Archive for the ‘பட்டப் பஞ்சாயத்து’ Category

கட்டப் பஞ்சாயத்து, கெட்டப் பஞ்சாயத்து, பொட்டப் பஞ்சாயத்து, பட்டப் பஞ்சாயத்து, மொக்கப் பஞ்சாயத்து……………………………

ஒக்ரோபர் 2, 2010

கட்டப் பஞ்சாயத்து, கெட்டப் பஞ்சாயத்து, பொட்டப் பஞ்சாயத்து, பட்டப் பஞ்சாயத்து, மொக்கப் பஞ்சாயத்து……………………………

செத்த பாடையிலிருந்துப் பெறப்பட்ட பஞ்சாயத்து: “பஞ்சாயத்து” என்ற வார்த்தையே செத்த பாடையிலிருந்து – சமஸ்கிருதத்திலிருந்துப் பெறப்பட்ட நிலையில்[1], அறிவு உஞ்சந்தலையில் ஏறி, உன்மத்த நிலையையடையும் போது, அறிவுஜீவிகள் கட்டப் பஞ்சாயத்து, கெட்டப் பஞ்சாயத்து, பொட்டப் பஞ்சாயத்து, பட்டப் பஞ்சாயத்து, மொக்கப் பஞ்சாயத்து……………………………என்று பேசிக்கொண்டே இருக்கலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம்!

நம்பிக்கையில்லாதவர்கள் பஞ்சாயத்தை பற்றி பேசுவது குஷ்பு கற்ப்பைப் பற்றி பேசுவது போன்றதாகும்: பஞ்சாயத்து என்றால், பஞ்சபூத சாட்சிகளின்படி, மக்களின் முன்பு மக்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு கொடுக்கப் பட்டு அதனை ஏற்றுக்கொள்ளும் நிலை[2]. அதாவது, அந்நிலையில், யாரும் பொய் சொல்லமாட்டார்கள், இயற்கைக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்ற நிலையில் முடிவு எடுக்கப்படும் நிலை. இன்று, எதிலும் நம்பிக்கையில்லாத கூட்டத்தார், அதைப்பற்றிப் பேசுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. குஷ்பு கற்ப்பைப் பற்றி பேசுவதைப் போன்றது! ஒன்றில் நம்பிக்கையில்லாத கூட்டத்தார், அதைப் பற்றிப் பேச யோக்கியதை / அருகதை இல்லை. இதைப்  பொட்டப்பஞ்சாயத்து எனலாமா?

ராஜிவ் காந்தியின் குளறுபடிகளும், அவது மனைவி செய்யும் அநியாயங்களும்: ஷாபானு வழக்கிற்குப் பிறகு[3], முஸ்லீம்களின் தொந்தரவு தாங்காமல்[4], ராஜிவ் காந்தி சி.ஆர்.பி.சியைத் திருத்தியது[5] மட்டுமல்லாது, முஸ்லீம்களுக்கு, சரீயத் முறையில், ஒரு தனி சட்டத்தை ஏற்படுத்தினார்[6]. அப்பொழுது வழிபடும் ஸ்தலங்களின் சட்டம் ஒன்றும் இயற்றப்பட்டது[7], ஆனால், அதில் ராமஜென்மபூமி விலக்களிக்கப்பட்டது. இப்படி ஆரம்பித்தப் பிரச்சினை காங்கிரஸால் தொடர்ந்து வளர்க்கப் பட்டுள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு காங்கிரஸ், ஒரு சலுகை செய்யப்போகிறது என்றால், இந்துக்களுக்கும் அதைவிட சிறிய சலுகை என்பது பொல, செய்யப்படும் யுக்திதான் இது. சோனியா மேய்னோவும் அதற்கு சளைத்தவர் இல்லை என்பது நிரூபனம் ஆகிவிட்டது. காஷ்மீரில், முஸ்லீம்களுக்கு அள்ளித்தரப்படப்போகிறது, குற்றவாளிகள் விடுவிக்கப்படப்போகிறார்கள்[8]……………என்ற நிலையில், மக்களின் கவனத்தைத் திருப்பத்தான் இந்த தீர்ப்பு என்று சொல்லலாம். அதைவிட பெரிய கொடுமை கோடிக்கணக்கான காமென்வெல்த் ஊழல்! இதைக் கெட்டப் பஞ்சாயத்து எனலாமா?

கமிஷன், அமைச்சகம், அரசு, நீதிமன்றம், பாராளுமன்றம்: லிபரான் கமிஷன் உள்துறை அமைச்சகத்தினால் ஏற்படுத்தப்பட்ட கமிஷன், அதன் முடிவுகளை ஏற்பதும், ஏற்காததும் அமைச்சகத்தின் இஷ்டம். சட்டரீதியாக செயல்படுத்தும் போது, மற்றவர்கள் அதனைத் தட்டிக் கேட்க உரிமையுண்டு. அது நீதிமன்றங்களுக்கூட்பட்டது. அந்நிலையில், கமிஷன் முடிவுகளை வைத்துக் கொண்டு, நீதிமன்ற தீர்ப்பை ஒப்பிடமுடியாது. மேல்முறையீட்டிற்கு போவார்கள் என்று அடிக்கொருதடவை, தீர்ப்பு வருவதற்கு முன்பும், பின்னும் பேசி வருகின்றவர்கள், இதைப் பற்றிப் பேசுவது, கையாலாகாத்தனம் மற்றும் போலித்தனம். அந்நிலையில், இடைக்காலத் தடை என்றெல்லாம் நாடகம் ஆடியவர்கள், வழக்குப் போட்டவர்கள், அதனை / அவர்களை ஆதரித்தவர்கள், முதலியோரை என்ன சொல்வது?

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புகள் பல இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன: நூற்றுக்கணக்கான உச்சநீதி மன்ற தீர்ப்புகள் நடைமுறைப் படுத்தாமலேயே வைத்திரூக்கின்றன பல மாநில அரசுகள்! அதில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளது[9]. உதாரணத்திற்கு – நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நடைப்பெற்று வரும் ஊழல், திறனற்ற நிலை, முதலியவற்றை உச்சநீதி மன்றம் நன்றாகவே கேட்டிருக்கிறது. ஆனால், அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல்வாதிகள் தள்ளிக் கொண்டே போகின்றனர். இங்கு ஏன் யாரும் கேட்பதில்லை? சென்ற வாரம் கூட உச்சநீதி மன்றத்தில் கெடு வைத்துள்ளது. ஆனால், அதைப் பற்றி மூச்சுக்கூட விடிவதில்லையே, ஏன்? மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்ற பயம்தான். ஊழல் செய்து, மக்களின் பணத்தை கல்வி என்ற பெயரில் உறிஞ்சி ஆனால், பதிலுக்குத் தரவேண்டியதை தர ஏமாற்றுவேலைகள் தான் மிச்சம். அரசியல் செல்வாக்கை வைத்துக் கொண்டு, நீதிமன்றங்களை, நீதிபதிகளையே வளைத்து வருகின்றனர். யாரும் பஞ்சாயத்திற்கு வருவதில்லையே? இதை பட்டப் பஞ்சாயத்து எனலாமா?


[1] பேராரிசிரியர் அன்பழகன் இதற்கு பிரத்யேகமான விளக்கம் எல்லாம் கொடுப்பார்!

[2] விவேக்கின் குஞ்சு சுடும் பஞ்சாயத்து அல்ல. ஆனல் அதற்குத் தான் பத்மஸ்ரீ எல்லாம் கொடுத்திருக்கிறார்கள். கூட காஷ்மீரத் தீவிரவாதிக்கும் கொடுத்திருக்கிறார்கள்!

[3] மொஹமது அஹமது கான் .எதிர். ஷா பானு பேகம் –

[4] முஸ்லீம் அடிப்படைவாதம் உச்சக்கட்டத்தில் இருந்த நிலை.

[5] Section 125 of Code of Civil Procedure was amended, in other words, the Muslim women have been excluded from the Sectuion, si that they cannot claim any alimony.

[6] The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986 with the Muslim women (Protection of Rights on Divorce) Rules, 1986.

[7] Places of worship Act, 1986.

[8] இது எந்த சட்டத்தில் செல்லுபடியாகும் என்று தெரியவில்லை.

[9] இவர்கள் தாம் சட்டம், நீதி, கோர்ட் என்றெல்லாம் அடிக்கடிப் பேசிக் கொண்டிருபார்கள்.