Posts Tagged ‘கருப்புக்கொடி’

நீதிபதி, முதல்வர் இவர்களுக்கு முன்னே ஏன் இந்த வன்முறை?

ஏப்ரல் 26, 2010

நீதிபதி, முதல்வர் இவர்களுக்கு முன்னே ஏன் இந்த வன்முறை?

சட்டத்திற்கு நாங்கள் அஞ்சமாட்டோம், நீதிமன்றங்களை எதிர்கொள்ளத் தயார், எந்த வழக்கையிம் சந்திக்கத் தயார் என்றெல்லாம் பேசுவது, திராவிட வீரர்களின், திராவிடத் தலைவர்களின் வழக்கம். ஆனால், நீதி மன்றம் என்றது நழுவி விடுவார்கள். அதுதான் திராவிட கலாச்சாரமாக ஈ.வே.ரா காலத்திலிரிந்து இருந்து வந்துள்ளது!

அம்பேத்கர், சட்டக் கல்லூரி, சிலைத் திறப்பு, கருணாநிதி, இத்யாதி!

சமீப காலங்களில் கருணாநிதி இப்படியொரு வசனத்தை மாற்றி-மாற்றி பேசி வருகிறார்.

“அதாவது, தான் உயிர்விட தயார்”, என்ற ரீதியில் அடிக்கொரு தடவை மேடைகளில் பேசியுள்ளதுதான்!

கலைஞர் டிவி விளம்பரத்தையும் மிஞ்சுவதாக உள்ளது.

“ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன்”.

“தான் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்”

உயர்நீதிமன்றத்துக்கு முதல்வர் வருகை: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
First Published : 25 Apr 2010 03:53:27 PM IST; Last Updated : 25 Apr 2010 08:02:11 PM IST

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=232639&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

சென்னை, ஏப்.25: சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதி வந்தபோது வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் கருப்புக்கொடி காட்டி கோஷங்களை எழுப்பினர்.வழக்கறிஞர்களின் இச்செயலால் சிலைத்திறப்பு விழாவில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
attacks-in-front-of-CJI-CM-etcattacks-in-front-of-CJI-CM-etc

சிலைத் திறப்பு விழாவில் முதல்வர் தனது உரையைத் தொடங்கியபோது சில வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி போராடிய வழக்கறிஞர்கள் போலீசால் தாக்கப்பட்ட நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இந்த கருப்புக் கொடி ஆர்பாட்டம் நடந்தது.
Unruly-shameful-behaviour-Highcourt-campusUnruly-shameful-behaviour-Highcourt-campus

இந்நிலையில் திமுக தொண்டர்கள் கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது கடும் தாக்குதலை மேற்கொண்டதோடு. அதைப் படம் பிடித்த ஜெயா டி.வி, லைவ் இந்தியா, என்.டி.டி.வி தொலைக்காட்சி போன்றவற்றின் நிருபர்களை தாக்கியதோடு அவர்களின் ஒளிப்பட கேமிராக்களும் உடைத்தெறியப்பட்டன. கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டியதாக ஆறு வழக்கறிஞர்களைக் கைது செய்திருக்கிறது காவல்துறை.

ஆனால் பத்திரிகையாளர்கள் கொடுத்த புகாரையோ ஊடக நிருபர்கள் கொடுத்த புகாரையோ இது வரை போலீஸ் பெற்றுக் கொள்ளவும் இல்லை. யார் மீதும் வழக்குப் பதிவும் செய்யவில்லை. இந்நிலைக்கு தமிழகத்தின் பல் வேறு ஊடக சங்கங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் கருப்புக் கொடிகளையும் காட்டினர். இதையடுத்து மற்றொரு பிரிவினர் கருப்புக்கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர்களைத் தாக்கினர். இந்த மோதலில் வழக்கறிஞர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளின் இரு கேமராமேன்களும் காயமடைந்தனர்.கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் இடையே நிகழ்ந்த மோதலுக்குப் பின்னர் உயர்நீதிமன்றத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும், போலீசாருடன் நடைபெற்ற மோதலில் வழக்கறிஞர்கள், நீதிபதி உள்ளிட்டோர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் முதல்வர் இவ்விழாவில் பங்கேற்பது சரியல்ல என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.வழக்கறிஞர்களை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கோஹலே சமாதானப்படுத்த முயன்றார். எனினும் பலனில்லை. டிஜிபி, கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், அமைதியாக இருக்குமாறு வழக்கறிஞர்களை கேட்டுக்கொண்டனர். எனினும் அவர்கள் சமாதானமடையவில்லை. இதையடுத்து வழக்கறிஞர்களின் போராட்டங்களுக்கிடையே முதல்வர் தனது உரையைத் தொடர்ந்தார்.

கருணாநிதிக்கு வேண்டியது ஒரே காயம் சகாயம்தான்: சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசத்தலைவர் டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தமிழக முதல்வர் கருணாநிதி தனது உரையில் தான் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான் என்று கூறினார்.

“போலீசார், போலீசாரின் குடும்பத்தினர் படும் துயரங்களை நாடகமாக போட்டு நடித்த காலத்தில் அந்த நாடகத்தையே தடை செய்தார்கள். ஆனால் சட்டசபையிலேயே அந்த நாடக பாட்டை பாடி அதை கேட்க செய்தேன். எப்போதும் என் மீது விழும் அம்புகளை மலர் கணைகளாகத்தான் எடுத்துக் கொள்வேன். என் மீது வீசும் மாலை, கணைகளை என்றைக்கும் தாங்கித்தான் பழக்கப்பட்டவன். என் இதயத்தை திறந்து பார்த்தால் காயங்கள் இருக்கும். நாம் விரும்புகிற ஒரே காயம் சகாயம்தான்.” என்று கருணாநிதி தன் உரையில் குறிப்ப்ட்டார்.

தி.மு.க. அரசைப் பொறுத்தவரை டாக்டர் அம்பேத்கார் புகழைப் பாடுவதிலும் அவரது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக மக்கள் மத்தியில் பதிய வைத்து நிறைவேற்றுவதிலும் எந்த மாநில அரசுக்கும் தமிழ்நாடு பின்தங்கியதில்லை. முன்னேறி வருகிற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை மேலும் முன்னேற்ற பாடுபடும் அரசுதான் தமிழக அரசு என்பதை இங்கு சுட்டிக்காட்டிட கடமைப்பட்டுள்ளேன்.

இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்காரின் சிலை வடிவத்தை பார்க்கிறேன். ஒரே ஒரு கை விரலை உயர்த்திக் காட்டுவதை பார்க்கும்போது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னதுதான் எனது நினைவுக்கு வருகிறது. ஜனநாயகத்தை யாரும் எத்தகைய வழியிலும் வீழ்த்த நினைப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வேன் ஜனநாயகத்தில் அநாகரீகத்தை புகுத்த நினைத்தால் எந்த காலத்திலும் அதற்கு தலைவணங்க முடியாது என்பதை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இங்கு நீதியரசர்கள் இருக்கும் நிலையில் இதற்கு மேல் நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஆதி திராவிட மக்களுக்காக என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உழைப்பேன். நான் இப்படி பேசுவதால் இங்கு அரசியல் பேசுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி கருதக்கூடாது. சமுதாய கருத்துதான். 1973- 1976-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எதிர்க்கட்சி நண்பர் சட்டசபையில் என்னை பார்த்து 3-ம் தர சர்க்கார் என்றார்.

இதை கேட்டு என் பின்னால் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்கள் ஆவேசத்துடன் எதிர்ப்பு சொல்ல நான் அவர்களை கையை காட்டி அமைதியாக உட்கார வைத்துவிட்டு பேசினேன். அவர் சொல்வதில், தப்பில்லை. 3-ம் தர சர்க்கார் என்பது தவறு. 4-ம் தர சர்க்கார் என்று கூறி பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த வரிசையில் இது 4-ம் தர மக்களுக்காக பாடுபடும் அரசு என்றேன். இதை கேள்விப்பட்டு அப்போது திருச்சியில் இருந்த பெரியார் தந்தி கொடுத்து பாராட்டினார். எனவே எவ்வளவு எதிர்ப்பு, ஏச்சு இருந்தாலும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொன்ன கொள்கையை நான் கடைபிடித்து வருகிறேன்.

அம்பேத்காருக்கு பெருமை சேர்க்க இங்கு அவரது சிலையை திறந்து வைத்ததற்காக உங்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.