Archive for the ‘சினிமா கலகம்’ Category

எம்.ஜி.ஆர். தான் கரூணாநிதியை முதல்வராக்கினார், கணக்குக் கேட்டார், அதிமுக ஆரம்பித்தார்! கருணாநிதிதான் அவரை பதிலுக்குத் திட்டினார், வசவு பாடினார்!!

மே 14, 2010

எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி

First Published : 14 May 2010 01:09:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D…………%E0%AE%9C%B0=&SectionName=Tamilnadu

கருணநிதிக்கு கொஞ்சம் கூட மனசாட்சி, வெட்கம், மானம்………….முதலியவை இல்லை என்று தெரிகிறது.

எம். ஜி. ஆரைத் திட்டியது, வசவு பாடியது ……………….முதலியவற்றை இங்கு எழுதினால் நாறிவிடும்.

ஏன், பெரியார், அவரது மனைவி பற்றிக் கூறியது……..முதலியவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டால், மனங்கள் கூசிக் குறுகிவிடும்.

இன்றைய தமிழ் இளைஞர்கள், ஆஹா,  இவர்களா, இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக………………..பேசியிருக்கிறார்கள் ………..இவர்களைப் போய், நாம் தலைவர்கல் என்ரு எண்ணியிருந்தோமே………………என்று வெட்கப்பட்டு, தங்களது எண்ணங்களையே மாற்றிக் கொண்டு விடுவர்.

எங்களைப் போன்ற, இந்த ஆட்கள் பேசியதையெல்லாம் 50களினின்று நன்றாக கேட்டிருப்பதனால், அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம்

சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும்.

தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது.

அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.

திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.

என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ”ஐயா” என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.

அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.

ஒரு நிலையில், தான் ஒரு பெரிய ராஜ தந்திரி, தேர்தல் வரும் சமயத்தில் இப்ப்டியெல்லாம் பேசினால், ஓட்டுகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் இவர்க்கு ஓட்டு போடுவார்கள் என்று இவருக்கே உரித்தான சூழ்ச்சியுடன் பேசலாம்.

ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்றைய நிலையில், அரசியலை மக்களை வெகுவாக பாத்திதுள்ளது.

தங்களை பிழிந்தெடுத்துள்ளது, கசக்கிப் பிழிந்துள்ளது; சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டு ஒழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கோடிகலில் கொள்ளையெடித்த அரசியல்வாதிகள், ஜாலியாக வாழ்க்கையை குளு-குளு கார்களில், அறைகளில்……………….அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள்.

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

மார்ச் 31, 2010

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சொல்வதெல்லாம் “நிஜம்” தான்: அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது சொல்வதெல்லம் “நிஜம்” தான்!

இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

தலைமறைவாக உள்ள நித்யானந்தா! பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூரு, நித்யானந்தா, கருணாநிதி: ஜெயலலிதாவிற்கு எப்படி ஹைதராபாதோ, கருணாநிதிக்கு பெங்களூரும், மஹாபலிபுரமும். பெங்களூரில் எல்லாமே உண்டு. ஆனால், மஹாபலிபுரம், இப்பொழுது “செக்ஸ்-டூரிஸ’த்திற்கு உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஜோ அங்குதான் ஜாலியாக இருந்தான். வில்-ஹியூம் சின்னவீடு வைத்திருந்தான். அவன் ரஜினி படத்திலும் நடித்து இருக்கிறான்!

பெங்களூரு, நக்கீரன் கோபால், ரஜினி காந்த், கருணாநிதி: இவற்றிற்கெல்லாம் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னம், சந்தனக் கடத்தல் வீரப்பன் விஷயத்தில் கோடிகள் பறிமாற்றங்கள் நடந்தன என்றெல்லாம் சட்டசபையிலேயே பேச்சு அடிபட்டபோது, இவர்கள் அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக விவாதம் வந்தது.

இமயமலை, ரஜினி காந்த், நித்யானந்தா: தினகரன் இப்பொழுது “இமயமலையில் நித்யானந்தா பதுங்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த சம்பந்தமும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. இனி கருணாநிதி ஆணையிடுவது தான் பாக்கி. ஆணையிட்டால், உடனே ரஜினியை இமயமலைக்கு அனுப்பி, நித்யனந்தாவைப் பிடித்துவிடலாம்!

அஜித் விவகாரம் பற்றி கருணாநிதி கடிதம் : முழுவிவரம்

பிப்ரவரி 26, 2010
அஜித் விவகாரம் பற்றி கருணாநிதி கடிதம் : முழுவிவரம்

Ajith issue : Chief Minister Karunanidhi''s Reaction
அஜித் விவகாரம் திரையுலகம் மட்டுமல்லாமல், அரசியல் உலகிலும் சூட்டை கிளப்பியுள்ள நிலையில் அந்த விவகாரம் பற்றி முதல்வர் கருணாநிதி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். தனக்கு திரையுலகினர் இதுவரை எடுத்த விழாக்கள் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, அஜித் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் கருணாநதி எழுதியுள்ள கடிதம் வருமாறு:-

தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்துவரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை – ஏமாற்றம் – அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என் மீது என் தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலேகூட என் கலைவாழ்வுக்கு பொன்விழா – பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள். கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் – அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத்தினரின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் – திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் – படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும், திரைப்படத்துறையினர் நல வாரியம் அமைத்தும், அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால், தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும், தன்னை காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும், நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர்.

கடற்கரையில் 14 – 4 – 1996 அன்று எனக்கு கலையுலகப்பொன் விழாவினை கோலாகலமாக தம்பி விஜயகாந்த் மற்றும் கலையுலகச்செல்வர்களும், தயாரிப்பாளர்களும் இணைந்து நடத்திய விழாவும் அளித்த பரிசும் அதன் பின்னர் நினைத்தாலே இன்னமும் என் நெஞ்சை நெகிழ வைக்கும் இனிய நண்பர் சிவாஜி தலைமையில் எனது ஐம்பதாண்டு கால கலையுலக பணியை முன்னிட்டும் 75வது வயது தொடக்கத்தை முன்னிட்டும் முறையே பொன்விழாவும், பவளவிழாவும் 27- 9 – 1998 அன்று சென்னை நேரு அரங்கத்தில் நடந்ததும், வழங்கிய பரிசுகளும், கண்ணீரோடு கலந்த வாழ்த்துக்களும் மறக்கக் கூடியதா?

எல்லா முதலமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள் என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதலமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல, அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு, தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு, அவர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு அந்த விழா!

சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை உணர்ந்து, மகிழ்ந்து, உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.

அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய், அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே, அதைப்போன்றதொரு பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.

அகில இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன், கலைஞானி கமலஹாசன் இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து, அது மாசற்ற மலர் எனினும், அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி, அதைத்தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் இதுதான் சமயம் என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று, இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள். அவை அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்தபோது, அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக, அஜித் என்னை சந்தித்து விளக்கமளித்தார். நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல, இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றிதான் குறிப்பிட்டதாக அவர் விளக்கம் அளித்ததும், திரையுலக தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம் புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலகம் விளையும் கலையுலகத்தில் அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர் தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.

இந்த கடிதத்தின் நோக்கத்தையும், இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்தியவர்களும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலகம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால், அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!

இவ்வா முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.