Posts Tagged ‘ஜடாமுடி’

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

பிப்ரவரி 12, 2010

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

© வேதபிரகாஷ்

முன்னுரை: உலக சைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].

திருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.

துறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்குதிருக்குறள் பேரொளிஎன்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா? என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.

இருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்!: எனக்கு, “திருக்குறள் பேரொளிஎன்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா? என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யமேவஜெயதேயும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதேஎன்ற வார்த்தையைவாய்மையே வெல்லும்என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].

வாய்மையும் உண்மையும்!உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா? என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].

நாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, பொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்த வரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா?” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை? “குறளா, குரானா?” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே? மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது! ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள்! ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர்! இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை!

வேதபிரகாஷ்

12-02-2010


[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.

[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்று தெரியவில்லை.

[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.

[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்!

[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ? இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ? எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்? யாரை ஏமாற்ற?

[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.

[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.

[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.

[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு? ஏன்?

[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.

[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும்! மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும்! பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………

[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்?

[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை!

[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்.