Posts Tagged ‘போலியான திராவிய இயக்கம்’

உண்மையான திராவிட இயக்கம், போலியான திராவிட இயக்கம்!

ஜூன் 6, 2010

சென்னை 05-06-2010:””தி.மு.க., தான் உண்மையான திராவிட இயக்கம். மற்ற கட்சிகள் எல்லாம் மக்களை ஏமாற்றத்தான் “திராவிட’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றன,” என கருணாநிதி பேசினார். சேலம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க., துணைச் செயலர் மோகன் தலைமையில், சேலம், நாமக்கல் மாவட்டங்களின், அ.தி.மு.க.,- ம.தி.மு.க., – தே.மு.தி.க.,- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 838 பேர், தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி, அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

கருணாநிதி முன்னிலையில் நடந்த இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து, “காமராஜர் காங்கிரஸ்’, “இந்திரா காங்கிரஸ்’, “மொரார்ஜி தேசாய் காங்கிரஸ்’ என உருவான அனைத்து கட்சிகளும், தங்கள் கட்சிகளின் பெயரில் “காங்கிரஸ்’ என்ற வார்த்தையை விடாமல் வைத்துக் கொண்டன. ஆனால், இன்று காங்கிரஸ் மட்டுமே இந்தியாவை ஆளுகின்ற கட்சியாக திகழ்கிறது.அதுபோல, அ.தி.மு.க., – தே.மு.தி.க., – ம.தி.மு.க., என எத்தனை கட்சிகள் இருந்தாலும், எல்லாமே தி.மு.க.,வில் இருந்து வந்த கட்சிகள் என்று சொல்கிற அளவிற்கு அக்கட்சிகளின் பெயர்களில் “திராவிட’ என்ற வார்த்தை உள்ளது.

எம்ஜியாரை வாழ்த்தி, இப்படி திட்டும் கலை கருணாநிதியிடம் தான் உள்ளது: “திராவிட’ என்ற வார்த்தையை,”அண்ணா’ என்ற பெயருடன் இணைத்துக் கொண்டு, பாமர மக்களை ஏமாற்றி, அ.தி.மு.க.,வினர் கொஞ்சம் காலம் கட்சியை நடத்தினர். சிறிதுகாலம் ஆட்சியும் செய்தனர். ஆனால், தி.மு.க., தான் இவர்களுக்கெல்லாம் மூலாதாரம், தலைமைப் பீடம் என, சொல்லும்படியாக அக்கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்.அவர்களில் பெரும்பாலானோர் தாய்மார்களாக இருப்பது, தி.மு.க, இயக்கம் மேன்மேலும் வலுவடைந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது. இன்னும் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் தி.மு.க.,வில் இணைவர் என்ற நம்பிக்கை உள்ளது.

ஊழலையே ஊழலாக்கிய கலை யாரிடத்தில் உள்ளது? இன்றுகூட, தி.மு.க.,வின் ஊழலைப் பற்றி கூட்டம்போட்டு பேசுங்கள் என்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். உடல் முழுவதும் ஒட்டியாணம், நகைகள், வளையல்களை போட்டுக் கொண்டு நிற்கிற உருவத்திற்கு பெயர்தான் ஊழல்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

‡.˜.L. Uy|ÚU EÛUVÖ] ‡WÖ«P CVeL•; U¼\ÛY G¥XÖ• ÚTÖ¦
Lyp›¥ CÛQ• «ZÖ«¥ L£QÖŒ‡ ÚTor


ÙNÁÛ], ^ØÁ.6