Posts Tagged ‘எதிர்க்கட்சித் தலைவர்’

அதிகாரிகளின் முகமூடி கிழியும்: கருணாநிதி எச்சரிக்கை!

ஏப்ரல் 6, 2010
அதிகாரிகளின் முகமூடி கிழியும்: கருணாநிதி எச்சரிக்கை
ஏப்ரல் 06,2010,00:00  IST
Front page news and headlines today

கருணாநிதி-ஜெயலலிதா-அரசு அதிகாரிகள்: ‘ஜெயலலிதாவுக்குத் தகவல் தரக்கூடிய அதிகாரிகள் யார் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாள் ஆகாது’ என, தமிழக முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.

1969-70 கோதுமை ஊழல் போல கருணாநிதி யின் அறிக்கை: நிலக்கரி இறக்குமதி பற்றி ஜெயலலிதா மீண்டும் விடுத்த அறிக்கையில், ‘2005 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில், 680 லட்சம் டன் நிலக்கரியை மின் வாரியம் இறக்குமதி செய்திருக்கிறது’ எனச் சொல்லியிருக்கிறார். இந்த காலத்தில் மின்வாரியம் இறக்குமதி செய்த நிலக்கரி, மொத்தம் 83 லட்சம் டன்கள் தான்.ஜெயலலிதா தனது அறிக்கையில், சராசரியாக ஆண்டுக்கு 130 லட்சம் டன் நிலக்கரியை மின்வாரியம் இறக்குமதி செய்ததாகக் கூறுகிறார். ஆனால், சராசரியாக, ஆண்டுக்கு 17 லட்சம் டன் தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலக்கரி தேவையான ஆண்டுக்கு 150 லட்சம் டன் நிலக்கரியில், மத்திய அரசுக்கு உட்பட்ட நிலக்கரி நிறுவனத்தின் (கோல் இந்தியா) மூலம் 130 லட்சம் டன் கிடைத்துவிடுகிறது. மீதி 20 லட்சம் டன் மட்டுமே ஆண்டுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது.

டன் நிலக்கரி என்ன விலையானால், தமிழனுக்கு என்ன? ஒரு டன் நிலக்கரி, 120 டாலர் என்ற விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது’ எனச் சொல்லியிருக்கிறார். இதுவும் தவறான தகவல் தான். 2010ம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு டன் நிலக்கரியின் விலை, நான் ஏற்கனவே தெரிவித்ததைப் போல, 90 முதல் 95 டாலர்கள் மட்டுமே. பத்து லட்சம் டன் எனும்போது 520 கோடி ரூபாய் என்பதும், 20 லட்சம் டன் எனும்போது விலை சற்று குறைந்ததால், ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தான் எனது அறிக்கையிலே விளக்கப்பட்டது.மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில், 2010ம் ஆண்டு பிப்ரவரியில் சில நிறுவனங்கள், குறைந்த விலையில் நிலக்கரியை வழங்க முன்வந்ததாகவும், அதை விட அதிக விலை கொடுத்து மின்வாரியம் வாங்கியதாகவும் கூறியிருக்கிறார்.இந்த ஆண்டில், மின் வாரியத்துக்கு நிலக்கரி வாங்குவதற்காக, எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளியும் கோரப்படவே இல்லை. மத்திய அரசின் நிறுவனமான எம்.எம்.டி.சி., மூலமாகத் தான் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியை மின் வாரியம் வாங்குகிறது. 2005ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலே கூட, மத்திய அரசின் இதே நிறுவனம் மூலமாகத் தான் நிலக்கரி பெறப்பட்டது.

அரசு அதிகாரிகள் செயலலிதாவிர்கு தவறான செய்திகளைத் தருகிறார்கள்: ஜெயலலிதா போன்ற முன்னாள் முதல்வர், தற்போது எதிர்க்கட்சித் தலைவர், இதுபோன்ற காரியங்களில் நுனிப்புல் மேயக்கூடாது. அரசாங்கம் மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், யாரோ அதிகாரிகள் இத்தகைய ரகசியங்களைத் தனக்கு தெரிவிப்பதாக ஜெயலலிதா தம்பட்டம் அடித்திருக்கிறார். அவரை ஏமாற்ற, யாரோ அதிகாரிகள் இதுபோன்ற கற்பனையையும், பொய்களையும் தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாகக் கூறி, அவரை ஏமாற்றுகின்றனர். யார் அவர்கள் எனத் தெரிவதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாட்கள் ஆகாது.இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

அரசு அதிகாரிகளை மிரட்டும் கருணாநிதி: “அரசாங்கம் மாறப்போகிறது என்ற நம்பிக்கையில், யாரோ அதிகாரிகள் இத்தகைய ரகசியங்களைத் தனக்கு தெரிவிப்பதாக ஜெயலலிதா தம்பட்டம் அடித்திருக்கிறார். அவரை ஏமாற்ற, யாரோ அதிகாரிகள் இதுபோன்ற கற்பனையையும், பொய்களையும் தாங்கள் கண்டுபிடித்த செய்திகளாகக் கூறி, அவரை ஏமாற்றுகின்றனர். யார் அவர்கள் எனத் தெரிவதற்கும், அந்த விஷமிகளின் முகமூடி கிழிவதற்கும் வெகுநாட்கள் ஆகாது‘, இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார். பால் கமிஷன் அறிக்கை விவகாரத்திற்குப் பிறகு, கருணாநிதி இவ்வாறு கடுமையான வார்த்தைகளைப் பிரயோகப் படுத்துகிறார் என்பதைக் கவனிக்க முடிகிறது. அப்படியென்ன கோபமோ தெரியவில்லை.