ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!

தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

இது பற்றி விரிவாக பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன், தினமலரில் வந்த செய்தியை அப்படியே போட்டுவிட்டு,அடைப்புக்க்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்திருந்தேன்.

இப்பொழுது, விவாதம் ஒன்றிற்கு மேற்பட்ட கோணங்களில் செல்வதால், இதனை மாற்றாமல் அப்படியே வைத்து, இன்னொரு பதிவை செய்ய விரும்புகிறேன்.

எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்: சென்னை: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். [உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டாம் என்று தமிழில் யோரோ சொல்லியிருக்கிறார்களே?]

ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது. [ஜகத்ரெக்ஸகன் இப்படி ஜகஜாலக் கில்லாடியாக, எல்லாரையும் வைத்து சிண்டு முடித்து விடுகிறாரா அல்லது திட்டமிட்டே இப்படியொரு நாடகம் அரங்கேறுகிறதா, என்று கூடிய சீக்கிரத்தில் தெரிந்துவிடும்.]

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

கருணாநிதி-வேலுக்குடிகிருஷ்ணன்-2010

விழாவில், முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

பத்மா.சுப்ரமணியம்.காட்சி.2010

எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது: “அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் [இப்படியெல்லாம் பொய் சொல்லுவதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதியேதான்]. கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் [இதுதான் கொழுப்பு என்பது. அம்மாந்நாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று தடுக்கப் பட்டவர்கள், மறுக்கப் பட்டவர்கள், ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்தும் ஒதுக்கப் பட்டவர்கள் முதலியவர்கள் மவுனமாக இருப்பதே இந்த ஆள் தொந்தரவைத் தாங்க முடியாது என்பதால்தான்]. வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். [இந்துக்களை அவதூறு பேசியபோது, ஸ்ரீராமனை தூஷித்த போதும், அந்த பண்பாடு இல்லாமல் போனது ஏனோ?]

கருணாநிதி-நாட்டியம்-2010

கருணாநிதி-நாட்டியம்-2010

[திருப்பதி லட்டு கொடுத்தால்கூட சுவைத்து சாப்பிடும் ஆட்கள் உள்ளனர்]: விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

கொஞ்சும்-குஷ்புவும்-தவிக்கும்-கருணாநிதியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் இருக்கும் பண்பாடு ஏன் இப்பொழுதைய மனிதர்களை இப்படி வைத்திருக்கிறது? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , ,

49 பதில்கள் to “ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்!”

  1. நெட்டிமையார் Says:

    ஆமாம், இந்த பார்ப்பனர்களுக்கு ஏன் அறிவில்லை?

    தெரிந்து-தெரிந்து இந்த இந்து-விரோதியுடன் ஏன் சேர ஆசைப்படவேண்டும்?

    மேலும் குறிப்பாக, தாங்களே குறிப்பிட்டுள்ளபடி, “ஸ்ரீராமனை தூஷித்த”வனை எப்படி இந்த வைணவர்கள் பொறுத்து சேர்ந்து உட்கார்ந்து சல்லாபிகிறார்கள்?

    • K. Venkatraman Says:

      Definitely, it appears that Jagatrakshagan has played a dubious role once again, as he has done in the case of “Vanniyars”, as 2011 happens to be an election year.

      Being a Brahmin, Vali has stopped down to a mean level to criticise other Brahmins just to please this anti-Hindu, anti-Brahmin, anti-national person.

      Now, hobnobbing with Vaishnavites raise many crucial questions:

      1. As Vaishnavites, whether they want to support Jayalalita or otherwise?

      2. As Hindus, they want to support Hindu minded-politicians or the anti-Hindu Karunanidhi?

      3. Whether, Karunanidhi wants to divide Hindus by hobnobbing with Vaishavites, so that the Saivites feel alienated?

      4. By hobnobbing with certain Brahmins, does Karunanidhi want to show off that he is brahmin-friendly also for the occassion?

      • Ravanan Says:

        கருணாநிதி தன்னுடைய “சாணக்கிய/நக்கீரத்தனத்தால்” எதையும் செய்யத் துணிந்தவர்.

        நிச்சயமாக, இந்த பார்ப்பனர்கள் அவருக்கு ஈடாக மாட்டார்கள்.

        எதோ, ராஜாவின் பக்கம் உட்காரலாம், நாளைக்கு பட்டங்கள் / பதவிகள் கிடைக்கும் என்ற ஆசையுடந்தான் இந்த மதிகெட்ட பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டு வந்திருக்க வேண்டும்.

        ரோஷமுள்ள பார்ப்பான் எவனும் வந்திருக்க மாட்டான்.

      • vedaprakash Says:

        You have raised important questions in the political context. Only the people should answer next year through ballot.

      • S. Thothadhrinathan Says:

        Very good. Let them answer, if they have any guts (To K. Venkatraman).

      • S. Thothadhrinathan Says:

        To K. Venkatraman – considering the election, I shall answer your querries raised:

        1. It is irrelevant as to whether the voters of Tamilnadu have been Vaishnavites or Saivites as the Azhwars and Nayanmars united the Hindus as a whole against the invading mlechas, marauding Mohammedans and others. In the same way, the Hindus of Tamilnadu should feel that they are Hindus and fight against these evil forces or the presentday Hindu-enemies.

        2. Now having attended the function, they should campaign vigorously on these lines for the consolidation of the Hindus.

        3. Definitely, yes, as he is known for his deceptive, crooked and wicked mentality that could be understood only by his very close friends and as well as political enemies. Therefore, Mutt heads should be careful with his political manuvering, after all, the well known fact is he has been proven anti-Hindu, anti-Indian, anti-Tamil, anti-people (as S. Thothathrinathan pointed out).

        4. Yes, as his all-India political ambitions, business and trade interests multiply, he would play Hindu-card in future till death.

    • vedaprakash Says:

      இதோ, இதற்கு கருணாநிதியே கூறியுள்ள விளக்கம், “இதிலே எப்படி வேளுக்குடி கிருஷ்ணன் வந்தார்? திருச்சி கல்யாணராமன் வந்தார் என்று சில பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதுதான் ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான். அவர்தான் இவர்கள் இருவரையும் இந்த விழாவிலே பங்கு பெறச் செய்து, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை இன்றைக்கு ஊட்டியிருக்கிறார். அதற்காக நான் ஜெகத்ரட்சகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்”.

      • M. N. Paravasudevan Says:

        This type of speech cannot be accepted. One should not have compropmised their position on any occount.

        Karunanidhi would stoop down to do anything, as he now celebrates his political enemy.

    • vedaprakash Says:

      நிச்சயமாக, கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், இவ்வாறு எப்படி பேச முடிகிறது, “”வேளுக்குடி கிருஷ்ணன்” – “கிருஷ்ணன்” என்றாலே, வைணவப் பெயர் என்பது உங்களுக்குத் தெரியும். “கல்யாணராமன்” – அதுவும் வைணவப் பெயர்தான். “ராமன், கிருஷ்ணன்” – இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய நீதியரசர் பெயர் இரண்டுக்கும் பொதுவான பெயர் – “ராமனும், சுப்பிரமணியனும்” – சைவமும், வைணவமும் சேர்ந்த பெயர்.”.

      • M. N. Paravasudevan Says:

        His mind is filled with filth and he does not want to respect the sentiments of Hindus. Why then, the agent – Jegatrakshagan – fools Vaishnavites by using Azhwars name.

        First of all, the Hindus should boycott such political fuctions / gimmicks exploiting Hindus.

        If they have any respect for Hindus, first let them get out of temples, that is enough.

    • L. Arumugam Says:

      பார்ப்பனர்கள் பாவம், மிரட்டப்பட்டுக் கூட வரவழைக்கப் பட்டிருக்கலாம்.

      • vedaprakash Says:

        அந்த பார்ப்பனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

    • S. Manavalan Says:

      In spite of the same question asked, there has not been any direct reply from the concerned.

  2. Tamilselvan Says:

    தமிழ் பண்பாடு இந்தத் தெலுங்கனுக்குத் தெரிந்திருந்திருந்தால், அவ்வாறு அந்த பண்பாடு இல்லாமல், இத்தனை காலமாக கனியிருக்காக் காய் கவர்ந்து தமிழர்களுக்கு துரோகத்தை மட்டும் இழைத்திருக்க முடியும்?

    “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” எனும்போதே, குற்ற உணர்வு உறுத்தத்தான் செய்கிறது.

    “இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது”, எனும்போது, தூக்கில் தொங்கலாம், ஏனெனில் இதைவிட கேவலமான, கொச்சைப்படுத்துகின்ற விதத்தில், வேறெதையும் சொல்லமுடியாது.

    அவதூறு பேசி, வழக்குகளும் நிலுவையிலுள்ள போது, யோசித்துதான், அங்கங்கு அத்தகைய பேச்சுகளை பேசியுள்ளது உலகம் அறிந்துள்ளதால், அந்த பண்பாட்டைக் கண்டு தமிழர்கள் பெருமைப்படமுடியாது.

    அந்த குற்றவாளியிடமிருந்தே, அத்தகைய வாக்குமூலம் வந்திருப்பது நல்ல விஷயம்தான்.

    • Ravanan Says:

      தமிழர்களுக்கு அறிவில்லை என்றதால் தான், கருணாநிதி அவ்வாறு ஏமாற்றி வருகிறார்.

      இதிலென்ன பெரிய அதிசயம் இருக்கிறது?

    • vedaprakash Says:

      “வேளுக்குடி கிருஷ்ணன்” – “கிருஷ்ணன்” என்றாலே, வைணவப் பெயர் என்பது உங்களுக்குத் தெரியும். “கல்யாணராமன்” – அதுவும் வைணவப் பெயர்தான். “ராமன், கிருஷ்ணன்” – இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய நீதியரசர் பெயர் இரண்டுக்கும் பொதுவான பெயர் – “ராமனும், சுப்பிரமணியனும்” – சைவமும், வைணவமும் சேர்ந்த பெயர். இப்படி ராமன், கிருஷ்ணன்……………..என்று ஏகாரத்தில் பேசுவதை கவனிக்கவும்.

  3. L. Arumugam Says:

    பண்பாடு என்று பேச இந்த ஆளுக்குக் கொஞ்சம் கூட அருகதை இல்லை.

    அரசியல் தலைவர்கள் ஆகட்டும், கூறிப்பாக பெண்கள் என்றால், மிகவும் கொச்சையாக, ஆபாசமாக, விரசமாக, இரட்டை அர்த்தத்தில் பேசுவதில் நிகரற்ற மாமனிதர்.

    மணியம்மை, டி.என். அனந்தநாயகி, சத்தியவாணிமுத்து, ஜெயலலிதா……………..இவர்களைப் பற்றி பேசியதை, எழுதியதை இப்பொழுது போட்டால், இந்த ஆளின் உண்மையான சுவரூபம் வெளிப்பட்டுவிடும்.

    அதே மாதிரி – காந்தி, ராஜாஜி, பக்தவட்சலம், எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியன், வைகோ, ………………..முதலியோரைப் பற்றி பேசியதை, எழுதியதை இப்பொழுது போட்டாலும், இந்த ஆளின் உண்மையான சுவரூபம் வெளிப்படும்.

    முரசொலியை புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம், இந்த ஆள் எந்த அளவிற்கு மோசமாக பேசுவார், எழுதுவார் என்று.

    பழிவாங்குவதில், மிகவும் கொடிய மனிதர்.

  4. L. Arumugam Says:

    கருணாநிதி, “அண்ணாவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், ஆர்.பி. சேதுப்பிள்ளையும் சொற்போர் நடத்திய ஒரு காலக்கட்டத்திலே கூட, அண்ணாவுடைய பேச்சைக் கேட்டு, சோமசுந்தர பாரதியார் வியந்ததும், ஆர்.பி. சேதுப்பிள்ளை புகழ்ந்ததும் சரித்திரம் சொல்லும்”, என்று சொல்லுவது மிகவும் அப்பட்டமான பொய்.

    கம்ப ராமாயணம் சொற்பொழிவில் அண்ணா சேதுப்பிள்ளையை பேசவே விடவில்லை. அதாவது, அந்த அளவிற்கு முழு நேரத்தையும் எடுத்துக் கொண்டார். ஈழத்து அடிகளும் அவ்வாறே அவமானப்படுத்தப்பட்டார். அதுமட்டுமல்லாது, சீனிவாசன் என்பவரை பேசவிடாமல் தடுத்து கலாட்டாவே செய்துள்ளனர்.

    40 ஆந்துகளுக்கு முன்பு என்ன நடந்தது என்று இக்கால இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், கருணாநிதி, இவ்வாறு பொய் சொல்லும் போது, அவர்களுடைய அந்தக்கால பேச்சை இப்பொழுது முழுவதுமாக வெளியிட்டால் நாறிவிடும்.

  5. S. Thothadhrinathan Says:

    It is shame that the learned persons like S/Shri. Sivasubramaniam, Velukkudi Srinivasan, Trichy Kalayanaraman and all other Hindus should have participated or shared with podia, etc., with the anti-Hindu, anti-Indian, anti-Tamil, anti-people Karunanidhi and others there.

    It is disgraceful that the characterless women like Khushboo who have been propagating that women need not be vouchafed for their chastity before marriage……………., Kanimozhi who have many times talked ill of Hindu women without knowing any basics of Hindu women, and of course, as she has already married and divorced / got divorced many times, she might not be worried about her marital status…………..and others participated in the function.

    The intriguing factor has been why this function has been organized?

    Had it been just to facilitate that Karunanidhi by the sychophant Jagatrakshakan, why others – Raman, Krishnan, Subramaniam etc., as named by K participated?

    Sivasubramaniam, Velukkudi Srinivasan, Trichy Kalayanaraman and others should come out with their stand.

    In any case, AZHWARS would not forgive these Hindus, if at all, they call or consider themselves as “Hindus”!

  6. S. Thothadhrinathan Says:

    To Ravanan – as your name suggests, you may exhibit your Rakshsasha characters like your protagonist K, but, you cannot suppress the truth.

    • M. N. Paravasudevan Says:

      Not only this Ravanan, even K has once accepted that he was proud to be belonging to his clan. Unfortunately, Ravanan was also a Brahmin!

      • S. Manavalan Says:

        When Parppans like HASSAn family make money exploiting RAVAN sentiments, there is nothing for another RAVANAN to react like this.

        AS one Hindi Bajan goes like this, “when there have been Rananas in every house, how can I bring so many Ramas to match him or equalize his evil?”, now, the Ashura qualities have increased not only in Tamilnadu, but also throughout in India and the world.

      • Karunanidhi Says:

        Hope he would die as a parppan, then!

  7. M. N. Paravasudevan Says:

    First of all, it is not known what exactly Sivasubramaniam, Velukkudi Srinivasan, Trichy Kalayanaraman and others (other than atheists) spoke on the occaassion?

    Jegatrakshagan might have played a mischief, but Dhayanidhi Maran has married an Iyengar lady of “The Hindu” family.

    Therefore, what pressure Karunanidhi brings in on Iyengars is intriguing.

    • Karunanidhi Says:

      Hey, you do not know what happened.

      I ordered that SAVI Parppan to fetch a suitable Pappathi for Maran. After all, Murasoli Maran himself born of a Parppan (Narayana Iyer). And therefore, why you worry about the past?

      Yes, now N. Ram has been my agent only. What you can do? nothing.

      Just read the hindu and dring coffee, man!

      • Soothira Karunanidhi Says:

        கருணாநிதியே, உன்னுடைய வாயை மூடிக் கொண்டிரு. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதே என்பதை மிகவும் கடுமையாக பதிவு செய்திருக்கிறார். Karunanidhi, ………payale … Onnoda naara vaya mooduda … Unakkum maranukkum ………………………..yaaravauthu kedaikkalayaa?

  8. saintthomasfables Says:

    ஆழ்வார்கள் ஆய்வு மையம் It is another forum to conduct meetings for Giving meaningless awards to cm.
    http://www.koodal.com/news/tamilnadu.asp?id=19617&title=tamilnadu-news-headlines-in-tamil

    On the same day huge meeting was held in Coimbatore by Jayalalitha and Karunanithi who was planning to advance elections is rattled.

    The great Exponents such as Velukudiji and Trichy Kalyanaramanji must have avoided these type of foras

  9. nS. Manavalan Says:

    In the above website, the matter appearing has been as follows. Perhaps, it has nothing to with the matter discussed here:
    தமிழை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்; கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருது வழங்கி அப்துல்கலாம் பேச்சு
    சென்னை, செப். 5-
    தமிழை இண்டர்நெட் மூலம் உலகம் முழுவதும் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல்கலாம் கூறினார்.
    Now, coming to the point, Karunanidhi should be taken to task and suitable lesson taught to him. At least, before his death, he should be corrected, mended and exposed his hypocrisy.
    Velukkudi Krishnan and Trichy Kalyanaraman should issue statements condemning his comparison of Jagat with Azhwar.

  10. Karunanidhi Says:

    My dear Parppans, why you fight with each other, because of me? This is what I expected and you guys have started doing exactly.
    In fact, I want Saivites and Vaishnavites should fight with each other; the Vadakalai and Thenkalai should fight with each other. The fire I lit already in the case of Kanchipuram and Sringeri has been burning and working well.
    Many mutts of Taminadu have been obeying my orders, only few and many Vaishnavite mutts only not heeding to my advice and behaving differently.
    If I come to power again, I shall take over all mutts and convert them to DK-DMK propagation centres.

  11. vedaprakash Says:

    மற்றொரு தளத்தில் http://inioru.com/?p=14983, இதைப் பற்றிய ஒரு பதிவைப் பார்க்க நேரிட்டது. இதில் பதிலளித்துள்ளவர்கள், அதையும் படிக்கவேண்டிய அவசியம் இருப்பதால், அதனை இங்கு பதிவு செய்கிறேன் (படிக்க வசதிற்காக உரிய இடத்தில் பத்திகளாகப் பிரித்துள்ளேன்). எல்லோருடைய கருத்தும் வரவேற்க்கப்படுகிறது:

    தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள். ஆகவே நாம் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டும் என்றார் பெரியார். பார்ப்பனரல்லாத முற்போக்கு சாதியினரின் அதிகாரம் வேண்டி துவங்கப்பட்ட திராவிட இயக்கத்தின் அடிப்படைத் தத்துவங்களின் ஒன்று இது. இன்று இக்கொள்கை காலாவதியாகிப் போனாலும் தமிழகத்தில் திராவிட இயக்கத்திற்கு பெரும் சவாலாக நீண்டகாலமாக உயிர்ப்போடிருப்பது தமிழ் தேசிய இயக்கங்கள். தமிழுணர்வால் உந்தப்பட்டு பிற்போக்கு தேசியவாதத்தை கடைபிடிக்கும் இக்குழுக்கள் நீண்டகாலமாக கருணாநிதியின் ஆதரவுச் சக்திகளாக இருந்தார்கள்.

    ஈழப் போரின் கருணாநிதியின் துரோகத்தின் பின்னர் இக்குழுக்களில் பெரும்பாலானவை கருணாநிதிக்கு எதிராக செயல்படுகிற நிலையில் ஆட்சி, அதிகாரம், சுரண்டல், இந்தியத் தேசியல் எல்லாவற்றிர்கும் திராவிடம் திராவிடம் என்று பேசும் கருணாநிக்கு திடீர் தமிழ் பற்று உருவாகியிருக்கிறது.

    சரி தமிழனைத்தான் காப்பாற்ற வில்லை த்மிழுக்காவது ஏதாவது செய்வாரா? என்றால் அதிலும் பச்சைத் துரோகங்கள்தான். சமச்சீர் கல்வி, தமிழ் ஆட்சிமொழி, உயர்நீதிமன்றத்தில் தமிழ், என்று போராடிய சக்திகளை நசுக்கிய கருணாநிதி. அர்ச்சகர் பள்ளிகளை இழுத்து மூடியது மட்டுமே அனைத்து சாதியினருக்கும் செய்த சாதனை எனலாம்

    இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி.

    அப்போது பேசும் போது, பார்ப்பனர்களின் தமிழ் பற்றி பேசிய கருணா ” இதற்கு முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே! என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அவர்களுடைய சொற்பொழிவில் – சொல்லப்பட்ட கருத்துக்களில் ஒன்றிரண்டு சொற்களில் எனக்கும், அவர்கள் கையாண்ட சொற்களுக்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆனால், எதைச் சுற்றினாலும், கடைசியாக தமிழ் தான் என்று அவர்கள் முடித்த அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்விலே நாங்கள் உடன்பாடு கொண்டவர்கள்.ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கும். தமிழ் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பண்பாடும், நாகரிகமுமே அதற்கு காரணம். அவர்கள் பேசிய கருத்துகள் சிலவற்றில் எங்களுக்கு வேறுபாடுகள் இருந்தாலும் தமிழால் நாங்கள் ஒன்றிணைந்தோம். அங்கே சுற்றினாலும் அவர்கள் தமிழில் வந்துதான் முடித்தார்கள். அந்தத் தமிழ்தான் நம்மை ஒருங்கிணைக்கிறது. அதனால் அரசியல், மதம் என்று எவ்வித வேறுபாடுகளும் இன்றி அனைத்து தரப்பினரும் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் பங்கேற்றனர். .

    தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். அந்த மாநாட்டிலே தமிழைக் கேட்கும்போது, எந்த உணர்வு ஏற்பட்டதோ, எந்தளவிற்கு இந்தத் தமிழ் மொழி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டதோ, அந்த உணர்வு அந்த மாநாடோடு நின்று விடாமல், தொடர்ந்து இந்த நாட்டிய நிகழ்ச்சியிலும், அது கொழுந்து விட்டெரிந்து, தமிழகத்திலே எல்லோரையும் இணைக்கக்கூடிய ஒரு ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தான், “போர்வாளும் பூவிதழும்” என்ற தலைப்பிலே இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகின்றது.

    உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக சுவர் கட்டிய கொடிக்கால் பிள்ளைமாரும் தமிழ் பேசுகிறார்கள். பாதிக்கப்பட்ட தலித் மக்களும் தமிழ்தான் பேசுகிறார்கள். தமிழ் பேசுகிற இரு சமூகங்களுக்கிடையில் கருணாநிதி கட்சியின் உள்ளூர் பிரமுகர்களின் ஆதரவோடு சுவர் இருக்கும் போது எப்படி தமிழால் இணைய முடியும் என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்.

    தொகுப்பாசிரியர்கள் : அசோக் யோகன் – பிரான்ஸ்
    : சபா நாவலன் -இங்கிலாந்து
    : டி.அருள் எழிலன் -இந்தியா
    மின்னஞ்சல் : info@inioru.com, inioru@gmail.com, inioru@yahoo.co.uk

    • P. Ravichandran Says:

      இதுதான் அந்த கருணாநிதியையும் வென்றுவிடக்கூடிய அசாத்தியமான கூடத்தின் வெளிப்பாடு!

      அவர்களுடைய வார்த்தைகளை கவனியுங்கள்:

      “………….பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி”.

      1. பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியம்

      2. இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன்

      3. இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலை

      4. சரணடைந்தார் கருணாநிதி.

      5. இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி!

      இப்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக் கொண்டு பிராமண துவேஷத்தை கக்கும் இவர்களின் உண்மை உருவம் என்ன?

      சரணடைய கருணாநிதி என்ன அந்த அளவிற்கு முட்டாளா, மடையரா, ஒன்றும் தெரியாதவரா? [உடனே கருணாநிதியை அப்படி சொல்லிவிட்டார்கள் என்ரு வம்பு செய்யவேண்டாம்]

      “ஆழ்வார்” என்று தான் யாரைக் குறிப்பிடுவார் என்று அவரே சொல்லியுள்ளார்.

      “விபீஷண ஆழ்வார்” பற்றியும் அடிக்கடி விளக்கியுள்ளார், கவிதைகள் எழுதியுள்ளார்.

      பிறகு, இந்த காழ்ப்பு, வெறி, வெருப்பு, முதலியன ஏன்?

  12. semmozitamil Says:

    “வேளுக்குடி, திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள் என்ற விவரம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை” என்ற என் கமெண்டுக்கு, நிகழ்ச்சிக்கு சென்ற ஒருவர் தான் பார்த்த அனுபவத்தை (?) எனக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். பல இடங்களில் எடிட் செய்த அந்த மெயில் கீழே…

    தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

    அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை

    ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரை ‘ஆழ்வார்’ என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

    துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார்.

    திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

    வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

    கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்து “இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்” என்று பேசியுள்ளார் கலைஞர்.

    அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால்

    புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

    இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்.

    – [ edited ]

    “என்ன கொடுமை சரவணன் இது?”

    Posted by IdlyVadai at 7/14/2010

    • vedaprakash Says:

      மிகவும் நன்றி. இது கீழ்காணும் இணைத்தளத்தில் காணப்படுவதால், அதனையும் குறிப்பிற்க்காக சேர்க்கிறேன்:

      http://idlyvadai.blogspot.com/2010/07/blog-post_14.html.

      அரசியல்வாதிகளை நம்பக்கூடாது.

      அதுவும் கருணாநிதி போன்ற இந்து-விரோதியை மக்கள் நம்பக்கூடாது [அவரது பேச்சுகள், எழுத்துகளின் ஆதாரமாக இவ்வாறு தீர்மானிக்க வேண்டியுள்ளது].

      ஆகையால்தான், இங்கு சிலர் குறிப்பிட்டுள்ளபடி, இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஆத்திகப் பெரியவர்கள், நாத்திக வியக்திகளுக்கு இயைந்து போகாத விஷயங்களை வெளிப்படையாக விவரித்து அறிக்கை வெளியிட்டால், இதைப்பற்றிய எழும் சர்ச்சைகளை குறைத்துக் கொள்ளலாம்.

    • P. Ravichandran Says:

      உள்-விமர்சனம் இருக்கவேண்டியதுதான், ஆனால், மாமியைப் போல இவ்வளவு தேவையில்லை.

  13. M. N. Paravasudevan Says:

    I think all of you are missing the important point – Tamil!

    The contribution of Vaishanavites / Azhwars to Tamil has to be highlightened.

    Like Azhwars, Tamil would live only because of them and not because of these thieves, vagabands, looters,…………………..[just to borrow fro K]

    • P. Ravichandran Says:

      நாத்திகம் பேசி தமிழைக் கெடுத்த இவர்கள் “ஆழ்வார்” என்று பேசக்கூட அருகதையற்றவர்கள்.

      முதலில், கருணாநிதியை மன்னிப்புக் கேட்கச் சொல்லவேண்டும்.

      ஆனால், இந்துக்களுக்கு அந்த அலவிற்கு எங்கு சுரணையும்……….தைரியமும் இருக்கிறது என்று தெரியவில்லை.

  14. P. Ravichandran Says:

    அதென்ன குஷ்பு அப்படி விழுகிறாரே கருணாநிதியின் மீது?

    பாவம், அவர் பின்னே சென்று, சென்று…………..பிறகு தலையையே திருப்பிவிட்டார்!

    இருந்தாலும், அம்மணி இப்படி நெருங்கி வந்து படுத்தியிருக்கக் கூடாது!

    நாராயண, நாராயண!!

    ஐயோ, இதைப் பார்த்து விஷயத்தையே மறந்துவிட்டேனே, சுவாமி!

  15. srihari Says:

    kudos to kalaignar karunanidhi for having invited such poisonous remarks from frustrated bhramins(my community)this is clearly a perfect reflection of what their mind set is.we are the bosses of OPPRESSION.we know what we have done to the so called oppressed society.now when people have climbed the ladder by staunch efforts of anna,and periyar and to some extent of other leaders ,when the other classes of society is competing with us and even out perform us we are not able to digest the social equality.all of them are feeling nervous and insecure.all talked about how kalyanaraman praised karunanidhi and everybody felt he was doing it for to get a slot in SUNTV and KALAIGNAR TV.yes u all might be true as we bhramins are very well accustomed to these acts even before our independence to touch the feet of white people and after independence to affluent sections of the other sections of the societyfor our selfishness.so it will be criminal for us to talk about people like kalyanaramans behaviour when he is sharing the stage with the chief minister of the state.no one of us have the right to talk about HINDUISM as we all know how aswamedha yagam was performed and for what purpose. never try to cover up our flaws,it will not be hidden for long.sri mun naarayana wants his devotees to be a srivaishnava .srivaishnavam never advocates spitting venom like what u people are upto until now.we dont have any right to call ourselves a BHRAMIN as we are the first people who went against true bhraminism(as u all know what a true bhramin should do and what a true bhramins occcupation should be.so guys come to real world try to be secular and try to be a good human being

  16. Vikramsingh Bhat Says:

    As a student of Political science, I have have been studying the Tamilnadu politics with interest.

    The behaviour of the TN politicians of the ilk like Karunanidhi has been hypocritical and deceptive since early 1970s.

    They talk onething at one place and and talk differently at second place, and talk in still different way in third place and so on.

    Such persons, first of all, should not have called for the function, or the other persons, who do not suit the gang should have avoided.

    Having attended, the affected party has no other way but bear the thing and keep quite.

    Or if they are politically, strong, they can teach them a lesson politically, in the elections.

  17. rajesh007 Says:

    It is ridciculos to invite the so called Trichi Kalyana Raman to speak about Vaishanavism there are better learned practising vaishanavas in globe, Trichi Kalyana Raman aim to make money only, How a non vaishanavaite speak about vaishanavism Did any one how the teachings are preached in there classes ridiculous and full of nonsense

பின்னூட்டமொன்றை இடுக