பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? திக கடுமையாக எதிர்க்கிறது (2)

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? திக கடுமையாக எதிர்க்கிறது (2)

RSS in Tamilnadu, Tamil news cutting

தமிழ்நாட்டில் கால் பதிப்பது என்பது பகல் கனவு எங்கள் பிணத்தின் மீது தான் நடக்கும்: வீரமணி ஆவேசத்துடன் தொடர்கிறார், “தமிழ்நாட்டில் கால் பதிப்பார்களாம். அது எங்கள் பிணத்தின்மீதுதான் நடக்கும். அதே வைத்யா இன்னொன்றையும் கூறியிருக்கிறார். பெரியார் கொள்கையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கிறதாம் எச்சரிக்கை! பெரியார் கொள்கைக்கும், எங்களுக்கும் வேறுபாடு இல்லை. ஜாதி, மத ஒழிப்பில் பெரியார் கொள்கையோடு நாங்கள் ஒத்துப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் ஜெயந்தி கொண்டாட ஆரம்பித்தவர்கள்இப்பொழுது பெரியாரிடம் நெருங்க ஆரம்பித் துள்ளனர். நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். விடுதலைஇந்த இந்துத்துவா சக்திகளை வீழ்த்துவதில் போர்வாளாக செயல்படும். விடுதலைவெறும் காகிதமல்லஆயுதம்,” என்றார்[1]. பிப்ரவரியில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரமுகர்கள் இவரை சந்தித்துள்ளனர். அப்பொழுதும், இப்படி சூடாகப் பேசினாரா என்று தெரியவில்லை.

RSS and Periyarism - FB postings

பிப்ரவரியில் [27-02-2018] ஆர்.எஸ்.எஸ். வீரமணியை சந்தித்தது[2]: தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரமுகர்கள் 27.2.2018 அன்று தமிழர் தலைவரைச் சந்தித்து அவர்கள் வெளியிட்டுள்ள புத்தகத்தினை வழங்கினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி, மாநில செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச் செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம.இராஜசேகர் ஆகியோர் தமிழர் தலைவரை சந்திக்க நேரம் கேட்டு அனுமதி பெற்றிருந்த நிலையில் 27.2.2018 அன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்னை பெரியார் திடல் திராவிடர் கழகத் தலைமையகத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்[3]. RSS A SAGA OF COURAGE AND DEDICATION எனும் தலைப்பில் ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டுள்ள நூலினை அளித்தனர். இந்தியாவில் ஆயிரம் முக்கிய தலைவர்களுக்கு இந்நூலை அளிப்பது என்ற திட்டத்தின் அடிப்படையில் அளிக்கிறோம் என்று கூறி அளித்தனர். ‘விஜயபாரதம்‘ வெளியிட்டுள்ள கே.கே.சாமி அவர்கள் எழுதிய “உயர உயரப் பறந்திட….” என்ற நூலையும் அளித்தனர்.

RSS and Periyarism - FB postings-2

கீதையின் மறுபக்கம் (கி.வீரமணி), சந்திரசேகரப் பாவலர் அவர்களால் எழுதப்பட்ட இராமாயண ஆராய்ச்சித் தொகுப்பு நூல், மகாபாரத ஆராய்ச்சி (கி.வீரமணி), அசல் மனுதர்மம், புரிந்து கொள்வீர் புராணங்களை வேதங்களை, இல்லாத இந்துமதம் (பேரா.இறையன்), பார்ப்பனர்களை தோலுரிக்கிறார் விவேகானந்தர் ஆகிய நூல்களை கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களுக்கு வழங்கினார். சிறிது நேரம் உரையாடி விட்டு விடை பெற்றுச் சென்றனர். திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், மாநில மாணவரணிச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் உடனி ருந்தனர்.

Opposition to RSS meeting at Sastra colege May 2017

தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் 2017ல் கோயம்புத்தூரில் நடந்தது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பிரதிநிதிகள் சபைக் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்[4]. சென்ற வருடம், 2017, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரதிநிதிகள் சபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது[5]. இதெல்லாம் நிச்சயமாக, ஒரு திட்டத்துடம் செயல்படும் முறையினைக் காட்டுகிறது. தஞ்சை வல்லத்திற்கு அருகே அமைந்துள்ள சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் பயிற்சி முகாம் நடந்தது, இப்பயிற்சியின் இறுதி கட்ட பயிற்சியளிப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-ன் தேசிய தலைவர் மோகன் பகவத் கடந்த மே 12-ம் தேதி 2017 முதல் இங்கு வந்து பயிற்சியளித்தார், என்று, சில செய்தித்தாள்களில் மட்டும் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது[6].

Other side of periyar- Ambedkar possible

வேரா, பெரியார் பற்றி இந்துத்துவவாதிகளின் ஆராய்ச்சி: ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் பற்றிய முழு ஆராய்ச்சி இந்துத்துவவாதிகள் நடத்த வேண்டும், இதுவரை நடந்தது தொகுப்புதான். ஈவேரா பேசியதாக, எழுதியதாக, சொல்லப் படுகின்றவற்றை இரண்டாம்-மூன்றாம் தர அச்சு புத்தகங்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. ஈவேரா கையெழுத்துப் பிரதிகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் காண்பிக்கப் படுவதில்லை. பேசிய ஒலிநாடா பதிவுகள் கேட்க அனுமதி இல்லை. பத்து பேர் உட்கார்ந்து எல்லாவற்றையும் ஆய்ந்து, இது தான் ஈவேரா பேசியது, எழுதியது என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிப்பு இல்லை. மூல ஆவணங்களை வைத்து ஆய்ந்து தீர்மானித்து ஒப்புக்கொள்ளப் பட்டு, தொகுத்து வெளியிடப்படுவது தான் ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிப்பு [Critical edition] எனப்படும். ஆனைமுத்து, ராஜேந்திரன், ராஜதுரை-கீதா, வீரமணி தொகுத்தது என்று தான் இப்பொழுது உள்ளது. அவை பல இடங்களில் வேறுபடுகின்றன! கடந்த 25 வருடங்களாக இதை நான் சொல்லி வருகின்றேன், யாரும் கேட்பதாக இல்லை!

Periyar on Paraichi- jacket

முரண்பாடுகள் உண்மையா, அல்லது உண்மைகளை மறைக்கவா?: நம்முடைய ஆட்களே புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 80-90 வயதுள்ள ஈவேராவைப் பார்த்த, பேசிய, கேட்ட பெரியவர்களை பேட்டிக் கண்டு விவரங்களை ஆவணப்படுத்தலாம். மூலங்களை பார்ப்பது, ஆவணக் காப்பகத்திற்கு செல்வது, கள-ஆய்வு செய்வது என்பதெல்லாம், “பார்த்து எழுதும்” புத்தகக்காரர்களிடம் இல்லை. யாதாவது புதியதாக எடுத்துக் காட்டினால், அவற்றை காப்பியடித்து போட்டு, தானாகக் கண்டு பிடித்தது போலக் காட்டிக் கொள்ள பலர் இருக்கவே செய்கிறார்கள். பவானி ஆற்றங்கரையில் பெண்களுடன் சல்லாபித்து மயங்கிக் கிடப்பார், வண்டியில் வைத்து வீட்டிற்கு கூட்டி வரப்பட்டார் என்றெல்லாம் ஒரு நெருங்கிய பெரியவர் எழுதியுள்ளார். பிறகு பேட்டி எடுத்து விவரங்களை சேகரித்து வைத்துக் கொண்டேன். ஆனால், நம்மாட்களோ, பேஸ்புக்கில் வீராப்பு காட்டுவதோடு சரி.

Periyar breaking vinayaka idols

அம்பேத்கர் பற்றி இந்துத்துவவாதிகளின் ஆராய்ச்சி: முன்பு, அம்பேத்கரை “இந்துத்துவ” ரீதியில் விளக்கம் கொடுத்தபோது, பலத்த விமர்சனம் எழுந்தது. ஏனெனில், அது பொய் என்பது, அம்பேத்கரின் புத்தகங்களைப் படித்தாலே தெரிந்து விடுகிறது. மேலும், இந்துத்துவ வாதிகள், சரித்திர / ஆராய்ச்சி கூடுதல்களில் அம்பெத்கர் / ஈவேரா பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை பதிப்பததாகத் தெரியவில்லை, அச்சில் வந்ததாகவும் இல்லை. ஆராய்ச்சி நெறிமுறையும் பின்பற்றுவது கிடையாது, மூலங்களை, மற்ற அச்சில் வந்தவற்றையும், கால ரீதியாகக் குறிப்பிடுவதில்லை. அதாவது முன்னரே, இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து வெளிவந்த விசயங்களை குறிப்பிடாமல், மற்றவர்களின் ஆராய்ச்சியை, பெயர் கூட குறிப்பிடாமல், தமது போல, மற்ற இடங்களில் போட்டுக் கொள்வது, வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். நிற்க வைத்து கேள்விகள் கேட்டால், அவர்களால் பதில் சொல்ல முடியாது, அந்நிலையில் உள்ளோர், பெரிய நிபுணர்கள் போல காட்டிக் கொள்கிறார்கள். இருப்பினும், அம்பேத்கரையும், பெரியாரையும் நேரிலே பார்த்து பேசியது போலவும், அவர்களது எழுத்துகளை எல்லாம் படித்து விட்டது போலவும் காட்டிக் கொள்கிறார்கள். “இந்துத்துவ அம்பேத்கர்” போல மடத்தனமாக, நாளைக்கு “இந்துத்துவ பெரியார்” என்று கூட புத்தகம் எழுதப் படலாம், இது தான் அவர்களது ஆராய்ச்சி போலித்தனத்தைக் காட்டுகிறது.

Arvinda Neelakanda, Periyar, based on historian mave

ஆர்.எஸ்.எஸ் பெரியாரிஸத்தை ஆதரித்தால் என்னாகும்?: பெரியார் திடலுக்கு, சுயமரியாதை பிரச்சார கழகத்திற்கு, சென்று “குடி அரசு,” “விடுதலை” நாளிழ்களை பார்த்தால், இத்தகைய விளக்கம் வராது. பெரியார், வீரமணி, கலிப்பூங்குன்றன் போன்றோரிடம் பேசியிருந்தால், உண்மை நிலை தெரியும். ஆனால், இன்றோ, பெரியார், செகுவேரா, ரெட்டைமலை சீனிவாசன் படம் போடக் கூடிய நிலை இந்துத்துவவாதிகளுக்கு வந்து விட்டது போலும்.  அந்நிலை வரக்கூடாது, என்று மூன்றாண்டுகளுக்கு முன்னர் மற்றும் பின்பும் குறிப்பிட்டேன், இப்பொழுது உண்மையாகி விட்டது. இனி, ஈவேரா பிள்ளையார் உடைத்தது போல, இந்துத்துவ வாதிகளும் உடைப்பார்கள் போலும், இவ்வருடம் விநாயக சதுர்த்தி கொண்டாட்டம் இல்லாமல் போய்விடும் போல. இல்லை அந்த ஊர்வலத்தில் “பெரியார்” படத்தையும் எடுத்துச் செல்வார்கள் போலும். செப்டம்பர் 17 ஈவேராவின் பிறந்த தினம் மற்றும் டிசம்பர் 24 மறைந்த தினம் வருகின்றன, இந்த்துவவாதிகள் கொண்டாடுவார்களா என்று பார்ப்போம்! இனி பெரியார் சிலைக்கு மாலை போட வேண்டியது தான் பாக்கி, இந்துத்துவ வாதிகள், அதற்கும் தயாராகி விடுவார்கள்! பொறுத்து பார்ப்போம்.

Swaraj dodges- Karan Kamble reply - 15-03-2018

அரவிந்த நீலகண்டன், சரித்திராசிரியர் . வெங்கடேசன், பெரியார்:  இங்கு மார்ச் மாதத்தில் நடந்ததையும் குறிப்பிட வேண்டியுள்ளது. அரவிந்த நீலகண்டன், ஈவேராவைப் பற்றி ஸ்வராஜ்யா தளத்தில் அபத்தமான தொகுப்பு ஒன்று வெளிவந்தது[7]. அப்பொழுது அதிலிருந்த தவறுகளைச் சுட்டிக் காட்டி, கமென்டில் பதிவு செய்தேன். ஆனால், பிரசுரமாகவில்லை. அதாவது “ஸ்வராஜ்யா எடிடோரில் போர்ட்” விரும்பவில்லை என்று தெரிந்தது. வெளியிட்டபோது, அது, எனது பதிலைக் கூட வெளியிடாமல் மறைத்தது. பலமுறை பதிவு செய்தும், அதே நிலை தொடர்ந்ந்தது. 12-03-2018 என்று இ-மெயிலில், அதையே அனுப்பி வைத்தேன். ஆனால், வெளியிடமுடியாது என்றே கரண் காம்ப்ளே என்பவர் இ-மெயில் மூலம் தெரிவித்தார். அந்நிலையில் தான் ஆராய்ச்சி உள்ளது. பொதுவாக, இவர்கள் அடுத்தவர்களின் ஆராய்ச்சியை தமது போல, புத்தகங்களில், விவரங்களைப் போட்டுக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ம. வெங்கடேசனும், அவ்வாறே அம்பேத்கரைப் பற்றி அறிந்து கொண்டு, பிறகு, குறிப்புகளை கொடுத்து, தானே தெரிந்து கொண்டது போலக் காட்டிக் கொள்வார்.

© வேதபிரகாஷ்

20-05-2018

Arvinda Neelakanda, Periyar, urban legend

[1] http://www.viduthalai.in/headline/161823-2018-05-19-09-51-30.html

[2] விடுதலை, தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு, புதன், 28 பிப்ரவரி 2018 16:31

[3] http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/157953-2018-02-28-11-18-23.html

[4] விகடன், ‘ஐந்தாயிரம் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்!’ -தமிழகத்தில் கிளைவிடும் மெகா பிளான், ஆ.விஜயானந்த், Posted Date : 16:41 (20/03/2017) Last updated : 17:01 (20/03/2017).

[5] https://www.vikatan.com/news/tamilnadu/84125-rss-plans-to-grow-their-roots-in-tamil-nadu.html

[6] இராவணன், சாஸ்திரா பல்கலைக்கழகத்தை இழுத்து மூடு ! தஞ்சை ஆர்ப்பாட்டம், By வினவு – May 18, 2017.

https://www.vinavu.com/2017/05/18/thanjavur-pala-protest-against-sastra-university-and-rss/

[7] Swarajya, Ten Things About Periyar Dravidian Parties Don’t Want You To Know, by Aravindan Neelakandan, Mar 09, 2018, 4:58 pm

https://swarajyamag.com/politics/ten-things-about-periyar-dravidian-parties-dont-want-you-to-know

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக