Archive for the ‘சமூக உணர்வு’ Category

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

ஜூன் 9, 2012

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக கொண்டாடப்படும் விழாக்கள், ஊடக தரிசனங்கள், தெரு உலாக்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், முதலமைச்சர் பதவியில் இல்லையென்றால் யாரும் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். சுவரொட்டிகளுக்குக் கூட கணக்குப் பார்த்துதான் செலவழிப்பார்கள். ஆனால், திமுகவிற்கு எங்கிருந்துதான் பணம் வந்துள்ளது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கில் செலவழித்துள்ளார்கள். பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக விழாக்களை கொண்டாடியுள்ளர்கள். ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதனால் தரிசனங்கள் அதிகமாகவே இருந்துள்ளன[1]. பிறகு, தெரு உலாக்கள் தாம்! அக்கால மன்னர்கள் மாதிரி பவனி; பிறகு நாட்டிய மகளிர் வந்து ஆடவேண்டாமோ? ஜகத் ரெட்சகன்[2] மறந்து விட்டாரோ அல்லது ஒதுக்கப்பட்டாரோ?

குஷ்புவின் ஏக்கமும், நெருக்கமும், தரிசனத்திற்காக ஓடிய ஓட்டமும்: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3]. முன்னர் சினேகாவின் இடுப்பை கிள்ளுகிறார்கள் என்று ஒரே பரபரப்பான செய்திகள்[4]. இப்பொழுது, பகுத்தறிவாளிகள் பாசறையில், பக்குவமாக, பக்கத்தில் வந்து, குஷ்புவின் இடுப்பை கிள்ளுகிறார்களாம். திமுகவில் இணைந்ததிலிருந்து, இவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்[5]. எனவே, திட்டமிட்டே அந்த மர்ம நபரும் இதை செய்துள்ளாறர் போலும்! வயதான கூட்டத்தில் இப்படி, ஒரு அம்மாவைப் பிடித்து விட்டார்கள் போலும்!

கருணாநிதி கண்டித்தாலும், கமல் ஹஸன் குஷ்பு தமிழைக் கேட்டு வியக்கிறாராம்: ஒரு கூட்டத்தில் குஷ்பு, முந்தி கொண்டு ஏதோ தமிழில் பேசியதைக் கேட்டு, கருணாநிதி நன்றாகவே விமர்சனம் செய்து விட்டார்[6]. ‘தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்” என்றார்[7]. ஆனால் கமல் ஹஸனுக்கு குஷ்புவின் தமிழைக் கேட்டு புல்லரிக்கிறாராம்.

Adding, he said “I never envied Rajini’s growth or any one’s growth in the industry, but today I envy the Tamil spoken by Kushboo in this function.  Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language[8].  It seems she will be awarded for speaking a wonderful Tamil” ரஜினியின் உயர்வைக் கண்டு கூட நான் அதிசயிக்கவில்லை. ஆனால், நான் குஷ்பு தமிழ் பேசுவதைக் கண்டு பொறாமைப் படுகிறேன், என்றாராம். கருணாநிதி, ரஜினிகாந்த் முதலியோரும் குஷ்புவின் செந்தமிழைக் கேட்டு வியந்து விட்டனராம். அதற்காக அவர் பரிசளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அதெப்படி கருணாநிதி அதற்குள் மாறிவிட்டார் என்று தெரியவில்லை. “Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language”, என்றால் என்ன கதைவிடுகார்களா என்று தெரியவில்லை. இல்லை மயக்கத்தில் இருந்தனரா? கதாநாயகிகளை தூக்கி புகழ்பெற்ற இவருக்கு, அதிகமான அனுபவம் இருக்கிறது. இன்றும் தூக்குகிறாரா என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்த குஷ்பு: ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றெல்லாம் குஷ்பு பேசியதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், கருணாநிதி / திமுக தோற்க்கத்தான் நேர்ந்தது. அப்பொழுதும், நக்கலாக, அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் துன்பப்படப்போகிறார்கள் என்றெல்லாம் பேசியதும் ஞாபகத்தில் இருக்கலாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதியை தொடர்ந்து சென்ற குஷ்பு: இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார். தலைவரை பிடிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி, குஷ்புவின் இடையைக் கிள்ள வேண்டும் என்றால், அந்த ஆசாமியும் அதே மாதிரி பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்!

குஷ்புவின் இடுப்பைக் கிள்ளிய மர்ம ஆசாமி: கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்[9]. பிறகு யாருக்கு இத்தகைய ரோமாஞ்சக செய்தியோ அல்லது தகவலோ தேவைப் படுகிறது? தனியாகவே போய் பார்த்திருக்கலாமே? எல்லோருக்கும் தெரியும் படி, துரத்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாமே?


[1] கலாநிதி மாறன் ஓரமாக நின்று கொண்டு முறைக்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

[2] ஜெகத் ரெட்சகன் அரசவை மாதிரியே செட்டிங் அமைத்து, காவலாட்கள், பெண்கள் வைத்து, நாட்டிய மகளிரை வைத்து ஆடவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். இப்பொழுது மறந்து விட்டார்களோ, மறைத்து விட்டார்களோ, தனியாக வைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

மார்ச் 6, 2010

நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

நித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன?

ஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு  மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.

ஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

நல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.

பின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.

பின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:

* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்

* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்

* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும்? அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்!

* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்

* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.

* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக!

* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.

* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்

* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.

* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்.

* மறுபடியும் சுதந்திரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்.

* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்!

* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ரஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா?

* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.

* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்?

* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்?

* பார்த்தவர்கள் எல்லோரும் யார்?

* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்?

எனவே அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.

ஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.

தேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” வித்துவான்கள் – மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

இதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.

பாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது? இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….

ஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்றுவதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை!

வேடிக்கைதான்!

ஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்?