Posts Tagged ‘சிலை வைக்கலாம்’

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

H raja comments and removal

பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு: இருப்பினும் ராஜா பெயரில் அத்தகைய அறிவிப்பு வெளிவந்ததும், தேசிய அரசிலை கவனித்து வரும் திராவிடக் கட்சிகள் அதிர்ந்து விட்டன. நீர்த்து விட்ட கம்யூனிஸத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு மனமில்லை. ஏனெனில், கூட்டணி பேரத்தில் நஷ்டம் வரும். ஆகவே, நக்கீரன் கோபால் அப்பணியை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பெரியார் சிலையை உடைப்போம் என தெரிவித்த எச்.ராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்[1]. நக்கீரன், ஒரு முஸ்லிம் மூலமாக, கம்யூனிஸத்தை ஆதரிப்பது போல ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது செயற்கையாக உள்ளது[2]. எந்த துலுக்கனும், கம்யூனிஸத்தை ஆதடிக்க மாட்டான் என்பதையும், சிலை வைப்பு, திறப்பு முதலியவற்றை அடியோடு எதிர்ப்பான் என்பதும் தெரிந்த விசயம் தான். இருப்பினும், கோபால் செய்வது, திமுகவின் ஆதரவு இருப்பது வெளிப்படுகிறது. அதாவது, திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள் சஞ்சலத்தில் உள்ளனர் என்று தெரிகிறது.

Stalin, DK, Vaiko against Raja

திராவிட கட்சி தலைவர்களின் வீராப்பு: திக, திமுக தலைவர்கள் ஆக்ரோஷமாக அறிக்கை விட்டதாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல் தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[3]. “ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல்………………….” என்றது, ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஒப்புக் கொண்டால் போலிருக்கிறது! எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்[4]. எச். ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது: “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த உடனேயே காளித்தனங்களை செய்கிறார்கள், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இப்படி பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அதை அவர்கள் உடைக்கட்டும், அதனை வரவேற்கிறோம்”. பிறகு, அஞ்சுவது, மிரட்டுவது என்றேல்லாம் ஏன் என்று தெரியவில்லையே?

Vaiko balances verbal violence

அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு!: ஈரோட்டில் ம.தி.மு.க-வின் 26 வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோவுக்கு இந்தத் தகவல் கிடைக்க மிகவும் ஆக்ரோஷமானார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ[5], “பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்,” என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்[6]. “ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார். “எச்சை” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. என்ன ஒரு பெண்மணி இப்படி பேசலாமா என்று கேட்டால், டுவிட்டரில் அவரது பதிவுகள், இதை விட மோசமக இருக்கின்றன.

Raja disturbed the DK cadre

சிலை கலாச்சாரம் திராவிடத்திற்கு அடிப்படையானது: நாத்திக கொள்கைகளை பின்பற்றி வரும் திராவிட சித்தாந்திகள் இந்துமதத்தை எதிர்த்து வருவதால், கடவுளர்களின் உருவங்கள், சித்திரங்கள் முதலியவற்றை எதிர்த்து வந்தனர். தாவது உருவச்சிலையை எதிர்ப்பது உடைப்பது என்பது, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்ற விதத்தில் செய்து வந்தனர். சிலைகளை எதிர்த்துக் கொண்டே, சிலைகளை ராமசாமி நாயக்கர், விநாயகர் சிலை உடைத்து, வழக்குகளில் சிக்கியுள்ளார். உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், திராவிட கழகங்களுக்கு ஒன்றும் சிலை வைப்பது, உடைப்பது புதியதல்ல என்ற நிலையும் உருவாயிற்று. 1968ல் உலக தமிழ்நாடு பெயரில், மெரினா கடற்கரையில் சிலைகளை திமுக வைத்தது. அதே காலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். சிலைகளுக்குப் பிறகு, திமுக சமாதியும் கட்ட ஆரம்பித்தது. இவ்விரு திராவிட சம்பிரதாயங்கள் இன்று வரை தொடந்து வருகின்றது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொண்டார். ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்த போது, அது உடைத்தெரியப் பட்டது! ஆனால், எம்ஜிஆர் இறந்த பிறகு, அவருக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.

Why Dravida ideologists oppose and support statues

சிலைகள் அதிகமானது, விழாக்களும் அதிகமானது: அம்பேத்கரைப் பற்றி முதலில் திராவிட சித்தாந்திகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஜாதிய அரசியலை நிலைப் படுத்த, அம்பேத்கர் சிலைகளை வைத்து அவற்றை சின்னமாக்கியது திராவிட-அம்பேத்கர் போலி சித்தாந்திகள் தாம். அம்பேத்கர் என்ன தமிழரா, அவர் சிலை ஏன் தமிழகத்தில் வைக்க வேண்டும் போன்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுப்பப் பட்டாலும், ஓட்டு வங்கி அரசியலில், அவையெல்லாம் நீர்க்கப் பட்டன, சமரசம் செய்து கொள்ளப்பட்டன.  முத்துராமலிங்கத் தேவர் சிலை வைத்தது, சிலைப்பு-போட்டியை அதிகமாக்கியது. அது முதல், இருவருக்கும் மாற்றி-மாறி மாலை போட்டு, கும்பிடுவது என்பது திராவிர அரசியல் கலாச்சாரத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த சடங்கில் பெரியார் சிலையும் சேர்ந்தது. கண்ணகி சிலை வைத்தும் அரசியல் செய்தது கருணாநிதி தான்! திராவிட ஆட்சியில் தான் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளும் கோவில்களிலிருந்து கடத்தப் பட்டன. அந்நிலையில், இப்பொழுது, பெரியார் சிலை விவகாரத்தை பெரிது படுத்துவது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-03-2018

vck-Thevar statue-attacked

[1] நக்கீரன், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்ததுதமிமுன் அன்சாரி கடும் தாக்கு, வே.ராஜவேல், Published on 06/03/2018 (13:59) | Edited on 06/03/2018 (14:00).

[2] http://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-has-no-courage-thamimun-ansari

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தில் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள்வீரமணி, சுப.வீ சவால்!, Posted By: Gajalakshmi Published: Tuesday, March 6, 2018, 12:48 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/veeramani-suba-veerapandiyan-condemns-h-raja-s-post-periyar-313439.html

[5] விகடன், நாள் குறிச்சிட்டு வாங்க ஹெச்.ராஜா’’ – பகிரங்கமாக எச்சரித்த வைகோ!, Posted Date : 15:37 (06/03/2018); Last updated : 17:35 (06/03/2018)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/118401-vaiko-warns-hraja.html

“கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்” – சரித்திரத்தை மறந்த தரித்திரங்கள்!

மார்ச் 14, 2010

“கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்” – சரித்திரத்தை மறந்த தரித்திரங்கள்!
கருணாநிதிக்கு சிலையே வைக்கலாம்-தங்கபாலு
வியாழக்கிழமை, மார்ச் 11, 2010, 13:13[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/03/11/karunanidhi-deserves-statue-says.html

சென்னை: கருணாநிதியின் சாதனைக்காக, அவருக்கு சிலை வைப்பது கூட வரவேற்கத்தக்க செயலாகும். அதை தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்தி வரவேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.

புதிய சட்டசபை கட்டிட வளாகத்தில் முதல்வர் கருணாநிதியின் உருவப் படம் வைக்க தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

ஆனால், இது சட்டசபை மரபுகளுக்கு முரணானது எனக்கூறி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் அதிமுகவின் எதிர்பு ஏற்கத்தக்கதல்ல என்று கருத்து கூறியுள்ள காங்கிரசார், ‘பண்முகப் பேராண்மை நாயகர்’ கருணாநிதிக்கு சிலை வைத்தால் கூட வரவேற்போம் என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு விடுத்துள்ள அறிக்கையில், ‘முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றோடு பின்னி இணைந்து புகழ்பெற்று வாழ்பவர்.

தமிழகம், தமிழர்கள், தமிழ் மொழி உயர்வுக்கு தொடர்ந்து தொய்வின்றி 86வது வயதிலும் கடுமையாக உழைத்து வரும் கருணாநிதி, அனைத்து கட்சியினராலும் போற்றப்படுகிற பன்முகப் பேராண்மை நாயகராக விளங்குகிறார்.

அனைத்து நிலைகளிலும் அவர் ஆற்றிவரும் பணியை வரலாறு வாழ்த்தும். அவ்வாறு செயலாற்றி வெற்றிகண்ட அவரது உருவப்படம் அக்கட்டிட வளாகத்தில் இடம் பெறுவது முற்றிலும் பொருத்தமாகும்.

அது மரபுக்கு முரணானது என்றால் அம்மரபே சரியானதல்ல. எனவே கருணாநிதியின் உருவப் படம் வைக்க புதிய மரபை உருவாக்கலாம்.

அரசியலில் கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம். ஆனாலும் 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறு என்று போற்றத்தக்க தலைவர் கருணாநிதியின் உருவ படம் வைப்பதில் காழ்ப்புணர்ச்சி கூடாது.

கருணாநிதியின் சாதனைக்காக அவருக்கு சிலை வைப்பது கூட வரவேற்கத்தக்க செயலாகும். அதை தமிழ்நாடு காங்கிரஸ் வாழ்த்தி வரவேற்கும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம், துணைத்தலைவர் டி.யசோதா, கொறடா ச.பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘எம்ஜிஆரின் உருவப்படம் தமிழக சட்டசபையில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது என்று கூறியிருக்கிறார்.

மறுக்கவில்லை, இன்று கருணாநிதியின் உருவப்படத்தை திறப்பதையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. அதே நேரத்தில், அன்று சட்டமன்ற திமுக உறுப்பினராக இருந்த பரிதி இளம்வழுதியும் ஆதரித்தார் என்பதை ஜெயலலிதா மூடி மறைத்தது ஏனோ?

அன்று எம்ஜிஆர் படத்தை திறந்ததை திமுக ஆதரித்தது. இன்று கருணாநிதி படத்தை திறப்பதை அதிமுக எதிர்ப்பது ஏன்?

இத்தகைய அரசியல் அநாகரிகத்தை நாள்தோறும் அரங்கேற்றி வருகிற இவருக்கு தமிழ் சமுதாய மக்கள் பாடம் புகட்ட வேண்டிய நேரத்தில் நிச்சயம் புகட்டுவார்கள்’ என குறிப்பிட்டுள்ளனர்.