Posts Tagged ‘சன்-டிவி-செக்ஸ்’

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

செப்ரெம்பர் 6, 2013

ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழுவின் தீர்ப்பு!

 

‘‘நடந்ததுஎன்ன? குற்றமும்பின்னணியும்’’ –  ஸ்டார்விஜய்டிவியின் நிகழ்சி:  நடிகை ரஞ்சிதா சாமியார் நித்யானந்தா பற்றி ஒரு தனியார் தொலைக் காட்சியில் ‘‘நடந்தது என்ன? குற்றமும் பின்னணியும்’’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. கடந்தாண்டு 2012 மார்ச் 21ஆம் தேதி இதே காட்சிகளை ஸ்டார் விஜய் டிவி, தனது நடந்தது என்ன – குற்றமும் பின்னணியும் என்ற நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. இதில் இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் இடம் பெற்றது. நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகளை வெளியிட்டதற்காக, ஸ்டார் விஜய் டிவி நிறுவனம் நடிகை ரஞ்சிதாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது டிவி சேனல் ஒழுங்கு முறை அமைப்பு.

 

கர்நாடகஐகோர்ட்டில்நடிகைரஞ்சிதாதொடர்ந்தவழக்கு: இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னையும், நித்தியானந்தாவையும் இணைத்து ஒளிபரப்பான வீடியோ காட்சிகள், போலியாக சித்தரிக்கப்பட்டவை என்று கூறியிருந்தார்[1]. இது தனிப்பட்ட முறையில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்து இருந்தார். வீடியோவை ஒளிபரப்பிய டி.வி.செய்தி சேனல் அல்ல, பொழுது போக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் டி.வி.என்பதால் இது பற்றி டி.வி. ஒளிபரப்பு புகார்கள் குழு [Broadcast Content Complaints Council (BCCC)] விசாரணை நடத்த கர்நாடக ஐகோர்ட்டு உத்தர விட்டது[2].

 

டி.வி. ஒளிபரப்புபுகார்கள்குழுவின்தீர்ப்பு: நீதிபதி ஏ.பி.ஷா (ஓய்வு) தலைமையிலான இந்தக்குழு விசாரணை நடத்தியது. நேற்று முன்தினம் அந்த வழக்கில் அவர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அந்த வீடியோ காட்சிகள் பொதுமக்கள் மத்தியில் மனுதாரரின் மதிப்பையும், மரியாதையும் கெடுப்பதாக உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் எந்த கருத்தும் கேட்காமல் ஒளிபரப்பு செய்யப்பட்டு உள்ளது. இது ஒளிபரப்பு உரிமையை மீறும் செயலாகும்[3]. தனிப்பட்ட நபரின் உரிமையை அப்பட்டமாக மீறிவிட்டது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் டி.வி. வருகிற 9–ந் தேதி முதல் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை எழுத்துக்கள் மூலம் ஆங்கிலத்திலும், தமிழிலும் வருத்தம் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்களுக்கு வருத்தத்தை ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது[4].

 

சன்-குழுமம் ஆரம்பித்து வைத்த வீடியோ நிகழ்சி: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்யானந்தா-ரஞ்சிதா தனியறையில் இருப்பதுபோன்ற ஆபாச வீடியோ ஒன்றை தனியார் சேனல் ஒன்று ஒளிபரப்பி மக்களுக்கு அதிர்ச்சியளித்தது. தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு ஒருமுறை அந்த படுக்கையறைக் காட்சிகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் என மாறி மாறி ஒளிபரப்பியது அந்த சேனல்[5]. அதுவும், பரீட்சை நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தது[6]. போதாகுறைக்கு கருணாநிதி வேறு நக்கல் அடித்துக் கொண்டிருந்தார்[7]. 02-03-2010, செவ்வாய்கிழமை அன்று மாலையிலிருந்து சன் நியுஸ் தொலைக்காட்சி முன்பு காசியைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்தது போல அதே பாணியில் அதிரடியாக செய்திகள் நடுவே, கீழே ஓடும் துண்டு செய்தியில் தொடர்ந்து சேலம் சாமியார் சினிமா நடிகையுடன் உல்லாசமாக இருக்கிறார், சாமியார் நித்தியானந்தா தமிழ் நடிகையுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ காட்சி, ………………என்று ஓட்டிக்கொண்டிருந்தது[8]. ரஞ்சிதா டிசம்பர் 2011ல், சன் குழுமத்தின் மீதும்[9], இதே மாதிரியான வழக்கு தொடர்ந்தார்[10]. குற்றஞ்சாட்டப் பட்டுள்ளவர்களில் கீழ்கண்டவர்கள் அடங்குவர்[11]:

 

  • விஜய் குமார்  (CEO, Sun TV),
  • சாக்சேனா (former CEO, Sun TV),
  • ஜோதீஸ்வரன்  (Program Manager, Sun TV),
  • கே. விஜயகுமார் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies),
  • ஆர். எம். ஆர். ரமேஷ் (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

 

2010ல்ஆரம்பித்தஆபாசம்தொடரும்விதம்: காந்தப்படுக்கை வழக்கில் சிக்கிக் கொண்ட லெனின்[12] சரண்டர் ஆனபோது, சிடிக்காக பணம் கேட்கப்பட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆசிரமத்தின் சார்பில் ஸ்ரீதர் என்பவர் சொன்னதாவது, தொலைகாட்சியில் வீடியோவை வெளியிட்ட அந்த டிவி செனல் (அவர்களுடன்) ஒரு “டீல்” வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், அந்த டிவி செனல் சாமியாரிடம் ரூ. 50 கோடி கேட்டது, என்றும் குற்றம் சாட்டினார்[13]. அப்பொழுது, குற்றப்பிரிவு சி.ஐ.டி சென்னை உய்ர்நீதி மன்றத்திடம் ரஞ்சிதாவின் வழக்கு ஏற்கெனவே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதால்றைன்கு எப்.ஐ.ஆர் எதுவும் போடப்போவதில்லை என்று அறிவித்தது. ஏற்கெனவே உள்ள நித்ய ஆத்ம பரமானந்தா என்பவர் தொடுத்துள்ள வழக்குடன், இதனையும் சேர்த்துக் கொள்ள பரிந்துரைத்தது[14].


[1] As Star Vijay was an entertainment channel, the HC routed the complaint to BCCC by the Ministry of Information and Broadcasting along with a CD of programme.

[3] “The programme not only used her name liberally but also continued to reinforce it on viewers by using her public film photos, videos repeatedly which were totally unconnected. This conduct of the channel totally disregards the complainant’s reputation, honour and basic rights of existence,” said BCCC’s order.

http://newindianexpress.com/nation/Channel-ordered-to-apologise-to-Ranjitha/2013/09/03/article1765099.ece

[11] Ms. Ranjitha filed criminal defamation complaints against Sun TV and their two Tamil dailies, Dinakaran and Tamil Murasu, before the Third Additional Chief Metropolitan Magistrate, Bangalore in December 2011, for recklessly defaming her through false articles and the morphed video allegedly linking her to her Guru Paramahamsa Nithyananda in March 2010. Advocates P.Nehru and Murugaiya Babu filed the petitions on behalf of Ms.Ranjitha. By the sheer gravity of the offence, the Hon’ble Chief Magistrate has taken cognizance and issued summons to the three accused parties. The accused list includes Vijay Kumar (CEO, Sun TV), Saxena (former CEO, Sun TV), Jothiswaran (Program Manager, Sun TV), K. Vijayakumar (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil daies), R. M. R. Ramesh (Editor and Publisher, Dinakaran and Tamil Murasu Tamil dailies).

http://www.nithyananda.org/news/court-summons-sun-tv-dinakaran-and-tamil-murasu-ms-ranjitha-criminal-defamation-case

[14] The Crime Branch CID on Friday told the Madras high court that it would not file a separate first information report (FIR) on actress Ranjitha’s petition against the Sun TV network and that it would be clubbed with Nithya Atmaprabhananda’s complaint that related to the same matter.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-25/chennai/30200516_1_ranjitha-cb-cid-petition

நித்யானந்தாவும், வீரமணியும்!

மார்ச் 28, 2010

நித்யானந்தாவும், வீரமணியும்!

நித்யானந்தாவின் சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும்: கி.வீரமணி!

வீரமணியின் வீரமான வசனங்கள் வேடிக்கையாகத்தான் இருக்கின்றன!

இவர் ஏதோ ஒழுக்கமுள்ளவர் மாதிரி நித்யானந்தாவின் சாமியார் தொழிலை நிறுத்த வேண்டும் என்று சொல்வது படு வேடிக்கைத்தான்!!

ஆன்மீக விபச்சாரம் செய்வதில் கருணாநிதிக்கும், நித்யானந்தாவிர்கும் வித்தியாசம் இல்க்லை.

அரசியல் விபச்சாரத்திலும் இவர்களுக்கு நிகர் யாருமில்லை.

நாத்திக வேசித்தனத்தில் வீரமனிக்கு ஈடு-இணையில்லை.

பகுத்தறிவு பரத்தைத்தனத்திலும் ஈடில்லை.

சாமியார் வேடத்தில் நித்யானந்தா என்பவர் செய்துள்ள ஒழுக்கக்கேடுகள், மோசடியாக சேர்த்த சொத்துக்கள் இவற்றின்மீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும் என்றும், நித்யானந்தாவின் சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியலிலும் பலவகை விபச்சாரிகள் உள்ளனர்: திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன்   ராஜசேகரன் என்ற பெயருள்ளவர்   வெறும் டிப்ளமோ படித்தவர் என்று கூறப்படுகிறவர், ஆன்மிக வியாபாரம்   சாமியார் வேஷம்தான் செழிப்பான வியாபாரம் என்று நன்கு புரிந்து   (ஏனெனில், திருவண்ணாமலை ரமணாவில் தொடங்கிய ஆசிரமங்களின் வருவாய், எச்சில் சாமியார், சுருட்டுச் சாமியார், பீடிச் சாமியார், பீர் சாமியாரிணி   நல்ல வருவாய் தரும் வழி என்பதை உணர்ந்து) அதைத் தொடக்கிக் கொஞ்சம் கொஞ்சமாக, தியானம், யோகா என்ற மூலதனத்தை முதலீடாக்கி, ஆன்மிக வியாபாரம் தொடங்கி, பல்லாயிரக்கணக்கில் சொத்து சேர்த்து ராஜசேகரன்கள் நித்யானந்தா சுவாமி கள் ஆகி, நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர் களையும் வளைத்துப் போட்டு, நல்ல அறுவடையை   விதைக்காது விளையும் கழனியிலிருந்து பெற்று வந்தார்!

அரசியல் விபச்சாரிகளும் அவ்வாறேத்தான் செய்து வருகின்றனர்: இப்படிப்பட்ட இவருக்கு   எடுபிடி சீடகோடிகள்   பல்வேறு மொழிகளில் புத்தகங்கள் எழுதி, வெளி யிட்டும், எலக்ட்ரானிக் மீடியாக்களான நவீன மின்னணு தொழில்நுட்ப உத்திகளையும் துணைக்கழைத்துக் கொண்டார். இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் ஆசிரமங்கள் அமைத்து, அறிஞர் அண்ணா வேலைக் காரியில் எழுதிக் காட்டியது போல் சிரித்திடும் நரி சிவசொரூபத்தில் இருந்து நன்றாக பக்தி என்ற செழுமையான வியாபாரம் நடத்தினார். திரைப்பட நடிகர், நடிகைகள், தியானம், யோகா, நிம்மதி நாடி, மணவிலக்கு வாங்கியவர்கள் உட்பட பலரும் சென்ற நிலையில்தான், சில நாள்களுக்கு முன் சன் தொலைக்காட்சி அந்த ஆனந்தாவின் ஆனந்த சொரூப, ஆன்மிக வகுப்பு ஆராய்ச்சி ஒரு பெண்மணியோடு நடைபெறுவதை அப்பட்டமாகக் காட்டியது.

அரசியல் விபச்சாரிகளை, வேசிகளைத்தான் அவர்களது  பக்தர்கள் தந்திக்காமல் இருக்கிறார்கள்! அதனால் குறுகிய நேரத்தில் குவலயமே புரிந்து கொண்டு, காரி உமிழ்ந்தது காவிப்போர்வை மீது! மோசடி வழக்குகள்   பக்தர்களாலேயே தரப்பட்டது. பிரதான சீடர்கள், சீடிகள் எல்லாம் இப்படி அந்தரங் கத்தை   அவலத்தைப் பற்றி விளக்கி சந்தி சிரிக்க வைத்தனர். பல பக்தர்கள் சாமியாரின் படங்களை எரித்தனர்; வேறு சில பக்தர்கள் பாதுகா பட்டாபிஷேகத்தை நடத்தி  பக்தி பகல் வேஷத்தை அம்பலமாக்கி, இவரது கிருஷ்ண லீலைகளின் மீது அருவருப்புக் காட்டியது நாடறிந்த செய்தியாகும்.

நித்யானந்தாவும் ஃபிராடுதான், திராவிட சித்தாந்திகளும் ஃபிராடுதான்: முதலில் இவரது தரப்பில் இந்த வீடியோ காட்சியில் இருப்பது இந்த மகான் கடவுள் அவதாரம் அல்ல; கிராபிக்ஸ் (ஞ்ழ்ஹல்ட்ண்ஸ்ரீள்) மூலம் செய்யப்பட்ட புரட்டு என்று கதைவிட்டனர்.பிறகு அதை எடுத்தவர், உண்மைகளை காவல் துறையிடம் கக்கி விட்டதனால், அதிர்ச்சி அடைந்து, அடுத்தக்கட்ட புளுகுப் படலத்தில், நான்தான் அது; ஆனால் தவறு நடக்கவில்லை, கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்துள்ள நிலை அது, எனக்குத் தொண்டு செய்த தூய்மையின் கோலம் அது என்றார்! அடுத்த கட்டம்    கெட்டபின்பு ஞானம் என்பது போல, வாழ்க்கையில் இன்பம்  துன்பம், புகழ்ச்சி  இகழ்ச்சி இவையெல்லாம் சர்வசாதாரணம் என்று மாயாவாதத் தத்துவ ஞானியாக வியாக்கியானம் செய்து இப்போதும் பல மீடியாக்களை   பெரும் பதவியாளர் களை எல்லாம் தன்வயப்படுத்திக் கொள்வதில் தற்காலிக வெற்றி பெற்றுள்ளார் இந்த மோசடிப் பேர்வழி!

கர்நாடகாவின் மீது நம்பிக்கை இல்லை என்றால், கருணாநிதி ஏன் வழக்கை அங்கு மாற்றவேண்டும்? கருநாடக அரசு தரப்பிலிருந்து ஓர் அபத்தமான செய்தி வந்துள்ளது; இது சரியான செய்தி என்றால் அதை விட அந்த அரசுக்கு மகாவெட்கம் எதுவும் இல்லை. யாரும் புகார் கொடுக்கவில்லை இந்த ஆனந்த சாமியார் மீது எனவே எந்த வழக்கும் தொடுக்க முடியாது என்பதுதான் அந்தச் செய்தி. கொலை நடந்தால், ஆள் கடத்தல் நடந்தால், கற் பழிப்பு நடந்தால், சமூக விரோத செயல்கள் நடந்தால்  புகார்களைத் தேடிக் கொண்டா இருக்கிறார்கள்? சட்டம்  ஒழுங்கினைக் காக்க வேண்டிய அரசுகள் மெத்தனமாகவா நடந்து கொள்ளும்?

திராவிட ஆசாமிகளையும் தண்டிக்க வேண்டியுள்ளது: தமிழ்நாடு அரசு இவர் மீதான வழக்கினை கருநாடகாவிற்கு மாற்றியுள்ளதே, அது பற்றிய நிலை என்ன? பல மாநிலங்களில் சொத்துக் குவிப்பு, மோசடி முதலிய இ.பி.கோ. பல்வேறு பிரிவுகளை ஈர்க்கும் குற்றங்களைப் புரிந்ததாக குற்றம் சாற்றப்பட்டுள்ள இந்த (ஆ)சாமிமீது உடனடியாக மத்திய புலனாய்வுத் துறை (சி.பி.அய்  சிஙிமி) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, சமூக விரோத செயல்கள்பற்றி விருப்பு  வெறுப்பின்றி மக்களுக்கு எடுத்துச் சொல்லி, பொதுமக்கள் ஏமாறாமல் தடுக்கப்பட வேண்டும்.

பக்தியில்லாதவர்கள் நுழைவதினால்தான் பக்தி கெடுகிறது: மற்ற மோசடிகளை விட இந்த பக்தி மோசடி, ஒழுக்கமற்ற அருவருக்கத்தக்க ஆபாசங்கள் எப்படி சகிப்புக்குரியவைகளாகிவிடுவது? இந்த சாமியார்களுக்கு எப்படி இவ்வளவு சொத்து குவிந்தது என்று வருமான வரித்துறை முழு விசாரணை செய்ய வேண்டும். சாதாரணமாக உழைத்துப் பணம் சேர்க்கும் வியாபாரிகள் முதல் ஊராளும் அரசியல்வாதிகள் வரை  யாருக்கும் தாட்சண்யம் காட்டாமல் சுழலும் வருமான வரித்துறை இந்த சாமியார்களின் கோடி கோடியான சொத்து வருமானம் பற்றி ஆய்வு செய்யவேண்டும். ஆங்காங்கு கூட்டங்கள் நடத்தி, மக்களுக்கு இதனை வற்புறுத்தி, மத்திய அரசினை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா!

மார்ச் 7, 2010

காந்த செக்ஸ் படுக்கை விற்ற ஸ்ரீநித்ய தர்மானந்தா என்கின்ற லெனின் குருப்!

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6812

காந்தப் படுக்கை மோசடியில் தர்மானந்தா: நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின், ஏற்கனவே, காந்தப் படுக்கை மோசடியில் சிக்கியவர். ஆத்தூரை சேர்ந்த லெனின், அழகாபுரத்தில் வசித்து வந்தார். இவர், காந்தப் படுக்கை விற்பனை செய்து வந்தார். ஒரு காந்தப்படுக்கை விலை 12 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதை நம்பி, காந்தப்படுக்கையை வாங்கிய ஏமாந்த தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் போலீசில் அடுக்கடுக்காக புகார் அளித்தனர்.

magnetic_floating_bed

magnetic_floating_bed

காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால்: காந்தப் படுக்கையில் “உறவு’ கொண்டால், உணர்வுகளை அதீதமாக தூண்டி விடும் என, பொய் பிரசாரம் செய்யப்பட்டது. அதாவது செக்ஸ் அதிகமாக வரும் என்றார்களாம். நம்பிவிட்டனராம், 60 வருடங்களாக பெரியார் பால் குடித்து வந்த பகுத்தறிவுவாதிகள். அதாவது அவர்களது பிரச்சாரத்தை விட லெனின் பிரச்சாரம்தான் எடுபட்டது போலும்!

magnetic-bed-example

magnetic-bed-example

வேறு தொழில் செய்யாமல் இந்த தொழிலை ஆரம்பித்தார்: இப்பிரச்னை, தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, லெனின் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. சில காலம், வேறு தொழில் எதுவும் செய்யாமல் லெனின், வீட்டில் இருந்து வந்தார். நித்யானந்தாவின் புகழ் பரவிய நிலையில், அவரை சேலத்துக்கு அழைத்து வந்தார். ஆன்மிக வழியில் தன்னை தயார் படுத்தி கொண்ட லெனின், தன் பெயரை தர்மானந்தா என மாற்றி கொண்டு, நித்யானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக விளங்கி வந்தார். தற்போது, “சிடி’ பிரச்னையில் சிக்கியுள்ளதால், நித்யானந்தா தரப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளார்.

magnetic-bed

magnetic-bed

இப்படங்கள் எல்லாம் உதாரணத்திற்காகக் கொடுக்கப் பட்டுள்ளன. அதன் பயன்கள், விளைவுகள் பற்றி எந்தவிதமான கருத்துகளையும் கொள்ளவேண்டாம்.

நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

மார்ச் 6, 2010

நித்யானந்தாவின் பின்னணியை மறந்து விட்ட வீர-சூர ஊடகப் புலிகள்!

நித்யானந்தா என்ற போலி சாமியார் ஒரு நடிகையுடன் சல்லாபித்தது கேடுகெட்டச் செயல். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், இதன் பின்னணியை முழுவதும் வெளிக்கொணர வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பல மக்களை பாத்திக்கும் வகையில் இப்பிரச்சினை உள்ளது. ஒரு பெரிய ஆளும் கட்சியின் சார்பில் இயங்கும் ஊடகம் இத்தகைய செக்ஸ்-படங்களை / வீடியோக்களை, “புளூ-ஃபிளிம்” / நீலப்படம் என்பார்களே அதைப் போன்ற சரக்கை, தினமும் திரும்ப-திரும்ப நேரம்-காலம் குறிப்பிட்டு செய்திகள் நடுவே காண்பித்து ஒளிபரப்பிய பின்னணி, ரகசியம், மர்மம் என்ன?

ஆளும் கட்சிக்காரர்களுடைய மற்றும் அவர்களின் உதவியில் இருக்கும் ஊடகங்களின் பங்கு, சம்பந்தம், பிணைப்பு  மற்றும் இணைப்பு நன்றாகவே தெரிகிறது.

ஏதோ தாங்கள் சாமியார்களின் வேலைகளை படம் பிடித்துக் காட்டுகிறோம் என்று பகுத்தறிவு, நாத்திக முகமூடிகளில் மறைந்துத் தப்பித்துக் கொள்ளமுடியாது.

நல்ல எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை: சமூக உணர்வு, சமூக சிந்தனை, சமூக பாதுகாப்பு, சமூக பிரக்னை, சமூக தார்மீக கடமைகள் முதலியவற்றை மனதில் வைத்துக் கொண்டு, அவர்கள் இந்த வேலையச் செய்ததாகத் தெரியவில்லை. வேறு ஏதோ உள்நோக்கத்தை வைத்துக் கொண்டு, சரியாக பரீட்சை ஆரம்பிக்கும் நாளிலிருந்து இத்தகைய வேலையை, பிரச்சரத்தை, ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளார்கள்.

இந்த காரியத்தை ஒருவன் – ஒரு ஆள் – ஒரு தனிப்பட்ட மனிதன் செய்துவிட முடியாது.

பின்னணி வெளிக்கொணர வேண்டும்: ஆகவே, இதன் பின்னணியில் மிகவும் பலமான, அதிகாரம் கொண்ட, ஆதிக்கம் கொண்ட, பணபலம் கொண்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் பல நாட்கள் உட்கார்ந்து பேசி, ஆலோசனை செய்து, உபகரணங்களை, ஆட்களை ஏற்பாடு செய்து கொண்டு, இடம்-நேரம்-ஏவல் அறிந்து செயல்பட்டுள்ளது தெரிகின்றது.

பின்னணியில் இருப்பவர்களும் அறியப்பட வேண்டும்: எனவே யார் பின்னணியில் இருந்தவர்கள், எத்தனை பேர் வேலை செய்தார்கள் என்று அலசப்படுகிறது:

* இந்தகைய திட்டத்தைத் தீட்டியவர்கள்

* குறிப்பாக நிதயானந்தர் மற்றும் ரஞ்சிதா இருவரின் சம்ந்தத்தை அறிந்தவர்கள்

* அந்த இருவரும் “ஆஸ்ரமமோ” அல்லது “வேறு இடமோ” என்று பீடிகை போடுகிறார்களே, தெரிந்தே ஏன் அப்படி புளுக வேண்டும்? அதாவது அந்த இடம் தெரிந்திருக்கிறது. அந்த இடத்திலேயே செய்திருக்கிறார்கள்!

* இருவரின் நடவடிக்கைகளையும் அந்த அந்நியோயன்னியக்காரர்கள்

* ஏற்கெனவே அறிந்து, புரிந்து வைத்திருக்கிறார்கள்.

* அவர்களின் சல்லாபங்களையும் திருட்டுத்தனமாகப் பார்த்திருக்கிறர்கள், ஒத்திகைக்காக!

* ஏனெனில் அப்பொழுதுதான் அத்தகைய காட்சிகள் கேமாராவின் கண்களுக்குள் வரும், பிடிக்கும், பிறகு தங்களது டிட்டத்திற்கேற்றப்படி வரும்.

* தொழிற்நுட்ப ரீதியில் சரியான கோணம் / கோணங்களில் கேமராவை / கேமராக்களை வைத்தவர்கள்

* அவர்களுக்கு படுக்கையறைக்கு போகும் அளவில் சுதந்திரம் இருந்திருக்கிறது என்பதை கவனித்துக் கொள்ளவேண்டும்.

* அவ்வாறே கேமராவை வைத்தவர்கள்.

* மறுபடியும் சுதந்திரமாக படுக்கையறைக்குச் சென்று கேமராக்களை எடுத்து வந்தவர்கள்.

* அவர்களின் பேச்சுப்படியே இரண்டு நாட்களுக்கு மேலே படுக்கையறைக்குள் நுழைந்திருக்கிறார்கள்.

* அதாவது ஒருநாளில் இருமுறை – படுக்கையறைக்குள் சென்று உள்ளே வைக்க, வைத்ததைத் திரும்பி எடுக்க – அப்படியென்றால், அந்த நடிக்கைக்கு எத்தனைத் தடவை உடை மாறியுள்ளதோ அத்தனை தடவைகள், படுக்கையறைக்குள் உள்ளே வைத்து எடுத்திருக்கிறர்கள்!

* என்னடா அது, நிதயானந்தா மற்றும் ரஞ்சிதா தவிர இந்த் ஆட்கள் வேறு தினமும் இப்படி தாராளமாக “அந்தப்புரத்தில்” சென்று-சென்று வருகிறர்களே என்று யாருக்கும் தெரிவில்லையா, கண்டுக் கொள்ளவில்லையா, அல்லது அவர்களும் இந்த திட்டத்தில் ஒத்துழைத்தார்களா?

* பிறகு – டிவிடி பிளேயர்-காப்பியர் என்றால் அப்படியே பதிவு செய்யப்பட்டதை பிரதிகள் எடுத்து விடலாம்.

* ஆனால், ஒரு மணி நேரம் ஓடியிருந்தால் எடிட்டிங் செய்யப் பட்டைருக்கவேண்டும், இவற்றையெல்லாம் செய்தவர்கள் யார்?

* பிறகு இந்த துப்பறியும் கோஷ்டி முதலில் அல்லது பிறகு அல்லது பலதடவை யார்-யாருக்கெல்லாம் போட்டுக் காண்பித்தார்கள்?

* பார்த்தவர்கள் எல்லோரும் யார்?

* பார்த்துப் புரிந்து கொண்டு, அடையாளம் கண்டு, அதற்கேற்றப்படி உரையெழுதியது யார்?

எனவே அந்த “புளூ ஃபிலிம்” எடுத்ததில், பங்கு கொண்டதில் பலர் ஈடுப்பட்டுள்ளது தெரிகின்றது.

ஆகவே, இது “புளூ ஃபிலிம்” எடுத்து வியாபாரம் செய்யும் கோஷ்டியின் வேலையோ எனவும் தோன்றுகிறது.

தேவநாதன் மற்றும் நித்யானந்தா விஷயத்தில் தான், உடனே மார்க்கெட்டில் சிடிகள் கிடைக்கின்றன என்று அந்தந்த பத்திரிக்கையாளர்கள், இணைத்தள விசுவாசிகள், ஆதரவாளர்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறர்கள். குறிப்பாக இந்தியாவில் நமக்குக் கிடைக்கிறதோ இல்லையோ, வலைகுடா, கனடா, ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ளவர்களுக்கு சுலபமாகக் கிடைத்துவிடுவது ஆச்சரியமாக உள்ளது.

அதாவது அத்தகைய தொழிற்நுட்பம் அறிந்த “வெள்ளைக் கலர் காலர்” வித்துவான்கள் – மக்களும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.

இதே வி ஹியூம் என்றால், மாத்யூஸ், ஜோ, ஷாஜி, கோயல் ராட்சன்…………..என்றால் ஒன்றும் கிடைப்பதில்லை.

பாலியல் குற்றங்களிலும் ஏன் பாரபட்சம் பார்க்கப் படுகிறது? இன்டர்போல் எச்சரிக்கை வருகிறது (பல செக்ஸ் குற்றவாளிகளைப் பற்றி), இங்கிலாந்து போலீஸாரே சென்னைக்கு வந்து விசாரித்து கைது செய்து கொண்டு லண்டனுக்கே அந்த குற்றாவாளியை கூட்டிச் செல்கிறார்கள், கைது செய்யப்பட்ட வில் ஹியூம் ரஜினி காந்த படத்தில் நடிக்கிறான், தப்பித்து ஓடுகிறான்., ஸ்ரீபெரொம்புதூரில், வேலூரில், கன்னியாகுமரியில், திருச்சியில்……….

ஆனால் அதைப்பற்றி இந்த புலிகள் ஒன்றும் செய்வதில்லை, அவர்களே தாராளமாக இன்டர்நெட்டில் உலாவ விட்டாலும் அதையெல்லாம் பார்ப்பதில்லை, சிட்களாஆக மாற்றுவதில்லை, பர்மா பஜார், ரிச்சித் தெருக்களில் விற்பதில்லை!

வேடிக்கைதான்!

ஒருவேளை, இந்த பாழாபோன செக்ஸில் கூட செக்யூலரிஸம் பார்க்கிறர்களா, இந்த கேடு கெட்டவர்கள்?