Archive for the ‘தமிழ்’ Category

ஆக்ஸன் கிங் அர்ஜுன், ஜெய்ஹிந்த் அர்ஜுன், ஆஞ்சநேயர் பக்தராக, அயோத்தியா மண்ணெடுத்து, கர்நாடக கல்லில் சமைத்து, சிங்கார சின்னையில் கோவில் கட்டியது! (1)

ஜூலை 7, 2021

ஆக்ஸன் கிங் அர்ஜுன், ஜெய்ஹிந்த் அர்ஜுன், ஆஞ்சநேயர் பக்தராக, அயோத்தியா மண்ணெடுத்து, கர்நாடக கல்லில் சமைத்து, சிங்கார சின்னையில் கோவில் கட்டியது! (1)

சென்னை கூகுள் நகரமைப்பு, சாலைகள், முக்கியமான இடங்களை பற்றிய விவரங்கள் காண்பிக்கும் கூகுள் மேப்.

நடிகர் அர்ஜுன் தோட்டம் (Actor Arjun Gardens) இருப்பிடம்:  நடிகர் அர்ஜுன் தோட்டம் – வடக்கு-போரூர், கிழக்கு – சென்னை விமான நிலையம்; தண்டலம்; தெற்கு மதனபுரம் (பம்மலலிக்கு மேல்) இடையே அமைந்துள்ளது. அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். அதன் இருப்பிடத்தை “கூகுள் மேப்பில்,” காணலாம். அந்த தோட்டத்தில் வடகிழக்கு மூலையில் அக்கோவில் அமைந்துள்ளது. அச்சிலையின் உயரம் (height), நீளம் (length), மற்றும் அகலம் (width) முறையே 32 x 12 x 7 (feet respectively) அடிகள் என்றுள்ளது. அச்சிலையின் எடை உருவம் மற்றும் பீடம் சேர்த்து 140 / 180 டன்கள். அச்சிலை, விக்கிரகம், பிரதிமை, உருவம் சிற்ப சாத்திரங்களின் படி வடிவகைக்கப் பட்டுள்ளது. இங்கு தியான ஆசனத்தில், தியான முத்திரையுடன், தியான ஆசனத்தின் / பீடத்தின் மீது இருப்பதாக, அவ்விக்கிரகம் செதுக்கப் பட்டுள்ளது. கோவிலைக் கட்டுகிறவர் விக்கிரகத்தை ஸ்தாபிக்கும் போது, அவரால் வேலை முடிக்கப் படும் என்ற வழக்கம் இருப்பதால், பீடத்தில் சில சிற்பம் முழுவதுமாக இல்லாததை, அர்ஜுன் முடிப்பது வீடியோக்களில் காணலாம்.

ஶ்ரீ ஆஞநேயர் விக்கிரகத்தின் அளவுகள் – ஒரே கல்லினால் வடிக்கப் பட்ட விக்கிரகம்
நடிகர் அர்ஜுனனின் தோட்டம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் இருப்பிடங்களை மேப்பில் காணலாம்.
கோவிலில் அருகிய தோற்றம்.

அர்ஜுனக்கும், ஆஞ்சநேருக்கும் என்ன சம்பந்த, தொடர்பு அல்லது அர்ஜுனனின் விருப்பம் என்ன?: இக்கேள்வி கேட்ட போது, அர்ஜுன் கொடுத்த விளக்கம், “ஆஞ்சநேயர் எனது நண்பர். எனது விருப்பமான மிகப்பெரிய மனித வீரர். எனது குழந்தைசிறுவயதிலிருந்தே அவருடன் விருப்பமானதொடர்பு இருந்தது. நான் தினமும் மனதார வேண்டுவதோடு அல்லாமல், அவருடன் அடிக்கடி பேசி வந்தேன். அவர் தான் எனக்கு எல்லாமே. அவர் உருவில் தான் எல்லொரும் என்னிடம் வருகிறார்கள், உதவுகிறார். எனக்கு ஆஞ்சநேயர் விக்கிரங்களை எனக்கு பரிசாக அளிக்கின்றனர். ஆகையால், காலத்தை வென்று, நிலைத்து நிற்பது போல எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவ்விதமாகத்தான், இந்த கோவிலைப் பற்றிய கட்ட வேண்டிய திட்டம் உருவாகியது. இது மாதிரி என்னால், செய்ய முடியுமா என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. இருப்பினும் எல்லோருடைய உதவியால், பெரியவர்களின் ஆசிர்வாதத்தால், வேலை ஆரம்பித்தாகி விட்டது. 2004ல், தெலுங்கில்வீர ஆஞ்சநேயம்என்ற படத்தில் நடித்தேன். அது பெரிய அளவில் வெற்றியடைந்தது. அப்பொழுதிலிருந்து, கோவில் கட்ட வேண்டும் என்பது உறுதியானது. கோவில் பணிகள் இவ்வாறு நடந்து முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.”

இது அவரது மனமார பக்தி, பற்றுதல் சிறந்த ஆன்மீக பக்குவத்தைக் காட்டுகின்றது.

17 வருட கனவின் ரகசியம், காத்திருப்பு முதலியவற்றின் பின்னணி இதுதான்[1]:  அர்ஜுன் சொன்னது, “2004ல், தெலுங்கில்வீர ஆஞ்சநேயம்என்ற படத்தில் நடித்தேன். அது பெரிய அளவில் வெற்றியடைந்தது. அப்பொழுதிலிருந்து, கோவில் கட்ட வேண்டும் என்பது உறுதியானது. கோவில் பணிகள் இவ்வாறு நடந்து முடிந்தது பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.” அப்படத்தில், அஞநேயர் மனித உருவில் வந்து மக்களுக்கு உதவுவதாகச் சித்தரிக்கப்பட்டது. அவ்வேடத்தில் அர்ஜுன் நடித்தார். “அஞ்சி” என்றவனை காப்பாற்ற, அவன் உருவிலேயே வருவதாக இருக்கும். அப்படம் “பிளாக் பஸ்டர்” படமாகியது. ஆகவே, 2004லிருந்து மனத்தில் ஆரம்பித்து, போட்டு வைத்த திட்டம் 2021ல் பூர்த்தியடைந்துள்ளது[2]. தெலுங்கு நாளிதழ்கள், சஞ்சிகைகள் இதைப் பற்றி முன்னரே செய்திகளை வெளியிட்டு வந்துள்ளன[3]. கும்பாபிஷேகம் நடக்கும் என்பதையும் முன்னரே குறிப்பிட்டன[4]. 2004-2021, அதுதான் அந்த 17 வருட காலம். அவ்விக்கிரகம் செய்து முடிக்கவும் ஏழு மாதங்கள் ஆகின.  கர்நாடகாவில் செய்யப் பட்டு, இங்கு பெரிய டிரைலர் வண்டியில் எடுத்து வரப் பட்டு[5], பிறகு கிரேன் மூலம், கெருகம்பாக்கம் தோட்டத்தில், விக்கிரம் இறக்கப் பட்டது, குறிப்பிட்ட இஅத்தில் வைக்கப் பட்டு போன்ற விவரங்களையும் கொடுத்துள்ளன[6]. சில பக்தர்களுக்கு இத்தகைய பாக்கியம் எல்லாம் கிடைக்கிறது. மனது இருக்கிறது, செய்து முடிக்கிறார்கள். பணம் இருப்பவர்களும், பக்திமான்களாக இருந்தாலும், சிலரே, இத்தகைய திருப்பணிகள், புனர்-நிர்மாணம், பழுது பார்த்தல் போன்ற காரியங்களை செய்து வருகிறார்கள்.

பலமொழிகளில் பேசி விளக்கும் அர்ஜுன், வீடியோவிலிருந்து எடுக்கப் பட்ட புகைப்படம்.
நன்றி நான் – ஸ்டாப்-நியூஸ்.

ஆஞ்சநேயர் கோவில் பற்றி தென்னக மொழிகளில், ஆங்கிலத்தில் பேசி விவரித்த அர்ஜுன்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என பல மொழிகளில் பேசி, பக்திமயத்துடன், அடக்கமாக, அமைதியாக நிகழ்சியைப் பற்றி விவரித்துக் கூறியது சிறப்பாக இருந்தது.  அவரது கன்னட உச்சரிப்பு அந்த அளவுக்கு ஸ்வச்சமாக, சுத்தமாக, தெளிவாக இருந்தது. உண்மையில் அது மற்றவர்களுக்கும் புரியும் படியும் இருந்தது, உதாரணத்திற்கு சில வரிகள்: கருணாநிதி தெய்வ ஸ்வ்ருபராகியிருத்த நம்ம பேஜாவரு ஸ்மாமிகுளு இல்லி பந்து அவர ஒந்து தரிசன கொட்டு, ……….

அவர அம்ருத ஹஸ்தனிந்த, தேவரினன்ன பிரதிஸ்டாபரண மாடிதார…………..

இந்த எச்சு நமக பேரே பேகாயிது அல்ல……………… தும்ப இவத்து ……

.நன அதினாறு வருசத 16 years கெலச இவுத்து ஆகதாத…….”

பிறகு தமிழில், குழந்தை போல இயற்கையாக, “ஸ்வாமிஜி இங்கு வர வேண்டிய ப்ரோக்ராம் இல்ல….. அயோத்தியாவுக்கு போயிந்தாரு அங்கிருந்து வரும் போது பிரசாதம் கொண்டு வந்தார்……….   அயோத்தி மண் கொண்டு வந்தார் அதை தான் இங்கு வைத்து, பூமி பூஜை நடந்து கோவில் கட்டப் பட்டது. ………..அதனால், இது இன்னொரு அயோத்யா என்பேன்……,”  என்றும் பேசினார்!

அர்ஜுன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

கோவில் விக்கிரகம், மற்ற விவரங்கள்: நடிகர் அர்ஜுன் சென்னை போரூரில் கெருகம்பாக்கத்தில்கட்டியுள்ள புதிய ஆஞ்சநேயர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளார். அவருக்கு சொந்தமான 20 ஏக்கர் பரப்பளவு உள்ள தோட்டத்தில் ஒரு ஏக்கரில் இந்த கோவிலை கட்டியுள்ளார். கர்நாடக மாநிலம் கொய்ரா என்ற கிராமத்தில் 200 டன் எடை கொண்ட ஒரே கல்லில் 28 அடி உயரம் 17 அடி அகலத்தில் ஆஞ்சநேயர் உட்கார்ந்து இருப்பது போன்று சிலையை வடித்து, 22 சக்கரங்கள் கொண்ட ராட்சத டிரக்கில் ஏற்றி கெருகம்பாக்கத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் விசேஷ பூஜைகள் செய்து பெரிய கிரேன் மூலம் அந்த சிலை சாமி பீடத்தில் அமர்த்தப்பட்டது[7]. உலகிலேயே பெரிய ஆஞ்சநேயர் கோவிலாக இதனை உருவாக்கி வருவதாகவும் கோவிலின் உள் பிரகாரம், வெளிபிரகாரம் கட்டும் வேலைகள் நடந்து வருகின்றன என்றும் அர்ஜூன் தெரிவித்து இருந்தார்[8]. பல வருடங்களாக நடந்த கோவில் கட்டும் பணி தற்போது முடிந்துள்ள நிலையில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சில விஷேச பூஜைகள் மற்றும் கோவிலின் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக குறிப்பிட்ட சிலரை மட்டுமே அழைத்த அர்ஜுன், தனது யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிப்பரப்பை செய்தார். பின்னர் அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அர்ஜுன் கட்டிய புதிய கோயிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய மனைவி துர்கா ஸ்டாலின் சென்று தரிசனம் செய்திருக்கிறார்.

© வேதபிரகாஷ்

07-07-2021


[1] குமுதம், 17 வருட கனவு நிறைவேறியதுஆஞ்சநேயர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்த நடிகர் அர்ஜுன்!, kumudam bookmark line | CINEMA| Updated: Jul 03, 2021.

[2] https://www.kumudam.com/news/cinema/33784

[3] இ.டிவி.பாரத், நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்!, Published on: Jun 29, 2021, 5:09 PM IST.

[4] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/anjaneyar-temple-kumbabishekam-built-by-actor-arjun/tamil-nadu20210629170945420

[5] இ.டிவி.பாரத், 17 ஆண்டு கனவு: 180 டன் எடையில் ஆஞ்சநேயர் சிலை உருவாக்கிய அர்ஜுன், Published on: Jul 2, 2021, 7:34 PM IST.

[6] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/sitara/cinema/arjun-anjaneyar-temple-festival-held-in-chennai/tamil-nadu20210702193416097

[7] தினத்தந்தி, நடிகர் அர்ஜூன் கட்டிய ஆஞ்சநேயர் கோவில், பதிவு: ஜூன் 30,  2021 07:28 AM.

[8] Published on 03/07/2021 (10:12) | Edited on 03/07/2021 (10:35).