Archive for the ‘சிறூதாவூர் சீமாட்டி’ Category

ஆழ்வார்களைக் கேவலப்படுத்தும் கருணாநிதி நபிகளை, மற்ற மதத்தலைவர்களைக் கேவலப்படுத்துவாரா?

ஜூலை 14, 2010

ஆழ்வார்களைக் கேவலப்படுத்தும் கருணாநிதி நபிகளை, மற்ற மதத்தலைவர்களைக் கேவலப்படுத்துவாரா?

கருணாநிதி பேசியுள்ளார், “இந்த நிகழ்ச்சியைக் காணுகின்ற வாய்ப்பினை நானும் பெற்று, நீங்களும் பெற்றுள்ள இந்தச் சூழல் – தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டுமென்று அனைவரும் எண்ணுகின்ற ஒரு சூழல். இதிலே எப்படி வேளுக்குடி கிருஷ்ணன் வந்தார்? திருச்சி கல்யாணராமன் வந்தார் என்று சில பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதுதான் ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான். அவர்தான் இவர்கள் இருவரையும் இந்த விழாவிலே பங்கு பெறச் செய்து, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை இன்றைக்கு ஊட்டியிருக்கிறார். அதற்காக நான் ஜெகத்ரட்சகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்”.

ஆழ்வார் செய்த வேலை: ஆழ்வார்தான் இதையெல்லாம் செய்தார் என்று கருணாநிதி பேசும்போது, நாமதாரிகளுக்கு ஏன் கோபம் வரவில்லை. ஒரு முஸ்லீம் / கிருத்துவக்கூட்டத்தில் சென்று (ஏற்கெனெவே நிறைய சென்றுள்ளார்) அந்தந்த கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் அல்லா, நபிகள், கர்த்தர், ஏசு, மேரி, பாத்திமா……………தான் இதையெல்லாம் செய்தார். நாங்களெல்லாம் ………………. என்று அழைப்பது …………………….த்தான், என்று சொல்லவில்லையே. அத்தகைய தெய்வீக இணைப்பில்தான் குஷ்பு, கனிமொழி போன்ற அவதுறு, தூஷண, அநாச்சாரிகளும் வந்து, அவர்களுடன், இவர்கள் கலந்து கொண்டார்களா?

நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான்: மிக்கவும் சரி. பிறகு யாரை நபிகள், தீர்க்கதரிசி, கர்த்தர், ……………………………என்றெல்லாம் அழைப்பார்கள் உங்கள் கூட்டம்? உங்களுக்குள் அப்படியொரு பரிபாஷை உள்ளது என்று ஒப்புக்கொண்டதற்கு மிகவும் நன்றி. அத்தகைய பரிபாஷையில் தான் மனைவி, துணைவி, கருப்பு காக்காய், குல்லுக பட்டர், கொல்லைப்புறத்தேரி, வந்தேரி, குரங்கு, நாடாவை அவுக்கவா, தூத்தேரி, மலையாளி, கூத்தாடி, பாப்பாத்தி, திருமதி, சிறூதாவூர் சீமாட்டி, மவுன்ட் ரோடு மஹாவிஷ்ணு, திருடர், திருடர்கள், ஆண்டிப்பண்டாரங்கள், பரதேசிகள், ………………அப்பப்பா, ஒரு புதிய அகராதியையே உருவாக்கி விடலாம் போலிருக்கிறது.

இக்கூத்துகள் எல்லாம் நாத்திகத்தின் உச்சநிலையா, செக்யூலரித்தின் உன்மத்த நிலையா – என்ன அது? நாத்திகம் என்றாலே இப்படி இந்து-விரோதம் என்று செயல்பட்டுவந்து, அதில் கிருத்துவர், முஸ்லீம், மற்ற அத்தகைய நாத்திக கூட்டங்கள் கலந்து கொண்டு இப்படி இந்துக்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்தால் அந்நிலை என்ன? மனோதத்துவ, சமூகவியல், அரசியல், தத்துவ, ஆன்மீக,…………துறை வித்தகர்கள், வல்லுனர்கள், பண்டிதர்கள், ………..இதை ஆய்ந்து, ஆராய்ச்சி செய்து விளக்கவேண்டும்.