Posts Tagged ‘நீதி கட்சி’

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (1)

Lenin statue down - Tiripura

திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி: மார்ச் 3, 2018 அன்று அறிவிக்கப் பட்ட தேர்தல் முடிவுகள் மூலம், திரிபுராவில் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது[1]. இது அரசியல் ரீதியில், சித்தாந்த போராட்ட நிலையில், ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. “காங்கிரஸ் இல்லாத பாரதம்” என்ற கொள்கையில் அரசியல் செய்யும் போது, இவ்வாறு கம்யூனிஸம் தோற்றது, பெரிய சாதனை என்றே சொல்ல வேண்டும். அதனால் தான், இது கம்யூனிஸ சித்தாந்திகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் நடத்தி, பிஜேபி அரசு அமைத்துள்ளதாக, பிருந்தா காரத் குற்றஞ்சாட்டினார். ஆனால், பிஜேபி தேசியம், தேசிஅ ஒருமைப்பாடு பற்றி தெளிவாக இருப்பதாக எடுத்துக் காட்டியது. உடனடியாக மாநிலத்தில் சில பகுதிகளில் வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன[2]. வழக்கம் போல பரஸ்பர குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வன்முறைகள் கம்யூனிஸ்டுகளின் வாடிக்கையான செயல்பாடாக இருந்து வந்ததால், அதனை பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை.

Second Lenin statue down - Tiripura

லெனின் சிலை உடைப்பு: திரிபுராவில் மார்க்சிஸ்ட் தொடர்ந்து ஆட்சி செய்வதை கொண்டாடும் விதமாக 2013ல் லெனின் சிலையை நிறுவினர். ஆனால் பாஜக ஆட்சியை கைப்பற்றிய இரண்டாவது நாளே மார்க்சிஸ்ட் ஆட்சியின் தொடர் வெற்றி அடையாளமான லெனினின் சிலையை புல்டௌசரை வைத்து காவி உடை அணிந்த சிலர் அகற்றியுள்ளனர்[3]. சிலையை உடைத்ததும், ‘பாரத் மாதா கி ஜெய்’ என கூச்சல்களிட்டதும் இது தொடர்பான சுற்றில் உள்ள ஒரு விடியோவில் தெரிகிறது[4]. சட்டவிரோதமாக இதுபோன்ற செயல்களில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபடுவதாக சிபிஐ குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பிஜேபி இதனை மறுத்துள்ளது. பெலோனியா சதுக்கத்தில் இருந்த லெனின் சிலை உடைக்கப்பட்டது[5].  திரிபுரா மாநிலம் சப்ரூம் மோட்டார் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த இன்னொரு லெனின் சிலை உடைக்கப்பட்டது[6]. இதனால் 144 ஊரடங்கு சட்டமும் அமூல் படுத்தப் பட்டது. யு.எஸ்.எஸ்.ஆர் உடைந்த போது, லெனின் சிலைகள் உடைக்கப் பட்டன. பிரிந்த நாடுகளில் உள்ள ஆயிரக் கணக்கான சிலைகள் அகற்றப் பட்டன.

Mamta, rao, third front

மேற்கு வங்காளத்தை கம்யூனிஸ ஆட்சியை வீழ்த்திய மம்தா சிலையுடைப்பை எதிர்த்தது: 33 வருடங்களாக மேற்கு வங்காளத்தில் இருந்த சி.பி.எம் ஆட்சியை நீக்கி பதவிக்கு வந்தார். ஆனால், இப்பொழுது, லெனின் மற்றும் மார்க்ஸ் சிலைகளை அப்புறப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று கூறியுள்ளது[7] வேடிக்கையாக உள்ளது. ஏனெனில், மறுபடியும் பிஜேபிக்கு எதிராக, ஒரு அணியை உண்டாக்க மம்தா, ராஜசேகரராவ், ஸ்டாலின் முதலியோர் முயலும் நேரத்தில், இவ்வாறு கூறப் பட்டுள்ளதையும் கவனிக்கப் பட்டுள்ளது[8]. அதுமட்டுமல்லாது, அங்கு கம்யூனிஸத் தலைவர்கள் யாரும் மம்தாவை நம்புவதாக இல்லை. இருப்பினும் கூட்டணி அரசியலில் ஆதாயம் பெறலாம் என்ற நோக்க்கில் பேசியிருப்பது நன்றாகவே தெரிகிறது. இரண்டாவது அணி தலைமையில் காங்கிரஸ் தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்றாலே, முரண்பட்ட, எதிர்-புதிர் கட்சிகள் ஒன்று சேர்ந்து வந்து, பிரிந்து போகும் நிலை என்பதும் மக்களால் அறியப் பட்ட விசயமாக விட்டது. அவர்களால், நிச்சயமாக நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. மேலும், இது ஓட்டுகளைப் பிரித்து பிஜேபிக்குத் தான் சாதகத்தை ஏற்படுத்தும்.

Jayalaita statue

சிறிது நாட்களுக்கு முன்னர் ஜெயலலிதா சிலை திறந்து உருவான “உருவப் பிரச்சினைகள்” [9]: அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை ரூ.7 லட்சம் மதிப்பில் 350 கிலோ எடையில் 7 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதியன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த சிலை ஜெயலலிதாவின் முகத்தை போல் இல்லை என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. உள்பட பலரும் குற்றம்சாட்டினர். அதேபோல், சமூக வலைதளங்களிலும் பல்வேறு விமர் சனங்கள், கருத்துகள் வந்தன. அதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ‘ஜெயலலிதா சிலையில் மாற்றம் செய்ய தலைமைக்கழகம் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கும்’ என்று தெரிவித்தார். அதன்படி, ஜெயலலிதாவின் சிலையை வடிவமைத்த சிற்பி பிரசாத்திடம், ஜெயலலிதாவின் முகத்தை மாற்ற சொல்லி இருப்பதாக கூறப்பட்டது. அவரும் தனது சொந்த செலவிலேயே சிலையை மாற்றி தருவதாக கூறியிருந்தார். இந்தநிலையில், ஜெயலலிதா சிலையுடன், எம்.ஜி.ஆர். சிலையையும் மாற்றம் செய்ய அ.தி.மு.க. தலைமை முடிவு செய்துள்ளது. சிலைகளை செய்யும் பணிகளையும் ஆந்திர மாநிலத்தில் உள்ள மற்றொரு சிற்பியான டி.ராஜ்குமார் உடையார் என்பவரிடம் வழங்கப்பட்டுள்ளது[10]. இந்த 2 சிலைகளையும் 1½ மாத காலத்தில் சிறப்பாக செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி அடுத்த மாதம் இறுதியில் இந்த சிலைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது. 05-03-2018 அன்று வேலப்பன்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்த எம்.ஜி.ஆர். சிலையை வடிவமைத்தவர் ராஜ்குமார் உடையார் என்பது குறிப்பிடத்தக்கது.

MGR statue, Rajini

05-03-2018ல் எம்ஜிஆர் சிலை திறப்பு, லெனின் சிலை உடைப்பு, 06-03-2018 அன்று பெரியார் சிலை சர்ச்சை: “எம்ஜிஆர் நுற்றாண்டு விழா” போர்வையில், ஏ.சி.சண்முகம் முதலியார் சிலை திறப்பு விழா நடத்தியது, ரஜினியை வரவழைத்தது வேடிக்கையாக இருந்தது. இவர் பழைய நினைவு ஆதிக்க சிந்தனைகளில் தான் “புதிய நீதிக் கட்சி” தொடங்கினார். ஆனால், தேர்தல் நேரத்தில், ஏதாவது ஒரு கட்சியுடன் பேரம் பேசி, அமைதியாகி விடுவார். வேலப்பன்சாவடியில் உள்ள எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் சிலையை, ரஜினிகாந்த் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்த பின்னர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்[11]. விழாவில் நடிகர்கள் பிரபு, விஜய்குமார், சுந்தர் சி, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு உள்ளனர்[12]. ரஜினிகாந்தின் பேச்சு பேராசையாகத்தான் வெளிப்பட்டது. யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று ஒப்புக் கொண்டு, எம்ஜிஆர் ஆட்சி அளிப்பேன் என்று பேசியது தமாஷாக இருந்தது. அந்நிலையில், சிலை உடைப்பு விசயத்தில், எச். ராஜா தனது முகநூலில், ”இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை” என குறிப்பிட்டார். நிச்சயமாக ராஜா அல்லது அவர் பெயரில், யாரோ அவசரக் குடுக்கைத் தன்மாக அப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. திராவிட சித்தாந்தத்தில் ஆட்சி நடக்கும் மாநிலத்தில், எந்த முதிர்ந்த அரசியல்வாதி அத்தகைய பதிவை செய்ய மாட்டார்.

© வேதபிரகாஷ்

07-03-2018

MGR statue, Rajini, அ ௵ ஶன்முகம்

[1] Hindusthan Times, Violence in Tripura after BJP win; Lenin statue toppled, Section 144 in several areas,  Updated: Mar 06, 2018 18:10 IST

[2] https://www.hindustantimes.com/india-news/people-want-statues-of-vivekananda-and-sardar-patel-not-lenin-says-tripura-bjp-leader/story-RsgVHcrmChdON3TadY1gIK.html

[3] நியூஸ்.டி.எம், லெனின் சிலை உடைப்பு; திரிபுராவில் வன்முறை, Posted Date : 12:07 (06/03/2018)

[4] http://www.newstm.in/India/1520318236825?Lenin-Statue-Vandalised;-Violence-in-Tripura

[5]  தினகரன், திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைப்பு, 2018-03-06@ 20:04:31.

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=381832

[7] Hindusthan Times, Lenin statue toppled in Tripura, Mamata Banerjee says won’t tolerate it,,  Updated: Mar 06, 2018 20:14 IST

[8] https://www.hindustantimes.com/kolkata/lenin-statue-toppled-in-tripura-mamata-banerjee-says-won-t-tolerate-it/story-OtLwhnfpwK3HmXDgtHTLIL.html

[9] தினத்தந்தி, ஜெயலலிதா சிலை செய்யும் பணி வேறு சிற்பியிடம் ஒப்படைப்பு, மார்ச் 07, 2018, 04:30 AM

[10] https://www.dailythanthi.com/News/State/2018/03/07035053/The-task-of-Jayalalithaa-statue—Handed-over-to-another.vpf

[11] தினத்தந்தி, எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆரின் சிலையை திறந்து வைத்தார் நடிகர் ரஜினிகாந்த், மார்ச் 05, 2018, 05:42 PM

[12]  https://www.dailythanthi.com/News/TopNews/2018/03/05174228/Rajinikanth-is-the-last-actor-to-open-the-MGR-Statue.vpf</p>