Posts Tagged ‘அறிஞர்’

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

ஓகஸ்ட் 14, 2011

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

 மூதறிஞரை வெல்ல முயன்ற கலைஞர், கலைஞரை மிஞ்சும் மருத்துவர்: தமிழகத்தில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தமிழில் இல்லாத வார்த்தைகள் மீதுதான் அன்பு, காதல், போகம், பிணைப்பு, இணைப்பு எல்லாமே. ஆனால், திடீரென்று அவற்றை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி முதலியோர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.  இப்பொழுது ராமதாஸுக்கும் அந்த பித்துப் பிடித்து விட்டது போலும். ஆண்டுக்கு ஆண்டு, வார்த்தைகளுக்கு, புதிய வியாக்ரானம் / விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரிவினைவாதங்களை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தி, மக்களை மயக்கப் பார்த்தது பாமக. ஆனால், ராஜதுரோகக் குற்றட்திற்குள்ளாவோம் என்று பயந்து, அண்ணாதுரையைப் போல, அமைதியாக கொள்கைளை மாற்றிக்கொண்டனர்.

சங்கராச்சாரியார், ரஜினிகாந்த் இந்த இருவர்களால் தான் தமிழகமே கெட்டுவிட்டது: இப்படி ஒருமுறை பேசிக் கலக்கியுள்ளார் ராமதாஸ். அதாவது, தெய்வநம்பிக்கை இளைஞர்களிடம் இவர்களால்தான் வளர்ந்தது, அதனால் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற அளவிற்கு பேசினார். ரஜினி படங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தியேட்டர் முதலாளிகளை மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால், நாத்திகத்தினால் கடந்த 60 ஆண்டுகளில் என்ன சாதிக்க முடிந்தது என்று இந்த பகுத்தறிவாளியால் சொல்லமுடியவில்லை.

“திராவிடம்’ என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்[1]கிருஷ்ணகிரி: “”திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். “திராவிடம்’ என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சாணக்யன்ஒருதுரோகி’ : பா..., ராமதாஸ்பேச்சு[2]திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்[3].

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

திராவிட மாயையிலிருந்து என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிவரப்போகிறர்கள் என்று தெரியவில்லை: பி. ராமமூர்த்தி 1980களில் “ஆரிய மாயையா, திராவிட மாயையா” என்று திராவிட இயக்கத்தை விமர்சித்தார்[4]. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்!” என்று 1990களில் எழுதியுள்ளார்[5]. அப்பொழுது கருணாநிதி அவரை சிறையில் அடைத்தார். ஆனால், தமிழர்கள் அந்த மாயையிலிருந்து மீளவில்லை. திராவிட மாயையும் தொடர்ந்தது. “திராவிடம்” இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை என்ற நிலையில் தான் இருந்துவந்தது. பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள், விடுதலை சிறுத்தைகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் “திராவிட” அடைமொழி இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. “ஆரியர்” இனம் பொய், மாயை, கட்டுக்கதை என்றெல்லாம் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், அந்த இனவாதம், இனவெறி, இனசெருக்கு, இனமாயை வாதங்களை வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன. பணபலம் மிக்க வீரமணி கோஷ்டியர்கள் கூட கருணாநிதி-ஜெயலலிதா என்று மாறி-மாறி தங்களது திராவிடப் பற்றைக் காட்டிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு பணம், பதவி ஏதாவது கொடுத்தால் போதும், மாறிக்கொண்டேயிருப்பார்கள், மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்! கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், அரசியலில் நண்பனும் இல்லை-எதிரியும் இல்லை என்றெல்லாம் பேசுவார்கள். இனியேனும், உண்மையை அறிந்து தெளிவார்களா பார்ப்போம்!

வேதபிரகாஷ்

14-08-2011


[3] பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

[4] பி. ராமமூர்த்தி, “ஆரிய மாயையா, திராவிட மாயையா” – விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983.

[5] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம்!, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1994.