Archive for the ‘வியாபாரம்’ Category

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால்…………..!

ஜூன் 8, 2010

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால்…………..!

வழக்கு, வியாபாரத்திற்கா, சேவைக்கா – சென்னை (07-06-2010): தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விஸ்வாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் தாக்கல் செய்த மனு: “அம்பேத்கர் படத்தை ஆங்கிலத்தில் ஜபார்பட்டேல் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், ஸ்பான்சர் செய்துள்ளது. 2000ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் வினியோக உரிமை பெற, 2007ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டேன். வரும் செப்டம்பர் மாதம் உரிமை முடிகிறது. தமிழ் மொழியில் அம்பேத்கர் படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். பிரின்ட் செலவு, போஸ்டர், விளம்பரம் என, மேற்கொண்டு 90 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, வாழ்க்கையை தியாகம் செய்த அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தை பொது மக்கள் பார்க்க முடியும். ஏற்கனவே, தனியார் ஒருவர் தயாரித்த பெரியார் படத்துக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே, தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட ஏதுவாக 90 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்“,  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும்: இப்படி சொல்லியிருப்பதில், ஏதோ விவகாரம் இருப்பது போல உள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால் “சுமுகமாக” வெளியாகாது.  அப்படியென்ன இதில் “சுமூகம்”, “சுமூகமின்மை” என்றெல்லாம் ஏன் வருகிறது? யாராவது மிரட்டியுள்ளனரா? அப்படியென்றால், யார் எதற்காக மிரட்டியது?

வியாபாரமா, சேவையா, அம்பேத்கர் பற்றா, அரசியலா, …………………………………………..? சரி, எந்த தியேட்டர்கள் அதை திரையிடுவார்கள்? யார் பார்ப்பார்கள்? எத்தனை நாள் ஓடும்? பெரியார் மாதிரி பள்ளிக்கூடப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி படம் பார்க்க அனுப்பப்படுவார்களா? “பெரியார்” பெயர் இழுக்கப்பட்டு விட்டது. பெரியார் படத்திற்கு ஒரு கோடி கொடுத்ததால், இந்த படத்திற்கும் ஒரு கோடி கொடு, என்ற ரிதியில் தான் விவாதம் வந்துள்ளது. அதுமாதிரியே நீதிமன்றத்திலும் விண்ணப்பம் வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அரசு பணத்தை, இப்படியெல்லாம் காரணம் காட்டி பெற்றால் பயன்படபோவது, ஒருசிலரேத் தவிர, மற்றவர்கள் அல்ல. ஆக “அம்பேத்கர்” பெயரைச் சொல்லிக் கொண்டு எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம், சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை மிரட்டலாம், காசு கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்ளலாம், பங்கு போட்டுக் கொள்ளலாம் ……….என்ற போகெல்லாம் நன்றகவே வெளிப்படுகின்றன.

16-06-2010ற்குள் படம் வெளிவருமா? இப்படி ஒவ்வொருத்தரும், நிறுவனங்களின் மீது ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. வியாபாரம், வணிகம், லாப நோக்கு என்றெல்லாம் வரும் போது, நிச்சயமாக காசு என்று கணக்குத்தான் பார்க்கிறார்களேத் தவிர, கொள்கை முதலியனவெல்லாம் பின்தள்ளப்படுகின்றன். மற்றவர்களோ வெரும் கையாலே முழம் போட்டு, மற்றவர்களின் மீது பழிசொல்லிக் கொண்டும், ஜாதி வெறியோடு எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் காலத்தை ஓட்டிவருகின்றனர்.