அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் – அர்ஜுன் கட்டிய கோவில், ஸ்டாலின் துர்கா விஜயம்! (2)

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தமிழ் சினிமா துறையில் ஆக்‌ஷன் கிங் என அழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் ஒரு தீவிர ஆஞ்சநேயர் சுவாமி பக்தர் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று. இவர் சென்னை போரூரில் உள்ள கிருகம்பாக்கத்தில் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம் என்ற கோவில் கட்டியுள்ளார்[1]. அர்ஜுன் புதியதாக கட்டிய கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோயில் தனது 17 வருட கனவு என்று கூறியுள்ள அர்ஜுன், கோயிலில் 180 டன் எடைகொண்ட ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சுவாமி சிலை சிறப்பம்சமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்[2]. அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் சுவாமி கும்பாபிஷேகம் விழாவையடுத்து முதலைமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் இந்த கோயிலுக்கு சென்றுள்ளார். துர்கா ஸ்டாலின் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்ற புகைப்படம் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஒருவேளை முதலமைச்சரையே வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கலாம், இருந்தாலும், “சிறந்த பக்தையான” தனது மனைவியை “சென்று வா,” என்று பணித்திருக்கலாம். அரசியல் ரீதியில், இதுவும் ஸ்டாலினுக்கு லாபம் தான்!

ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில்
ஶ்ரீ ஆஞ்சநேயர் கோவில் நுழைவாயில் – துவார பாலகர்கள்
நிறுவ பட்ட தியான ஆஞ்சநேயர்

ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியதுஅஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்: தான் கட்டிய ஆஞ்சநேயர் கோயில் குறித்து நடிகர் அர்ஜூன் கூறுகையில் “இந்த கோவில் என்னுடைய 17 வருட கனவு. இதற்கு ஏன் 17 வருடங்கள் ஆனது என்பதை விட அந்த நாட்கள் எனக்கு அளித்த அனுபவங்கள் முக்கியமானவை. தாய், துணைவி, மகள்கள் என என் குடும்பம் எனது இந்த முயற்சிக்கு உறுதுணையாக நின்றனர் என்பது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் பலரின் ஆதரவும் என்னை மேலும் மேலும் இந்த நற்செயலை செய்ய தூண்டுதலாக இருந்தது. இருப்பினும் இந்த கோவிலை நான் கட்டினேன் என்பதை விட, ஒரு தெய்வீக சக்தி எனக்குள் இருந்து இந்த செயலை செய்ய தூண்டியது என்பது தான் உண்மை. 2004- எஃபக்டை / விளைவை மனதில் வைத்துக் கொண்டு, கூறுகிறார் என்று தெரிகிறது.

அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேய சுவாமி மந்திரம்கோவிலில் உள்ள மற்ற சன்னிதிகள்: ஶ்ரீ ஆஞ்சநேயர் சாந்தமாக அமர்ந்திருக்கும் நிலையில் இருக்கும் இந்த ஒற்றைக்கல் சிலை (Monolithic) 180 டன் எடையுடையது. இது தான் முதல் 180 டன் எடையுடய ஶ்ரீ ஆஞ்சநேயர் சிலை என்று கூறுகின்றனர். ஶ்ரீ ராமர், விநாயகர், நாகராஜர் சன்னதிகளும் உள்ளது. பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலின் பிரதிஷ்டை செய்து கொடுத்தார். மேலும் ஒரு சிறப்பம்சமாக பெஜாவர் ஶ்ரீ விஷ்ணு பிரசன்னா சுவாமிகள் இந்த கோவிலுக்கு வருகை தருவதற்கு முன்பு அயோத்திக்கு சென்றிருந்தார். அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோயிலின் பிரதிஷ்டை செய்ய விஜயம் செய்த சுவாமிகள் தன்னுடன் அயோத்தியின் மண் எடுத்து வந்திருந்தார். அந்த மண்ணின் மீது இந்த கோவிலின் ஶ்ரீ ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. சிங்காரச் சென்னையில் எந்த மண் இருந்தது என்று தெரியவில்லை, ஆனால், அம்மண்ணில் பலமுறை விநாயகர் சிலைகள் ஈவேரா-பெரியாரால் உடைக்கப் பட்டுள்ளன. மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில், அப்பாவி பிராமணர்கள் வெட்டப் பட்டுள்ளனர். ஆனால், அதே இடத்திற்கு அயோத்தியிலிருந்து மண் வந்தது என்றால், நினைத்துப் பார்க்க வேண்டும்.

அயோத்தி மண்ணும், சிங்காரச் சென்னை மண்ணும், பெரியா மண்ணும்: பகுத்தறிவின் பெயரால், திக, திமுக, கம்யூனிஸ்ட், சில நேரங்களில் காங்கிரஸ் வகையறாக்களும் பித்து பிடித்தால் போல, “பெரியார் மண்” என்றெல்லாம், தொடர்ந்து பேசி வருவது தெரிந்த விசயமே. இன்றைக்கு திமுக ஆட்சிக்கு வந்ததும், ஏதோ அறநிலையத் துறையினையே பல சோப்புகள், பினாயில், டெட்டால் எல்லாம் ஊற்றி, சுத்தமாக கழுவி, தூய்மைப் படுத்துவது போல, தினம்-தினம் செய்திகள் வந்து கொண்டியிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளாக கோவில்கள் பூட்டப் பட்டிருக்கின்றன. தினசரி, மாதாந்திர, பட்ச, வருடாந்திர விழாக்கள், கிரியைகள், சடங்குகள் நடக்காமல் இருக்கின்றன. ஆகம சாத்திரங்களின் படி நடக்கவில்லை என்பது தெரிந்த விசயமே. பௌர்ணமி-அமாவாசை வந்து செல்கின்றன. ஆனால், அவற்றைப் பற்றி கவலைப் படாமல், கோவில் சொத்து, நிலம், பாக்கி என்று நாடகம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருக்கும் வாடகை, குத்தகை பணம் வசூலிக்கப் படவில்லை. லட்சக்கணக்கில் ஆக்கிரமிப்புகளை செய்தவர்கள் – துலுக்கர்-கிருத்துவர்-நாத்திகர்-இந்துவிரோதிகள் உட்பட, யாரையும் விரட்டியடிக்கப் படவில்லை, இதுவரை அனுபவித்த சொத்துக்களுக்கும் பாக்கி வசூலிக்கவில்லை. ஆனால், சீதா கிங்ஸ்டன் பள்ளிக்காரர்கள், எங்களால் முடியவில்லை என்று, இததனை ஆண்டுகள் வாடகைக் கொடுத்தவர்களை சட்டப்படி வெளியேற்றி விட்டார்கள். ஆனால், அதே சட்டம் மற்ற கிரிமினல்களை, சட்டமீறல் செய்தவர்களை ஒன்றும் செய்யவில்லை. ஆக ஆழ்வார்கள்-நாயமார்கள் பிறந்த புண்ணிய பூமி, பெரியாரிஸ நாத்திக பூமியாகி, பிறகு பெரியார் மண்ணாகியப் பிறகு, எல்லாமே, மண்ணோடு மண்ணாகி போகும் நிலைக்கு வந்து விட்டது. திருமூலரின் மந்திரங்களும் பொய்த்து விட்டன போலும். காலமேகப் புலவர் இருந்திருந்தால், பாடியே மண்மாரி வரவழைத்து, இந்த நாத்திக மண்ணை மூடியிருப்பார்.

அவரது (துர்கா ஸ்டாலின்) வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்![3]: “இன்று தமிழ்நாடு முதல்வர் திரு.மு..ஸ்டாலின் அவர்களின் துணைவி துர்கா ஸ்டாலின் அஞ்சனாசுத ஶ்ரீ யோக ஆஞ்சநேயசுவாமி மந்திரம் கோவிலுக்கு வந்து ஶ்ரீ ஆஞ்சநேய சுவாமியின் தரிசனம் பெற்றார். அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது[4]. விரைவில் இந்த கோவில் பொது மக்களுக்காக திறக்கபடவுள்ளது. கொரோனாவால் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில் கடவுளின் அனுக்கிரங்களும் ஆசியும் மக்கள் அவசியம். கடவுளின் அருள் மக்களுக்கு கிடைக்க வேண்டும், அவர்களின் வாழ்வில் துன்பம் மறைந்து இன்பம் பெருக வேண்டும் என்பதே என் ஆசை,” என்று கூறினார். நடிகர் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்று வணங்கி இருக்கிறார்[5]. அவர் கோயிலில் ஒற்றைக்கல் ஆஞ்சநேயர் சிலை முன்பு இருக்கிற புகைப்படம் வெளியாகி சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில், நடிகர் அர்ஜுன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத் தக்கது[6]..

© வேதபிரகாஷ்

07-07-2021


[1] தமிழ்.நியூஸ்.18, Arjun: ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!, NEWS18 TAMIL, LAST UPDATED : JULY 02, 2021, 09:55 IST

[2] https://tamil.news18.com/news/entertainment/cinema-anjaneyar-temple-built-by-actor-arjun-scs-494581.html

[3] நக்கீரன், அவரது வருகை எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது” – நடிகர் அர்ஜுன் பெருமிதம்!, நக்கீரன் செய்திப்பிரிவு –ஸ்டாலின், Published on 03/07/2021 (10:12) | Edited on 03/07/2021 (10:35).

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/her-visit-made-us-very-happy-actor-arjun

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோயில்… 180 டன் ஒற்றைக்கல் சிலைதுர்கா ஸ்டாலின் தரிசனம்!, Written By WebDesk, Updated: July 2, 2021 10:36:47 pm.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/durga-stalin-visits-at-actor-arjun-build-new-temple-319623/

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

பின்னூட்டமொன்றை இடுக