Archive for the ‘திருக்குறள் எதிரி’ Category

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

செப்ரெம்பர் 11, 2010

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[1]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களும், வியாபாரமும்: விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுள் என்றால், அல்லா, முஹமது, ஜேஹோவா, மேரி, ஏசு, ………………..முதலியவை என்ன ரகத்தில் வரும்? இவையெல்லாம் என்ன இந்தியாவில் இருந்தனவா? நாத்திகம் என்றால் அறிவு தேவையில்லையா? பகுத்தறிவு என்றால் புத்தி வேண்டாமா?

மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகமா, மக்களை ஏமாற்றும் வேலையா? மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகத்தை மெய்ப்பிக்க ரம்ஜானுக்கு, பக்ரீதுக்கு, கிருஸ்துமஸுக்கு………………………இத்தகைய துண்டு அறிக்கைகள் வளியிடுவார்களா? அதிலுள்ளவற்றை எடுத்துக் காட்டி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவார்களா?

கோவையில் விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ்[1] : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர் மீது கோவை போலீசில், இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பொதுமக்களும் பக்தியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்து அமைப்புகள் போலீஸாரிடம் புகார்: இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்,” முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு[2]:திண்டுக்கல்: கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய வாசகம்,போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகித்த தி.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் முன்பு நேற்று முன்தினம் சிலர் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்தனர். இதில் பார்வதியின் அழுக்கு உருண்டையில் பிள்ளையார் பிறந்ததுள்ளார்.பகவான் பிறப்பு இவ்வளவு அசிங்கமா சிந்திப்பீர். யானை தலையை மனிதருக்கு வைத்தால் பொருந்துமா என்று விநாயகர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.விநாயகர் பிறப்பை கேவலப்படுத்தியது, போட்டோக்கள் வெளியிட்டது, கெட்ட வார்த்தையால் திட்டியது, விநாயகர் சதுர்த்தியில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது ஆகிய குற்றத்திற்காக தி.க., மாவட்ட தலைவர் வீரபாண்டி உட்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்துள்ளார்.


[1] தினமலர், விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ் : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83176

[2] தினமலர், கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81504


[1] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

ஜூலை 18, 2010

ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும் – II

சென்னையில் நடந்த போர்வாளும் பூவிதழும்என்ற நாட்டிய நாடக விழா: 11-07-2010 அன்று மியூக் அகடமி அரங்கத்தில் ஆழ்வார்கள் ஆய்வு மையம்[1] சார்பில் நடந்த நாடக விழாவில் நாத்திகர் முதல்வர் கருணாநிதி முதல் ஆத்திகர்கள் வரை பலர் கலந்து கொண்டது தமிழகத்தில் ஒரு விசித்திரமான நிகழ்ச்சிதான். அதைவிட விசித்திரமானது, ஓரளவிற்கு பிராமணர்களும், அதாவது திராவிடக் காழ்ப்புடன் சொல்வதானால், “பார்ப்பனர்”களும்[2] வந்திருந்தது அதைவிட அதிசயம். அதைவிட அதிசயமாக மேடையில், இந்த நாத்திக கருணாநிதி இரண்டு பார்ப்பனர்களுடன் உட்கார்ந்திருந்த காட்சி. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவர்கள் கூட, நாம் தவறவிட்டுவிட்டோமே என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ள விழாவாக இருந்தது.

“ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”: பொதுவாக, நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, குறிப்புகள் எடுத்துக் கொண்டு கட்டுரைகள் எழுவது வழக்கம். ஆனால், சில காரணங்களுக்காக, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியவில்லை. ஆகவே, தினமலரில் வந்த செய்தியை[3] அப்படியே போட்டுவிட்டு, அடைப்புக்குறிகளில் மட்டும் என்னுடைய விமர்சனத்தைச் சிறியதாகக் கொடுத்து “ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும்”, என்ற தலைப்பில் ஒரு பதிவு செய்திருந்தேன்[4]. ஆனால், அதற்கு பலவிதமாக பதில்கள் வர ஆரம்பித்தன. ஒரு நிலையில் சில நண்பர்களிடம் அவர்களுடைய கருத்தைக் கேட்டேன். பிறகு, அந்நிகழ்ச்சியின் பின்னணியில் பலவித விஷயங்கள் இருந்ததை அறிந்தேன். முக்கியமாக, அரசியலாக்க நினைக்கும் போக்கு தேவையில்லாத ஒன்று என்பதனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

கருணாநிதி, தமிழ்-பாண்டித்யம், தமிழகம்: விருப்பு-வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியின் எழுத்துகளைப் படித்து பார்க்கும்போது, அவரது தமிழ்பிரயோகம், நடை, சொல்லாக்கம், தமிழிலுள்ள பாண்டித்யம் முதலியவற்றை மறுக்கமுடியாது. ஆனால், நிச்சயமாக உண்மையான தமிழுணர்வு உள்ளவர்களுக்கு, அவர் பல நேரங்களில் தமிழை பாதுகாக்கத் தவறவிட்டார் அல்லது தமிழ் மொழியை இழிவு படுத்துபவர்களுடன் சேர்ந்து செயல்பட்டார் என்ற வருத்தங்கள் எல்லாம் அதிகமாகவே உள்ளது[5]. செம்மொழி மாநாட்டில் கூட, காலரீதியில் பாகுபாடு செய்து சைவ-வைணவ குறிப்பாக இந்துமதத்திற்கு இடங்கொடுக்காமல் செய்துவிட்டார் என்ற குறையுள்ளது[6].

இந்திய மாநில முதல்வர் என்றால் எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் முதல்வர் என்ற ரிதியில் செயல்படுவதில் தவறிவிட்டார்: கருணாநிதி தமிழ்நாட்டிற்கு, இந்தியாவின் ஒரு மாநிலத்திற்கு முதல்வர் என்பதை அவர் பலமுறை மறந்து விடுகிறாரா அல்லது தெரிந்தும் தெரியாத மாதிரி நடித்து வந்துள்ளரா என்பதனை அவரே சொல்லவேண்டிய நிலை வந்துள்ளது. இவர் நாத்திகராக, ஏன் இந்து-விரோதி என்று மற்றவர்களால் குற்றஞ்சாட்டப் படக்குடிய நிலையில் இருந்தாலும், தமிழ்நாட்டிலுள்ள 80% மேலாக உள்ள இந்துக்களுக்கும் முதல்வராவார். ஆனால், இந்துக்களின் மனங்களைப் புண்படுத்தும் வகையில் பேசுதல், கோவில் விவகாரங்களில் தலையிட்டு பிராமண-பிராமண துவேஷம், சமஸ்கிருதம்-தமிழ் என்ற விரோதம்[7], கோவில் நிலத்தை இந்துஅறநிலையத்துறை வழியாகவே விற்றது முதலிய பல காரிங்கள், இவரின்மீது வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது உண்மை. அவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது[8] அந்த உண்மையை, மக்களின் உணர்வை எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கையுள்ள திக-திமுக-இந்துக்கள்கூட, “என்ன இவ்வளவு வயசாகியும், நம்ம தலைவர், இப்படி பேசராரே, நடந்து கொள்கிறரே”, என்று விசனித்துள்ளனர், வருந்தியுள்ளனர்[9].

கருணாநிதியின் பேச்சுகளும், அரசியலும், செக்யூலரிஸமும்: 40 வருடங்களாக இவர் பேசுவதைக் கேட்டிருப்பவர்கள், இவரது பேச்சின் தொணி, தோரணை, உருவகம், உயர்வு புகழ்ச்சி, சிலேடை, நையாண்டி………முதலியவற்றை தாராளமாகவே அறிந்திருப்பர், புரிந்து கொண்டிருப்பர். ஆக, தமிழ் கலாச்சாரம், தமிழ் நாகரிகம், தமிழ் பாரம்பரியம், தமிழ் பண்பாடு, தமிழ் விழாக்கள், தமிழ் சடங்குகள், தமிழ் காரியங்கள் / கிரியைகள், தமிழ் நம்பிக்கைகள் என்றெல்லாம் பார்த்தால் இந்திய-இந்து தாக்கத்தை மறைக்கவோ, மறுக்கவோ, மறக்கவோ முடியாது. முதலில் சங்க இலக்கியத்தை படித்தவர்கள் அவ்வாறு சொல்லமாட்டார்கள்[10]. இருப்பினும், பொய் என்றும், மாயையென்றும், கட்டுக்கதையென்றும் சரித்திர ஆசிரியர்களால், உலகம் முழுவதும் குப்பைத் தொட்டியில் போர்ட்டுவிட்ட ஆரிய-திராவிட இனவாத கோட்பாட்டுகளை வைத்துக்  இந்து காரணிகளை வெறுப்பவர்கள், எதிர்ப்பவர்கள், வேறோடழிக்கத் துடிப்பவர்கள் ஏன் அதே காரணிகளை வைத்துக் கொண்டு, உபயோகப்படுத்திக் கொண்டு, சூடிக்கொண்டு உலாவரவேண்டும்?

வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள்: இனி தினமலரில் இன்று வெளிவந்துள்ள செய்தியின்படி என்ன என்று பார்ப்போம்: “முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன்”, என்ற செய்தியின்கீழுள்ளது[11]: “சமீபகாலமாக முதல்வர் பங்கேற்கும் விழாக்களில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி, தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், கவிஞர்களும் முதல்வரை வானளாவப் புகழ்கின்றனர். புகழ்ச்சியை முதல்வர் விரும்புகிறாரா, இல்லையா என்பது வேறு விஷயம். சமீபத்தில் நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டில், “என்னை புகழ்வதை விட்டுவிட்டு, தலைப்பை ஒட்டி பேசுங்கள்’ என முதல்வரே கடிந்து கொள்ளுமளவிற்கு, “புகழ் பா’ பாடுவதில் போட்டா, போட்டி நிலவியது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதியின், “போர்வாளும், பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி சென்னையில் கடந்த வாரம் நடந்தது. முதல்வர் பங்கேற்ற இந்த விழா மேடையில், இதுவரை இல்லாத புதுமையாக, அரசியல் கலப்பில்லாத ஆன்மிகவாதிகளான வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் பங்கேற்றனர். வழக்கமான புகழ்ச்சியுரை இன்றி, இயல்பான நோக்கில் விழா இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. முதல்வருக்கு ஏற்றவாறு ஆன்மிக சொற்பொழிவாளர்கள் தங்களது பேச்சை மாற்றியமைத்துக் கொள்வார்களா? ஆன்மிகவாதிகளின் பேச்சை முதல்வர் எப்படி எதிர்கொள்வார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்தது”.

திருச்சி கல்யாணராமன் பேசியது: குழப்புவது தினமலரா, நிருபரா? தினமரில் தொடர்கிறது, “இந்த எதிர்பார்ப்பை பொய்ப்பிக்கும் வகையில், திருச்சி கல்யாணராமனின் பேச்சு அமைந்தது”, என்று தினமலர் சொல்லிவிட்டு, “துவங்கியதில் இருந்து, இறுதி வரை முதல்வரை புகழ்வதிலேயே குறியாக இருந்தார் அவர். முதல்வரை மகிழ்விக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தனக்கு சம்பந்தமில்லாத அரசியலையும் தொட்டார். கல்யாணராமன் பேசும்போது, “கம்ப ராமாயணத்தின், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்’ என்ற பாடலைச் சொல்லி, அந்த பாட்டின் இறுதியில் வரும், “அன்னவருக்கே சரண் நாங்களே‘ என்று இறைவனுக்கு சொல்லப்பட்ட வார்த்தையை முதல்வரைக் காட்டி சொல்லி முடித்தார். இறைவனை விட மிக உயர்ந்தவர் எனும் பொருள்படும்படியாக, இறைவனின்இரு அவதாரங்களின் ஓர் உருவமாக திகழ்கிறார் என்றெல் லாம் கல்யாணராமன் முதல்வரை புகழ்ந்துரைத்தார். அதோடு, ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்தால்தான், முதல்வர் மகிழ்ச்சியடைவார் (!) என்ற எண்ணத்தில், “பிள்ளை இல்லாதவர்களை, எல்லாம் அம்மா என்று சொல்கின்றனர்‘ என்றது எல்லை தாண்டிய உச்சம்”, என்று முடித்திருப்பது நிருபரின் குழப்பம் என்றே தெரிகிறது.

வேளுக்குடி கிருஷ்ணன் பேசியது: தினமலர் தொடர்கிறது, “இதனால், அவருக்கு பின் பேச வந்த வேளுக்குடி கிருஷ்ணனுக்கு, தேவையற்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அதற்கு ஆட்படாதவராக வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது. இதை முதல்வர் கருணாநிதி பேச்சிலும் காண முடிந்தது.”

“அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ என்ற கருணாநிதி: தினமலர் தொடர்கிறது, “அவர் பேசும் போது, “வேளுக்குடி கிருஷ்ணனையும், திருச்சி கல்யாணராமனையும் முதன் முதலாக இந்த மேடையில் தான் பார்க்கிறேன். தேனினும் இனிய தமிழால் இங்கே அவர்கள் பேசியிருக்கின்றனர். அவர்களின் பேச்சை இத்தனை நாள் கேட்காமல் இருந்து விட்டோமோ என தோன்றுகிறது. அவர்கள் பேசிய பிறகு நான் அதிகம் பேசக் கூடாது’ எனப் புகழாரம் சூட்டினார். “”பல்வேறு தரப்பினரின் விழாக்களில் பங்கேற்பதன் மூலம், பல கருத்துக்களைத் தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்துத்தான் முதல்வர் ஒப்புக்கொள்கிறார். ஆனால், விழா நடத்துபவர்களோ, முதல்வரைப் புகழ்வதில் குறியாய் இருந்து அவருக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

தினமலரின் முந்தைய செய்தி[12] (ஜூலை, 12, 2010,): முன்பு கருணாநிதி பேசியதாக வெளியிட்டுள்லதில், சில வரிகளுக்கு உள்-அர்த்தம் தெரியாமல் இருந்தது. ஏனெனில், வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பேசியதை அப்பொழுது வெளியாகவில்லை.

சென்னை, ஜூலை, 11, 2010,: “எங்கெங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை, தமிழ் எனக்கு கற்றுக் கொடுத்துள்ளது, அதனால், வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் பங்கேற்கும் விழாவில், எதையாவது எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள்,” என, ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் நடந்த நாடக விழாவில், முதல்வர் கருணாநிதி பேசினார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில், முதல்வர் கருணாநிதி கதை, வசனம், பாடல்கள் எழுதிய, “போர்வாளும் பூவிதழும்’ என்ற நாட்டிய நாடக விழா, சென்னையில் நேற்று நடந்தது.

“எனக்கு வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் புதியவர்கள். இந்த மேடையில் தான் அவர்களை நேரில் பார்க்கிறேன். ஜெகத்ரட்சகன் மூலம், அவர்களுடைய தமிழை நாம் எல்லாரும் பருகும் வாய்ப்பை பெற்றோம். இத்தனை நாட்கள் இதைக் கேட்காமல் விட்டோமே என்ற எண்ணத்தை அவர்களின் பேச்சு ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் பேச்சில் ஓரிரு வார்த்தைகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர்களின் தமிழ்ப் பற்று, எதை பற்றி சொன்னாலும், இறுதியில் முன் இருப்பது தமிழ்தான், தமிழர்தான் என்ற உணர்வு. அந்த உணர்வுதான் நம்மை இங்கே இணைத்துள்ளது”.

“அதற்காகத்தான் செம்மொழி மாநாடு நடத்தி முடித்துள்ளோம். எவ்வித பாகுபாடும் இன்றி, செம்மொழி மாநாட்டிற்கு அனைத்து சமயத்தவர்களையும், அனைத்து மதத்தவர்களயும், மாற்று கருத்து உடையவர்களையும், மற்ற கட்சியினரையும் அழைத்து விழா எடுத்துள்ளோம் கட்சி அடையாளம் இன்றி நடந்த அந்த விழாவில், நாம் தமிழர்கள் என்ற உணர்வுடையவர்கள் பங்கேற்றனர். அந்த உணர்வு இல்லாதவர்கள் மாநாட்டை புறக்கணித்தனர் வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் பங்கேற்றுள்ள இந்த விழாவில், கருணாநிதி என்ன பேசுவார் என்ற எண்ணத்துடன் வெளியில் காத்திருப்பவர்கள் ஏமாந்து போவார்கள். எங்கு எதை பேச வேண்டும் என்ற பண்பாட்டை நமக்கு தமிழ் கற்றுக் கொடுத்துள்ளது. இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவிற்கு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். அமைச்சர் துரைமுருகன் வரவேற்றார். ஆன்மிக பிரசாரகர்கள் வேளுக்குடி கிருஷ்ணன், திருச்சி கல்யாணராமன் ஆகியோர் வைணவத் தமிழ் கருத்துக்களை எடுத்துரைத்தனர். அதை, முதல்வர் கருணாநிதி உட்பட அனைவரும் ரசித்து கேட்டனர். நாட்டிய கலைஞர் டாக்டர் பத்மா சுப்ரமணியம் குழுவினர், இந்நாடகத்தை தொகுத்து, இசையமைத்து, நாட்டியம் ஆடினர். விழாவில், ஆழ்வார்கள் ஆய்வு மையத் தலைவர் ஆர்.எம். வீரப்பன், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்தனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்க காலத்தில் வாழ்ந்த எட்டு வரலாற்று சிறப்பு பெற்றவர்களை மையமாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கதைக்கு முதன்மை ஆதாரங்களாக, நற்கண்ணை, காவற்பெண்டு எனும் இரு பெண்பாற் புலவர்களின் பாடல்களும், சாத்தந்தை எனும் முதுபெரும் புலவரின் பாடல்களுமாக மொத்தம் 12 பாடல்கள் அமைகின்றன. இந்த சங்கப் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு இந்நாட்டிய நாடகம் இயற்றப்பட்டுள்ளது. இந்நாட்டிய நாடகம், ஏற்கனவே கோவை செம்மொழி மாநாட்டில் நடத்தப்பட்டது”.

இப்படியிருக்கும்போது, ஈ-மெயிலில் நண்பர் அனுப்பினார், என்று, ஒரு நண்பர் அனுப்பியதில் இப்படியிருந்தது. பத்திகளாகப் பிரித்து தலைப்புகளை மட்டும் கொடுக்கிறேன்.

ஆழ்வார்களை, நாயன்மார்களை ஒதுக்கிவிட்டு நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு: தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.

வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அழக்கப்பட்டதேன்? அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரைஆழ்வார்என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.

திரு.வேள்குடி கிருஷ்ணன் பேசியது: துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார். திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.

வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.

கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்துஇந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்என்று பேசியுள்ளார் கலைஞர்.

திருச்சி கல்யாணராமன் விமர்சனிக்கப்படுதல்: அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால் புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.

தேவையில்லாமல் கூட்டப்பட்ட கமென்ட்: நண்பர் கூட இதையும் சேர்த்திருக்கிறார், “இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்”, என்று முடித்திருப்பதாக தெரிகிறது. ஏனனில், கடைசியில் “[edited]” என்றுள்ளது. சில இந்துக்களுக்கு, தமக்கு எல்லாமே தெரியும் என்ற நினைப்பு அத்கமாகவே இருக்கிறது. வேதங்களில் பல சாகைகள் பெண் ருஷிகளால் / பண்டிதர்களால் இயற்றப்பட்டது[13] என்ற உண்மையை அறிந்தால், இப்படி யாரும் பேசமாட்டார்கள். ஏனெனில், இந்துக்களே இப்படி உளறினால், மற்ற இந்து-விரோத சக்திகள் இதையே ஆதாரமாக வைத்துக் கொண்டு கதையடிக்க ஆரம்பித்துவ்டுவார்கள்.

“பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியம், இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் என்றெல்லாம் எழுதியுள்ள தமிழர்கள்”: பார்ப்பனர்களே, இவ்வாறு தவறான தகவல்களைக் கொடுத்தால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவேண்டுமா? இதோ ஒரு தமிழர், இப்படி எழுதியுள்ளார்[14], “தமிழ் தமிழ் என்று சொன்னால் பார்ப்பானும் நாங்களும் தமிழ்தான் பேசுகிறோம் நாங்களும் தமிழர்கள்தான் என்று நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்வார்கள்…………. இந்நிலையில் பார்ப்பன பெண் நாட்டிய சிகாமணியான பத்மா சுப்ரமணியத்தின் அரங்கேற்றத்தில் பூவிதழும் போர்வாளும் நாட்டிய நிகழ்வில் இந்துத்துவ வெறியரான வேளங்குடி கிருஷ்ணன் முன்னிலையில் சரணடைந்தார் கருணாநிதி………………”. குறிப்பான வரிகள் மட்டும் இங்கு மேற்கோளாகக் காட்டப் படுகின்றன. அதாவது, ஈழப்பிரச்சினை, கருணாநிதி-எதிர்ப்பு, சாதிப்பிரச்சினை, உள்ளூர்-பிரச்சினை…….இப்படி எது இருந்தாலும், சம்பந்தமேயில்லாமல் பார்ப்பன-எதிர்ப்பு, காழ்ப்பு, துவேஷம், தூஷணம்………..முதலியவை இருப்பதும் வேடிக்கையே!

வேதபிரகாஷ்

18-07-2010


[1] ஜெகத்ரெக்ஸகன் “ஆழ்வார்கள் ஆய்வு மையம்” என்று வைத்துக் கொண்டு பல ஆண்டுகளாக, ஆண்டு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பண்டிதர்களை கௌரவித்து வருகிறார். இம்முறை, இது அரசியலாக்கப்பட்டுவிட்டது தெரிகிறது.

[2] “பார்ப்பனர் / பார்ப்பான்” என்ற சொற்பிரயோகம், திராவிட சித்தாந்திகளால் இழிவாக உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது.

[3] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[4] வேதபிரகாஷ், ஆத்திக நாமதாரிகளும், நாத்திக வேடதாரியும், தமிழும், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்:

https://rationalisterrorism.wordpress.com/2010/07/13/ஆத்திக-நாமதாரிகளும்-நாத/

[5] இதை பல கட்டுரைகள் வாயிலாக பதிவு செய்துள்ளேன். குறிப்பாக திருக்குறள் விஷயத்தில், இவர் கிருத்துவர்களுடன் சேர்ந்துகொண்டு செயல்பட்டது.

வேதபிரகாஷ், திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்,

https://rationalisterrorism.wordpress.com/2010/02/11/திருக்குறளை-எதிர்க்கும்/

…………………………………., திருவள்ளுவரை, திருக்குறளை எதிர்க்கும் விரோதிகளின் பின்னணி என்ன?, http://chemozhi.wordpress.com/2010/06/21/திருவள்ளுவரை-திருக்குறள/

[6] இதை பல தமிழறிஞர்கள், புலவர்கள், பண்டிதர்கள் எடுத்துக் காட்டியிருந்தனர். இருப்பினும், இந்துமதத்தைப் புறக்கணிக்கப்பட வேண்டும் என்றரீதியில்தான் செயல்பட்டது, என்பது மாநாடே மெய்ப்பித்துவிட்டது.

வேதபிரகாஷ், சமயம் வளர்த்த தமிழ்கருத்தரங்கு, http://chemozhi.wordpress.com/2010/06/25/தமிழை-வளர்த்த-தமிழ்-கருத/

[7] இது இவ்வரசே கிளப்பி விட்டுள்ளப் பிரச்சினை. ஆழ்வார்கள்-நாயன்மார்களோ, தமிழக அரசர்களோ இதனை பிரச்சினையாகவே கருத்வில்லை. அதாவது, அத்தகைய நினைப்பு அவர்களுக்கு இல்லை. ஆனால், திராவிட இயக்கம் தோன்றியபிறகு, இத்தகைய வெறுப்பு, பாகுபாடு….வளர்க்கப்பட்டது. இப்பொழுதைய கருணாநிதி ஆட்சியில் மறுபடியும் கிளப்பிவிடப்பட்டுள்ளது.

[8] சமீபத்தில் கூட, ஓரு வழக்கு இவருக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்திருப்பது கேள்விகளை எழுப்பியுள்ளன.

வேதபிரகாஷ், கருணாநிதியின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளும், அவை நடத்தப் படும் விதமும்!, http://lawisanass.wordpress.com/2010/07/14/கருணாதியின்-மீது-நிலுவ/

[9] ஒரு தொண்டர் குங்குமப் பொட்டு வைத்துக் கொண்டபோது விமர்சனம் செய்தது, ஒரு அமைச்சர் தீ-மிதித்தபோது கண்டித்தது ………..முதலியன.

[10] ஆகையால்தான், சங்ககாலத்திலிருந்தே, பிராமணர்கள் தங்களது “ஆரிய மயமாக்கும்” சூழ்ச்சிகளை ஆரம்பித்து விட்டனர் என்று வாதிப்பர். ஆனால், பிராமணன், திராவிடன் வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் இல்லை என்பது கூட அவர்களில் பெரும்பாலோருக்குத் தெரியாது.

[11] தினமலர், முதல்வர் விழாவில் வெளுத்துக்கட்டிய வேளுக்குடி கிருஷ்ணன், ஜூலை 17,2010, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=41671

[12] தினமலர், தமிழ் எனக்கு பண்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளது : முதல்வர் பேச்சு,, மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: ஜூலை, 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=38052

[13] வேதங்களைப் பற்றிப் படிக்காமலே, திராவிட சித்தாந்திகள் பல கதைகளை விட்டுக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை விஷயங்களைக்கூடத் தெரிந்து கொள்ளாமல், யாரோ இப்படி எழுதியுள்ளனர், பேசியுள்ளனர் என்று, ஒருவர் மேற்கோள் காட்ட, அதை மற்றவர் காப்பியடித்து எழுத, அதனை இன்னொருவர் மேற்கோள்காட்டா……………………இப்படியே ஆராய்ச்சி நடக்கிறது!

[14] http://inioru.com/?p=14983 தொகுப்பாசிரியர்கள் : அசோக் யோகன் – பிரான்ஸ்: சபா நாவலன் –இங்கிலாந்து; : டி.அருள் எழிலன் –இந்தியா; மின்னஞ்சல் : info@inioru.com, inioru@gmail.com, inioru@yahoo.co.uk

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

ஜூன் 21, 2010

திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!

திருவள்ளுவர் சிலைக்கு பாதுபாப்பு என்றால், அதைவிட கேவலமான நிகழ்ச்சி தமிழகத்தில் நினைத்துக் கூட பார்க்கமுடியாது.

முதலில் அத்தகைய தமிழ் துரோகிகள் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் முகமூடிகள் கிழிக்கப் பட்டு மக்களுக்கு காட்டப்படவேண்டும்.

அத்தகைய மனப்பாங்குடன், தமிழகத்தில், தமிழகர்களாக இருந்தால், அவர்கள் தமிழர்களே இல்லை.

பயந்து கொண்டு மாநாடு எதற்கு நடத்தவேண்டும்? நாகர்கோவில் (20-06-2010): செம்மொழி மாநாட்டை ஓட்டு கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் வரும் ஜூன் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. கடந்த வாரம் விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தை தொடர்ந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் கோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ரயில் தண்டவாளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் எஸ்பி ராஜேந்திரன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் லாட்ஜூகளில் தீவிர சோதனையும் நடந்து வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்கும்படி லாட்ஜ் உரிமையாளர்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

திருவள்ளூவரின் எதிரி யார்? கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு தற்போது துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளிடமும் சோதனை நடத்தப்படுகிறது. செம்மொழி மாநாடு முடியும் வரை இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று எஸ்பி ராஜேந்திரன் தெரிவித்தார்.

திருக்குறளின் எதிரிகள், துரோகிகள்: முன்னமே விளக்கி ஆதாரங்களுடன் காட்டியுள்ளபடி, திருவள்ளுவரையும், திருக்குறளையும் கேவலப்படுத்துகிறவர்கள் கிருத்துவர்கள், முஸ்லீம்கள், திராவிட நாத்திகர்கள் மற்றும் தமிழ் போர்வையில் உலாவந்துக் கொண்டிருக்குன் புல்லுருவிகள். இந்தியாவில் யாரும் திருவள்ளுவ சிலைய சிதைக்கக்கூட நினைக்க மாட்டான். அத்தகைய அழிக்கும் மனப்பாங்கு இந்த கூட்டத்தாரிடம் தான் உள்ளது.

மைலாப்பூரில், திருக்குறள் கோனிலில் வந்து மிரட்டிய துரோகிகள்: மைலாப்பூரில், திருவள்ளுவர் வாழ்ந்த இடமாகக் கருதப்படுகின்ற இடத்தில், ஒரு கோவில் உள்ளது. இதில் சில உண்மையான திருக்குறள் அன்பர்கள், அமைதியாக தமது பணிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்நிலையில் சில தமிழ் துரோகிகள் உள்ளே நுழைந்து, “என்ன, திருவள்ளூவர்க்கு விபூதி எல்லாம் வைத்திருக்கிறாயே, என்ன விஷயம்”, என்றேல்லாம் மிரட்டியதாகத் தெரிகிறது. அத்தகைய திருவள்ளுவர் விரோதிகள் யார்?