“கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்” – சரித்திரத்தை மறந்த தரித்திரங்கள்!

“கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்” – சரித்திரத்தை மறந்த தரித்திரங்கள்!
கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்-தங்கபாலு
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010, 13:13[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/11/karunanidhi-deserves-statue-says.html

சென்னை: கருணாநிதியின் சாதனைக்காக, அவருக்கு சிலை வைப்பது கூட வரவேற்கத்தக்க செயலாகும். அதை தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்தி வரவேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

புதிய சட்டசபை கட்டிட வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இது சட்டசபை மரபுகளுக்கு முரணானது எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிமுகவின் எதிர்பு ஏற்கத்தக்கதல்ல என்று கருத்து கூறியுள்ள காங்கிரசார், ‘பண்முகப் பேராண்மை நாயகர்’ கருணாநிதிக்கு சிலை வைத்தால் கூட வரவேற்போம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில், ‘முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றோடு பின்னி இணைந்து புகழ்பெற்று வாழ்பவர்.

தமிழகம், தமிழர்கள், தமிழ் மொழி உயர்வுக்கு தொடர்ந்து தொய்வின்றி 86வது வயதிலும் கடுமையாக உழைத்து வரும் கருணாநிதி, அனைத்து கட்சியினராலும் போற்றப்படுகிற பன்முகப் பேராண்மை நாயகராக விளங்குகிறார்.

அனைத்து நிலைகளிலும் அவர் ஆற்றிவரும் பணியை வரலாறு வாழ்த்தும். அவ்வாறு செயலாற்றி வெற்றிகண்ட அவரது உருவப்படம் அக்கட்டிட வளாகத்தில் இடம் பெறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

அது மரபுக்கு முரணானது என்றால் அம்மரபே சரியானதல்ல. எனவே கருணாநிதியின் உருவப் படம் வைக்க புதிய மரபை உருவாக்கலாம்.

அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறு என்று போற்றத்தக்க தலைவர் கருணாநிதியின் உருவ படம் வைப்பதில் காழ்ப்புணர்ச்சி கூடாது.

கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு சிலை வைப்பது கூட வரவேற்கத்தக்க செயலாகும். அதை தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்தி வரவேற்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், துணைத்தலைவர் டி.யசோதா, கொறடா ச.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘எம்ஜிஆரின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது என்று கூறியிருக்கிறார்.

மறுக்கவில்லை, இன்று கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதே நேரத்தில், அன்று சட்டமன்ற திமுக உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதியும் ஆதரித்தார் என்பதை ஜெயலலிதா மூடி மறைத்தது ஏனோ?

அன்று எம்ஜிஆர் படத்தை திறந்ததை திமுக ஆதரித்தது. இன்று கருணாநிதி படத்தை திறப்பதை அதிமுக எதிர்ப்பது ஏன்?

இத்தகைய அரசியல் அநாகரிகத்தை நாள்தோறும் அரங்கேற்றி வருகிற இவருக்கு தமிழ் சமுதாய மக்கள் பாடம் புகட்ட வேண்டிய நேரத்தில் நிச்சயம் புகட்டுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளனர்.

குறிச்சொற்கள்: , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக