Posts Tagged ‘கனிமொழி’

கனிமொழியை ஆதரிக்கும் கற்பில் அக்கறையில்லாத குஷ்பும், மதவாத பி.ஜே.பி.காரர் ராம்ஜெத்மலானியும் வாதமும்!

மே 10, 2011

கனிமொழியை ஆதரிக்கும் கற்பில் அக்கறையில்லாத குஷ்பும், மதவாத பி.ஜே.பி.காரர் ராம்ஜெத்மலானியும் வாதமும்!

கனிமொழியைக் காப்பாற்றுவது திமுகவை காப்பாற்றுவது: கற்பு பற்றி ஏடாகூடமாக பேசி, மழுப்பி, மன்னிப்புக்ல் கேட்டு, கோர்ட்டில் வழக்குகளை சந்தித்த குஷ்பு, இப்பொழுது, கனிமொழியை ஆதரிக்கிறேன் என்று கிளம்பியுள்ளார். திமுகவில் இருப்பதால், அத்தகைய நிலையை வெளிப்படுத்தியுள்ளதில், ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. அதற்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கருணாநிதியே, கனிமொழிக்ககக, திமுக எந்த அளவிற்கும் செல்லும், ஆதரிக்கும் என்று சொல்லியபிறகு, குஷ்பு தான் ஆதரிக்கிறேன் என்று சொல்வதில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[1]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[2].
கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் குஷ்பு[3]:  உண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.  பின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வரி, ஜெயலலிதா முதலியோரை ஏன் பெண்கள் என்று ஆதரிக்கவிக்ல்லை? இதே போல புவனேஸ்வரியை ஏன் ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை. புவனேஸ்வரி விஷயத்தில், சினிமா துறையினர் மாறுபட்டு பிளவுண்டது அறிந்த விஷயமே. இன்று ஊழல் என்ற பிரச்சினையில், அதுவும் கோடிக்கணக்கில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணாக-தாயாக, எல்லா இந்திய பெண்களும் தான் அவதி படுகின்றனர். அவ்வாறிருக்கும் போது, கனிமொழியை ஆதரிக்கிறேன் என்பது அரசியல் தானொழிய, அதில் பெண் என்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

குஷ்பு ராம்ஜெத்மலானியாக முடியாது: முன்னால் நீதிபதி பாலகிருஷ்ணன் இருக்கும்போது, நிச்சயமாக, குஷ்பு விஷயத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பது தெரிகின்றது. இப்பொழுது, ராம்ஜெத்மலானி கனிமொழிக்கு வாதாட வந்திருப்பது கோடிகளில் உள்ள பிரச்சினையை, கோடிகளை வைத்து அடிக்க தயாராகிவிட்ட நிலையும் தெரிகிறது. ராசாவுடன் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவிட்ட பிறகு, ராசாவையே கழட்டி விட்டு, கனிமொழிக்கு ராம்ஜெத்மலானி வாதிட்டிருப்பது, அவர் பெண் என்பதால் அல்ல, ஆனால், கோடிகளில் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தான். இதனால் தான், அவர் பி.ஜே.பி காரர் / மதவாத கட்சிக்காரர் என்ற பேச்சுகள் எல்லாம் இல்லாமல் போகிறது.