Archive for the ‘செக்ஸ் வீடியோ’ Category

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

மே 20, 2016

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

பெரிய கருப்பன் வீடியோ - திமுக பெயில்ஸ்

ஆபாச வீடியோ பரவலும் (07-05-2016), பெரியகருப்பன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த புகாரும் (08-05-2016): திருப்புத்துார் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி, ‘வாட்ஸ் ஆப்’பில் 07-05-2016 அன்று பரவியது[1]. பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது[2] என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இது குறித்து பெரியகருப்பன், தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரில் கூறியுள்ளதாவது[3]: “நேற்று, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்மூலமாக வந்த ஒரு வீடியோவில், நான் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல சித்தரித்த காட்சியை பரப்பியிருந்தனர். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பொது வாழ்வில் தொடர்பில்லாத செயல் பற்றிய விமர்சனங்களை, போலியான ஆவணத்தைப் பின்பற்றி பொய்யான செய்தி தொகுப்பை வெளியிடும், ‘ஜெயா டிவிமீது நடவடிக்கை எடுக்கவும், ‘டிவிசேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கவும் வேண்டுகிறேன்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்[4].

பெரிய கருப்பன் வீடியோ - ஆறு போஸ்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைகோரி வழக்கு (10-05-2016): தேர்தல் கமிஷன் அடுத்து, இவர், ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது[5]: “தி.மு..வில் தீவிர உறுப்பினராக உள்ளேன். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளதால், அடுத்தடுத்து வெற்றி பெற்றேன்.  16-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும், அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனஇந்த நிலையில், யாரோ ஒரு பெண்ணுடன் நான் இருக்கும் ஆபாச வீடியோவை, உள்நோக்கத்துடன் ஜெயா டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ளதாக எனக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நவீன டிஜிட்டல் முறையில் என் உருவத்தை பொய்யாக சித்தரித்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதுஇதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தேர்தலில் என் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர். தற்போது, இந்த ஆபாச வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதித்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த படத்தை ஒளிபரப்ப ஜெயா டி.வி.க்கு தடை விதிக்கவேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[6].

பெரிய கருப்பன் வீடியோ - ஜெகத்ரட்சகன்

ஜெயாடிவி ஒலிபரப்பு நிறுத்தம் (09-05-2016), வழக்கு தள்ளுபடி (11-05-2016): இந்த மனு கோடை கால நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை தன்னுடைய சேம்பரில் வைத்து நீதிபதி நேற்று காலையில் விசாரித்தார்.  அப்போது ஜெயா டி.வி. நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், வைரமூர்த்தி ஆகியோர், ‘திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கடந்த 9-ந் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட விவகாரம் குறித்த வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது”, என்று கூறியுள்ளார். அதன்படி, அந்த காட்சியை ஒளிபரப்புவது 9-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது’ என்று கூறினார்[7]. அதனால், வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டுக் கொண்டனர். பின்னர், அந்த தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தையும் நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்[8].

பெரிய கருப்பன் வீடியோ - நித்தியானந்தா

ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்: இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்புவதை எதிர்மனுதாரர் தரப்பு நிறுத்தி விட்டதாக கூறியுள்ளதுஎனவே, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை. அதேநேரம், ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளதுஅப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர். இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்ப தடை கேட்ட மனுதாரரின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[10].

lenin karuppan - ranjitha video

நீதிபதி தீர்ப்பின் அம்சங்களும், ஊடகங்கள் மற்றும் திமுக போன்ற திராவிட கட்சியினர் நடந்து கொண்டுள்ள விதமும்: நீதிபது குறிப்பாக பின்குறிப்பிட்டவற்றை பார்த்தால், கடந்த ஆண்டுகளில், திமுக முதலிய திராவிட கட்சிகள் எவ்வாற்று நடந்து கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

  1. ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளது.
  2. அப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.
  3. ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர்.
  4. இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன.
  5. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  6. எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நித்தியானந்தா வீடியோ விசயத்தில் சன்–டிவி மற்றும் நக்கீரன் எவ்வாறு நடந்து கொண்டது, இப்பொழுது அமைதி காக்கிறது என்பதனை கவனிக்கலாம். வீடியோ, ஒரு ஆண்-பெண் விவகாரம், யாரோ வீடியோ எடுத்தது, சுற்றில் விட்டது-பரப்பியது என்றால், ஏன் வேறுபடவேண்டும்? இப்பொழுது வக்கிரம் படங்களில், வீடியோக்களில் உள்லது என்றால், முன்னர் வாய்ப்பேச்சுகளில், எழுத்துகளில் இருந்தன. ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி, முதலியோர்களும், தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு வகையறாக்களும் 1960களிலிருந்து பேசி, எழுதி வந்தவற்றை, இப்பொழுது ஞாபகப்படுத்திப் பார்த்தால், அவர்களது யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

12-05-2016 / 20-05-2016

[1] தினமலர், மாஜி திமுக அமைச்சரின் ஆபாச வீடியோ?, மே.9, 2016. 16:49.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1518740

[3] தினமலர், பெண்ணுடன் இருக்கும்வீடியோ‘ ‘மாஜிபெரியகருப்பன் புகார், மே.10, 2016. 02:01.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1519182

[5] தினத்தந்தி, தனியார் டி.வி.க்கு எதிரான முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , மே 12,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:வியாழன் , மே 12,2016, 12:11 AM IST.

[6] மாலைச்சுடர், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, Wednesday, 11 May, 2016   04:10 PM

[7] http://www.maalaisudar.com/newsindex.php?id=51390%20&%20section=19

[8] The Madras High Court on 11-05-2016 dismissed a suit filed by a former DMK minister and a candidate in the May 16 assembly polls in Tamil Nadu seeking to restrain Jaya TV from telecasting a ‘morphed’ video purportedly showing him in a compromising position with a woman as the channel informed the court that it had already stopped the telecast. Justice M V Muralidharan recorded a memo filed by Jaya TV Network that the telecast had been stopped immediately on receipt of a notice from the Election Commission on May 9 and ruled that since the defendant had stopped telecasting the news nothing survives in the suit for adjudication by the court

[9] http://www.dailythanthi.com/News/India/2016/05/12001102/Former-Minister-of-the-pleaHigh-Court-Orders.vpf

[10] Petitioner R Periakaruppan, a former state minister who is contesting the polls from Tirupattur constituency, filed the suit seeking to restrain Jaya TV and demanding Rs.26 lakh as damages for telecasting the ‘highly defamatory, false news report of alleging immoral conduct on his part together with digitally morphed video graph contents.’ He contended the video allegedly depicting him in a compromising position with an unknown woman was telecast to bring disrepute to him with an ulterior motive of shattering his prospects in the coming elections and tarnish his image and it was a clear violation of the model code of conduct.

http://zeenews.india.com/news/tamil-nadu/jaya-tv-stops-telecast-of-morphed-video-of-dmk-candidate_1884267.html