Posts Tagged ‘திருக்குறள்’

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

ஜூலை 18, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா: 11-07-2010 அன்று மியூக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம்[1] சார்பில் நடந்த நாடக விழாவில் நாத்திகர் முதல்வர் கருணாநிதி முதல் ஆத்திகர்கள் வரை பலர் கலந்து கொண்டது தமிழகத்தில் ஒரு விசித்திரமான நிகழ்ச்சிதான். அதைவிட விசித்திரமானது, ஓரளவிற்கு பிராமணர்களும், அதாவது திராவிடக் காழ்ப்புடன் சொல்வதானால், “பார்ப்பனர்”களும்[2] வந்திருந்தது அதைவிட அதிசயம். அதைவிட அதிசயமாக மேடையில், இந்த நாத்திக கருணாநிதி இரண்டு பார்ப்பனர்களுடன் உட்கார்ந்திருந்த காட்சி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட, நாம் தவறவிட்டுவிட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ள விழாவாக இருந்தது.

“ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”: பொதுவாக, நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, குறிப்புகள் எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுவது வழக்கம். ஆனால், சில காரணங்களுக்காக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே, தினமலரில் வந்த செய்தியை[3] அப்படியே போட்டுவிட்டு, அடைப்புக்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்து “ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”, என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்திருந்தேன்[4]. ஆனால், அதற்கு பலவிதமாக பதில்கள் வர ஆரம்பித்தன. ஒரு நிலையில் சில நண்பர்களிடம் அவர்களுடைய கருத்தைக் கேட்டேன். பிறகு, அந்நிகழ்ச்சியின் பின்னணியில் பலவித விஷயங்கள் இருந்ததை அறிந்தேன். முக்கியமாக, அரசியலாக்க நினைக்கும் போக்கு தேவையில்லாத ஒன்று என்பதனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

கருணாநிதி, தமிழ்-பாண்டித்யம், தமிழகம்: விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியின் எழுத்துகளைப் படித்து பார்க்கும்போது, அவரது தமிழ்பிரயோகம், நடை, சொல்லாக்கம், தமிழிலுள்ள பாண்டித்யம் முதலியவற்றை மறுக்கமுடியாது. ஆனால், நிச்சயமாக உண்மையான தமிழுணர்வு உள்ளவர்களுக்கு, அவர் பல நேரங்களில் தமிழை பாதுகாக்கத் தவறவிட்டார் அல்லது தமிழ் மொழியை இழிவு படுத்துபவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார் என்ற வருத்தங்கள் எல்லாம் அதிகமாகவே உள்ளது[5]. செம்மொழி மாநாட்டில் கூட, காலரீதியில் பாகுபாடு செய்து சைவ-வைணவ குறிப்பாக இந்துமதத்திற்கு இடங்கொடுக்காமல் செய்துவிட்டார் என்ற குறையுள்ளது[6].

இந்திய மாநில முதல்வர் என்றால் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் முதல்வர் என்ற ரிதியில் செயல்படுவதில் தவறிவிட்டார்: கருணாநிதி தமிழ்நாட்டிற்கு, இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வர் என்பதை அவர் பலமுறை மறந்து விடுகிறாரா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்து வந்துள்ளரா என்பதனை அவரே சொல்லவேண்டிய நிலை வந்துள்ளது. இவர் நாத்திகராக, ஏன் இந்து-விரோதி என்று மற்றவர்களால் குற்றஞ்சாட்டப் படக்குடிய நிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள 80% மேலாக உள்ள இந்துக்களுக்கும் முதல்வராவார். ஆனால், இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், கோவில் விவகாரங்களில் தலையிட்டு பிராமண-பிராமண துவேஷம், சமஸ்கிருதம்-தமிழ் என்ற விரோதம்[7], கோவில் நிலத்தை இந்துஅறநிலையத்துறை வழியாகவே விற்றது முதலிய பல காரிங்கள், இவரின்மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது[8] அந்த உண்மையை, மக்களின் உணர்வை எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கையுள்ள திக-திமுக-இந்துக்கள்கூட, “என்ன இவ்வளவு வயசாகியும், நம்ம தலைவர், இப்படி பேசராரே, நடந்து கொள்கிறரே”, என்று விசனித்துள்ளனர், வருந்தியுள்ளனர்[9].

கருணாநிதியின் பேச்சுகளும், அரசியலும், செக்யூலரிஸமும்: 40 வருடங்களாக இவர் பேசுவதைக் கேட்டிருப்பவர்கள், இவரது பேச்சின் தொணி, தோரணை, உருவகம், உயர்வு புகழ்ச்சி, சிலேடை, நையாண்டி………முதலியவற்றை தாராளமாகவே அறிந்திருப்பர், புரிந்து கொண்டிருப்பர். ஆக, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பாரம்பரியம், தமிழ் பண்பாடு, தமிழ் விழாக்கள், தமிழ் சடங்குகள், தமிழ் காரியங்கள் / கிரியைகள், தமிழ் நம்பிக்கைகள் என்றெல்லாம் பார்த்தால் இந்திய-இந்து தாக்கத்தை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. முதலில் சங்க இலக்கியத்தை படித்தவர்கள் அவ்வாறு சொல்லமாட்டார்கள்[10]. இருப்பினும், பொய் என்றும், மாயையென்றும், கட்டுக்கதையென்றும் சரித்திர ஆசிரியர்களால், உலகம் முழுவதும் குப்பைத் தொட்டியில் போர்ட்டுவிட்ட ஆரிய-திராவிட இனவாத கோட்பாட்டுகளை வைத்துக்  இந்து காரணிகளை வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள், வேறோடழிக்கத் துடிப்பவர்கள் ஏன் அதே காரணிகளை வைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொண்டு, சூடிக்கொண்டு உலாவரவேண்டும்?

வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள்: இனி தினமலரில் இன்று வெளிவந்துள்ள செய்தியின்படி என்ன என்று பார்ப்போம்: “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்”, என்ற செய்தியின்கீழுள்ளது[11]: “சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் முதல்வரை வானளாவப் புகழ்கின்றனர். புகழ்ச்சியை முதல்வர் விரும்புகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில், “என்னை புகழ்வதை விட்டுவிட்டு, தலைப்பை ஒட்டி பேசுங்கள்’ என முதல்வரே கடிந்து கொள்ளுமளவிற்கு, “புகழ் பா’ பாடுவதில் போட்டா, போட்டி நிலவியது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதியின், “போர்வாளும், பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் பங்கேற்ற இந்த விழா மேடையில், இதுவரை இல்லாத புதுமையாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்றனர். வழக்கமான புகழ்ச்சியுரை இன்றி, இயல்பான நோக்கில் விழா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதல்வருக்கு ஏற்றவாறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தங்களது பேச்சை மாற்றியமைத்துக் கொள்வார்களா? ஆன்மிகவாதிகளின் பேச்சை முதல்வர் எப்படி எதிர்கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது”.

திருச்சி கல்யாணராமன் பேசியது: குழப்புவது தினமலரா, நிருபரா? தினமரில் தொடர்கிறது, “இந்த எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கும் வகையில், திருச்சி கல்யாணராமனின் பேச்சு அமைந்தது”, என்று தினமலர் சொல்லிவிட்டு, “துவங்கியதில் இருந்து, இறுதி வரை முதல்வரை புகழ்வதிலேயே குறியாக இருந்தார் அவர். முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தனக்கு சம்பந்தமில்லாத அரசியலையும் தொட்டார். கல்யாணராமன் பேசும்போது, “கம்ப ராமாயணத்தின், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்ற பாடலைச் சொல்லி, அந்த பாட்டின் இறுதியில் வரும், “அன்னவருக்கே சரண் நாங்களே‘ என்று இறைவனுக்கு சொல்லப்பட்ட வார்த்தையை முதல்வரைக் காட்டி சொல்லி முடித்தார். இறைவனை விட மிக உயர்ந்தவர் எனும் பொருள்படும்படியாக, இறைவனின்இரு அவதாரங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார் என்றெல் லாம் கல்யாணராமன் முதல்வரை புகழ்ந்துரைத்தார். அதோடு, ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்தால்தான், முதல்வர் மகிழ்ச்சியடைவார் (!) என்ற எண்ணத்தில், “பிள்ளை இல்லாதவர்களை, எல்லாம் அம்மா என்று சொல்கின்றனர்‘ என்றது எல்லை தாண்டிய உச்சம்”, என்று முடித்திருப்பது நிருபரின் குழப்பம் என்றே தெரிகிறது.

வேளுக்குடி கிருஷ்ணன் பேசியது: தினமலர் தொடர்கிறது, “இதனால், அவருக்கு பின் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணனுக்கு, தேவையற்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஆட்படாதவராக வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது. இதை முதல்வர் கருணாநிதி பேச்சிலும் காண முடிந்தது.”

“அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ என்ற கருணாநிதி: தினமலர் தொடர்கிறது, “அவர் பேசும் போது, “வேளுக்குடி கிருஷ்ணனையும், திருச்சி கல்யாணராமனையும் முதன் முதலாக இந்த மேடையில் தான் பார்க்கிறேன். தேனினும் இனிய தமிழால் இங்கே அவர்கள் பேசியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை இத்தனை நாள் கேட்காமல் இருந்து விட்டோமோ என தோன்றுகிறது. அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ எனப் புகழாரம் சூட்டினார். “”பல்வேறு தரப்பினரின் விழாக்களில் பங்கேற்பதன் மூலம், பல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் முதல்வர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், விழா நடத்துபவர்களோ, முதல்வரைப் புகழ்வதில் குறியாய் இருந்து அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் முந்தைய செய்தி[12] (ஜூலை, 12, 2010,): முன்பு கருணாநிதி பேசியதாக வெளியிட்டுள்லதில், சில வரிகளுக்கு உள்-அர்த்தம் தெரியாமல் இருந்தது. ஏனெனில், வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பேசியதை அப்பொழுது வெளியாகவில்லை.

சென்னை, ஜூலை, 11, 2010,: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது.

“எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

“அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது”.

இப்படியிருக்கும்போது, ஈ-மெயிலில் நண்பர் அனுப்பினார், என்று, ஒரு நண்பர் அனுப்பியதில் இப்படியிருந்தது. பத்திகளாகப் பிரித்து தலைப்புகளை மட்டும் கொடுக்கிறேன்.

ஆழ்வார்களை, நாயன்மார்களை ஒதுக்கிவிட்டு நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு: தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அழக்கப்பட்டதேன்? அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரைஆழ்வார்என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

திரு.வேள்குடி கிருஷ்ணன் பேசியது: துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார். திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்துஇந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்என்று பேசியுள்ளார் கலைஞர்.

திருச்சி கல்யாணராமன் விமர்சனிக்கப்படுதல்: அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால் புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

தேவையில்லாமல் கூட்டப்பட்ட கமென்ட்: நண்பர் கூட இதையும் சேர்த்திருக்கிறார், “இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்”, என்று முடித்திருப்பதாக தெரிகிறது. ஏனனில், கடைசியில் “[edited]” என்றுள்ளது. சில இந்துக்களுக்கு, தமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அத்கமாகவே இருக்கிறது. வேதங்களில் பல சாகைகள் பெண் ருஷிகளால் / பண்டிதர்களால் இயற்றப்பட்டது[13] என்ற உண்மையை அறிந்தால், இப்படி யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில், இந்துக்களே இப்படி உளறினால், மற்ற இந்து-விரோத சக்திகள் இதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு கதையடிக்க ஆரம்பித்துவ்டுவார்கள்.

“பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியம், இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் என்றெல்லாம் எழுதியுள்ள தமிழர்கள்”: பார்ப்பனர்களே, இவ்வாறு தவறான தகவல்களைக் கொடுத்தால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? இதோ ஒரு தமிழர், இப்படி எழுதியுள்ளார்[14], “தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள்…………. இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி………………”. குறிப்பான வரிகள் மட்டும் இங்கு மேற்கோளாகக் காட்டப் படுகின்றன. அதாவது, ஈழப்பிரச்சினை, கருணாநிதி-எதிர்ப்பு, சாதிப்பிரச்சினை, உள்ளூர்-பிரச்சினை…….இப்படி எது இருந்தாலும், சம்பந்தமேயில்லாமல் பார்ப்பன-எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம், தூஷணம்………..முதலியவை இருப்பதும் வேடிக்கையே!

வேதபிரகாஷ்

18-07-2010


[1] ஜெகத்ரெக்ஸகன் “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” என்று வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக, ஆண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பண்டிதர்களை கௌரவித்து வருகிறார். இம்முறை, இது அரசியலாக்கப்பட்டுவிட்டது தெரிகிறது.

[2] “பார்ப்பனர் / பார்ப்பான்” என்ற சொற்பிரயோகம், திராவிட சித்தாந்திகளால் இழிவாக உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.

[3] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[4] வேதபிரகாஷ், ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

https://rationalisterrorism.wordpress.com/2010/07/13/ஆத்திக-நாமதாரிகளும்-நாத/

[5] இதை பல கட்டுரைகள் வாயிலாக பதிவு செய்துள்ளேன். குறிப்பாக திருக்குறள் விஷயத்தில், இவர் கிருத்துவர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டது.

வேதபிரகாஷ், திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்,

https://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

…………………………………., திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?, http://chemozhi.wordpress.com/2010/06/21/திருவள்ளுவரை-திருக்குறள/

[6] இதை பல தமிழறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டியிருந்தனர். இருப்பினும், இந்துமதத்தைப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றரீதியில்தான் செயல்பட்டது, என்பது மாநாடே மெய்ப்பித்துவிட்டது.

வேதபிரகாஷ், சமயம் வளர்த்த தமிழ்கருத்தரங்கு, http://chemozhi.wordpress.com/2010/06/25/தமிழை-வளர்த்த-தமிழ்-கருத/

[7] இது இவ்வரசே கிளப்பி விட்டுள்ளப் பிரச்சினை. ஆழ்வார்கள்-நாயன்மார்களோ, தமிழக அரசர்களோ இதனை பிரச்சினையாகவே கருத்வில்லை. அதாவது, அத்தகைய நினைப்பு அவர்களுக்கு இல்லை. ஆனால், திராவிட இயக்கம் தோன்றியபிறகு, இத்தகைய வெறுப்பு, பாகுபாடு….வளர்க்கப்பட்டது. இப்பொழுதைய கருணாநிதி ஆட்சியில் மறுபடியும் கிளப்பிவிடப்பட்டுள்ளது.

[8] சமீபத்தில் கூட, ஓரு வழக்கு இவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன.

வேதபிரகாஷ், கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!, http://lawisanass.wordpress.com/2010/07/14/கருணாதியின்-மீது-நிலுவ/

[9] ஒரு தொண்டர் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டபோது விமர்சனம் செய்தது, ஒரு அமைச்சர் தீ-மிதித்தபோது கண்டித்தது ………..முதலியன.

[10] ஆகையால்தான், சங்ககாலத்திலிருந்தே, பிராமணர்கள் தங்களது “ஆரிய மயமாக்கும்” சூழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டனர் என்று வாதிப்பர். ஆனால், பிராமணன், திராவிடன் வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இல்லை என்பது கூட அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது.

[11] தினமலர், முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன், ஜூலை 17,2010, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=41671

[12] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு,, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: ஜூலை, 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[13] வேதங்களைப் பற்றிப் படிக்காமலே, திராவிட சித்தாந்திகள் பல கதைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளாமல், யாரோ இப்படி எழுதியுள்ளனர், பேசியுள்ளனர் என்று, ஒருவர் மேற்கோள் காட்ட, அதை மற்றவர் காப்பியடித்து எழுத, அதனை இன்னொருவர் மேற்கோள்காட்டா……………………இப்படியே ஆராய்ச்சி நடக்கிறது!

[14] http://inioru.com/?p=14983 தொகுப்பாசிரியர்கள் : அசோக் யோகன் – பிரான்ஸ்: சபா நாவலன் –இங்கிலாந்து; : டி.அருள் எழிலன் –இந்தியா; மின்னஞ்சல் : info@inioru.com, inioru@gmail.com, inioru@yahoo.co.uk

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

ஜூலை 7, 2010

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

http://www.viduthalai.periyar.org.in/20100707/news05.html

ஏற்கெனவே கோர்ட்டுகளில் வெளிவந்த செய்திகள், ஒரு தெலுங்கு டிவி செனல் ஒளிபரப்பிய கலப்படக் காட்சிகள்…………..முதலியவற்றை வைத்துக் கொண்டு முன்பே கதையளந்து கொண்டிருந்தனர்.

கல்கி ஆசிரமத்திலிருந்து பிரிந்து சென்ற சீடர்கள், ஆளுக்கு ஆள் இப்படி புகார்கள் கொடுப்பது, வழக்குகள் போடுவது என்று சாதாரணமாகி விட்டது.

எப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரை, அவர் வெளியேறி கணக்குக் கேட்டபோது, , வசைபாடினாரோ, அதே ரீதியில்-தொணியில், இந்த சீடர்கள் பேசிவருகிறார்கள்.

கல்கியின் மகன், ஏற்கெனெவே.இந்த பிரச்சாரங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

அந்நிலையில், மறுபடியும், அரைத்த மாவையே அரைக்கும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வீரமணி, கோபால் முதலியோர்களுக்கு நித்யானந்தா, கல்கி……………….முதலியோர் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டாலும், இவர்கள் மறக்கமாட்டார்கள்.

பிற இதழிலிருந்து…இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணு-வின் 10_ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தக-வல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்-தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வ-நாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்-கப்-படும் விஜயகுமார், 1984_இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்-தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி… முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10_ஆவது அவ-தார-மான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்ப-வில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10_ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்-தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்-களுக்கு அனுப்பி வைத்தார். விஜய-குமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது… பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாச-லுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்… கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்-டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்-டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்-றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிட-மும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளி-நாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவர-மாகச் செய்திகள் வந்தன. இந்தக் களி-யாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்-பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90_களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்… ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி… 33 வெளி-நாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயி-ரம் கோடியில் கட்டுமான பிசினஸ்… இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்… ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக…

நான் அவருக்கு எதிரான உண்மை-களைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்-டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்-வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

சிறீ ரவிசங்கர், ஸ்ரீ ரவிசங்கர், வீரமணி, நாத்திகம்…………….

ஜூன் 7, 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

http://www.viduthalai.com/20100607/news06.html

வீரமணி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்ற பல கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டவர். திகவின் இப்பொழுதைய தலைவர். ஆளும் திராவிட கட்சிகளுடன் மாறி-மாறி உறைவை வைத்துக் கொண்டுப் பிழைத்து வரும் போலி அரசியல்வாதி. விடுதலை என்ற நாளிதழின் ஆசிரியர், இதத பெரும்பாலாக இந்து விரோத சித்தாந்தத்தையேக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுகாக அதை நான் கடுமையாக விமர்சித்து, ஈ-மெயில்களை அனுப்பி வந்தேன். அதற்கு பதில் இல்லை என்றாலும், மறைமுகமாக எனக்கு எதிர்ப்பு வந்தது. தனது “நாத்திக செக்யூலரிஸத்தை” மெய்பித்துக் கொள்ள சில மேனாட்டு இஸ்லாமிய-கிருத்துவ விமர்சனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. “மின்தமிழ்” எனக்கு தடை விதித்தது. இப்பொழுது, குறிப்பிட்ட இந்து சந்நியாசிகள், குரு முதலியவற்றை மட்டும் இலக்காகத் தாக்கி வருவது தொடர்கிறது. உலகளவில், ஏன் இந்தியாவிலும் கிருத்துவ-இஸ்லாம் மதங்களில் மிகக்கொடுமையான தீவிரவாதம், அடிப்படைவாதம், மக்கள் உரிமைகள் மீறல், பாலியல் வன்மம், சிறுவர்-சிறுமியர்களை கலவியில் ஈடுபடுத்தும் குரூரங்கள் முதலியவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய பாட்டுகளைப் பாடிவரும் போலித்தனத்தை காட்டவே, அத்தகைய படித்த, பகுத்தறிவுள்ள வீரமணி எழுது தனது விடுதலையில் தலையங்கமாக வந்துள்ளதை இங்கு வெளியிடப்பட்டு அலசப் படுகிறது

பார்ப்பனர் / பிராமணர் ரவிசங்கர்: வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி துறவியா, கிரஸ்தரா? ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ – சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெங்களூரைத் தேர்ந்தெடுப்பது ஏன்? பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரவிசங்கரின் பூர்வோத்திரம் என்ன? இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

சாமியாருக்கு  நெருக்கடி ஏற்படுவது ஏன்?: நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது. ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

சாயிபாபாவை கொலை செய்ய முயன்றது: இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்றது: அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா? ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது. தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

சாமியார்களிடம் எப்படி கோடிகள் வருகின்றன? அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும். இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சாமியார்கள் மீது விச்சரணை தேவை: சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

வீரமணியின் பின்னணி என்ன?

  1. வீரமணி எப்படி திகவின் தலைவர் ஆனார்?
  2. வீரமணி பெரியாரின் வாரிசு என்று அந்த டிரஸ்டின் தலைவர் ஆனாரா இல்லை, வலுக்கட்டயமாக பறித்துக் கொண்டாரா?
  3. நாத்திகம் பேசும் வீரமணியிடம் எப்படி கோடிகள் வருகின்றன?
  4. தான் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் தகுதியற்றது என்று உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப் பட்டது குறித்து வெட்கமாக இல்லையா?
  5. பெரியார் மணியம்மை பல்கழகம் மற்ற ஊழல்களில் மாட்டிக் கொண்டது அழகாக இருக்கிறதா?
  6. உள்ள நிலையைக் காப்பாற்றக் கொள்ள லட்சங்களில் சேகரிக்க – வசூலில் இறங்கியிருப்பது நியாயமானதா?
  7. தமிழ்நாடு சரித்திர பேரவை மாநாட்டின்போது, பேராளர்களை சரியாக உபசரிக்காமல், குளிக்கக் கூட வழியின்றி அலையவிட்டது முதலியன நன்றான விஷயங்களா?
  8. நாத்திக வேஷத்தில் இந்து விரோத பிரச்சாரத்தை மட்டும் செய்துவருவது “சமதர்மம்” / செக்யூலரிஸம் ஆகுமா? இதனை அவர் பல்கலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு கேட்டால், என்ன செய்வார்?
  9. ………………………………………

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!

பிப்ரவரி 14, 2010

முகம்மது அலி ஜின்னாவும், திருக்குறளும், திருக்குர்ஆனும்!

திருக்குறளை மறுக்கும், வெறுக்கும், கேவலப்படுத்தும் முகமதியர்கள் பற்றி ஏற்கெனவே எடுத்துக் காட்டப்பட்டது.

இருப்பினும் வியாபாரம் என்ற பெயரில் ஒரு முஸ்லீம் கோடிகளை ஏமாற்றினார் என்று இப்பொழுது (மே 2010) செய்திகள் வந்துள்ளன.

முன்பு “முகம்மது அலி ஜின்னா” என்பரைக் குரிப்பிட்டு, அவர்திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது!

இந்நிலையில், முனைவர் முகம்மது அலி ஜின்னா என்பவர் “திருக்குறளும், திருக்குர்ஆனும்” என்ற தலைப்பில் “திட்டப்பணி” செய்ய, “ஆய்வறிஞர்” என்ற ரீதியில் ரூ, 2, 50, 000/- (இரண்டரை லட்சம் ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளதாக “செம்மொழி” செய்தி மடல்- 1 கூறுவது வேடிக்கையாக உள்ளது!

இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலும் அவர்களுடையதை எவர்களுடையதும் கூட இப்போதும், எங்கும், எவ்வாறும் ஒப்பீடு செய்யக்கூடாது, சமன் செய்யக் கூடாது, ………………………என்றெல்லாம் இருக்கும்போது, இந்த ஜின்னா எப்படி பணம் வாங்கினார்? எப்படி ஆராய்ச்சி செய்யப் போகிறார்?

அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுடன், எவ்வாறு குரானை பொறுத்திப் பார்க்கப் போகிறார்,………………….. முதலியவற்றைப் பற்றியெல்லாம் பொறுத்துதான் பார்க்கவேண்டும் போல இருக்கிறது!

இருப்பினும், தன்னது ஆராய்ச்சி விண்ணப்பப் படிவத்தில், அதைப் பற்றி சொல்லியிருப்பார். அதை பார்க்கவேண்டும். ஆக பொய் சொல்லி அரசு பணத்தை ஆராய்ச்சி என்ற பெயரில் அபகரிப்பது என்பது இப்படிகூட இருக்கும் போல இருக்கிறது.

மேலும் யார் இந்த முகம்மது அலி ஜின்னா என்பதும் தெரியவில்லை!

இது எழுதி மூன்று மாதங்கள் ஆகின்றன.

முகம்மது அலி ஜின்னா வந்தாரோ இல்லையோ, ஷேக் மைதீன் என்ற இன்னொரு முஸ்லீம் கிளம்பி 220 கோடிகளை ஏமாற்றிவிட்டாராம்!

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கானோர் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை.

குறளை, திருக்குறளைப் பழித்த முஸ்லீம்கள்: முன்பு, இதே முஸ்லீம்கள், “குரானா, குறளா?” என்ற விவாதம் வந்துபோது, குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது……………….என்றெல்லாம் பேசி, எழுதி, பதிப்பது திராவிட தமிழர்கள் மறந்து விட்டார்கள் போலும். மேலும் இதில் நோக்கத்தக்கது திருக்குறளையே “குறள்” என்று கூறுவதுதான். தமிழ் மீது, திருக்குறள் மீது தமிழர்களுக்கு, மதிப்பு, காதல், அன்பு, மரியாதை…………இருந்திருந்தால், இவ்வாறு , திருக்குறளைக் கேவலப்படுத்திய முஸ்லீம்களை எப்படி நம்புகிறார்கள்? கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? ஒருவேளை குரானை அச்சடித்து, புத்தகங்கள் போட்டு, விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறியிருந்தாலும் நம்பியிருப்பார்களா? இல்லை நம்பமாட்டார்கள், வியாபாரத்திற்கு குரான் எடுபடாது, திருக்குறள்தான் கவர்ச்சிகரமாக இருக்கும், செம்மொழி மாநாடு வேறு நடக்கிறது, வியாபாரத்தை கருணாநிதியே வந்து துவங்கி வைப்பார், அல்லது, செம்மொழி மாநாட்டில் விநியோகம் நடத்தப் படும் என்றெல்லாம் கூட பிரச்சாரம் நடந்திருக்குமோ என்று தெரியவில்லை.

இரட்டை வேடம் போடும் முஸ்லீம்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் [நல்ல உண்மையான முஸ்லீம்கள் கவலைப் பட வேண்டாம்]: இலங்கை விஷயத்தில் கூட அவர்கள் இரட்டை வேடம் தான் போடுகின்றனர். “தமிழர்கள்” என்று பேசும்போதெல்லாம், அவர்கள், “முஸ்லீம்கள்” என்றே தனித்திருந்ததை நினைவில் கொள்ளா வேண்டும். ஆனால், இங்கு மட்டும் கூடி, குடியைக் கெடுக்க வருவார்கள், மேடைகளில் பேசுவார்கள், கொடி பிடிப்பார்கள். முன்பு, எல்.டி.டி.ஈ, பிரபாகரன், தமிழ் விருப்பங்களுக்கு மாறாக, ஏன் எதிராக செயல்பட்டு, நாங்கள் “முஸ்லீம்கள்” என்று சொல்லியே தப்பித்துக் கொண்டனர். இங்குகூட, தமிழ் பெண்கள் இலங்கையில் மானபங்கப்படுத்தப்படுகிறார்கள் என்றெல்லாம் வாழ்கிழிய பேசிவரும் மன்சூர் அலிகான், பல தமிழ் பெண்களை தமிழகத்திலேயே கற்பழித்திருக்கிறான், அவன்மீது அதே மாதிரியான கற்பழிப்பு வழக்குகள் உள்ளன, இன்றும்  இருக்கிறது. இதுப்போலத்தான் இந்த திருக்குறள் விவகாரமும்.

குறள் சிறுநீர் கழித்த பிறகு துடைத்துப் போடக்கூட லாயக்கற்றது………………: முகமதியர்கள் “ஒன்றிற்கு” போனால், ஒரு கல்லைவைத்துக் கொண்டு சிறுநீர் துளிகளை துடைத்துக் கொள்வார்கள். அப்பொழுது, திருக்குறளைக் கேவலப்படுத்தும் வகையில், இவ்வாறுக் கூறப்பட்டது. பிறகு, அந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த உண்மைகளையெல்லாம் தனது ஆய்வில் குறிப்பிடுவாரா, மறைத்துவிடுவாரா? திருக்குறள் மீது மதிப்பு இருக்கிறது என்றால், உடனே அத்தகைய முஸ்லீம் எழுத்தாளர்களைக் கண்டித்து இருக்க வேண்டுமே? ஆனால், இந்த தமிழ்நாட்டில், யாரும் அந்த உணர்வுடன் கண்டித்த மாதிரி தெரியவில்லையே? பிறகு என்னத்தான் ஆராய்ச்சி செய்யப் போகிறார்?

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

பிப்ரவரி 12, 2010

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!

© வேதபிரகாஷ்

முன்னுரை: உலக சைவ மாநாடு நடந்து சில நாட்களே ஆகியுள்ளன[1] (பிப்ரவரி 5-7, 2010). கலந்து கொண்ட மடாதிபதிகள், அடியார்கள், ஆய்வாளர்கள், பேராளர்கள், மற்றவர்கள் இன்னும் தங்கள் ஊர்களுக்குக் கூட சென்று சேரவில்லை. ஆனால், குன்றக்குடி மடாதிபதி, இந்துக்களைத் தூஷித்த, இந்துமதத்தைத் தொடர்ந்து தூஷணம் செய்து வரும் ஒரு ஜீவியை “திருக்குறள் பேரொளி” என்ற பட்டத்தை அளித்து, திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு பச்சைத் துரோகம் மற்றும் அவமானத்தைச் செய்துள்ளது[2]. கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறும்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள்[3]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார். தமிழ் தெரிந்த கருணாநிதி, அப்பொழுதே, அது தவறு என்று எடுத்துக் காட்டியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை. ஆகவே அன்றே அவர் திருவள்ளுவருக்கு, திருக்குறளுக்கு தகாத துரோகத்தை செய்து விட்டார் எனலாம். அன்றிலிருந்து, இன்றுவரை, சென்ற வருடம் அந்த போலி / கள்ள ஆராய்ச்சிக்குத் துணைபோய், கிருத்துவர்களின் திரைப்படத்தை ஆரம்பித்து வைத்துள்ளர்[4].

திருவள்ளுவர் இரண்டாவது முறை மைலாப்பூரில் சாகடிக்கப்பட்டார்: கருணாநிதி, அந்த போலி தாமஸ் நினைவு தினமான ஜூலை 3 அன்று எப்பொழுது அந்த மோசடி திரைப்படத்தை ஆரம்பித்து வைத்தாரோ அன்றே திருவள்ளுவரை மைலாப்பூரிலேயே சாகத்து விட்டார் எனலாம்.

திருக்குறள்: பேரொளியும், காரிருளும்!: உலகத் திருக்குறள் பேரவை சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு, “திருக்குறள் பேரொளி’ விருது வழங்கும் விழா, தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடந்தது. உண்மையில், வாய்மை இருளில், காரிருளில் மறைந்தது எனலாம்.

துறவிகளின் ஆசையும், அரசர்களின் மோக-இச்சைகளும்: விருதை ஏற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: “மறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரிடம் எனக்கு அன்பும், பாசமும், பரிவும் உண்டு. தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் அவர் கொண்டிருந்த பற்றைக் கண்டு நான் வியந்துள்ளேன். அவரைப் போலவே இளையவர் பொன்னம்பல அடிகளாரும் செயல்பட்டு வருகிறார். இரண்டு அடிகளார்களும் பெரியார், அண்ணா மற்றும் என் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர்கள் என்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். எனக்குதிருக்குறள் பேரொளிஎன்ற விருது வழங்க விரும்புவதாகவும், அதற்காக ஒரு தேதியைத் தருமாறு அடிகளார் என்னிடம் வலியுறுத்தினார். எனக்கிருந்த பல்வேறு அலுவல்களை எடுத்துச் சொல்லி இந்த விழா தேவைதானா? என்றேன்.​ “எனது ஆசையை நிறைவேற்றுங்கள்என்றார். துறவிகள் ஆசைப்படக் கூடாது[5]. இருப்பினும் இந்த ஆசையை நிராகரிக்க முடியாது என சம்மதம் தெரிவித்து[6], விழாவில் பங்கேற்றுள்ளேன்.

இருட்டில் உள்ளவர்கள், ஒளியில் உள்ளவர்கள்!: எனக்கு, “திருக்குறள் பேரொளிஎன்ற விருதை தந்துள்ளனர். திருக்குறளே பேரொளி தான். அந்த பேரொளிக்கு திருக்குறள் என்று பெயரிடத் தேவையா? என்பதுதான் என் கேள்வி. இருந்தாலும், திருக்குறளை பேரொளி என்று இருட்டிலே இருப்பவர்களுக்கெல்லாம் உணர்த்துவதற்காகவாவது[7], இந்த விருது பயன்படட்டும் என்று எண்ணியோ என்னவோ, இந்த பேரொளீயை அவர்கள் எனக்குத் தந்திருக்கிறார்கள். இந்த விருதை எனக்கு வழங்கியுள்ளதன் மூலம், என்னைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியுள்ளதாக நான் கருதவில்லை[8]. ஒளியை கையில் கொடுத்து, அது மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமென்று கொடுத்ததாகக் கருதுகிறேன். என் கையிலே தூக்கிப்பிடுத்துருக்கின்ற ஒளி என்ற உணர்வோடு தமிழை, தமிழின் புகழை இந்த தரணியிலே நிலைநாட்டுவதற்கு பயன்படுத்துவேன் என்ற உறுதிமொழியை நான் அவருக்கும், அவருடைய மன்றத்துற்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்யமேவஜெயதேயும் “வாய்மையே வெல்லும்” என்பதும்: சட்டசபையில் நான் பணியாற்றும் போது, எப்படியெல்லாம் தமிழுக்கு பணியாற்றுவது எனக் கருதி, “சத்ய மேவ ஜெயதேஎன்ற வார்த்தையைவாய்மையே வெல்லும்என்று மாற்றினோம். முதலில் எப்படி அந்த சொற்றொடரை மாற்றலாம் என்று அதற்கு எதிர்ப்பு இருந்தாலும், பிற்பாடு பழகப்பழக அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர். நம்முடைய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் சுட்டுச் சொல்லாக, இலட்சினைச் சொல்லாக இன்றைக்கு மாறிவிட்டிருக்கின்றது[9].

வாய்மையும் உண்மையும்!உண்மையயும் வாய்மையயும் ஒன்றாக எண்ணிக்கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. அப்படி இன்னமுன் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். வாய்மை என்பது பிறருக்கு தீங்கில்லாமல் சொல்லப்படுகின்ற ஒரு சொல்லுக்கு பெயர்தான் வாய்மை அடிப்படையில் பிறக்கின்ற ஒரு சொல்லாகும். யாருக்கும் எந்தவித கெடுதலும் ஏற்படாமல், இந்த வார்த்தையினால் உறுதியோட சொல்லப்படுகின்ற சொல் வாய்மை ஆகிறது. உண்மை என்பதை அதற்கு அடுத்தக் கட்டத்தில் வைக்கலாமே தவிர, அது வேறு, இது வேறு[10].

“பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்றார் வள்ளுவர். அதற்கு குறளோவியத்தில் நான் விளக்கம் அளித்திருக்கிறேன். “பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்த்த நன்மை பயக்கும் எனின்” என்பதற்கு ஒரு சிறிய கதை. அந்த கதையில் வேடன் ஒருவன் வில்லும், அம்பும் கையில் ஏந்தி வேகமாக வருகின்றான். வருகின்ற வேடனுடையக் குறிக்கோள் அவனால் துரத்தப்பட்ட மான்குட்டியை[11] கொன்று அந்த மானை உணவாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற குறிக்கோளோடு வேடன் வருகிறான்.

வேடன், மான்குட்டி, மாமிசம் சாப்பிடுவது: வள்ளுவர் தன் குடிலிலே அமர்ந்திருக்கிறார். அந்த குடுலுக்குள்ளே மான்குட்டி ஓடிவந்து ஒளிந்துக் கொள்கிறது. ஓடிவந்த வேடன், “ஐயா இங்கே மான்குட்டி வந்ததா? என்று கேட்கிறான், அதற்கு அவர், “இல்லையே, வரவில்லையே” என்கிறர். மான்குட்டித் தப்பித்துக் கொள்கிறது. பக்கத்திலே இருக்கிற ஒருவர், வள்ளுவரைப் பார்த்து, “ஏனய்யா ஊருக்கெல்லாம் உண்மை பேசச் சொல்லி அறிவுரை கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் வேடனிடத்தில் பொய்யாக மான் குட்டி வரவில்லை என்ரு சொல்லிவிட்டீர்களே” என்று கேட்கிறார். “நான் உண்மை சொல்லியிருந்தால் மான்குட்டி இந்நேரம் வேடன் வயிற்றுக்குள் போயிருக்கும். அதனால் தான் நான் வாய்மையோடு மான்குட்டியைக் காப்பாற்றினேன்”, என்கிறார்[12].

நாத்திகமும், ஆத்திகமும்: நான் எழுதிய குறளோவியத்தில், திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை[13] கருத்தில் கொண்டு அதற்கு பொருள் வடித்துள்ளேன். எனக்கு முன் திருக்குறளுக்கு உரை எழுதிய பலர், அவர்கள் ஆத்திகர்களாக இருந்தால், ஆத்திக கருத்துகளையும், நாத்திகர்களாக இருந்தால், நாத்திக கருத்துகளையும் அதில் வெளிப்படுத்தியுள்ளனர்[14]. “ஆனால், நான் திருக்குறளின் உரையை திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தை கருத்தில் கொண்டு, நாத்திகத்தை திணிக்காமல், ஆத்திகத்தை புறக்கணிக்காமல் எழுதியுள்ளளேன். நான் குறளோவியத்திலிருந்து ஒன்றிரண்டு சொல்ல விரும்புகிறேன். பலரும் உண்மையும், வாய்மையும் ஒன்று என்று என நினைக்கின்றனர். ஆனால், உண்மை வேறு, வாய்மை வேறு. உண்மை என்பது உள்ளதைச் சொல்வது. வாய்மை என்பது யாருக்கும் தீங்கு நேரக்கூடாது என்று உரைப்பது. “யாருக்கும் தீங்கு செய்யாமல் நன்மை செய்ய வேண்டும் என்றால், பொய்யையும் சொல்லலாம். அந்தப் பொய் உண்மை இல்லை என்றாலும், அது வாய்மைக்கு இணையாகக் கருதப்படும் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். எனக்கு கொடுக்கப்பட்ட இந்த விருதை, இங்கு கூடியுள்ள அறிஞர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்,” இவ்வாறு முதல்வர் பேசினார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்க ஆரம்பித்து விட்டது: கருணாநிதியே உண்மையா, பொய்மையா என்ற ஆராய்ச்சி செய்யவேண்டிய நிலையில் உள்ளது, ஏனனில், திருக்குறளைப் பொறுத்த வரைக்கும் செய்துள்ள துரோகம் சொல்ல மாளாது. கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு, திருவள்ளுவரையும், திருக்குறளையும் பழித்தது, தூஷித்தது,………..(முன்னமே குறிப்பிட்டுள்ளேன். எனது நூலில் “இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக் கதை”யில் விளக்கியுள்ளேன்). “குறளா, குரானா?” என்ற பிரச்சினை வந்தபோது, வாய்மூடிக்கொண்டிருந்தது முதலியன. இன்று வேடன், மான்குட்டி, வாய்மை, பொய்மை என்று கதை சொல்கிறார். அப்பொழுது ஏன் மான்குட்டியைக் காப்பாற்றவில்லை? “குறளா, குரானா?” என்று கேட்டபோது, “வாய்மை” வரவில்லையே,’உண்மையும்” சொல்லவில்லையே? மௌனியாக இருந்ததால், இன்னொரு மான் உண்மையிலேயே இதே சென்னையில் கொலைசெய்யப்பட்டது! ஆமாம், “குறள்”தான் என்று வாய்மை சொன்ன கண்ணுதல் என்ற மான்குட்டி கொலை செய்யப்பட்டது. ஆக குறளுக்காக உயிர்விட்டது யார், தியாகம் செய்தது யார் என்றால் கண்ணுதல் தானே. உண்மையிலேயே வாய்மையுடன், அந்த மடாதிபதிக்கு ஏதாவது தெரிந்தால், அந்த விருது அந்த கண்ணுதலுக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும். பாவம், இந்த மடதிபதிகளுக்கு சரித்திரம் தெரியாது, வரலாறும் தெரியாது. முந்தைய குன்றக்குடி கிருத்துவர்களுக்குத் துணை போனது, அந்த தெய்வநாயகமே தம்பட்டம் அடித்துக் காட்டுகிறன். இந்த குறக்குடி இப்படி செய்கிறது. தெரிந்தும், அரசர்களின் கால்களில் வீழ்ந்து வாழும் காவிவேடத்தில் உலாவரும் போலிகள். இங்குதான் ஆத்திகமும், நாத்திகமும் வெளிப்படுகின்றன. காவி உடையில் நாத்திகம் உலா வருவதால்தான் திருமூலர் சாடுகிறார். சித்தர்கள் தோலுறுத்திக் காட்டுகிறர்கள்! ஆனால் சித்தர்களையேப் புரட்டிப்போடுகிறார் இந்த “பேரொளி”பட்டர்! இன்னும் மான்குடிகள் சாகத்தான் செய்யும், ஏனெனில் வேடர்கள் ஏற்கெனவே விரட்டிக்கொண்டிருக்கிறார்கள்! இப்பொழுதுதான் தமிழர்கள் இவர்களைப் புரிந்து கொள்ளப்போகிறர்களோ தெரியவில்லை!

வேதபிரகாஷ்

12-02-2010


[1] அதற்கு எந்த திராவிட கட்சிகளும் கண்டுகொள்ளவில்லை. ஆத்திகம், ஆன்மீகம் பேசும் திராவிடர்களும் கவலைப்படவில்லை. எனவே தமிழர்கள் அவர்கள் எத்தகையவர்கள் என்று அடையாளங்கண்டு கொள்ளவேண்டும்.

[2] உண்மையிலேயே இத்தகைய திருக்குறள் துரோக, சைவ-துரோக, இந்து-துரோக மடங்கள் இருப்பதைவிட இல்லாமலேயே போய்விடுவது நல்லதே. பிறகு யான் அவர்கள் வெட்கம் இல்லாமல், இந்து, இந்து மடங்கள், இந்து மடாதிபதி என்றெல்லாம் மற்ற நேரங்களில் உலா வருகிறார்கள் என்று தெரியவில்லை.

[3] கத்தோலிக்க சர்ச் செய்துவரும் ஒரு மாபெரும் கள்ள ஆவண, சரித்திரப் புரட்டு ஆராய்ச்சி. ஏற்கெனவே கோர்ட் வரை சென்று அவர்களின் ஃபோர்ஜரி, மோசடி, கள்ள ஆவணம் தயாரித்தல் போன்ற விஷயங்கள் வெளிவந்துள்ளன.

[4] “இந்தியாவில் தாமஸ்” என்ற படத்தை ஆரம்பித்து வைத்து, திருவள்ளுவரை மறுபடியும் சாகடித்துவிட்டார் எனலாம்!

[5] இப்படி சொன்னவுடன், அது தூக்குப்போட்டு செத்திருக்க வேண்டாமோ? இல்லை, ஏதாவது குளம், ஆற்றில் வீழ்ந்து மறைந்திருக்கவேண்டாமோ? எதற்கு, திருநீறு, ஜடாமுடி, ருத்ராக்ஷம் எல்லாம்? யாரை ஏமாற்ற?

[6] ஆமாம் இத்தகைய விபச்சாரவேலை செய்யத் துணிந்தால், யாருக்குதான் ஆசை விடும். அதுவும், இது ஆசையில்லை, தினம் தினம் விருதுகளை நுகரும் மோகம், பட்டங்களைத் தழுவு பற்றும் இச்சை, உட்கார்ந்து கொண்டே ரசிக்கும் சல்லாபம், அது சாகும்வரை அடங்காது.

[7] எந்த கொழுப்பு இருந்தால், இருட்டில் உள்ளவர்கள் என்று மற்றவர்களைச் சொல்ல எண்ணம் வரும். இங்கேயே, அவருக்கு வயதாகியும் அந்த மமதை, செருக்கு, அணவம் முதலியன மனத்தை மறைத்துள்ளது வளிப்படுகிறது.

[8] “கடவுள்” ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் விளம்பரங்கள் கொடுத்துக் கொண்டதில் மட்டும் குறைவில்லை. “கடவுள்” பெயர் சொல்லி நீண்ட ஆயுள் வேண்டும் என்று கேட்டதிலும் வெட்கமில்லை.

[9] இதே மாதிரித்தான் “மாஹாத்மா”, “அண்ணல்” ஆகியது, ஆனால், அத்தகைய மரியாதை, மதிப்பு வரவில்லையே, திராவிடர்களுக்கு? ஏன்?

[10] நிச்சயமாக கருணநிதியை ஆன்மீகவாதி என்று யாரும் நினைத்துக் கொண்டால் அது பொய்யேயாகும்.

[11] அதனால்தான் வயதாகியதும், மான்குட்டி, மானாகியது போலும்! மானாட வந்துவிட்டது, கூட மயிலும் வந்துவிட்டது போலும்! பிறகென்ன, மானாட, மயிலாட, மார்பாட…………………

[12] “தான் மானாட மயிலான” பார்த்துக் கொண்டிருக்கும்போது, யாராவது கேட்டிருந்தால் இல்லையென்றுதான் சொல்லிருப்பார். ஏனெனில் மான்களை ஆடவிட்டுப் பார்க்கும்போது, குட்டிகளைப் பற்றி எப்படி ஞாபகம் வரும்?

[13] நல்லவேளை அக்காலத்தில் கருணாநிதி இல்லை!

[14] எப்படி நாஜுக்காகச் சொல்கிறார் பாருங்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பதால், இப்படி பேசுகிறார்.

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

பிப்ரவரி 11, 2010

திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்

வேதபிரகாஷ்

குறிப்பு: இக்கட்டுரை “மதம் மற்றும் தத்துவங்களில் தென்னிந்தியவின் பங்கு” என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. திராவிடச் சான்றோர் பேரவை சார்பில் நடந்த ஆய்கத்தில் அதே தலைப்பில் கருத்தரங்கம் கடந்த மார்ச் 2009ல் சென்னையில் நடந்தது. பதிப்பகத்தார் – திராவிட சான்றோர் பேரவை, சென்னை, 2009, ப.201-208.

தமிழகத்தில் தமிழுக்குக் கிடைக்கும் அந்தஸ்த்தும், மதிப்பும், மரியாதையும் சொல்லவொன்னாத நிலையை அடைந்துள்ளன. திருக்குறளை அவமதிக்கும் புனித காரியத்தைத் திருவாளர் பகுத்தறிவு பகலவன் பெரியார் ஈவேரா அவர்கள்தாம் துவைக்கி வைத்தார் . தமிழைப் பற்றியும், தமிழ் இலக்கியங்களைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் அவர் சொல்லியுள்ளதை படித்தால், படித்திருந்தால், படிக்க நேரிட்டால், தமிழ், முத்தமிழ், வாழும் தமிழ், நடக்கும் தமிழ், தமிழின் மூச்சு, தமிழின் உயிர், முதலியவைல்லாம் என்றோ, அவர்களது உடலில் சூடு, சொரணை, தமிழ்ப் பற்று என்றெல்லாம் யாதாவது இருந்திருந்தால், வீழ்ந்திருக்கும், மூச்சு நின்றிருக்கும், செத்திருக்கும். ஆனால், தமிழ் வாழ்ந்திருக்கும். என்னே, அலங்கோலம் இது! தமிழ், முத்தமிழ் ஆகி, வாழும் தமிழ் ஆகி, நடக்கும் தமிழ் ஆகி, இன்று “செம்மொழி”யாகி, ஒரு கட்டடத்தில் அடைப்பட்டு விட்டது . அதன் பெயரில் கிடைத்த கோடிகள், தமிழின் மூச்சுகள், உயிர்கள் பங்கு போட்டுக் கொண்டு விட்டன.

திருக்குறள் சர்ச்சைக்குட்பட்ட பின்னணி (1968 முதல்): திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து, திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. பிறகு தமிழ்மொழி மூலம் சமுதாயத்தில் தங்கள் மீதுள்ள எதிர்மறை சிந்தனைகளை துடைக்க, 1968ல் உலகத் தமிழ் மாநாடு – என்றெல்லாம் செயல்பாடு வெளிப்பட்டது. மதுரை பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு, ஒரு அறக்கட்டளையை நிறுவி “திருக்குறள் ஆய்வுத்துறை” துவங்கப் பட்டு, கருத்தரங்கங்கள் நடத்தப் பட்டு, புத்தகங்களும் (திருக்குறள் ஆய்வு வெளியீடு) வெளியிடப்பட்டன[2]. அவ்வாறு பல நூல்கள் வெளிவர திருக்குறளின் இந்தியமதத்தொன்மை, சார்பு மற்றும் பிணைப்பு முதலியன நன்றாகத் தெரிந்தது. அதாவது, திருக்குறளை படிக்க-படிக்க, ஆராய-ஆராய அத்தகைய உண்மைகள் புலப்பட்டன[3]. இதனால், திராவிட சித்தாந்திகளுக்கு மட்டுமல்லாது, குறிப்பாக முகமதிய-கிருத்துவர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகையால், அவர்கள், இந்த புதிய பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, மற்றும், தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்வது என்பதில் கலந்து ஆலோசிக்க ஆரம்பித்தனர்.

கிருத்துவ-முகமதிய எதிர்ப்புகள் (1968 முதல்): கிருத்துவ-முகமதிய எதிரிப்புகள் இரண்டு வழிகளில் செயல்பட்டு வெளிப்பட்டன என தெரிகிறது.

  • ஒன்று “அறிவுஜீவிகள்” என்ற ரீதியில் மாநாடுகள் நடத்தி கருத்துருவாக்கம் ஏற்படுத்துவது.
  • இரண்டு துண்டு பிரசாரம் (handbill distribution), சிறுநூல் பிரபலம் / குறுப்புத்தக விநியோகம் (pamphleteering) மூலம் “பயத்தை”த் தூண்டுவது.

குரானை புகழ்ந்தும், குறளை இகழ்ந்தும். “பொதுமறை எது? குறளா? குரானா?” என்ற தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் எழுதிய ஒரு “ஆராய்ச்சி நூல்” வெளியிடப்பட்டு, 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

கிருத்துவர்கள் தமது “கட்டுக்கதைகள்” வெளிப்பட்டு அஸ்திவாரம் ஆட்டங்கண்டு விடுமோ என பயந்து, தமது பிரசாரங்களை முடுக்கி விட்டனர். கிருத்துவர்கள் 1969ல் “திருவள்ளுவர் கிருத்துவரா?” என்ற குறுபம்புத்தகம் தெய்வநாயகத்தால் எழுதவிக்கப்பட்டு வெளியிடுகிறார்கள் [4]. மு.கருணாநிதி “மதிப்புரை” அளித்துப் பாராட்டுகிறார்.

பல்கலைகழகங்களும், மதரீதியிலான “நாற்காலிகளும்”, சித்தாந்த மோதல்களும்: முகமதியரும் தமது யுக்திகளைத் தொடங்கினர். அதே மதுரை பல்கலைக் கழகத்தில் “இஸ்லாமிய தமிழிலக்கிய ஆரய்ச்சிப் பிரிவு” துவக்கப் பட்டது. நல்ல முஸ்லிம்கள் இருதலைக்கொள்ளி எறும்புகள் மாதிரி தவித்தனர், ஏனெனில், அவர்கள் “தமிழின் நண்பர்கள்” என்றும் காட்டிக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் தங்களது அடிப்படைவாதத்தையும் நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். ஆகையால், அவர்கள் திருக்குறளை தவிர்த்து தமது மதம்தான் சிறந்தது என்ற ரீதியில் “சூஃபி மெய்ஞானம்” என்ற போர்வையில் “ஆரய்ச்சி” ஆரம்பித்தனர். அவர்களும் “உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகள்” நடத்த ஆரம்பித்தனர்[5]. இவ்விதமாக, திருக்குறள் பின்னேத் தள்ளப்பட்டு, “இஸ்லாமிய தமிழ் இலக்கியம்”, “தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லீம்கள் ஆற்றியத் தொண்டு”, முதலியன முன்வைக்கப் பட்டன. அப்துர் ரஹ்மான், மணவை முஸ்தபா முதலியோர் இதில் பங்கு கொண்டனர்.

இவ்வாறு, முகமதியர் தெளிவாக இருக்கும்போது, கிருத்துவர்கள் தமது “உள்-பிரச்சினைகளுக்காக” யோசித்து செயல்பட வேண்டியிருந்தது. கத்தோலிக்க சர்ச் தெய்வநாயகத்தின் மூலம் இந்த பிரச்சினை அணுக முடிவெடுத்தது. அதனால்தான் தெய்வநாயகத்தை வைத்தே எல்லா பிஷப்புகளும் தமது வேலைகளை இன்றளவிலும் செய்து வருகின்றனர்.

சித்தர்கள்: கிருத்துவர்களும், முகமதியரும்: திருக்குறளைவிட, “சித்தர்”களைப் பிடித்துக் கொண்டால், திருவள்ளுவரையும் மறக்கலாம், தமது “இந்து-விரோத” பிரசாரத்திற்கு “சித்தர் பாடல்களை” திரித்து விளக்கமும் அளிக்கலாம் என முடிவு செய்தனர் போலும். “தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்” என்ற மாநாட்டை மணவை முஸ்தபா[6] 1980ல் நடத்தினார். முதல் கிருத்துவ தமிழ் மாநாடு துருச்சியில் டிசம்பர் 28-30, 1981 தேதிகளில் நடக்கிறது. அதில், வி. ஞானசிகாமணி என்ற கிருத்துவரின் போலி “சித்தர் பாடல்களை” ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட, “அகத்தியர் ஞானம்” என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. இவ்வாறு திருவள்ளுவத்தில் முரண்பாடு கொள்ளும் இவர், “சித்தர்களில்” போட்டி போட்டு மாநாடுகள் நடத்துகின்றனர், புத்தகங்கள் வெளியிடுகின்றனர். கருணாநிதியும், கனிமொழியும் சமீபத்தில் சிவவாக்கியர் பாடல்களைப் பற்றி அரைகுறையாக சொல்லி மாட்டிக் கொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளன. இனி தனித்தனியாக, சில குறிப்பான திருக்குறள்-விரோத நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளதைப் பார்ப்போம்.

குறளா, குரானா? இவ்வாறு குரல் எழுப்பியது, கேள்வி கேட்டது, தமிழன் தான், ஆமாம் தமிழ் படித்த முகமதியன். தமிழனாக, இந்தியனாக, ஏன் இந்துவாக இருந்த முகமதியன் தான் கேட்டான், கேட்கிறான். சரி, பதில் தான், உண்மையை வெளிக்காட்டுகிறது. ஆமாம், குரான் முன்னம், குறள், ஆமாம், “திருக்குறள்” இல்லை, துச்சமாம்! காஃபிர்[7] (முகமதியன் அல்லாதவன்) மோமினானதால்[8] (நம்பிக்கையுள்ளாவன்) ஏற்பட்ட கோளாரா அல்லது முகமதியம் வளர்த்த அடிப்படைவாதமா என்று ஆராயவேண்டியுள்ளது. மதம் மாறுவதிலேயே, கடவுள் மாறும்போது, போலித்தனமான நம்பிக்கை வெளிப்படுகிறது.

“பொதுமறை எது? குறளா? குரானா?” இத்தலைப்பில் திருச்சியை சேர்ந்த மதனி என்ற முஸ்லிம் தமிழில் ஒரு “ஆராய்ச்சி நூலை” எழுதியுள்ளதாகவும், அதில் குரான்தான் பொதுமறை என்றும் குறள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளதாகவும் கண்ணுதல்[9] என்பவர் எழுதியுள்ள “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற மறுப்பு நூல் மூலம் தெரியவந்துள்ளது. 1968ம் ஆண்டு முதல் பதிப்பும் 1974ம் ஆண்டு இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. புத்தகதை பேகம்பூர், திண்டுக்கல்-2 என்ற விலாசத்திலிருக்கும் “டில்லி குதுப்கானா” என்ற புத்தக வெளியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேற்படி புத்தகம் நெ.67, அங்கப்ப நாயக்கன் தெரு, சென்னை-1 என்ற விலாசத்தில் இருக்கும் மன்சர் புக் சென்டர் என்ற புத்தகக் கடையில் விற்பனை செய்யப்படுகிறது. புத்தகதை அச்சிட்டோர் ஜோதி பிரிண்டர்ஸ், திருச்சி-1. இன்று இப்புத்தகம் கிடைப்பதில்லை.

மதனியும், தெய்வநாயகமும்: மேற்கண்ட உண்மைகளினின்று தெளிவாக அறியப்படுவது, மதனி மற்றும் தெய்வநாயகம் முகமதியர் மற்றும் கிருத்துவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட ரவை, குண்டு, வெடிகுண்டு, எதிர்ப்பு சின்னங்கள் தாம், அவைற்றை வெடிக்கச் செய்யும் துப்பாக்கி, ராக்கட்-லாஞ்சர் மற்றும் ரிமோட்-கருவிகள் இஸ்லாமிய-கிருத்துவ தலமைகள்-தலமையகங்கள் தாம்[10]. மதனியின் புத்தகத்தை மறைத்து விட்டனர் முகமதியர், ஏனெனில் இன்று அது கிடைப்பதில்லை. ஆனால், தெய்வநாகம் கிருத்துவ தீவீரவாத பிரச்சாரம், கத்தோலிக்க சர்ச்சின் ஆதரவோடு வலுவாக நடந்து வருகிறது[11]. நாளைக்கு சட்டரீதியில் ஏதாவது பிரச்சினை வந்தால் தப்பித்துக் கொள்ள செய்துள்ள ஏற்பாடு என்று நன்றாகத் தெரிகின்றது[12].

மொழி-இலக்கியம் மதத்திற்கு விரோதமா? இத்தகைய நோக்கு, இந்த மதம் மாறிய முகமதிய-கிறித்துவர்கள் நேரிடையாகவும், மறைமுகமாகவும் தங்களது இறையியல் கொள்கைகள் பாதிக்கப் படுவதால், வெளிப்படுகின்றது. முகமதியரைப் பொறுத்த வரைக்கும், அரேபிய பாடை(மொழி)த்தான்[13] சிறந்தது. குறிப்பாக, வெளிநாட்டு கிருத்துவர்களுக்கும் இந்த மொழி வெறி, நிறவெறியோடு உள்ளது. அவர்கள் இந்தியாவில் எப்பொழுதுமே இலத்தினில்தான் “பலி-பூஜை” (Eucharist) நடத்துவார்கள். பங்களுரில் தமிழில் இறைவணக்கம் நடந்தபோது, கன்னட-கிருத்துவர்கள் எதிர்த்ததை நினைவு கொள்ளவேண்டும். மேலும்,

இங்கு முகமதிய-கிறித்துவர்கள் தமது மத-கடவுளர்களை, தூதர்களை தமிழில் விளக்க முற்பட்டபோது, பல பிரச்சினைகள் ஏற்பட்டன. குறிப்பாக பெண்-கடவுளர், தேவதைகள் முதலியோரை “கேசாதி-பாத” வர்ணனைகளுக்கு உட்படுத்தப் பட்டபோது, ஆரம்பகாலங்களில் எதிர்ப்பு இல்லை. அல்லாப் பிள்ளைத் தமிழ், நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ், பாத்திமாப் பிள்ளைத் தமிழ் என்பதையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாது. நபி/முகமதுப் பிள்ளைத் தமிழ் முதலியன இருந்ததாகத் தெரிகிறது, ஆனால், 20வது நூற்றாண்டுகளில் அவர்களது மத-அடிப்படைவாதம், தீவிரவாதம் முதலியன சித்தாந்தரீதியில் வளர்ந்தபோது, அத்தகைய வர்ணனைகளை எதிர்த்தனர். அதுமட்டுமல்லாது அத்தகைய மற்றும் தமது சித்தாந்தங்களுக்கு ஒத்துப்போகாது என்றுள்ள “பாடபேதங்கள்’ என்ற போர்வையில் பாடல்களையும் நீக்கி விட்டனர் மற்றும் புதிதாக எழுதி சேர்த்தும் உள்ளனர்.

முகமதியமத காப்பியங்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு இடையே இருந்த ஷியா-சுன்னி வெறுப்பும் வெளிப்படுகிறது[14]. தமது கடவுளர், தூதர்களை தமிழ் மரபுபடி அவன், அவள் என்று ஒருமையில் குறிப்பிடுவதை எதிர்த்தனர்[15].

செமித்திய-சகோதர மதங்களின் முரண்பாடு ஏன்? இந்தியாவில் இந்துமதத்தை எதிர்த்து மதம் மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முகமதியர்-கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்யும்போது, ஒன்றாக செயல்பட்டாலும், அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் பலமுறை வெளிப்படுகின்றன. யூதர்கள் “ஏசுகிருஸ்து” என்ற நபரை என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. அத்தகைய பாத்திரமே பொல்லியானது என்றும், “ஏசுகிருஸ்து” ஒரு கபடதாரி, வேடதாரி மற்றவரைப் போன்று நடித்து ஏமாற்றுவன் (imposter) என்றுதான் அவர்கள் கொண்டுள்ளனர். கிருத்துவர்களுக்கோ, யூதர்களின் மீது தீராத பகை, ஏனெனில் அவர்கள்தாம் தமது தலைவர் சிலுவையில் அறையப்பட காரணமாக இருந்தவர்கள் என்றதினால். முகமதியரோ, “ஏசுகிருஸ்து”வை கடவுளாக, இறைமைந்தனாக ஏற்றுக் கொள்ள மறுப்பதோடு, “சிலுவையில் அறைப்பட்டதையும்” மறுக்கின்றனர்[16]. எனெனில், அவர்களது கடவுள் “அல்லா”, அத்தகைய நபர் என்றுமே சிலுவையில், பறிக்கவில்லை மற்றும் உயர்த்தெழவில்லை, மாறாக உயர்வான ஒரு இடத்திற்கு எடுத்தச் செல்லப் பட்டு, அவரது காயங்களுக்கு மருந்து போடப்பட்டு, குணமாகினார் எனச் சொல்கிறாகத்தான் நம்புகின்றனர். பிறகு, மேரி மேக்தலினை மணம் செய்து “ஏசுகிருஸ்து” கல்லறை இந்தியாவில், காஷ்மீரத்தில், “ரோஸாபெல்” என்ற இடத்தில் இருப்பதாகவும் புனையப்பட்ட “சரித்திரம்”![17] ஆகவே, இத்தகைய சூழ்நிலைகளிலும் திருக்குறளை அவர்கள் தாக்குகின்றனர்.

தமிழர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்? தமிழ் என்று பேசுபவரும், திருக்குறள், திருவள்ளுவர் என்றெல்லாம் விழாக்கள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் நடத்தும் தமிழ் அறிஞர்கள், பண்டிதர்கள், புலவர்கள், கவிகள், கவிக்கோக்கள், பெருங்கவிக்கோக்கள் முதலியோர், இவ்வாறு தமிழ், திருக்குறள், திருவள்ளுவர் தாக்கப்படுவது, இழிவுபடுத்தப்படுவது, கேவலப்படுத்தப்படுவது முதலியற்றைப் பற்றி கவலைப்படாமல், மூச்சுக்கூட விடாமல் இருப்பது கண்டு ஆச்சரியமாக உள்ளது. முக்கியமாக, பலர் கிருத்துவர்-முகமதியர் முதலியோர் தமக்கு கொடுக்கும் சலுகைகள், பாராட்டுகள், மரியாதைகள் முதலியற்றில் மயங்கி, தமது சுயமரியாதை, மானம் முதலியற்றை மறந்து, அவர்களுடன் செயல்படுகின்றனர். சமயம் வரும்போது திராவிட அரசியல்வாதிகளும் தாம் ஆளும்போது, அவர்களுக்கு, “கலைமாமணி” முதலிய பட்டங்களால் கௌரவிக்கப் படுகின்றனர்.

கண்ணுதலின் போராட்டமும், முடிவும்: கண்ணுதல் என்ற தனிப்பட்ட மனிதர், இந்த குறளா-குரானா போராட்டத்தில் ஈடுபட்டு, ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அவரது குறும்புத்தகம் வெளிப்படுத்துகின்றது. இருப்பினும், அவரது எழுத்துகள் மற்றும் தனிநபர் போராட்டம், இப்பொழுதே அறியப்படாமால் உள்ளது. காலடைவில் அவர் முழுவதுமாக மறக்கப்படலாம். கிருத்துவர்கள் தமிழறிஞர்கள், புலவர்கள் முதலியோரது நூல்களை அழித்துள்ளனர். உதாரணத்திற்கு சிவரபிரகாசரின் ஏசுமத நிராகரணம் மற்றும் ஏசுமத நிர்க்கிரகம் என்றஇரு புத்தகங்ககளை அவர்கள் எரித்துள்ளனர். இந்த கண்ணுதல் என்பவரோ முகமத வெறியர்களால் கொலை செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதற்கு மேல் எந்த விவரமும் தெரியவில்லை[18].

எனவே, இந்த திருக்குறள் எதிர்ப்பு, மறப்பு, மறைப்பு, திரிப்பு முதலிய காரியங்களில் ஒட்டுமொத்த தமிழ்-எதிர்ப்பு கூட்டங்கள்தாம் “திராவிடர்” என்ற போர்வையில், முகமதியர்-கிருத்துவர்களுக்கு துணைபோய், தன் கையே தன் கண்களைக் குத்திக்கொள்வதைப் போன்று தமிழர்கள் செய்ய மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகையால்தான், அவர்களுக்கு மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து குழுக்களும் தமக்கு எடிராக செயல்படுவதை அறியாமல், அவர்கள் தமது காப்பாளர்கள் என்று இன்றளவிலும் நம்பப்பட்டு வர்கின்றார்கள். இந்த மாயவலையிலிருந்து தமிழர்கள் விடுபடும் வரை, தமிழர்களுக்கு, தமிழுக்கு விடிவு காலம் இல்லை.

வேதபிரகாஷ்


[1] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

 

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[2] சென்னை, மயிலாப்பூரில் 1967 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 15ஆம் நாள் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஆற்றிய சிறப்புரை – நம் நாடு நாளிதழ் அக்டோபர் 16, 1967) பேசியபோது, “சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆராய்ச்சிக்கு என்றே ஒரு தனித் துறையை ஏற்படுத்தத் தமிழக அரசு முயற்சி செய்யும்” என்றார். ஒருவேளை, அதுதான் மதுரை பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தபட்டதா என்று தெரியவில்லை.

[3] திருக்குறள் உலக பொதுமறை என்றெல்லாம் திராவிட அரசியல்வாதிகள் பேசியபோது, முகமதியர் கடுமையாக எதிர்த்தது மட்டுமல்லாது, அவர்கள் திராவிட சித்தாந்திகளிடம் அவ்வாறு பேசவேண்டாம் என்றும் எடுத்துக் கூறினர். இன்றளவிலும் முகமதியர் இணைத்தளங்கள் மூலம் குறளை குரானுடன் ஒப்பிடுவதை கடுமையாக எதிர்க்கின்றனர்.

[4] ஆர்ச் பிஷப் அருளப்பா இதற்கு பெருமளவில் உதவி வெய்துள்ளதாக, தெய்வநாயகமே ஓப்புக்கொண்டுள்ளதை அவர்கள் வெளியுட்டுள்ள குறும்புத்தகங்கள் மூலம் அறியலாம்.

[5] ஏழாம் இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு மே மாதம் 25, 26, மற்றும் 27 ஆம் தேதிகளில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

[6] மணவை முஸ்தபா, தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள், மீரா பப்ளிகேஷன், AE-103, அண்ணா நகர், சென்னை-600040, 1983.

[7] காஃபிர் = இவார்த்தை “குஃப்ரு” என்ற அரேபிய சொல்லினின்றுப் பெறப் படுகின்றது. குஃப்ரு என்றால் சுத்தமில்லாதவன், ஆச்சாரமில்லாதவன், விலக்கப்பட்ட உணவை உண்பவன், அல்லாவை நம்பாதவன் என்றெல்லால்ம் பொருள்படும். குரானின் படி, இவ்வுலகம் “தாருல்-இஸ்லாம்” மற்றும் “தாருல்-ஹர்ப்” என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பின்னதில், எப்பொழுதும் “ஜிஹாத்” என்ற புனித மதப்போர் நடத்தி, காஃபிர்களைக் கொன்றால் தான், அந்த “குஃப்ரு” நீங்கப்படும். அதுவர “ஜிஹாத்” தொடரும்.

[8] “மோமின்” = நம்பிக்கை உள்ளவன், அதாவது குரானில் மட்டும் நம்பிக்கையுள்ளவன், அதனால் மற்றவற்றை அடியோடு நம்பாதவன், நம்பக் கூடாதவன், நம்ப முடியாதவன்.

[9] கண்ணுதல், பொதுமறை குறள்தான்-குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.

[10] வில்லிருக்க அம்பை நோவானேன் என்பது பழைய “பழமொழி”, இப்பொழுது, துப்பாக்கி இருக்கத் ரவையை நோவானேன், ராக்கட்-லாஞ்சர் இருக்க குண்டை நோவானேன், ரிமோட்-கருவிகள் இருக்க வெடிகுண்டுகளை நோவானேன் என புது “பழமொழிகள்” உபயோகப்படுத்தலாம். ஆனால், இவையும், தொழிஏநுட்பத்தால் பழையதாகி விடுகின்றன!

[11] ஆகஸ்த்து 2008ல் நடந்த தமிழர் சமயம் மாநாடு முழுக்க-முழுக்க பிஷப்புகள் மாநாடுதான். அவர்கள் பங்கு கொண்டது மட்டுமன்றி அங்கேயே இருந்து, பாடி-ஆடி மற்றவர்களை மகிழ்வித்தனர்.

[12] அருளப்பா மாதிரி சட்டப் பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டு, தேவையற்ற விளம்பரத்தைத் தர விரும்பவில்லை என்று நன்றாகத் தெரிகின்றது.

[13] திராவிட-மற்றும் சித்தாந்திகளைப் போல “பாஷை” என்ற சொல்லிற்கு பதிலாக “பாடை” என்று அவர்கள் உபயோகிக்கும் வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.

[14] எம். செய்யது முகம்மது ஹஸன் (பதிப்பாசிரியர்), கனகாபிஷேகமாலை, ஐந்தாம் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு, கீழக்கரை, 1990, ப.xiv-xv.

[15] அதே இலத்தில், ப.xvii.

[16] முஹம்மது அப்துல்காதிர், இயேசுநாதர் சிலுவையிலறைப்படவில்லை, முஸல்மான் ஆபீஸ், தென்காசி, 1980.

Ahmed Deedat, Crucifixion or Cruci-fiction, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

…………………….., Resurrection or Resusiatation, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

………………………, Who moved the stone?, Islamic Propagation Centre, Durban, South Africa, 1987.

[17] இதன் மீது ஆதாரமாகத் தான் “இந்தியாவில் ஏசு” என்ற படத்தை கிருத்துவர் எடுக்கின்றனர். விவரங்களை அவர்களது இனைத்தளத்தில் காணலாம்.

[18] சமீபத்தில் திரு. நாத்திகம் ராமசாமி அவர்களைப் பார்த்தபோது, கண்ணுதலின் “பொதுமறை குறள்தான்-குரானில்லை” என்ற குறும்புத்தகத்தைக் காண்பித்ததுடன், இந்த சிறிய விவரங்களையும் சொன்னார்கள்.