மில் சி.பி.அய். காவல்-துறைக் கண்காணிப்-பா-ளர் ஈஸ்வர மூர்த்தி பேசி-யதாவது:-

லஞ்ச ஊழல் தற்-போது நாட்டில் விரிந்து பரந்து கிடக்கிறது. லஞ்ச ஊழலை பற்றி நாட்டு மக்களும் பெரிதாக கவ-லைப்படுவதில்லை. எவ்வளவு பணம் கொடுத்-தாலும் நம்முடைய வேலை முடிய வேண்டும் என்ற மனப்பான்மைக்கு மக்கள் வந்துவிட்டார்-கள். கடவுளுக்கே லஞ்சம் கொடுக்கும் சூழ்நிலை-தான் நமது நாட்டில் நிலவுகிறது. லஞ்சம் வாங்-காதவர்களை ஏமாளி-களாக பார்க்கும் அவலம் உள்ளது. ஏனென்றால் லஞ்சம் வாங்கி லட்சக்-கணக்-கில் பணம் சேர்த்து வைத்திருக்கும் ஒரு நபர் தனது பிள்ளைகளை எளிதில் பொறியியல் கல்லூரியிலோ, நல்ல பள்ளியிலோ படிப்-பதற்கு சேர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் லஞ்சம் வாங்-காமல் நியாயமாக வாழ்க்-கையை நடத்தும் ஒரு நபரால் தன்னுடைய குழந்தைகளை அழைத்-துக்கொண்டு கல்லூரி-களின் கதவை தட்ட முடியாது. 1993ஆ-ம் ஆண்டில் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 300 பேர் மாண்டார்கள். அந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு லஞ்சம் தான் காரணகர்த்தாவாக இருந்தது. அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்திய ஆர்.டி.-எக்ஸ். ரக வெடிமருந்து-களை கடத்துவதற்கு ஒரு சுங்க அதிகாரிக்கு ரூ.20 லட்சம் லஞ்சம் கொடுக்-கப்பட்டது பின்னால் தெரிய வந்தது.

உலகில் உள்ள 180 நாடுகளை கணக்கெ-டுத்து பார்த்தபோது, லஞ்ச லாவண்யத்தில் நமது நாடு 84ஆ-வது இடத்தில்-தான் உள்ளது. லஞ்ச லாவண்யத்தில் நம்மை-விட 83 நாடுகள் முன்-னால் இருக்கிறார்கள் என்பதில் வேண்டு-மா-னால் பெருமைப்பட்டுக்-கொள்ளலாம். லஞ்சம் வாங்குவதோ, லஞ்சம் கொடுப்பதோ சட்டப்-படி குற்றம் என்று அனைத்து அரசு அலு-வல-கங்களிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்-டும் என்று அரசு ஆணை உள்ளது. ஆனால் இது-போன்ற எந்த அறிவிப்பு பலகையையும் நம்முடைய அரசு அலுவலகங்களில் பார்க்க முடியாது. காவல்-துறையினர் எடுக்கும் நடவடிக்கைகளால் லஞ்-சம் வாங்குபவர்கள் குறைந்தபட்சம் 3 மாதங்-களாவது பயத்தோடு வாங்காமல் இருக்-கிறார்-கள். அதற்காகவாவது காவல்துறை நடவடிக்கை பயன்படுகிறது. சி.பி.-அய்.யை பொறுத்த-மட்-டில் பொதுமக்கள் எஸ்.-எம்.எஸ். மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமா-கவோ லஞ்சம் வாங்குப-வர்கள் பற்றி புகார் அளிக்கலாம். நம்மால் லஞ்சத்தை ஒழிக்க முடி-யாவிட்டாலும், லஞ்ச-வாதிகளை பயமுறுத்-தவாவது செய்வோம். லஞ்சத்தை ஒழிப்பதற்கு இதழ்களும் துணைபுரிய வேண்டும். அதற்கு இந்த பயிற்சி முகாம் நல்ல பலனை கொடுக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு கண்-கா-ணிப்பாளர் ஈஸ்வர-மூர்த்தி மிகவும் வெளிப்-படையாகப் பேசி செய்-தியாளர்களின் கைதட்-டலை பெற்றார்.

கருவும் கருணாநிதியும், சுவாமி விவேகானந்தரும்!

மே 22, 2010

Karuvum Karunanidhi and Swami Vivekananda

VEDAPRAKASH

http://vedaprakash.indiainteracts.in/2008/04/26/karuvum-karunanidhi-and-swami-vivekananda/

குறிப்பு: இதை எழுதி ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இப்பொழுது கருணாநிதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்! இனி முரசொலியில் என்ன எழுதுவார் என்று பார்ப்போம்!

கருவும் கருணாநிதியும், சுவாமி விவேகானந்தரும்!

இத்தகையத் தலைப்பில் 26-04-2008 அன்றுஆங்கிலத்தில் ஒரு கட்டுரையை பதிப்பித்தேன்.

அப்பொழுது, சரித்திர முக்கியத்துவம் மற்றும் விடுதலைப் போர் முதலிய பாரம்பரியங்களை பறைச்சாற்றி வந்த விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க கருணாநிதி அரசு முயன்று, உண்மை வெளிப்பட்டு, பிறகு தமது அத்தகைய கொடூர உருவங்களை மறைத்துக் கொண்டது.

இப்பொழுது, மறுபடியும் அத்தகைய நபர், கூட்டம் மற்றும் விரோதிகளை விவேகானந்தர் 150 பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்து, மத்திய அரசு அமைத்துள்ள தேசியக்குழுவில், கருணாநிதி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கேவலமானது.

கருணநிதி அதற்கு மறுப்புத் தெரிவித்து இருக்கவேண்டும், ஆனால், அதைவிட அருகதையற்ற முறையில் பொன்முடி கலந்து கொண்டது………………………………………!!!!!????

Introduction: The DMK government wanted the historic Vivekananda Illam (Vivekananda House) on Kamarajar Salai / Beach Road vacated two years before the expiry of the 10 year lease (in 2010). DMK representatives asked the Ramakrishna Mutt to vacate the premises by Thursday, April 24. The irony is that Karunanidhi facilitated the Mutt getting the building — originally Castle Kernan and later known as Ice House — back in 1997, during his previous tenure. State government records say Swami Vivekananda stayed at Castle Kernan for nine days, from February 6-15, 1897, after his visit to the Parliament of Religions at Chicago. On this basis the government, on the centenary of the Swami’s visit, decided to grant the lease and the lease was given on condition, according to ‘government order 89’ of the higher education department on February 24, 1997, that the building be used for a museum highlighting Swami Vivekananda’s teaching. The building was renovated and on December 20, 1999, Karunanidhi extolled Swami Vivekananda, and called the Ramakrishna mission “an Everest among NGOs”. The 10-year lease was given a month later.

How the controversy arose now? It is a fact that the Government officials came to Vivekanda House enquiring about the expiry of lease and the possibility of their shifting to some other place[1]. As the Head of the Sri Ramakrishna Mutt has been away, the Saints of the SRKM Order replied that they would inform the matter to his Mutt-head. Meanwhile, when the officials informed the matter back, they were ordered to take the name of CM. This has only created the problem. On the pretext of searching for a suitable location, they eyed on the “Vivekanandar Illam”. Had the intention was not like that, they could have gone to “Palaru Illam”, which is also on the same Kamarajar Road! But, they came down to “Vivekanandar Illam” only! When the matter was known, the Press immediately made enquiries and published on 25th papers[2]. Then Karunanidhi could sense the all-India implication of the issue and he decided to srttle the issue in his own way of kicking back.

Karunanidhi has decided not to leave anybody before he leaves his position as CM. Now, his target has been on Swami Vivekananda. One should carefully read and understand his usage of Tamil words and expressions, as he has been very clever, smart and crafty in using such words and expressions in the context with double-meanings, triple meanings etc. That he used such words and expressions right inside the TN Assembly in the context of Swami Vivekananda Memorial, Sri Ramakrishna Paramahamsa, the SRKM Order of Saints etc., could be noted easily.

“All have talked and discussed about a thing that is not there. When Kambam Ramakrishnan spoke, he urged ‘let the Vivekanda House be there’. Yes, I also reminded brother Ramakrishnan as an elder brother that it should be there. Six lakh people are here to claim the right over Vivekananda. The Vivekananda Temple at Kanyakumari was inaugurated by V. V. Giri only under my presidential ship in 1970. When the people of the district created problems against it, I only solved them.“The Head of Ramakrishna Mutt made a request to hand over the memorial house, where Vivekandandr stayed there in 1897 for nine days and gave lectures. The areas of 27,546 sq.ft situated on Kamarajar Road was leased to the Mutt for three years with conditions with a lease amount of Rs 3,000/- per annum. Then as they requested 8,928 sq.ft infront of the house, as there was no entrance to the house, the 90 sq.m land was leased out for three years @ Rs. 1,000 per annum. When they asked the lease for 30 years, I replied that that the matter should be discussed in the Assembly with ministers.“The Press has reported that as if there was fight between the members of Vivekanda House and the DMK government and the DMK had determined to grab the Vivekananda House with headlines. I do not know why it should be taken hold of. Is there any enmity between Vivekanandar and us? When he brings out opinion of analytical wisdom, how we can have enmity with him? I told the ministers on that day itself that, ‘as the views of Vivekanandar have been consistent with Periyar, Anna, I suggested that we could spread our views with the help of them and thus, we have parivu (love or pity) and patru (attachment) with him.[Note: Here the word ‘parivu’ has two meanings – 1. Love, pleasure and 2. Distress, affliction, to fondle, to treat with attention. As he used to use the Tamil words with different connotation, one has to be careful in which context, he is using, as he has been in the nature of using such words with sarcasm, vengeance and even vulgarism or blasphemy to the core].

“No notice was sent in the context of Vivekananda House. When we received a letter sanctioning Rs. 76 crores advising us to make arrangement for ‘Imperunguzhu, Enberayam’, we decided to locate a permanent place at Sozhinganallur. So temporarily, when we searched for own places nearby for temporary accommodation, they engaged in spreading stories, as such trick did not succeed and now they try to pit the Samiyars against us just by pushing us towards them (Note. The word ‘Samiyar’ is always used by him and his group in the most derogatory way). We are not in an ignorant state, so that we cannot understand you, as we are not bothered about you trick of making us to combat with ‘Samiyar’ or ‘mamiyar’. [So here, the cat is out. He sarcastically says that they are not worried whether they are pitted against sanyasis or mother-in-laws, as it is a regular feature for them. Moreover, note their status, as they have more-than-one or many ‘mamiyar’, thus putting the ‘samiyar’ also with their level].

“We are not going to remove the building, then why you allowed discussing about it by giving such a long time? To discuss about Vivekananda by our leaders and all to listen to them only (I gave time). It was long back that we talked about Vivekanandar. Vivekandar axed down the superstition, ate meat and acted with reformative attitude, as such things would not affect him. Some people have written that we are going to demolish the House. Is it so weak structure to be demolished? No. None has wanted to demolish it, thought of demolishing and even turned towards it.

“The Periya Samiyar (Big Samiyar) of the Mutt has challenged that they would take legal action, if the Vivekanandar House is touched. But I am not afraid of such challenges. But, Sadhus should not stoop down to the level of threatening or challenging. That is against the principle of Vivekanandar and against their Gurunathar Ramakrishna Paramahamsa. Against this government, they challenge? It is not correct to challenge this government that has built such a big mantap there in the Kanyakumari and continued to nourish and protect it. Please have peaceAt least follow the principle of Vivekanandar in this aspect. There is no issue of demolishing the House or shifting it from the old place to new place. Therefore, do not bother or bluster unnecessarily (alattikolla vendam), when the position is like this. Do not make it as a big issue. Whatever is there, it would be there as t is. We have now a temporary place, that ‘Palaru Illam’, on the same Kamarajar Road. Thus, the “Chemmozhi” would be carried on there in the temporary Palaru House, till we get permanent place at Sozhinganallur.”

Karunidhi in 1970 ad 2008: Karunanidhi has been an expert in telling the lies as facts and present facts as lies or that never happened. Do you know that Karu recited Sanskrit verse: “Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata”? If anyone does not know the meaning or cannot recollect, kindly read the following. No doubt, that he was the CM and on September 2, 1970, the President V. V. Giri inaugurated under his Presidentship. But, anybody remembers or can recall what he spoke there:

“The name ‘Vivekananda’ means, one who can distinguish the right from the wrong. He ia noble sage who had universal vision, which ennobled everyone who came in contact with him or with teachings.

“Though he is not with us today, the flame he lit is still alight and from his teachings have sprung the conscience of India and faith in her unity. And his great message manking finds solace and confidence.

“The memorial stands here today will be a sentinel guarding not only our frontiers but also our cultural traditions.

“Swami Vivekananda always had before him the great motto of elevation of masses. His messages are always gospels of salvation, social elevation and equality for everyone.

“I am very happy to inform on this historica occasion that the Tamilnadu government is wedded to the thoughts and gospels for which Swami Vivekananda stood.

Sri M. Karunanidhi concluded by quoting Vivekananda’s exhortation[3]: “Uthistahtha Jagrata, Prapyavarn Nibhodhata” (Arise, Awake and stop not till the goal is reached).

So he now tries to blackout Eknath Ranade[4] (1914-1982) who shed sweat and blood to create the Memorial at Kanmyakumari. In fact, The statue of Thiruvalluvar[5] was erected strategically on a minor rock off the shore[6], in Kanyakumari, near Vivekananda Memorial. The statue sponsored by the Government of Tamilnadu, Karuinanidhi sarcastically remarked that it should be above the Memorial! Of course, in the 10 crores project, there has been CAG report pending for misappropriation of money by producing fake vochers. It was unveiled on 1st January 2000, by M Karunanidhi. Last year, the House, where Swami Vivekanda stayed was demolished at Tirunelveli without any sense of history[7].

His wrong interpretation of Swami Vivekananda eating meat: There is no bar for non-Brahmins to eat non-vegetarian. Kshatriyas, the fighting and protecting creed had to eat. But, Swami Vivekanda”s case is different, just like his Master. But just like eating meat one cannot think of becoming Swami Vivekananda or Ramakrishna Paramahamsa. Karunanidhi cannot become knath Ranade, just because, Giri attended the function under him! All meat-eaters cannot becomes Swamis. Or by eating meat, the Swamis cannot be equated with Karu-like Black or Red Parivar groups. It is only gross misinterpretation to mislead the general public.

The Christian missionaries interpreted in the same way to malign Osho also. Of course, Jeffery Kripal and others targeted Sri Ramakrishna Paramahamsa in the same way. Even Swami Vivekananda was not spared by the missionaries. They carried out propaganda against him through the media in the 19th century itself! So, that Karunanidhi follows such tactics proves that as usual his “think-tank” comprising P. Jagadesan, Karunanandam (he was with Vivekananda College SRKM, but now converted to DK), S. V. Rajadurai etc. Karunandam has been helping Karu and DK by supplying anti-Hindu, anti-Rama, anti-Sethu material.

His veiled threat or warning to SRKM Saints – arrogant and unwarranted: The tone and tenor of language used exposes his hatred and venomous threat against SRKM Saints. He cannot address them in such a low-level language, as he used to do with others.

சாதுக்கள் சவால் விடக் கூடாது – கலைஞர் அறிவுரை – சுவாமி விவேகானந்தரைப் பற்றி கருணநிதி பேசிய அவதூறுகள்!

எனக்கு ஒரு ஆசை – விவேகானந் தரைப் பற்றி நம்முடைய தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான் எல்லோரும் பேச அது இங்கே பரவ வேண்டும், ரொம்ப நாளாகி விட்டது விவேகானந்தரைப் பற்றி பேச என்பதற்காக –

அவர் மூட நம்பிக்கைகளையெல்லாம் சாய்த்தவர் – மத வெறிக்கு ஆளாகாதவர் – ஜாதி வெறியைச் சாய்த்தவர் – அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர் என்ற காரணத்தாலும், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – இவையெல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது மனம் சுத்தமாக இருந்தால் என்று எண்ணி சீர்திருத்த நோக்கங் களோடு செயல்பட்டவர்.

அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள். பாருங்கள், இடிக்கக் கூடிய மண்டபமா அது? இடிக்கக் கூடிய அளவிற்கு அவ்வளவு வலுவிழந்த மண் டபமா?

இல்லை; வலுவான மண்டபம். அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை, நினைக்கவுமில்லை, அதற்காக அந்தப் பக்கம் திரும்பவுமில்லை. “அந்த மண்டபத்தை தொட்டால் நாங்கள் சட்டப்படி சந்திப்போம், முறைப்படி தான் நடக்கிறோம் என்று அந்த மடத்தினுடைய பெரிய சாமியார் கூட சவால் விட்டிருக் கிறார். நான் அந்த சவால்களுக்கெல்லாம் பயப்படவில்லை. அது வேறு விஷயம்.

ஆனால், சாதுக்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வரக் கூடாது. அது விவேகானந்தருடைய கொள்கைக்கே – அவருடைய குருநாதர் இராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களுடைய கொள்கைக்கே விரோதமானது. இந்த அரசைப் பார்த்தா சவால் விடுவது.

குமரிமுனையிலே அவ்வளவு பெரிய கோபுரம் கட்டி, மண்டபம் அமைத்து, அங்கே விவேகானந்தருடைய மண்டபத்தை போஷித்துப் பாதுகாத்து வருகின்ற இந்த அரசைப் பார்த்து சவால் விடுவது நல்லதல்ல, சாந்தம் பெறுங்கள். இதிலாவது விவேகானந்தருடைய விவேகமான பொன்மொழியைப் பின்பற்றுங்கள் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டு இதை இடிப்பதாகவோ அல்லது பழைய இடத்திலிருந்து புதிய இடத்திற்கு செல்வதாகவோ எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பதெல்லாம் அப்படியே இருக்கும் என்ற உண்மையை உங்களுக்குச் சொல்லி வீணாக நாம் அலட்டிக் கொள்ள வேண்டாம், பிரச்சினையைப் பெரிது படுத்த வேண்டாம், இந்த அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் தேடிய வரையிலே தற்காலிகமாக எங்களுக்குக் கிடைத்திருக் கிற இடம் அதே காமராஜர் சாலையில் பாலாறு இல்லம் – அந்தப் பாலாறு இல்லத்தில், சோளிங்கநல்லூரில் எங்களுக்கு அந்தப் பெரிய கட்டிடம் அமைகின்ற வரையில் தற்காலிகமாக செம்மொழி மையம் இங்கே இடம் பெறும், செம்மொழி நிறுவனம் பாலாறு இல்லத்தில் நடைபெறும் என்பதைத் தெரிவித்து அமைகின்றேன்.

There have been people in Madras, who have been listening to his speech regularly, particularly, the mid-night meetings. Therefore, they know the derogatory connotation of the words and expressions used. His double-game, double-act etc., are well known. In 1970, he talks about “our culture, traditions” etc., and cites Sanskrit quotation, now, after 38 years, he talks nonsense and filthy about the same. How to assesses his “analytical wisdom”?

VEDAPRAKASH

26-04-2008


[1] Meanwhile, Swami Gautamanandaji, who heads the Ramakrishna Math in Chennai, said he was shocked when he received a ‘high-level message’ through an industrialist well-wisher that the government wanted the premises back by 24 April.

[2]http://timesofindia.indiatimes.com/Cities/Mutt_not_to_be_evicted_CM/articleshow/2980910.cms

[3] Lokesh Chandra (Ed.in Chief), India’s Contribution to World Thought and Culture, Vivekananda Rock Memorial Committee, 12, Pillaiyar Koil Street, Triplicane, Madras, 600 005, 1970, pp.xlvi-xlvii

[4] http://www.vkendra.org/eknathji_ranade.htm

[5] http://www.vastuved.com/vastu-thiruval.html

[6] At that time, the Christians taking the advantage of Karunanidhi, decided to construct a statue of Jesus Christ on the rock. Therefore, to prevent it, it was said that ordered for the Tiruvalluvar statue.

[7] http://www.ivarta.com/columns/OL_070307.htm

எம்.ஜி.ஆர். தான் கரூணாநிதியை முதல்வராக்கினார், கணக்குக் கேட்டார், அதிமுக ஆரம்பித்தார்! கருணாநிதிதான் அவரை பதிலுக்குத் திட்டினார், வசவு பாடினார்!!

மே 14, 2010

எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி

First Published : 14 May 2010 01:09:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D…………%E0%AE%9C%B0=&SectionName=Tamilnadu

கருணநிதிக்கு கொஞ்சம் கூட மனசாட்சி, வெட்கம், மானம்………….முதலியவை இல்லை என்று தெரிகிறது.

எம். ஜி. ஆரைத் திட்டியது, வசவு பாடியது ……………….முதலியவற்றை இங்கு எழுதினால் நாறிவிடும்.

ஏன், பெரியார், அவரது மனைவி பற்றிக் கூறியது……..முதலியவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டால், மனங்கள் கூசிக் குறுகிவிடும்.

இன்றைய தமிழ் இளைஞர்கள், ஆஹா,  இவர்களா, இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக………………..பேசியிருக்கிறார்கள் ………..இவர்களைப் போய், நாம் தலைவர்கல் என்ரு எண்ணியிருந்தோமே………………என்று வெட்கப்பட்டு, தங்களது எண்ணங்களையே மாற்றிக் கொண்டு விடுவர்.

எங்களைப் போன்ற, இந்த ஆட்கள் பேசியதையெல்லாம் 50களினின்று நன்றாக கேட்டிருப்பதனால், அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம்

சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும்.

தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது.

அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.

திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.

என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ”ஐயா” என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.

அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.

ஒரு நிலையில், தான் ஒரு பெரிய ராஜ தந்திரி, தேர்தல் வரும் சமயத்தில் இப்ப்டியெல்லாம் பேசினால், ஓட்டுகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் இவர்க்கு ஓட்டு போடுவார்கள் என்று இவருக்கே உரித்தான சூழ்ச்சியுடன் பேசலாம்.

ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்றைய நிலையில், அரசியலை மக்களை வெகுவாக பாத்திதுள்ளது.

தங்களை பிழிந்தெடுத்துள்ளது, கசக்கிப் பிழிந்துள்ளது; சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டு ஒழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கோடிகலில் கொள்ளையெடித்த அரசியல்வாதிகள், ஜாலியாக வாழ்க்கையை குளு-குளு கார்களில், அறைகளில்……………….அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள்.

நீதிபதி, முதல்வர் இவர்களுக்கு முன்னே ஏன் இந்த வன்முறை?

ஏப்ரல் 26, 2010

நீதிபதி, முதல்வர் இவர்களுக்கு முன்னே ஏன் இந்த வன்முறை?

சட்டத்திற்கு நாங்கள் அஞ்சமாட்டோம், நீதிமன்றங்களை எதிர்கொள்ளத் தயார், எந்த வழக்கையிம் சந்திக்கத் தயார் என்றெல்லாம் பேசுவது, திராவிட வீரர்களின், திராவிடத் தலைவர்களின் வழக்கம். ஆனால், நீதி மன்றம் என்றது நழுவி விடுவார்கள். அதுதான் திராவிட கலாச்சாரமாக ஈ.வே.ரா காலத்திலிரிந்து இருந்து வந்துள்ளது!

அம்பேத்கர், சட்டக் கல்லூரி, சிலைத் திறப்பு, கருணாநிதி, இத்யாதி!

சமீப காலங்களில் கருணாநிதி இப்படியொரு வசனத்தை மாற்றி-மாற்றி பேசி வருகிறார்.

“அதாவது, தான் உயிர்விட தயார்”, என்ற ரீதியில் அடிக்கொரு தடவை மேடைகளில் பேசியுள்ளதுதான்!

கலைஞர் டிவி விளம்பரத்தையும் மிஞ்சுவதாக உள்ளது.

“ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன்”.

“தான் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்”

உயர்நீதிமன்றத்துக்கு முதல்வர் வருகை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
First Published : 25 Apr 2010 03:53:27 PM IST; Last Updated : 25 Apr 2010 08:02:11 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=232639&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

சென்னை, ஏப்.25: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதி வந்தபோது வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் கருப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.வழக்கறிஞர்களின் இச்செயலால் சிலைத்திறப்பு விழாவில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
attacks-in-front-of-CJI-CM-etcattacks-in-front-of-CJI-CM-etc

சிலைத் திறப்பு விழாவில் முதல்வர் தனது உரையைத் தொடங்கியபோது சில வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்கள் போலீசால் தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடந்தது.
Unruly-shameful-behaviour-Highcourt-campusUnruly-shameful-behaviour-Highcourt-campus

இந்நிலையில் திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டதோடு. அதைப் படம் பிடித்த ஜெயா டி.வி, லைவ் இந்தியா, என்.டி.டி.வி தொலைக்காட்சி போன்றவற்றின் நிருபர்களை தாக்கியதோடு அவர்களின் ஒளிப்பட கேமிராக்களும் உடைத்தெறியப்பட்டன. கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியதாக ஆறு வழக்கறிஞர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஆனால் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரையோ ஊடக நிருபர்கள் கொடுத்த புகாரையோ இது வரை போலீஸ் பெற்றுக் கொள்ளவும் இல்லை. யார் மீதும் வழக்குப் பதிவும் செய்யவில்லை. இந்நிலைக்கு தமிழகத்தின் பல் வேறு ஊடக சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கருப்புக் கொடிகளையும் காட்டினர். இதையடுத்து மற்றொரு பிரிவினர் கருப்புக்கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்களைத் தாக்கினர். இந்த மோதலில் வழக்கறிஞர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளின் இரு கேமராமேன்களும் காயமடைந்தனர்.கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும், போலீசாருடன் நடைபெற்ற மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதி உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் முதல்வர் இவ்விழாவில் பங்கேற்பது சரியல்ல என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.வழக்கறிஞர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோஹலே சமாதானப்படுத்த முயன்றார். எனினும் பலனில்லை. டிஜிபி, கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், அமைதியாக இருக்குமாறு வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டனர். எனினும் அவர்கள் சமாதானமடையவில்லை. இதையடுத்து வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கிடையே முதல்வர் தனது உரையைத் தொடர்ந்தார்.

கருணாநிதிக்கு வேண்டியது ஒரே காயம் சகாயம்தான்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசத்தலைவர் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் தான் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான் என்று கூறினார்.

“போலீசார், போலீசாரின் குடும்பத்தினர் படும் துயரங்களை நாடகமாக போட்டு நடித்த காலத்தில் அந்த நாடகத்தையே தடை செய்தார்கள். ஆனால் சட்டசபையிலேயே அந்த நாடக பாட்டை பாடி அதை கேட்க செய்தேன். எப்போதும் என் மீது விழும் அம்புகளை மலர் கணைகளாகத்தான் எடுத்துக் கொள்வேன். என் மீது வீசும் மாலை, கணைகளை என்றைக்கும் தாங்கித்தான் பழக்கப்பட்டவன். என் இதயத்தை திறந்து பார்த்தால் காயங்கள் இருக்கும். நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்.” என்று கருணாநிதி தன் உரையில் குறிப்ப்ட்டார்.

தி.மு.க. அரசைப் பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கார் புகழைப் பாடுவதிலும் அவரது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக மக்கள் மத்தியில் பதிய வைத்து நிறைவேற்றுவதிலும் எந்த மாநில அரசுக்கும் தமிழ்நாடு பின்தங்கியதில்லை. முன்னேறி வருகிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மேலும் முன்னேற்ற பாடுபடும் அரசுதான் தமிழக அரசு என்பதை இங்கு சுட்டிக்காட்டிட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்காரின் சிலை வடிவத்தை பார்க்கிறேன். ஒரே ஒரு கை விரலை உயர்த்திக் காட்டுவதை பார்க்கும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னதுதான் எனது நினைவுக்கு வருகிறது. ஜனநாயகத்தை யாரும் எத்தகைய வழியிலும் வீழ்த்த நினைப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வேன் ஜனநாயகத்தில் அநாகரீகத்தை புகுத்த நினைத்தால் எந்த காலத்திலும் அதற்கு தலைவணங்க முடியாது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இங்கு நீதியரசர்கள் இருக்கும் நிலையில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன். நான் இப்படி பேசுவதால் இங்கு அரசியல் பேசுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருதக்கூடாது. சமுதாய கருத்துதான். 1973- 1976-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சி நண்பர் சட்டசபையில் என்னை பார்த்து 3-ம் தர சர்க்கார் என்றார்.

இதை கேட்டு என் பின்னால் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு சொல்ல நான் அவர்களை கையை காட்டி அமைதியாக உட்கார வைத்துவிட்டு பேசினேன். அவர் சொல்வதில், தப்பில்லை. 3-ம் தர சர்க்கார் என்பது தவறு. 4-ம் தர சர்க்கார் என்று கூறி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த வரிசையில் இது 4-ம் தர மக்களுக்காக பாடுபடும் அரசு என்றேன். இதை கேள்விப்பட்டு அப்போது திருச்சியில் இருந்த பெரியார் தந்தி கொடுத்து பாராட்டினார். எனவே எவ்வளவு எதிர்ப்பு, ஏச்சு இருந்தாலும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன கொள்கையை நான் கடைபிடித்து வருகிறேன்.

அம்பேத்காருக்கு பெருமை சேர்க்க இங்கு அவரது சிலையை திறந்து வைத்ததற்காக உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.