Posts Tagged ‘கலாநிதி மாறன்’

சன் குழுமத்தின் முதன்மை ஆணையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!

செப்ரெம்பர் 3, 2010

சன் குழுமத்தின் முதன்மை ஆணையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!

Checkers-hotel-chennai

Checkers-hotel-chennai

கிழக்குக் கடற்கரை சாலையில் ஆரம்பித்தப் பிரச்சினை[1] : ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா என்பவர் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டிவி முதலிய நிறுவனங்களில் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, இவர் கார் இளைஞர்களின் வண்டியின் போது உரசியதாகத் தெரிகிறது. அதைத் தட்டிக் கேட்ட அவர்களை, ஹன்ஸ்ராஜின் ஆட்கள் அடித்துள்ளனர். இரண்டு பேரை அடித்த பிறகு, மூன்றாவது ஆளைத் தேடி சென்றபோது, கிண்டி அண்ணாசாலையில் உள்ள “தி செக்கர்ஸ் ஹோட்டலில்” பதுங்கியிருப்பதாக செய்தி கிடைத்ததும், அந்த ஹோட்டலில் சென்று செவ்வாய் கிழமை (31-08-2010) ராத்திரியில் அடித்து நொறுக்கியிள்ளனர்.

Hansraj-Saxena-sun-pictures

Hansraj-Saxena-sun-pictures

“தி செக்கர்ஸ் ஹோட்டலில்” நடந்த அடிதடி, நொறுக்கல்: டி. சந்திரசேகர் என்ற துணை மேனேஜர், சாதிக் என்பவர் 100 ஆட்களுடன் வந்து அடித்து நொறுக்கியதகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டும், கல்லாப் பெட்டியிலிருந்து ரூ. 2.6 லட்சம் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். கிண்டி போலீஸார், சௌமித்ரி தர்மசேனன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா மற்றும் 30 பேர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்களாம்[2]. இதனால், வடிவேலு, வெங்கிடேசன், அருண், ரவி, கிருஷ்ணமூர்த்தி முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rajini-sunpictures-2008

Rajini-sunpictures-2008

ஷூட்டிங் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்த போலீஸ்[3]: நடு இரவில், இப்படி நூறு ஆட்கள், ஆட்டோ, வண்டிகள் என்று வந்து, ஹோட்டலில் புகுந்து, எல்லோரையும் மிரட்டி, அடித்து நொறுக்கி, கலாட்டா செய்து, வந்த வண்டிகளியே பறந்து விட்டபோது, அங்கிருந்த போலீஸார், ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்று அமைதியாக இருந்து விட்டார்களாம்!

Swami_laxmanananda

Swami_laxmanananda

கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் எத்தனை பிரச்சினைகள்: இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே மாதிரி இரவில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருந்த 90 வயதிற்கும் மேற்பட்ட கிழச்சாமியார் – சுவாமி லட்சுமணானந்தா என்பவர், மற்றும் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் முதலியோர், பலர் உள்ளே நுழைந்து, ஏ.கே-47 போன்ற நவீன துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கிருத்துவர்கள், கிருத்துவ மாவோயிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட் கிருத்துவர்கள் என்றெல்லம் பத்திரிக்கைகள் குழப்பினர். அதே மாதிரி இந்த கிருஷ்ண ஜெயந்தியில் இப்படி நடந்துள்ளது! வாழ்க, திராவிடம்!!

ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா, ஒரு ஏதோ திராவிர்களுக்கு மத்தியில் ஒரு ஆரியர்” போல இருக்கிறார்: திராவிட நோக்கில் / பாஷையில் / பாடையில்  சொல்வதானால், ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா, ஒரு ஏதோ திராவிர்களுக்கு மத்தியில் ஒரு ஆரியர்” போல இருக்கிறார். ஆனால், கலாநிதி மாறனுக்கு இதெல்லாம் கைவந்த கலை. முன்னர் மே 2007ல், ஸ்டாலின்-அழகிரி விவகார சண்டையில், இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக, போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்[4]. அதாவது, யாரோ பொதுதொலைபேசியிலிருந்து பேசி, சன் டிவிக்கு வேலைக்குச் செல்லாதே, சென்றல் தொலைத்து விடுவோம், என்று மிரட்டினார்களாம்.

கீழே தினமலரில் வந்துள்ள செய்தியும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையும், இந்த பிரச்சினையைப் பற்றியதாக இருப்பினும், சில வேறுபாடுகள் தெரிகின்றன. ஆங்கில நாளிதழ்களில் வந்துள்ளவற்றிற்கும், இதர்கும் கூட அத்தகைய வித்தியாசம் காணப்படுகிறது.


[1] DC Correspondent,  Hotel attack follows road rage, September 2nd, 2010
http://www.deccanchronicle.com/chennai/hotel-attack-follows-road-rage-779

[2] The Hindu dated Thursday, Sep 02, 2010, http://www.hindu.com/2010/09/02/stories/2010090254460400.htm

DC Correspondent , Mistook attack for shoot, says police, September 3rd, 2010
http://www.deccanchronicle.com/chennai/mistook-attack-shoot-says-police-108

[4] http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1180107536