Archive for the ‘உயர்நீதி மன்றம்’ Category

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010