Posts Tagged ‘அம்பேத்கர் படம்’

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? (1)

மே 20, 2018

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுவது, சித்தாந்த குழப்பமா, அரசியல் நுணுக்கமா அல்லது சமரச முயற்சியா? (1)

1975-77 Atal, Jayaprakash arrested-emergency declared

ஆர்.எஸ்.எஸ் மீதான தாக்குதல்கள்: ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்க் என்கின்ற ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் பொதுவாக விளம்பரம் இல்லாமலேயே செயல்பட்டு வந்துள்ளது. எமர்ஜென்ஸியின் [1975-1977] போது[1], பலர் சிறையில் அடைக்கப் பட்டனர். அப்பாவி இளைஞர்கள், முதியோர் பலர் சிரையில் அடைக்கப் பட்டனர். இதனால் அவர்களது வாழ்க்கையே பாழாகியது[2]. இதனால், பலர் அவ்வியக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொள்ளவே பயந்தனர், பிறகு ஒரு வழியாக, வளர ஆரம்பிக்கும் போது, திராவிட கட்சிகளில் ஆதரவினால், இஸ்லாமிய தீவிரவாதம் தமிழகத்தில் வளர ஆரம்பித்தது. சென்னையில் உள்ள தமிழக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்க அலுவலகத்தில் 08—08-1993 அன்று குண்டுவெடிப்பை நடத்தினர். குண்டு வெடிப்பில் 11 பேர் இறந்தனர் மற்றும் 7 பேர் காயமுற்றனர்[3]. இதனாலும், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் பயந்தனர். இத்தகைய காரணங்களினால், நடுவில், ஒரு நிலையில் தான், தம்மை வெளிப்படையாக சொல்லிக் கொள்ளாமல் இருக்க வேண்டியதாயிற்று. இருப்பினும், அவர்கள் தங்களது சேவைகளைத் தொடர்ந்து செய்து வந்தனர். நிச்சயமாக, அவர்களது சேவையை பாராட்டவே வேண்டும். ஆயிரக்கணக்கானவர், ஏன் லட்சக்கணக்கானவர் ஆர்.எஸ்.எஸ், ஆர்.எஸ்.எஸ்-ஆதரவாளவர், ஆர்.எஸ்.எஸ்-அபிமானி, என்றெல்லாம் இருந்து செயல்பட்டு, பாராட்டிக் கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஊடகங்கள் அதற்கு எதிர்மறையான விளம்பரம், பிரச்சாரம், தாக்குதல் முதலியவற்றைச் செய்து வருகின்றன.

1993- killed in RSS office bomb blast

அம்பேத்கருக்கு அடுத்து, பெரியாரைப் பிடித்துக் கொண்டது: சமீபகாலத்தில், பாஜக அரசியல் ரீதியில் வளர்ந்து வரும் வேளையில், தென்னகத்தில் உள்ள மாநிலங்களில், வெவ்வேறு முறைகளில் அணுக வேண்டியதுள்ளது. பொருளாதார ரீதியில், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு முதலிய பலபிரச்சினைகள் இருந்தாலும், சமூகப் பிரச்சினைகள் அவற்றை அரசியலாக்கி விட்டது. எஸ்சி-எஸ்டி மக்களை கவருவதற்காக, அம்பேத்கரை வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்வது தொடர்ந்து வருகிறது. கர்நாடக பரிசோதனை தோல்வியடைந்த நிலையில், தமிழகத்தில், “பெரியாரை” வைத்துக் கொண்டு, தமிழ், திராவிட உணர்ச்சிகளை எழுப்பி, சாதகமாக்கிக் கொள்ளப் பார்க்கிறது. தமிழகத்தில் அரசியல் ரீதியில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், ஒரிஸா, ஆந்திரா, தெலிங்கானா, பிரச்சினைகளை சமாளித்து விடலாம் என்று நினைக்கிறது.

RSS periyar, DC 17-05-2018

 

சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்ததுமே 2018: சென்னை, அம்பத்தூரில் உள்ள ஜி.கே.ஷெட்டி விவேகானந்தா பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கான நான்கு நாள் மாநாடு நடந்தது[4]. 20 நாட்களாக இந்த மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 310 பேர் கலந்து கொண்டனர்[5]. இந்த பயிற்சி வகுப்பை அகில ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய இணை பொதுச்செயலாளர் மன்மோகன் வைத்யா பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்[6]. அப்போது தமிழக ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பு பிரிவு செயலாளர் நரசிம்மன் உடன் இருந்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு[7]:

கேள்வி:- தமிழகத்தில் நடைபெறும் பயிற்சி முகாமில் எத்தனை பேர் கலந்து கொள்கின்றனர்? இவர்களுக்கு எந்தமாதிரியான பயிற்சி அளிக்கப்படுகிறது?

பதில்:- சென்னையில் நடைபெறும் 20 நாள் பயிற்சி முகாமில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 40 வயதுக்கு மேற்பட்ட 310 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இவர்களுக்கு இந்திய வரலாறு, நம்முடைய கலாசாரம், பண்பாடுகள், பாரம்பரிய இந்து தர்மம், சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் தியாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதவிர பழனி, கள்ளக்குறிச்சி, திருப்பூரில் 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

RSS periyar, DC cutting, 17-05-2018

பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது: கேள்வி-பதில் தொடர்கிறது.

 கேள்வி:- இதுபோன்ற முகாம்கள் நடத்தி தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கால் ஊன்ற பார்க்கிறதா?

பதில்:- தமிழ்நாட்டில் திராவிடத்தின் நிலையால் இருந்த தடங்கல்களை பெரிய அளவில் நாங்கள் பொருட்படுத்தவில்லை. பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது. பிற மாநிலங்களை போல தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ்.க்கு பெரிய ஆதரவு கிடைக்கும் என்பதுடன், தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும் என்றும் நம்புகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் எவ்வளவு கிளைகளுடன் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது?

பதில்:- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்ற முடியாது என்று பலர் பேசுகிறார்கள். ஆனால், ஆர்.எஸ்.எஸ். கால் மட்டுமல்ல, ஆழமாக வேரூன்றி வெகு காலமாகிவிட்டது. குறிப்பாக தமிழகத்தில் தாலுகா அளவில் 1,788 கிளைகளை தொடங்கி சமுதாயப்பணி ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிளைகள் உள்ளன.

கேள்வி:- இளைஞர்கள் எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ளனர்?

பதில்:- ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் நடத்தப்படும் பயிற்சி முகாம்களில் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

DK response to Vaidya 19-05-2018

வீரமணி, வைத்யா கருத்தை எதிர்த்தது: இதில் “பெரியார் கொள்கைக்கும், எங்களுடைய கொள்கைக்கும் உடன்பாடு உள்ளது. அவருடைய கொள்கையான ஏழை, பணக்காரன் வேறுபாடின்றி சமத்துவத்தை கடைப்பிடிப்பது, ஜாதி, மதம் கிடையாது போன்றவற்றை நாங்களும் கடைப்பிடிக்கிறோம். எங்களுக்குள் வேறுபாடு கிடையாது” என்றெல்லாம் வைத்யா சொன்னது சர்ச்சைக்கு உட்பட்டதாகியது. வைத்யாவிற்கு பதிலாக, வீரமணி கூறியுள்ளது[8], “அம்மா ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதா? இப்பொழுது எப்படி அனுமதி கிடைக்கிறது? ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் கைப்பாவையாக .தி.மு.. அரசு செயல்படலாமா? தமிழ்நாட்டில் கால் பதிப்போம் என்கிறார்கள். பல இடங்களில் பயிற்சி முகாம்களை நடத்திக் கொண்டுள்ளனர்[9]. இங்கே தஞ்சையையடுத்த ஒரு பல்கலைக் கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடந்துள்ளதுஅகில இந்திய தலைவர் மோகன் பாகவத் வந்து பல நாள் தங்கியுள்ளார்வெளியில் தெரியவே தெரியாது[10]. அம்பத்தூரில் தனியார்ப் பள்ளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம் நடந்துள்ளது. ஆர்.எஸ்.எஸின் அகில இந்திய பொறுப்பாளர் மன்மோகன் வைத்யா என்பவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

© வேதபிரகாஷ்

20-05-2018

DK response to Vaidya 19-05-2018- Viduthalai

[1] The ” Emergency” refers to a 21-month period from 1975 to 1977 when Prime Minister Indira Gandhi had a state of emergency declared across the country.

[2] பெற்றோர் சோகத்தில் இறந்தது, திருமணங்கள் முறிந்தது, முதியோர் கஷ்டப்பட்டது…., சிறையில் குற்றவாலிகளுடன் அடைக்கப் பட்டு துன்புருத்தப் பட்டது என்று…..பல உண்மைகதைகள் உள்ளன.

[3] இது சம்பந்தமாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 18 பேர் மீது தற்போது இல்லாத தடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டியது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் உச்சநீதிமன்றம் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை இரத்து செய்து விடுவித்தது.

[4] The Hindu, RSS leader to attend camp in Chennai, STAFF REPORTER, CHENNAI, MAY 18, 2018 00:00 IST; UPDATED: MAY 18, 2018 03:40 IST.

[5] Rashtriya Swayamsevak Sangh’s national joint general secretary Manmohan Vaidya is attending four days of a 20-day camp for volunteers of the organisation being held in the city. In all, 310 volunteers from five southern States and Puducherry are participating in the camp at G.K. Shetty Vivekananda Vidyalaya in Ambattur.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rss-leader-to-attend-camp-in-chennai/article23920143.ece

[6] தினத்தந்தி, தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பலம் பொருந்திய இயக்கமாக மாறும்அகில இந்திய இணை பொதுச்செயலாளர் பேட்டி, மே 19, 2018, 03:59 AM

[7] https://www.dailythanthi.com/News/State/2018/05/19035944/In-TamilNadu-RSS-Become-a-dynamic-movement-All-India.vpf

[8] விடுதலை, ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே! எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்!, சனி, 19 மே 2018 15:07

[9] சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் நடந்ததை குறிப்பிடுவது தெரிகிறது.

[10] ஊடகங்களில் செய்திகள் தாராளமாக வந்துள்ளன. ஊர்வலங்களும் நடந்துள்ளன.

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால்…………..!

ஜூன் 8, 2010

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால்…………..!

வழக்கு, வியாபாரத்திற்கா, சேவைக்கா – சென்னை (07-06-2010): தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட, 90 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த விஸ்வாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் தாக்கல் செய்த மனு: “அம்பேத்கர் படத்தை ஆங்கிலத்தில் ஜபார்பட்டேல் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம், ஸ்பான்சர் செய்துள்ளது. 2000ம் ஆண்டு இப்படம் வெளியானது. இப்படத்தின் தமிழகம், புதுச்சேரி, கேரள மாநிலங்களின் வினியோக உரிமை பெற, 2007ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டேன். வரும் செப்டம்பர் மாதம் உரிமை முடிகிறது. தமிழ் மொழியில் அம்பேத்கர் படத்தை வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளேன். இதுவரை நேரடியாகவும், மறைமுகமாகவும் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளேன். பிரின்ட் செலவு, போஸ்டர், விளம்பரம் என, மேற்கொண்டு 90 லட்ச ரூபாய் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும். அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட, வாழ்க்கையை தியாகம் செய்த அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தை பொது மக்கள் பார்க்க முடியும். ஏற்கனவே, தனியார் ஒருவர் தயாரித்த பெரியார் படத்துக்காக தமிழக அரசு நிதி உதவி வழங்கியுள்ளது. எனவே, தமிழில் அம்பேத்கர் படத்தை வெளியிட ஏதுவாக 90 லட்ச ரூபாய் நிதி உதவியை வழங்க தமிழக அரசு, புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும்“,  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இம்மனு நீதிபதி வெங்கட்ராமன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்துள்ளார்.

இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும்: இப்படி சொல்லியிருப்பதில், ஏதோ விவகாரம் இருப்பது போல உள்ளது. இந்தத் தொகையை அரசு வழங்கினால், படம் சுமுகமாக வெளியாகும், இல்லையென்றால் “சுமுகமாக” வெளியாகாது.  அப்படியென்ன இதில் “சுமூகம்”, “சுமூகமின்மை” என்றெல்லாம் ஏன் வருகிறது? யாராவது மிரட்டியுள்ளனரா? அப்படியென்றால், யார் எதற்காக மிரட்டியது?

வியாபாரமா, சேவையா, அம்பேத்கர் பற்றா, அரசியலா, …………………………………………..? சரி, எந்த தியேட்டர்கள் அதை திரையிடுவார்கள்? யார் பார்ப்பார்கள்? எத்தனை நாள் ஓடும்? பெரியார் மாதிரி பள்ளிக்கூடப் பிள்ளைகளை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி படம் பார்க்க அனுப்பப்படுவார்களா? “பெரியார்” பெயர் இழுக்கப்பட்டு விட்டது. பெரியார் படத்திற்கு ஒரு கோடி கொடுத்ததால், இந்த படத்திற்கும் ஒரு கோடி கொடு, என்ற ரிதியில் தான் விவாதம் வந்துள்ளது. அதுமாதிரியே நீதிமன்றத்திலும் விண்ணப்பம் வைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அரசு பணத்தை, இப்படியெல்லாம் காரணம் காட்டி பெற்றால் பயன்படபோவது, ஒருசிலரேத் தவிர, மற்றவர்கள் அல்ல. ஆக “அம்பேத்கர்” பெயரைச் சொல்லிக் கொண்டு எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றலாம், சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை மிரட்டலாம், காசு கிடைத்தால் அதையும் பெற்றுக் கொள்ளலாம், பங்கு போட்டுக் கொள்ளலாம் ……….என்ற போகெல்லாம் நன்றகவே வெளிப்படுகின்றன.

16-06-2010ற்குள் படம் வெளிவருமா? இப்படி ஒவ்வொருத்தரும், நிறுவனங்களின் மீது ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது. வியாபாரம், வணிகம், லாப நோக்கு என்றெல்லாம் வரும் போது, நிச்சயமாக காசு என்று கணக்குத்தான் பார்க்கிறார்களேத் தவிர, கொள்கை முதலியனவெல்லாம் பின்தள்ளப்படுகின்றன். மற்றவர்களோ வெரும் கையாலே முழம் போட்டு, மற்றவர்களின் மீது பழிசொல்லிக் கொண்டும், ஜாதி வெறியோடு எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் காலத்தை ஓட்டிவருகின்றனர்.