Posts Tagged ‘லெனின்’

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

Lenin statue down - Tiripura

திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி: மார்ச் 3, 2018 அன்று அறிவிக்கப் பட்ட தேர்தல் முடிவுகள் மூலம், திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது[1]. இது அரசியல் ரீதியில், சித்தாந்த போராட்ட நிலையில், ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. “காங்கிரஸ் இல்லாத பாரதம்” என்ற கொள்கையில் அரசியல் செய்யும் போது, இவ்வாறு கம்யூனிஸம் தோற்றது, பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான், இது கம்யூனிஸ சித்தாந்திகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, பிஜேபி அரசு அமைத்துள்ளதாக, பிருந்தா காரத் குற்றஞ்சாட்டினார். ஆனால், பிஜேபி தேசியம், தேசிஅ ஒருமைப்பாடு பற்றி தெளிவாக இருப்பதாக எடுத்துக் காட்டியது. உடனடியாக மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன[2]. வழக்கம் போல பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் வாடிக்கையான செயல்பாடாக இருந்து வந்ததால், அதனை பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை.

Second Lenin statue down - Tiripura

லெனின் சிலை உடைப்பு: திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொடர்ந்து ஆட்சி செய்வதை கொண்டாடும் விதமாக 2013ல் லெனின் சிலையை நிறுவினர். ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய இரண்டாவது நாளே மார்க்சிஸ்ட் ஆட்சியின் தொடர் வெற்றி அடையாளமான லெனினின் சிலையை புல்டௌசரை வைத்து காவி உடை அணிந்த சிலர் அகற்றியுள்ளனர்[3]. சிலையை உடைத்ததும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூச்சல்களிட்டதும் இது தொடர்பான சுற்றில் உள்ள ஒரு விடியோவில் தெரிகிறது[4]. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக சிபிஐ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பிஜேபி இதனை மறுத்துள்ளது. பெலோனியா சதுக்கத்தில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது[5].  திரிபுரா மாநிலம் சப்ரூம் மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த இன்னொரு லெனின் சிலை உடைக்கப்பட்டது[6]. இதனால் 144 ஊரடங்கு சட்டமும் அமூல் படுத்தப் பட்டது. யு.எஸ்.எஸ்.ஆர் உடைந்த போது, லெனின் சிலைகள் உடைக்கப் பட்டன. பிரிந்த நாடுகளில் உள்ள ஆயிரக் கணக்கான சிலைகள் அகற்றப் பட்டன.

Mamta, rao, third front

மேற்கு வங்காளத்தை கம்யூனிஸ ஆட்சியை வீழ்த்திய மம்தா சிலையுடைப்பை எதிர்த்தது: 33 வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்த சி.பி.எம் ஆட்சியை நீக்கி பதவிக்கு வந்தார். ஆனால், இப்பொழுது, லெனின் மற்றும் மார்க்ஸ் சிலைகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளது[7] வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், மறுபடியும் பிஜேபிக்கு எதிராக, ஒரு அணியை உண்டாக்க மம்தா, ராஜசேகரராவ், ஸ்டாலின் முதலியோர் முயலும் நேரத்தில், இவ்வாறு கூறப் பட்டுள்ளதையும் கவனிக்கப் பட்டுள்ளது[8]. அதுமட்டுமல்லாது, அங்கு கம்யூனிஸத் தலைவர்கள் யாரும் மம்தாவை நம்புவதாக இல்லை. இருப்பினும் கூட்டணி அரசியலில் ஆதாயம் பெறலாம் என்ற நோக்க்கில் பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது அணி தலைமையில் காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்றாலே, முரண்பட்ட, எதிர்-புதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து வந்து, பிரிந்து போகும் நிலை என்பதும் மக்களால் அறியப் பட்ட விசயமாக விட்டது. அவர்களால், நிச்சயமாக நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. மேலும், இது ஓட்டுகளைப் பிரித்து பிஜேபிக்குத் தான் சாதகத்தை ஏற்படுத்தும்.

Jayalaita statue

சிறிது நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா சிலை திறந்து உருவான “உருவப் பிரச்சினைகள்” [9]: அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை ரூ.7 லட்சம் மதிப்பில் 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சிலை ஜெயலலிதாவின் முகத்தை போல் இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உள்பட பலரும் குற்றம்சாட்டினர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர் சனங்கள், கருத்துகள் வந்தன. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கும்’ என்று தெரிவித்தார். அதன்படி, ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்த சிற்பி பிரசாத்திடம், ஜெயலலிதாவின் முகத்தை மாற்ற சொல்லி இருப்பதாக கூறப்பட்டது. அவரும் தனது சொந்த செலவிலேயே சிலையை மாற்றி தருவதாக கூறியிருந்தார். இந்தநிலையில், ஜெயலலிதா சிலையுடன், எம்.ஜி.ஆர். சிலையையும் மாற்றம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. சிலைகளை செய்யும் பணிகளையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்றொரு சிற்பியான டி.ராஜ்குமார் உடையார் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது[10]. இந்த 2 சிலைகளையும் 1½ மாத காலத்தில் சிறப்பாக செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் இறுதியில் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 05-03-2018 அன்று வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலையை வடிவமைத்தவர் ராஜ்குமார் உடையார் என்பது குறிப்பிடத்தக்கது.

MGR statue, Rajini

05-03-2018ல் எம்ஜிஆர் சிலை திறப்பு, லெனின் சிலை உடைப்பு, 06-03-2018 அன்று பெரியார் சிலை சர்ச்சை: “எம்ஜிஆர் நுற்றாண்டு விழா” போர்வையில், ஏ.சி.சண்முகம் முதலியார் சிலை திறப்பு விழா நடத்தியது, ரஜினியை வரவழைத்தது வேடிக்கையாக இருந்தது. இவர் பழைய நினைவு ஆதிக்க சிந்தனைகளில் தான் “புதிய நீதிக் கட்சி” தொடங்கினார். ஆனால், தேர்தல் நேரத்தில், ஏதாவது ஒரு கட்சியுடன் பேரம் பேசி, அமைதியாகி விடுவார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் சிலையை, ரஜினிகாந்த் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்த பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்[11]. விழாவில் நடிகர்கள் பிரபு, விஜய்குமார், சுந்தர் சி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உள்ளனர்[12]. ரஜினிகாந்தின் பேச்சு பேராசையாகத்தான் வெளிப்பட்டது. யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று ஒப்புக் கொண்டு, எம்ஜிஆர் ஆட்சி அளிப்பேன் என்று பேசியது தமாஷாக இருந்தது. அந்நிலையில், சிலை உடைப்பு விசயத்தில், எச். ராஜா தனது முகநூலில், ”இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். நிச்சயமாக ராஜா அல்லது அவர் பெயரில், யாரோ அவசரக் குடுக்கைத் தன்மாக அப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. திராவிட சித்தாந்தத்தில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில், எந்த முதிர்ந்த அரசியல்வாதி அத்தகைய பதிவை செய்ய மாட்டார்.

© வேதபிரகாஷ்

07-03-2018

MGR statue, Rajini, அ ௵ ஶன்முகம்

[1] Hindusthan Times, Violence in Tripura after BJP win; Lenin statue toppled, Section 144 in several areas,  Updated: Mar 06, 2018 18:10 IST

[2] https://www.hindustantimes.com/india-news/people-want-statues-of-vivekananda-and-sardar-patel-not-lenin-says-tripura-bjp-leader/story-RsgVHcrmChdON3TadY1gIK.html

[3] நியூஸ்.டி.எம், லெனின் சிலை உடைப்பு; திரிபுராவில் வன்முறை, Posted Date : 12:07 (06/03/2018)

[4] http://www.newstm.in/India/1520318236825?Lenin-Statue-Vandalised;-Violence-in-Tripura

[5]  தினகரன், திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைப்பு, 2018-03-06@ 20:04:31.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=381832

[7] Hindusthan Times, Lenin statue toppled in Tripura, Mamata Banerjee says won’t tolerate it,,  Updated: Mar 06, 2018 20:14 IST

[8] https://www.hindustantimes.com/kolkata/lenin-statue-toppled-in-tripura-mamata-banerjee-says-won-t-tolerate-it/story-OtLwhnfpwK3HmXDgtHTLIL.html

[9] தினத்தந்தி, ஜெயலலிதா சிலை செய்யும் பணி வேறு சிற்பியிடம் ஒப்படைப்பு, மார்ச் 07, 2018, 04:30 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2018/03/07035053/The-task-of-Jayalalithaa-statue—Handed-over-to-another.vpf

[11] தினத்தந்தி, எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த், மார்ச் 05, 2018, 05:42 PM

[12]  https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/05174228/Rajinikanth-is-the-last-actor-to-open-the-MGR-Statue.vpf</p>

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

செப்ரெம்பர் 6, 2013

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

 

‘‘நடந்ததுஎன்ன? குற்றமும்பின்னணியும்’’ –  ஸ்டார்விஜய்டிவியின் நிகழ்சி:  நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கடந்தாண்டு 2012 மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன – குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு.

 

கர்நாடகஐகோர்ட்டில்நடிகைரஞ்சிதாதொடர்ந்தவழக்கு: இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னையும், நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார்[1]. இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு [Broadcast Content Complaints Council (BCCC)] விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தர விட்டது[2].

 

டி.வி. ஒளிபரப்புபுகார்கள்குழுவின்தீர்ப்பு: நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு) தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்[3]. தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9–ந் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது[4].

 

சன்-குழுமம் ஆரம்பித்து வைத்த வீடியோ நிகழ்சி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல்[5]. அதுவும், பரீட்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது[6]. போதாகுறைக்கு கருணாநிதி வேறு நக்கல் அடித்துக் கொண்டிருந்தார்[7]. 02-03-2010, செவ்வாய்கிழமை அன்று மாலையிலிருந்து சன் நியுஸ் தொலைக்காட்சி முன்பு காசியைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தது போல அதே பாணியில் அதிரடியாக செய்திகள் நடுவே, கீழே ஓடும் துண்டு செய்தியில் தொடர்ந்து சேலம் சாமியார் சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருக்கிறார், சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி, ………………என்று ஓட்டிக்கொண்டிருந்தது[8]. ரஞ்சிதா டிசம்பர் 2011ல், சன் குழுமத்தின் மீதும்[9], இதே மாதிரியான வழக்கு தொடர்ந்தார்[10]. குற்றஞ்சாட்டப் பட்டுள்ளவர்களில் கீழ்கண்டவர்கள் அடங்குவர்[11]:

 

  • விஜய் குமார்  (CEO, Sun TV),
  • சாக்சேனா (former CEO, Sun TV),
  • ஜோதீஸ்வரன்  (Program Manager, Sun TV),
  • கே. விஜயகுமார் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies),
  • ஆர். எம். ஆர். ரமேஷ் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

 

2010ல்ஆரம்பித்தஆபாசம்தொடரும்விதம்: காந்தப்படுக்கை வழக்கில் சிக்கிக் கொண்ட லெனின்[12] சரண்டர் ஆனபோது, சிடிக்காக பணம் கேட்கப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆசிரமத்தின் சார்பில் ஸ்ரீதர் என்பவர் சொன்னதாவது, தொலைகாட்சியில் வீடியோவை வெளியிட்ட அந்த டிவி செனல் (அவர்களுடன்) ஒரு “டீல்” வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த டிவி செனல் சாமியாரிடம் ரூ. 50 கோடி கேட்டது, என்றும் குற்றம் சாட்டினார்[13]. அப்பொழுது, குற்றப்பிரிவு சி.ஐ.டி சென்னை உய்ர்நீதி மன்றத்திடம் ரஞ்சிதாவின் வழக்கு ஏற்கெனவே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால்றைன்கு எப்.ஐ.ஆர் எதுவும் போடப்போவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே உள்ள நித்ய ஆத்ம பரமானந்தா என்பவர் தொடுத்துள்ள வழக்குடன், இதனையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தது[14].


[1] As Star Vijay was an entertainment channel, the HC routed the complaint to BCCC by the Ministry of Information and Broadcasting along with a CD of programme.

[3] “The programme not only used her name liberally but also continued to reinforce it on viewers by using her public film photos, videos repeatedly which were totally unconnected. This conduct of the channel totally disregards the complainant’s reputation, honour and basic rights of existence,” said BCCC’s order.

http://newindianexpress.com/nation/Channel-ordered-to-apologise-to-Ranjitha/2013/09/03/article1765099.ece

[11] Ms. Ranjitha filed criminal defamation complaints against Sun TV and their two Tamil dailies, Dinakaran and Tamil Murasu, before the Third Additional Chief Metropolitan Magistrate, Bangalore in December 2011, for recklessly defaming her through false articles and the morphed video allegedly linking her to her Guru Paramahamsa Nithyananda in March 2010. Advocates P.Nehru and Murugaiya Babu filed the petitions on behalf of Ms.Ranjitha. By the sheer gravity of the offence, the Hon’ble Chief Magistrate has taken cognizance and issued summons to the three accused parties. The accused list includes Vijay Kumar (CEO, Sun TV), Saxena (former CEO, Sun TV), Jothiswaran (Program Manager, Sun TV), K. Vijayakumar (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies), R. M. R. Ramesh (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

http://www.nithyananda.org/news/court-summons-sun-tv-dinakaran-and-tamil-murasu-ms-ranjitha-criminal-defamation-case

[14] The Crime Branch CID on Friday told the Madras high court that it would not file a separate first information report (FIR) on actress Ranjitha’s petition against the Sun TV network and that it would be clubbed with Nithya Atmaprabhananda’s complaint that related to the same matter.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-25/chennai/30200516_1_ranjitha-cb-cid-petition

மறுபடியும் நித்யானந்தா, லெனின், ரஞ்சிதா முதலியோர் பரஸ்பர புகார்!

ஜனவரி 3, 2011

மறுபடியும் நித்யானந்தா, லெனின், ரஞ்சிதா முதலியோர் பரஸ்பர புகார்!

லெனின்மீது புகார் (30-12-2010): செந்தமிழ் மாநாட்டில் லெனின் பெயர் அடிபட்டது. அவர் பெயரைக் குறிப்பிட்டதே கோபால் தான்! அதற்குப் பிறகு காணாமல் இருந்த லெனின் மறுபடியும் பழைய கதையை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளார். பதிலுக்கு நித்யானந்தா, ரஞ்சிதா, மா நித்ய சுப்ரியானந்தா முதலியோரும் புகார்களைக் கொடுத்துள்ளனர். இதெல்லாம் நித்யானந்தா, திருவண்ணமலைக்கு வந்தது, அப்பொழுது சில இயக்கங்கள் தர்ணா செய்தது, ஆஸ்ரமத்திற்குச் சென்று வழிப்படு செய்தது முதலியவற்றிலிருந்து தொடங்கியுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்கெனெவே தெரிந்ததுதான், இருப்பினும் சில முரண்பாடுகள் தெரிகின்றன.

நடிகை ஜூஹி சாவ்லா, மாளவிகா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசிர்வாதம் பெற்றனர் (01-01-2011):. இதற்கிடையில், சாமியார் நித்யானந்தா தனது 39வது பிறந்த நாளை பிடதி ஆஸ்ரமத்தில் கோலாகலமாக கொண்டாடினார். அப்போது நடிகைகள் ஜூஹி சாவ்லா, மாளவிகா உட்பட சிலர் நித்யானந்தாவை தனியாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்[1]. இவரது பிறந்த நாள் விழாவை “ஆனந்தோற்சவம் ” என்ற பெயரில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிகழ்ச்சியின் போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிடதியில் கூடுவதுண்டு. இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

நித்யானந்த-ரஞ்சிதா வீடியோவை நான் எடுக்கவில்லை லெனின் இப்பொழுது (ஜனவரி 2011) கூறுவது!: முன்பு லெனின் தான் கேமராவை மறைத்து வைத்து அத்தகைய வீடியோ காட்சியை படமெடுத்ததாக செய்திகள் வந்தன. ஆனால், இப்பொழுது, லெனின் அதனை மறுக்கிறார். “நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை நான் எடுக்கவே இல்லை. எனக்கு வந்ததை நான் வெளியிட்டேன், அவ்வளவுதான்”, என்று கூறியுள்ளார் இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன்[2]. அப்படியென்றால், யார் அந்த வீடியோவை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது.

கிருத்துவ மிஷனரி ஒன்று பின்னணியில் உள்ளது: ரஞ்சிதா, “நான் தொடர்ந்து லெனின் மற்றும் கிருத்துவ மிஷனைச் சேர்ந்த ஒரு நபர் இருவர்களாலும் மிரட்டப் பட்டேன், அச்சுறுத்தப் பட்டேன். நான் உயிருடன் வாழ விரும்புகிறேன். அதனால், அந்த பெயர்களைக் குறிப்பிடவில்லை. கருணாநிதி தனக்கு பாதுபாப்பு கொடுத்து காப்பாற்றுவேன் என்று உறுதியளித்தால் அந்த பெயர்களை வெளியிடுவேன்”, என்றும் சொன்னார்[3]. [“I was being blackmailed and threatened by the accused and also by another man who belongs to a Christian mission,” said the actress. “I want to live, so I shall not name them. If the CM of Tamil Nadu promises to protect me, I shall reveal the names.”]. நித்யானந்தா முன்னரே இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால், ஊடகங்கள் அதனை அப்பொழுது வெளியிடவில்லை. இப்பொழுது கூட, ஆங்கில இதழ்களில் சில வெளியிட்டுள்ளன.

மா நித்ய சுப்ரியானந்தா புகார் (30-12-2010): நித்யானந்தா மீது புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை, நித்யானந்தாவின் சிஷ்யை நித்ய சுப்ரியானந்தா போலீசில் கூறியுள்ளார். சாமியார் நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் இடையே தொடர்பிருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் வெளிப்படுத்தினார். அவர் மீது நித்ய சுப்ரியானந்தா, பிடதி போலீசில் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: “டிசம்பர் 30ம் தேதியன்று காலை 8 மணியளவில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில் அச்சுதானந்தா மற்றும் எனது சகோதரருடன் நடந்து சென்ற போது, அவ்வழியே காரில் இருவருடன் வந்த லெனின் கருப்பன், எனது ஜாதியைக் குறித்து தரக்குறைவாக பேசினார்[4]. தமிழகம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான், 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குரு பூர்ணிமா நடந்து சில நாட்கள் கழித்து, என்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயன்றார். என்னை நிர்வாணமாக மொபைல் போனில் படமெடுத்து மிரட்டினார். பின்னர், மறுநாள் மாலை லெனின் கருப்பன் அவரது மொபைல் போனில் இருந்த படத்தைக் காட்டி முந்தைய நாள் நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். மீறி இதை வெளிப்படுத்தினால், எனது தற்கொலைக்கு சாமியாரும், நானும் காரணம் என்று கடிதம் எழுதுவேன் என்று மிரட்டினார். இதனால் புகாரை முன்பே தாக்கல் செய்யவில்லை”, என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்[5].

போலீஸார் பாரபட்சமாக உள்ளனரா? புகாரை முதலில் வாங்க மறுத்ததாகவும், பின்னர் எஃப்.ஐ.ஆர். போடாமல், மனுமாதிரி ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்[6]. இதை விசாரித்த பிடதி போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், லெனின் கருப்பன் எங்கிருந்தார் என்பதை விசாரித்தனர். அன்றைய தினம் அவர் சென்னையில் இருந்தது தெரிந்தது. கடந்த ஏழு நாட்களாக அவர் பெங்களூரிலோ, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் அருகிலோ அவர் வந்து சென்றதற்கான அறிகுறி ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர். சுப்ரியானந்தா தாக்கல் செய்துள்ள புகாரை அறிந்த லெனின் கருப்பன், தன் மீது வீண் குற்றச்சாட்டை போலீசில் அளித்ததற்காக மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.

ரஞ்சிதாவின் புகார் (30-12-2010): நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது[7]. ரஞ்சிதா, நித்யானந்தாவின் முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், ஸ்ரீதர் ஆகியோர் மீது ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி புகார் அளித்தார்[8].

“வீடியோவில் இருப்பது நானல்ல, என்று ரஞ்சிதா கூறுகிறார் (30-12-2010): இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று (30-12-2010) ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும். நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன”, என்றார் ரஞ்சிதா[9].

திடீரென்று இப்பொழுது இந்த விஷயங்களை ஏன் வெளியிடவேண்டும்? புத்தாண்டு சமயத்தில், இவையெல்லாம் மக்களுக்கு வேண்டிய விஷயங்களா? குற்றஞ்செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், இதையே வைத்துக் கொண்டு வியயபாரம் செய்வது போல இருப்பது அசிங்கமாக உள்ளது. உதாரணத்திற்கு, நேற்று மாலை, “மாமா மாப்ளே” என்ற தொடரில் “குஜால்” சாமி என்றெல்லாம் கூறி இந்த நித்யானந்தாவை மையமாக வைத்துக் கொண்டு காட்டப்பட்டது அருவருப்பாக இருந்தது. அந்த வார்த்தையை வைத்துக் கொண்டு, எதோ மந்திரம் சொல்வது மாதிரியும் காட்டப்பட்டது. இதில் வேடிக்கையென்னவென்றால், அதே சன் டிவிதான் இந்த கண்ராவியையும் வெளியிட்டது. இதே போல மற்ற செக்ஸ் சாமியார்களைப் பற்றி, தொடர்களில் காட்டுவார்களா?


[4]Ma Nithya Supriyananda has filed a complaint of attempted rape, threat to life and verbal abuse of her community (scheduled caste) at Bidadi police station. http://www.hindustantimes.com/Two-devotees-of-Nityananda-file-complaints-against-former-aide/Article1-645605.aspx

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா!

மார்ச் 7, 2010

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கின்ற லெனின் குருப்!

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6812

காந்தப் படுக்கை மோசடியில் தர்மானந்தா: நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின், ஏற்கனவே, காந்தப் படுக்கை மோசடியில் சிக்கியவர். ஆத்தூரை சேர்ந்த லெனின், அழகாபுரத்தில் வசித்து வந்தார். இவர், காந்தப் படுக்கை விற்பனை செய்து வந்தார். ஒரு காந்தப்படுக்கை விலை 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதை நம்பி, காந்தப்படுக்கையை வாங்கிய ஏமாந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீசில் அடுக்கடுக்காக புகார் அளித்தனர்.

magnetic_floating_bed

magnetic_floating_bed

காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால்: காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதாவது செக்ஸ் அதிகமாக வரும் என்றார்களாம். நம்பிவிட்டனராம், 60 வருடங்களாக பெரியார் பால் குடித்து வந்த பகுத்தறிவுவாதிகள். அதாவது அவர்களது பிரச்சாரத்தை விட லெனின் பிரச்சாரம்தான் எடுபட்டது போலும்!

magnetic-bed-example

magnetic-bed-example

வேறு தொழில் செய்யாமல் இந்த தொழிலை ஆரம்பித்தார்: இப்பிரச்னை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லெனின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில காலம், வேறு தொழில் எதுவும் செய்யாமல் லெனின், வீட்டில் இருந்து வந்தார். நித்யானந்தாவின் புகழ் பரவிய நிலையில், அவரை சேலத்துக்கு அழைத்து வந்தார். ஆன்மிக வழியில் தன்னை தயார் படுத்தி கொண்ட லெனின், தன் பெயரை தர்மானந்தா என மாற்றி கொண்டு, நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தற்போது, “சிடி’ பிரச்னையில் சிக்கியுள்ளதால், நித்யானந்தா தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

magnetic-bed

magnetic-bed

இப்படங்கள் எல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளன. அதன் பயன்கள், விளைவுகள் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கொள்ளவேண்டாம்.

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா, ரஞ்சிதா சிடி, நடிகைகள் லிஸ்ட்!

மார்ச் 5, 2010

நித்யானந்தாவுடன் ரஞ்சிதா ஓட்டமா?

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28140

ரஞ்சிதா 1992ல் பாரதி ராஜா இயக்கிய நாடோடி தென்றல் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். விஜயகாந்துடன் பெரிய மருது, சத்யராஜுடன் அமைதிப்படை, அர்ஜுனுடன் கர்ணா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றும் ராகேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து திடீரென்று சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கணவருடன் சந்தோஷமாக குடும்பம் நடத்திய அவர் சமீபத்தில் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.

மணிரத்னம் இயக்கும் ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெற்கத்தி பொண்ணு டி.வி. தொடரிலும் நடித்தார்.

கணவருடன் மோதல் என்றும் பணக்கஷ்டத்தில் இருக்கிறார் என்றும் அதனால்தான் நடிக்க வந்துள்ளார் என்றும் அவரைப்பற்றி செய்திகள் வெளியாயின. இதற்கு பதில் அளித்து ரஞ்சிதா கூறும்போது, எனது கணவருடன் சண்டையும் இல்லை. எனக்கு பணக்கஷ்டமும் இல்லை. கணவர் சம்மதத்தோடுதான் நடிக்க வந்தேன். வில்லி வேடங்களில் கூட நடிக்கத்தயாராக இருக்கிறேன் என்றார்.

தியாகராய நகரில் உள்ள ஹபிபுல்லா சாலையில் ரஞ்சிதா வசித்து வந்தார். சில வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதன் மூலம் மாதம் ரூ. 30 ஆயிரம் வரை வாடகை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்தான் சுவாமி நித்தியானந்தாவுடன் ரஞ்சிதா உல்லாசமாக இருப்பது போன்று பரபரப்பான படங்கள் வெளிவந்துள்ளன.

வீடியோ படங்கள் பற்றி கருத்து கேட்க அவரை தொடர்பு கொண்டபோது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. வீடும் பூட்டி கிடக்கிறது. அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2ஆம் தேதி இச்செய்தி வெளியானதில் இருந்து நித்தியானந்தாவும் தலைமறைவாகிவிட்டார்.

நித்யானந்தரும் இப்போது தலைமறைவாகியுள்ள நிலையில் இருவரும் சேர்ந்து வெளிமாநிலத்துக்கு ஓடிப் போய்விட்டதாக பெங்களூரில் உள்ள ஆஸ்ரம ஊழியர் ஒருவரே கூறியுள்ளார். இந்த செக்ஸ் வீடியோக்கள் வெளியானபோது, நித்யானந்தர் தனது பெங்களூர் ஆசிரமத்தில்தான் இருந்தாராம். ஆனால் நிலைமை மோசமாவதை உணர்ந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம்.
அவரும் ரஞ்சிதாவும் பத்ரிநாத்தில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமாக வெளிநாடு பயணம் போகும்போது ரஞ்சிதாவையும் அழைத்துச் செல்வாராம் நித்யா. இப்போதும் அதே பாணியில் அழைத்துச் சென்றிருக்கலாம் என்கிறார்கள்.

நித்யானந்தா மீது பணமோசடி புகார்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28139

நித்யானந்தா ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்திருப்பதாக சேலம் காவல்துறை ஆணையரிடம் அசோகன் என்பவர் புகார் மனு கொடுத்துள்ளார்.

புகார் கொடுத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அசோகன்,

என்னுடைய ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலப்பிரச்சனை கோர்ட்டில் உள்ளது உள்ளது. அப்போது என்னிடம் நித்யானந்தா சாமியாரிடம் சென்றால் பிரச்சனை குறையும் என்று சிலர் சொன்னார்கள். பிரச்சனை குறையும் என்று நான் நித்யானந்தா ஆசிரமத்தை தொடர்பு கொண்டேன். எந்த பிரச்சனையானாலும் விண்ணத்தில் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள்.

பின்னர் சேலம் ஆசிரமத்தை தொடர்பு கொள்ளுமாறு எனக்கு முகவரியும், போன் நம்பரும் கொடுத்தார்கள். அங்கு நான் சென்றுபோது நித்யானந்தா சீடர்கள், சாமியார் உங்கள் பிரச்சனையை குறைக்க சிறப்பு பூஜை நடத்துவதாக கூறியிருக்கிறார். அதனால் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமா சாமியார் கையில் கொடுங்கள். உங்கள் பிரச்சனைகள் எல்லாம் குறைந்து வெற்றி கிடைக்கும் என்றனர்.

நானும் அதை நம்பி சாமியாரிடம் பணம் கொடுத்தேன். கேஸ் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என்று கேட்டேன். கேஸ் தோல்வி அடைந்தால் பணம் திரும்பி பெற்றுக்கொள்ளுங்கள் என்று சாமியாரின் சீடர்கள் சொன்னார்கள்.

இப்போது என்னுடைய கேஸ் கோர்ட்டில் தோற்றுவிட்டது. நான் சாமியாரை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன். அது முடியவில்லை. யாரும் சரியான பதில் சொல்ல மறுக்கிறார்கள் என்றார்.

நித்யானந்தாவிடமிருந்து என் மகனை மீட்டுத் தாருங்கள்: தமிழாசிரியர் கண்ணீர்

நித்யானந்தாவிடம் கல்வி கற்க சென்ற தனது மகன் திரும்பி வரவில்லை என்றும், மகனோடு தொடர்பு கொண்டு பேச முடியவில்லை என்றும் திருச்சி அருகே உள்ள நவலூர் புட்டப்பட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர் இடும்பன் கூறியுள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் நமது செய்தியாளரிடம் பேசிய இடும்பன், திருச்சில் இருந்து மணப்பாறை செல்லும் வழியில் இருக்கும் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். ஓய்வு பெற்ற தமிழாசிரியரான எனக்கு 4 பெண்கள், ஒரு மகன். எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதே ஊரைச் சேர்ந்த சித்த மருத்துவர் கோவிந்தராஜன் என்பவர் மூலம் நித்யானந்தா சாமியாரிடம் அறிமுகமானேன்.

சிகிச்சை பலன் அளித்தால், நானும் எனது குடும்பத்தார் அனைவரும், நித்யானந்தா முகாம்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். 10ஆம் வகுப்பில் 440 மார்க் எடுத்து, கேட்டரிங் முடித்து விடுமுறையில் இருந்த எனது மகன் சுரேந்தரை, பெங்களூரில் உள்ள நித்யானந்தா சாமியாருக்கு சொந்தமான லைப் ப்ரீவ் டெக்னாலஜி என்ற இலவச படிப்புக்கு அனுப்பினேன்.

பெங்களுரில் படிக்கும் பையனையும், சாமியாரையும் மாதம் ஒருமுறை நான் சந்தித்து வந்தேன். அப்போது நவலூர் புட்டப்பட்டு கிராமத்தில் ஆசிரமம் ஆரம்பிப்பித்தால், உங்களைப் போல் நிறைய பேர் பயன்பெறுவார்கள் என்று யோசனைகளை சாமியார் கூறினார்.

சாமியார் பேச்சைக் கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடத்தை ரூ.4 லட்சத்துக்கு எனது மருமகனிடம் இருந்து வாங்கினேன். இதற்கு சாமியாரின் பக்தர் அமெரிக்காவைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் பணம் கொடுத்தார். அந்த ஆசிரமத்துக்கு என்னை செயலாளராக நியமித்தார் நித்யானந்தா. நித்யானந்தா மீது நம்பிக்கை வைத்து எனது சொந்த பணத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து பாதி ஆசிரமம் கட்டி விட்டேன்.

ஆசிரமம் ஆரம்பித்த சிறிது நாட்களில், அப்பகுதியில் முகாம்கள் அமைக்க பணம் வசூல் செய்யுமாறும், ஆசிரமத்தில் செயலாளராக உள்ளவர்கள் கண்டிப்பாக பணம் வசூலீக்க வேண்டும் என்றும் சாமியார் கட்டளையிட்டார். மேலும் தன்னை சந்திக்க பக்தர்கள் விருப்பப்பட்டால், அவர்களிடமும் பணம் வசூலிக்க சொன்னார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28127

அப்போதுதான் எனக்கு இவர்கள் ஆசிரமம் நடத்தவில்லை. பிசினஸ் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரிந்தது. இந்த விஷயத்தை என் மகனிடம் சொல்ல முயற்ச்சித்தேன். அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை.

திருச்சியில் கடந்த 2009ஆம் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி சாமியார் முகாமிட்டு, ஆசிரமம் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தினார் சாமியார். அந்த கூட்டத்தில், பணம் வசூல் செய்யுமாறு நன்கொடை ரசீது கொடுத்தார். நான் அதை வாங்க மறுத்தேன். அப்போது அத்தனை பேரின் மத்தியில் என்னை வெளியே போ என்று சாமியார் கத்தினார்.

கூட்டத்தை விட்டு வெளியே வந்த நான் எனது மகன் சுரேந்தரை தொடர்பு கொண்டேன். ஆனால் பேச முடியவில்லை. தொடர்ந்து போன் செய்த பின் ஒருநாள் சுரேந்தர் பேசினான். அப்போது சாமியாருடைய நோக்கம் பணம் சம்பாதிப்பதுதான். நீ அங்கே இருக்காதே, வந்துவிடு என்று சொன்னேன்.

ஆனால் சுரேந்தர், நான் சாமியாரிடம்தான் இருப்பேன் என்றும், என்னை பார்க்க வராதீர்கள் என்றான். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நான் பெங்களூருக்கு நேரில் சென்று எனது மகனை பார்க்க முயற்சித்தேன். ஆனால் அங்கிருப்பவர்கள் சுரேந்தரை பார்க்க அனுமதிக்கவில்லை என்றார்.

தற்போது சுரேந்தர் தன்னுடைய பெயரை மாற்றி, நித்ய பிரபானந்தா என்று வைத்துக்கொண்டதாகவும், நித்யானந்தா போல நீண்ட முடிகளை வளர்த்துக்கொண்டதாகவும் கூறுகிறார் இடும்பன். எப்படியாவது எனது மகனை சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மீட்டுத் தாருங்கள் என்று கண்ணீர் விடுகிறார் இடும்பன்.


நித்தியானந்தாவுடன் தொடர்பு வைத்துள்ள நடிகைகள் பட்டியல்

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28096

நித்தியானந்தாவுடன் ரஞ்சிதாவை தவிர மேலும் பல பிரபல நடிகைகள் தொடர்பு வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வருகின்றன.  டிவி நடிகைகள் பலரும் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.

நித்தியானந்தாவிற்கு நடிகைகளை அறிமுகப்படுத்தி வைத்தவரும் ஒரு நடிகைதான் என்கிறார்கள்.

ராமராஜனுடன் தங்கத்தின் தங்கம் படத்தில் நடித்த ராகசுதா, தொடர்ந்து தமிழச்சி, தம்பி,அம்முவாகிய நான் படங்களில் நடித்துள்ளார்.  இவர் நடிகை கே.ஆர்.விஜயாவின் தங்கை மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் சென்னையில் நித்தியானந்தா நடத்திய யோகா வகுப்புக்கு சென்று வந்தார்.  நித்தியானந்தாவை பார்த்ததுமே அவர் காலில் விழுந்து வணங்கினார்.  அவருடைய மைசூர் ஆசிரமத்தில் சேர்ந்து சன்னியாசியாகவும் ஆனார்.

ரஞ்சிதா நடித்து தயாரித்த யோகா சிடி
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28100

நித்யானந்தா சாமியாருடன் நடிகை ரஞ்சிதா உல்லாசமாக இருக்கும் வீடியோ வெளிவந்துள்ளது.  ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாகவே நித்யானந்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிகிறது.

ரஞ்சிதா யோகா சிடி ஒன்றை தயாரித்து வந்துள்ளார்.  பல நிலைகளில் யோகா செய்து காட்டி அதற்கு விளக்கம் அளித்து அந்த சிடியை தயாரித்துள்ளார்.

அந்த சிடிக்கான எடிட்டிங் பணிக்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோவுக்கு சென்று வந்துள்ளார்.  அதற்குள் அவர் நித்யானந்தாவுடன் இருக்கும் வீடியோ வெளியாகிவிட்டது.

சில காலமாகவே எல்லோரிடமும்,  உடம்பை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.   ஆன்மீகத்தில் கவனம் செலுத்துங்கள் என்று சொல்லிவந்துள்ளார்.

இதனால் ரஞ்சிதாவிற்கு நீண்ட காலமாக நித்யானந்தாவுடன் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது.

ரஞ்சிதா சிடி கொடு:நச்சரிப்பும், எச்சரிக்கையும்
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28099

சாமியார் நித்தியானந்தாவும் நடிகை ரஞ்சிதாவும் உல்லாச லீலைகளில் ஈடுபட்டிருக்கும் வீடியோ உலகெங்கும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது.

இந்த லீலை சிடி வடிவில் சென்னை பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும் கிடைப்பதாக நேற்று தகவல் வந்தது.  இதையடுத்து இந்த இடங்களில் மக்கள் குவிந்தனர்.

ரஞ்சிதா சிடி கொடுங்க என்று கடைக்காரர்களை நச்சரித்தார்கள்.   கொடுக்க முடியுமா முடியாதா என்று சிலர் எச்சரித்தார்கள்.  அப்படி சிடி எதுவும் இல்லை என்று சமாளித்தார்கள்.

இந்த நிலை இன்றும் தொடர்கின்றது.  சிடி வேண்டும் என்று கேட்டு மொய்க்கிறார்கள் பர்மா பஜாரிலும், ரிச்சி தெருவிலும்

Dinakaran-photo

Dinakaran-photo

விமர்சனம்:

  • முன்பு, வீரப்பன் விஷயத்தில் எப்படி, அவன் இருக்கும் இடம் கோபாலனுக்கு மட்டும் தெரியுமோ, அது போல, இப்பொழுதும், இவ்விவகாரங்கள் எல்லாம், நக்கீரனுக்கு மட்டுமே தெரிந்துள்ளது.
  • அடுத்தது, தினகரனுக்கு எல்லா சிடிகளும், படங்களும் கிடைக்கின்றன.
  • ஒருவேளை இப்பத்திரிக்கைகளின் வியாபாரத்தைப் பெருக்கவும், அத்தகைய சிடிக்களின் வியபாரத்தை பெருக்கவும், அவர்கள் இம்மாதிரியான யுக்தியைக் கையாளுகின்றனரா?
  • இதெல்லாம் ஒன்றும் மக்களுக்குத் தேவையான / அத்தியாவசியமான பொருட்கள் இல்லை. ஆகவே, சூடாக இருக்கும்போது, நல்ல வியாபாரம் நடக்கும், பிறகு, மக்கள் மறந்து விடுவர்.
  • சொல்லி வைத்தால்போல், மேலே-மேலே செய்திகளை அடுக்குகிறார்கள். இதே மற்ற விஷயங்களில் இத்தகைய விழிப்புணர்வு, வேகம், துப்பறியும் திறமை இதெல்லாம் வருவதில்லை

நித்யானந்தாவிடம் இருந்து மகனை மீட்டு தாருங்கள்: பெற்றோர் கண்ணீர் புகார்!

மார்ச் 5, 2010
நித்யானந்தாவிடம் இருந்து மகனை மீட்டு தாருங்கள்: புறநகர் கமிஷனரிடம் பெற்றோர் கண்ணீர் புகார்
மார்ச் 05,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16732

மகனை மீட்டுத் தாருங்கள் தந்தை புகார்: செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தாவிடமிருந்து தங்களது மகனை மீட்டுத் தரும்படி புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பெற்றோர் கண்ணீர் புகார் அளித்துள்ளனர். சென்னை மணலி நியூடவுனை சேர்ந்த வாசன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: “எனது மகன் மெய்யிறை (24), டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். யோகா பயிற்சியில் ஈர்க்கப்பட்டதால், நித்யானந்தாவிடம் எனது மகனுக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தா வசியம் செய்ததால் கடந்த 2007ம் ஆண்டு பெங்களூரு ஆசிரமத்தில் எனது மகன் சேர்ந்துவிட்டான். பல முறை பெங்களூருக்கு சென்று, மகனை வரும்படி அழைத்தேன். “தன்னை அடிக்கடி வந்து தொல்லை செய்ய வேண்டாம்’ என அவன் கூறிவிட்டான். தாய் அழைத்தால் வருவான் என்பதற்காக எனது மனைவியையும் பெங்களூரு ஆசிரமத்திற்கு அழைத்து சென்றேன். அப்போது, “என்னை தேடி இங்கு வர வேண்டாம்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டான்.

“நித்யானந்தாவிடம் என்னை அர்ப்பணித்துவிட்டேன்”: இரண்டு மாதங்களுக்கு முன், அவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது வாழ்க்கை கல்வி கற்பதாகக் கூறினான். பின், நித்யானந்தாவிடம் தன்னை அர்ப்பணித்துவிட்டதாகத் தெரிவித்தான். கடந்த சில நாட்களாக நித்யானந்தா பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன. இதனால், எனது மகனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

“அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்”: “நித்யானந்தாவின் அந்தரங்கம் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆசிரமத்தை விட்டு வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என்று மெய்யிறை தொலைபேசியில் கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மகனை மீட்பதற்காக பெங்களூரு சென்றோம். ஆனால், எங்களை ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை. காவலாளிகள் எங்களை அடிக்காத குறையாக விரட்டி, வெளியேற்றினர். நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டுள்ள எனது மகன் மெய்யிறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் இருந்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மெய்யிறையின் பெற்றோர் புகாரில் கூறியுள்ளனர். புகாரை பெற்ற புறநகர் கமிஷனர் ஜாங்கிட், எண்ணூர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு: சாமியார் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சிலர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.இப்புகாரின் பேரில் சாமியார் நித்யானந்தா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். வக்கீல்கள் புகாரில், “சாமியார் பொதுமக்களை ஏமாற்றி நன்கொடையாக பணம் வசூலித்து, கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளார். அச்சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். அதன்பேரில், சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, சாமியார் நித்யானந்தா மீது கிரிமினல் சட்டப் பிரிவு 420ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

விமர்சனம் [இப்பொழுதுள்ள நாத்திக அரசு – அதாவது இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசிவரும் கருணாநிதி தலைமையில் இருக்கும் – பாரபட்சமாக செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டதான் இவ்வினாக்கள் எழுப்பப் படுகின்றன]:

  1. “………………வாழ்க்கை கல்வி கற்பதாகக் கூறினான். பின், நித்யானந்தாவிடம் தன்னை அர்ப்பணித்துவிட்டதாகத் தெரிவித்தான்‘, என்று சொல்லிவிட்டு, “நித்யானந்தாவின் அந்தரங்கம் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆசிரமத்தை விட்டு வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்‘ என்று மெய்யிறை தொலைபேசியில் கூறினான், என்பதால், இவ்விஷயத்தை ஆராய வேண்டியுள்ளது.
  2. கல்கி விஷயத்திலும், ஆரம்ப காலங்களில் இத்தகைய புகார்கள் வந்தன. ஆனால், அந்த மகன்கள், மகள்கள் தாம்தான் தன்னிச்சையாக சேர்ந்தோம், யாரும் எங்களை வற்புறுத்தவில்லை என்றதும் வழக்கு நொடித்துவிட்டது.
  3. இத்தகைய புகார்களை பொறுப்புள்ள பெற்றோர்கள் யார் மீது வேண்டுமானலும் கொடுக்கலாம்.
  4. எந்த சாமியார், நண்பன், ஆசிரியர், அரசியல்வாதி அல்லது மகனை-மகளை கெட்டபாதையில் ஒருவன் / ஒருவர் இட்டுச்செல்கிறார், என்று பெற்றோர்கள் நினைத்தால் புகார் கொடுக்கலாம். [டுயூஸன் வாத்தியார் ஒழுங்காகச் சொல்லித்தரவில்லையென்றல் அவரை மாற்றுவதில்லையா?] ஆனால், அப்பொழுது செய்யாமல் ஏன் இருக்கிறர்கள்?
  5. ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.
  6. கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
  7. ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
  8. கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
  9. “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
  10. சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?