Archive for the ‘அருணை வடிவேலு’ Category

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

பிப்ரவரி 11, 2010

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

வேதபிரகாஷ்

குறிப்பு: இக்கட்டுரை “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியவின் பங்கு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திராவிடச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த ஆய்கத்தில் அதே தலைப்பில் கருத்தரங்கம் கடந்த மார்ச் 2009ல் சென்னையில் நடந்தது. பதிப்பகத்தார் – திராவிட சான்றோர் பேரவை, சென்னை, 2009, ப.201-208.

தமிழகத்தில் தமிழுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும், மதிப்பும், மரியாதையும் சொல்லவொன்னாத நிலையை அடைந்துள்ளன. திருக்குறளை அவமதிக்கும் புனித காரியத்தைத் திருவாளர் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈவேரா அவர்கள்தாம் துவைக்கி வைத்தார் . தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளதை படித்தால், படித்திருந்தால், படிக்க நேரிட்டால், தமிழ், முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ், தமிழின் மூச்சு, தமிழின் உயிர், முதலியவைல்லாம் என்றோ, அவர்களது உடலில் சூடு, சொரணை, தமிழ்ப் பற்று என்றெல்லாம் யாதாவது இருந்திருந்தால், வீழ்ந்திருக்கும், மூச்சு நின்றிருக்கும், செத்திருக்கும். ஆனால், தமிழ் வாழ்ந்திருக்கும். என்னே, அலங்கோலம் இது! தமிழ், முத்தமிழ் ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு கட்டடத்தில் அடைப்பட்டு விட்டது . அதன் பெயரில் கிடைத்த கோடிகள், தமிழின் மூச்சுகள், உயிர்கள் பங்கு போட்டுக் கொண்டு விட்டன.

திருக்குறள் சர்ச்சைக்குட்பட்ட பின்னணி (1968 முதல்): திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து, திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. பிறகு தமிழ்மொழி மூலம் சமுதாயத்தில் தங்கள் மீதுள்ள எதிர்மறை சிந்தனைகளை துடைக்க, 1968ல் உலகத் தமிழ் மாநாடு – என்றெல்லாம் செயல்பாடு வெளிப்பட்டது. மதுரை பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு, ஒரு அறக்கட்டளையை நிறுவி “திருக்குறள் ஆய்வுத்துறை” துவங்கப் பட்டு, கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டு, புத்தகங்களும் (திருக்குறள் ஆய்வு வெளியீடு) வெளியிடப்பட்டன[2]. அவ்வாறு பல நூல்கள் வெளிவர திருக்குறளின் இந்தியமதத்தொன்மை, சார்பு மற்றும் பிணைப்பு முதலியன நன்றாகத் தெரிந்தது. அதாவது, திருக்குறளை படிக்க-படிக்க, ஆராய-ஆராய அத்தகைய உண்மைகள் புலப்பட்டன[3]. இதனால், திராவிட சித்தாந்திகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக முகமதிய-கிருத்துவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்கள், இந்த புதிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, மற்றும், தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பதில் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

கிருத்துவ-முகமதிய எதிர்ப்புகள் (1968 முதல்): கிருத்துவ-முகமதிய எதிரிப்புகள் இரண்டு வழிகளில் செயல்பட்டு வெளிப்பட்டன என தெரிகிறது.

  • ஒன்று “அறிவுஜீவிகள்” என்ற ரீதியில் மாநாடுகள் நடத்தி கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது.
  • இரண்டு துண்டு பிரசாரம் (handbill distribution), சிறுநூல் பிரபலம் / குறுப்புத்தக விநியோகம் (pamphleteering) மூலம் “பயத்தை”த் தூண்டுவது.

குரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது? குறளா? குரானா?” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

கிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள் [4]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார்.

பல்கலைகழகங்களும், மதரீதியிலான “நாற்காலிகளும்”, சித்தாந்த மோதல்களும்: முகமதியரும் தமது யுக்திகளைத் தொடங்கினர். அதே மதுரை பல்கலைக் கழகத்தில் “இஸ்லாமிய தமிழிலக்கிய ஆரய்ச்சிப் பிரிவு” துவக்கப் பட்டது. நல்ல முஸ்லிம்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள் மாதிரி தவித்தனர், ஏனெனில், அவர்கள் “தமிழின் நண்பர்கள்” என்றும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களது அடிப்படைவாதத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவர்கள் திருக்குறளை தவிர்த்து தமது மதம்தான் சிறந்தது என்ற ரீதியில் “சூஃபி மெய்ஞானம்” என்ற போர்வையில் “ஆரய்ச்சி” ஆரம்பித்தனர். அவர்களும் “உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்” நடத்த ஆரம்பித்தனர்[5]. இவ்விதமாக, திருக்குறள் பின்னேத் தள்ளப்பட்டு, “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்”, “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றியத் தொண்டு”, முதலியன முன்வைக்கப் பட்டன. அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.

இவ்வாறு, முகமதியர் தெளிவாக இருக்கும்போது, கிருத்துவர்கள் தமது “உள்-பிரச்சினைகளுக்காக” யோசித்து செயல்பட வேண்டியிருந்தது. கத்தோலிக்க சர்ச் தெய்வநாயகத்தின் மூலம் இந்த பிரச்சினை அணுக முடிவெடுத்தது. அதனால்தான் தெய்வநாயகத்தை வைத்தே எல்லா பிஷப்புகளும் தமது வேலைகளை இன்றளவிலும் செய்து வருகின்றனர்.

சித்தர்கள்: கிருத்துவர்களும், முகமதியரும்: திருக்குறளைவிட, “சித்தர்”களைப் பிடித்துக் கொண்டால், திருவள்ளுவரையும் மறக்கலாம், தமது “இந்து-விரோத” பிரசாரத்திற்கு “சித்தர் பாடல்களை” திரித்து விளக்கமும் அளிக்கலாம் என முடிவு செய்தனர் போலும். “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்” என்ற மாநாட்டை மணவை முஸ்தபா[6] 1980ல் நடத்தினார். முதல் கிருத்துவ தமிழ் மாநாடு துருச்சியில் டிசம்பர் 28-30, 1981 தேதிகளில் நடக்கிறது. அதில், வி. ஞானசிகாமணி என்ற கிருத்துவரின் போலி “சித்தர் பாடல்களை” ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, “அகத்தியர் ஞானம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு திருவள்ளுவத்தில் முரண்பாடு கொள்ளும் இவர், “சித்தர்களில்” போட்டி போட்டு மாநாடுகள் நடத்துகின்றனர், புத்தகங்கள் வெளியிடுகின்றனர். கருணாநிதியும், கனிமொழியும் சமீபத்தில் சிவவாக்கியர் பாடல்களைப் பற்றி அரைகுறையாக சொல்லி மாட்டிக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இனி தனித்தனியாக, சில குறிப்பான திருக்குறள்-விரோத நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளதைப் பார்ப்போம்.

குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

“பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.

மதனியும், தெய்வநாயகமும்: மேற்கண்ட உண்மைகளினின்று தெளிவாக அறியப்படுவது, மதனி மற்றும் தெய்வநாயகம் முகமதியர் மற்றும் கிருத்துவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவை, குண்டு, வெடிகுண்டு, எதிர்ப்பு சின்னங்கள் தாம், அவைற்றை வெடிக்கச் செய்யும் துப்பாக்கி, ராக்கட்-லாஞ்சர் மற்றும் ரிமோட்-கருவிகள் இஸ்லாமிய-கிருத்துவ தலமைகள்-தலமையகங்கள் தாம்[10]. மதனியின் புத்தகத்தை மறைத்து விட்டனர் முகமதியர், ஏனெனில் இன்று அது கிடைப்பதில்லை. ஆனால், தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது[11]. நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது[12].

மொழி-இலக்கியம் மதத்திற்கு விரோதமா? இத்தகைய நோக்கு, இந்த மதம் மாறிய முகமதிய-கிறித்துவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தங்களது இறையியல் கொள்கைகள் பாதிக்கப் படுவதால், வெளிப்படுகின்றது. முகமதியரைப் பொறுத்த வரைக்கும், அரேபிய பாடை(மொழி)த்தான்[13] சிறந்தது. குறிப்பாக, வெளிநாட்டு கிருத்துவர்களுக்கும் இந்த மொழி வெறி, நிறவெறியோடு உள்ளது. அவர்கள் இந்தியாவில் எப்பொழுதுமே இலத்தினில்தான் “பலி-பூஜை” (Eucharist) நடத்துவார்கள். பங்களுரில் தமிழில் இறைவணக்கம் நடந்தபோது, கன்னட-கிருத்துவர்கள் எதிர்த்ததை நினைவு கொள்ளவேண்டும். மேலும்,

இங்கு முகமதிய-கிறித்துவர்கள் தமது மத-கடவுளர்களை, தூதர்களை தமிழில் விளக்க முற்பட்டபோது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்-கடவுளர், தேவதைகள் முதலியோரை “கேசாதி-பாத” வர்ணனைகளுக்கு உட்படுத்தப் பட்டபோது, ஆரம்பகாலங்களில் எதிர்ப்பு இல்லை. அல்லாப் பிள்ளைத் தமிழ், நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ், பாத்திமாப் பிள்ளைத் தமிழ் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ் முதலியன இருந்ததாகத் தெரிகிறது, ஆனால், 20வது நூற்றாண்டுகளில் அவர்களது மத-அடிப்படைவாதம், தீவிரவாதம் முதலியன சித்தாந்தரீதியில் வளர்ந்தபோது, அத்தகைய வர்ணனைகளை எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது அத்தகைய மற்றும் தமது சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாது என்றுள்ள “பாடபேதங்கள்’ என்ற போர்வையில் பாடல்களையும் நீக்கி விட்டனர் மற்றும் புதிதாக எழுதி சேர்த்தும் உள்ளனர்.

முகமதியமத காப்பியங்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு இடையே இருந்த ஷியா-சுன்னி வெறுப்பும் வெளிப்படுகிறது[14]. தமது கடவுளர், தூதர்களை தமிழ் மரபுபடி அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதை எதிர்த்தனர்[15].

செமித்திய-சகோதர மதங்களின் முரண்பாடு ஏன்? இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்”![17] ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளிலும் திருக்குறளை அவர்கள் தாக்குகின்றனர்.

தமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தமிழ் என்று பேசுபவரும், திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள், மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.

கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].

எனவே, இந்த திருக்குறள் எதிர்ப்பு, மறப்பு, மறைப்பு, திரிப்பு முதலிய காரியங்களில் ஒட்டுமொத்த தமிழ்-எதிர்ப்பு கூட்டங்கள்தாம் “திராவிடர்” என்ற போர்வையில், முகமதியர்-கிருத்துவர்களுக்கு துணைபோய், தன் கையே தன் கண்களைக் குத்திக்கொள்வதைப் போன்று தமிழர்கள் செய்ய மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகையால்தான், அவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து குழுக்களும் தமக்கு எடிராக செயல்படுவதை அறியாமல், அவர்கள் தமது காப்பாளர்கள் என்று இன்றளவிலும் நம்பப்பட்டு வர்கின்றார்கள். இந்த மாயவலையிலிருந்து தமிழர்கள் விடுபடும் வரை, தமிழர்களுக்கு, தமிழுக்கு விடிவு காலம் இல்லை.

வேதபிரகாஷ்


[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

 

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை – நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967) பேசியபோது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்” என்றார். ஒருவேளை, அதுதான் மதுரை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தபட்டதா என்று தெரியவில்லை.

[3] திருக்குறள் உலக பொதுமறை என்றெல்லாம் திராவிட அரசியல்வாதிகள் பேசியபோது, முகமதியர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாது, அவர்கள் திராவிட சித்தாந்திகளிடம் அவ்வாறு பேசவேண்டாம் என்றும் எடுத்துக் கூறினர். இன்றளவிலும் முகமதியர் இணைத்தளங்கள் மூலம் குறளை குரானுடன் ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

[4] ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம்.

[5] ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

[6] மணவை முஸ்தபா, தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மீரா பப்ளிகேஷன், AE-103, அண்ணா நகர், சென்னை-600040, 1983.

[7] காஃபிர் = இவார்த்தை “குஃப்ரு” என்ற அரேபிய சொல்லினின்றுப் பெறப் படுகின்றது. குஃப்ரு என்றால் சுத்தமில்லாதவன், ஆச்சாரமில்லாதவன், விலக்கப்பட்ட உணவை உண்பவன், அல்லாவை நம்பாதவன் என்றெல்லால்ம் பொருள்படும். குரானின் படி, இவ்வுலகம் “தாருல்-இஸ்லாம்” மற்றும் “தாருல்-ஹர்ப்” என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பின்னதில், எப்பொழுதும் “ஜிஹாத்” என்ற புனித மதப்போர் நடத்தி, காஃபிர்களைக் கொன்றால் தான், அந்த “குஃப்ரு” நீங்கப்படும். அதுவர “ஜிஹாத்” தொடரும்.

[8] “மோமின்” = நம்பிக்கை உள்ளவன், அதாவது குரானில் மட்டும் நம்பிக்கையுள்ளவன், அதனால் மற்றவற்றை அடியோடு நம்பாதவன், நம்பக் கூடாதவன், நம்ப முடியாதவன்.

[9] கண்ணுதல், பொதுமறை குறள்தான்-குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

[10] வில்லிருக்க அம்பை நோவானேன் என்பது பழைய “பழமொழி”, இப்பொழுது, துப்பாக்கி இருக்கத் ரவையை நோவானேன், ராக்கட்-லாஞ்சர் இருக்க குண்டை நோவானேன், ரிமோட்-கருவிகள் இருக்க வெடிகுண்டுகளை நோவானேன் என புது “பழமொழிகள்” உபயோகப்படுத்தலாம். ஆனால், இவையும், தொழிஏநுட்பத்தால் பழையதாகி விடுகின்றன!

[11] ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர்.

[12] அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது.

[13] திராவிட-மற்றும் சித்தாந்திகளைப் போல “பாஷை” என்ற சொல்லிற்கு பதிலாக “பாடை” என்று அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

[14] எம். செய்யது முகம்மது ஹஸன் (பதிப்பாசிரியர்), கனகாபிஷேகமாலை, ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, கீழக்கரை, 1990, ப.xiv-xv.

[15] அதே இலத்தில், ப.xvii.

[16] முஹம்மது அப்துல்காதிர், இயேசுநாதர் சிலுவையிலறைப்படவில்லை, முஸல்மான் ஆபீஸ், தென்காசி, 1980.

Ahmed Deedat, Crucifixion or Cruci-fiction, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

…………………….., Resurrection or Resusiatation, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

………………………, Who moved the stone?, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

[17] இதன் மீது ஆதாரமாகத் தான் “இந்தியாவில் ஏசு” என்ற படத்தை கிருத்துவர் எடுக்கின்றனர். விவரங்களை அவர்களது இனைத்தளத்தில் காணலாம்.

[18] சமீபத்தில் திரு. நாத்திகம் ராமசாமி அவர்களைப் பார்த்தபோது, கண்ணுதலின் “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற குறும்புத்தகத்தைக் காண்பித்ததுடன், இந்த சிறிய விவரங்களையும் சொன்னார்கள்.