Posts Tagged ‘பிள்ளையார் சிலையுடைப்பு’

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

மார்ச் 7, 2018

லெனின் சிலை உடைப்பு, எம்ஜிஆர் சிலை திறப்பு, பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு, அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு! (2)

H raja comments and removal

பெரியார் சிலை அகற்றம் அறிவிப்பு: இருப்பினும் ராஜா பெயரில் அத்தகைய அறிவிப்பு வெளிவந்ததும், தேசிய அரசிலை கவனித்து வரும் திராவிடக் கட்சிகள் அதிர்ந்து விட்டன. நீர்த்து விட்ட கம்யூனிஸத்தை ஆதரிக்கவும் அவர்களுக்கு மனமில்லை. ஏனெனில், கூட்டணி பேரத்தில் நஷ்டம் வரும். ஆகவே, நக்கீரன் கோபால் அப்பணியை செய்துள்ளது வேடிக்கையாக உள்ளது. பெரியார் சிலையை உடைப்போம் என தெரிவித்த எச்.ராஜாவை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்தது என்றும் தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்[1]. நக்கீரன், ஒரு முஸ்லிம் மூலமாக, கம்யூனிஸத்தை ஆதரிப்பது போல ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது செயற்கையாக உள்ளது[2]. எந்த துலுக்கனும், கம்யூனிஸத்தை ஆதடிக்க மாட்டான் என்பதையும், சிலை வைப்பு, திறப்பு முதலியவற்றை அடியோடு எதிர்ப்பான் என்பதும் தெரிந்த விசயம் தான். இருப்பினும், கோபால் செய்வது, திமுகவின் ஆதரவு இருப்பது வெளிப்படுகிறது. அதாவது, திராவிட கட்சிகள், தலைவர்கள், சித்தாந்திகள் சஞ்சலத்தில் உள்ளனர் என்று தெரிகிறது.

Stalin, DK, Vaiko against Raja

திராவிட கட்சி தலைவர்களின் வீராப்பு: திக, திமுக தலைவர்கள் ஆக்ரோஷமாக அறிக்கை விட்டதாக, ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல் தைரியம் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்[3]. “ஆட்சிக்கு வரும்வரை காத்திருக்காமல்………………….” என்றது, ஆட்சிக்கு வந்துவிடும் என்று ஒப்புக் கொண்டால் போலிருக்கிறது! எச். ராஜா மீது வழக்கு பதிய வேண்டும் என்று சுப. வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்[4]. எச். ராஜாவின் பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியதாவது: “திரிபுராவில் ஆட்சிக்கு வந்த உடனேயே காளித்தனங்களை செய்கிறார்கள், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே இப்படி பேசக்கூடிய துணிச்சல் வந்திருக்கிறது என்றால் அதை அவர்கள் உடைக்கட்டும், அதனை வரவேற்கிறோம்”. பிறகு, அஞ்சுவது, மிரட்டுவது என்றேல்லாம் ஏன் என்று தெரியவில்லையே?

Vaiko balances verbal violence

அதிர்ந்து போன திராவிட சித்தாந்திகளின் கொதிப்பு!: ஈரோட்டில் ம.தி.மு.க-வின் 26 வது மாநிலப் பொதுக்குழுவில் இருந்த வைகோவுக்கு இந்தத் தகவல் கிடைக்க மிகவும் ஆக்ரோஷமானார். நிர்வாகி ஒருவர் மேடையில் பேசிக்கொண்டிருக்க, அவரை இடைமறித்து மைக்பிடித்த வைகோ[5], “பெரியார் சிலையை உடைப்பேன்னு ஒருவர் சொல்லியிருக்கார். அவருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டுல எந்தப் பகுதியில வேணும்னாலும் வச்சிக்கலாம். தைரியம் இருந்தால் சிலை உடைக்க நாள் குறிச்சிட்டு வாங்க. அப்படி வர்றவங்களோட கை, கால் துண்டாக்கப்படும். இந்தக் கை அரிவாள் பிடித்த கை. மோடியின் முப்படையும் வந்தாலும் அதை சந்திக்க நான் தயார்,” என ஆக்ரோஷமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்[6]. “ஹெச். ராஜா மட்டுமல்ல, அவருடைய பாட்டன் வந்தாலும் பெரியாரின் சிலையை ஒன்றும் செய்ய முடியாது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியிருக்கிறார். பெரியார் குறித்த ஹெச். ராஜாவின் கருத்து, அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும் பா.ஜ.கவின் கருத்து அல்ல என்றும் அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, “ஹெச்.ராஜா தனது புத்தியை இழந்துவிட்டார்” என தெரிவித்துள்ளார். “எச்சை” என்று குறிப்பிட்டுள்ளது கவனிக்கத் தக்கது. என்ன ஒரு பெண்மணி இப்படி பேசலாமா என்று கேட்டால், டுவிட்டரில் அவரது பதிவுகள், இதை விட மோசமக இருக்கின்றன.

Raja disturbed the DK cadre

சிலை கலாச்சாரம் திராவிடத்திற்கு அடிப்படையானது: நாத்திக கொள்கைகளை பின்பற்றி வரும் திராவிட சித்தாந்திகள் இந்துமதத்தை எதிர்த்து வருவதால், கடவுளர்களின் உருவங்கள், சித்திரங்கள் முதலியவற்றை எதிர்த்து வந்தனர். தாவது உருவச்சிலையை எதிர்ப்பது உடைப்பது என்பது, மூடநம்பிக்கையை எதிர்ப்பது என்ற விதத்தில் செய்து வந்தனர். சிலைகளை எதிர்த்துக் கொண்டே, சிலைகளை ராமசாமி நாயக்கர், விநாயகர் சிலை உடைத்து, வழக்குகளில் சிக்கியுள்ளார். உச்சநீதி மன்றத்தில் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், திராவிட கழகங்களுக்கு ஒன்றும் சிலை வைப்பது, உடைப்பது புதியதல்ல என்ற நிலையும் உருவாயிற்று. 1968ல் உலக தமிழ்நாடு பெயரில், மெரினா கடற்கரையில் சிலைகளை திமுக வைத்தது. அதே காலத்தில் ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்தினர். சிலைகளுக்குப் பிறகு, திமுக சமாதியும் கட்ட ஆரம்பித்தது. இவ்விரு திராவிட சம்பிரதாயங்கள் இன்று வரை தொடந்து வருகின்றது. கருணாநிதி உயிருடன் இருக்கும் போதே சிலை வைத்துக் கொண்டார். ஆனால், 1987ல் எம்ஜிஆர் இறந்த போது, அது உடைத்தெரியப் பட்டது! ஆனால், எம்ஜிஆர் இறந்த பிறகு, அவருக்கும் சிலைகள் வைக்கப்பட்டன.

Why Dravida ideologists oppose and support statues

சிலைகள் அதிகமானது, விழாக்களும் அதிகமானது: அம்பேத்கரைப் பற்றி முதலில் திராவிட சித்தாந்திகள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஜாதிய அரசியலை நிலைப் படுத்த, அம்பேத்கர் சிலைகளை வைத்து அவற்றை சின்னமாக்கியது திராவிட-அம்பேத்கர் போலி சித்தாந்திகள் தாம். அம்பேத்கர் என்ன தமிழரா, அவர் சிலை ஏன் தமிழகத்தில் வைக்க வேண்டும் போன்ற கேள்விகள் ஆரம்பத்தில் எழுப்பப் பட்டாலும், ஓட்டு வங்கி அரசியலில், அவையெல்லாம் நீர்க்கப் பட்டன, சமரசம் செய்து கொள்ளப்பட்டன.  முத்துராமலிங்கத் தேவர் சிலை வைத்தது, சிலைப்பு-போட்டியை அதிகமாக்கியது. அது முதல், இருவருக்கும் மாற்றி-மாறி மாலை போட்டு, கும்பிடுவது என்பது திராவிர அரசியல் கலாச்சாரத்திற்கு ஆண்டிற்கு ஒருமுறை கட்டாயமாக்கப் பட்டது. இந்த சடங்கில் பெரியார் சிலையும் சேர்ந்தது. கண்ணகி சிலை வைத்தும் அரசியல் செய்தது கருணாநிதி தான்! திராவிட ஆட்சியில் தான் கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளும் கோவில்களிலிருந்து கடத்தப் பட்டன. அந்நிலையில், இப்பொழுது, பெரியார் சிலை விவகாரத்தை பெரிது படுத்துவது வியப்பாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

07-03-2018

vck-Thevar statue-attacked

[1] நக்கீரன், பெரியார் சிலையை உடைக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இல்லை என்பது நாடறிந்ததுதமிமுன் அன்சாரி கடும் தாக்கு, வே.ராஜவேல், Published on 06/03/2018 (13:59) | Edited on 06/03/2018 (14:00).

[2] http://www.nakkheeran.in/special-articles/special-article/bjp-has-no-courage-thamimun-ansari

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தில் இருந்தால் பெரியார் சிலையை உடைத்துப் பாருங்கள்வீரமணி, சுப.வீ சவால்!, Posted By: Gajalakshmi Published: Tuesday, March 6, 2018, 12:48 [IST]

[4] https://tamil.oneindia.com/news/tamilnadu/veeramani-suba-veerapandiyan-condemns-h-raja-s-post-periyar-313439.html

[5] விகடன், நாள் குறிச்சிட்டு வாங்க ஹெச்.ராஜா’’ – பகிரங்கமாக எச்சரித்த வைகோ!, Posted Date : 15:37 (06/03/2018); Last updated : 17:35 (06/03/2018)

[6] https://www.vikatan.com/news/tamilnadu/118401-vaiko-warns-hraja.html

விநாயகர் கைது: நாத்திக சத்திரியரான கருணாநிதியின் மகத்தான சாதனை!

செப்ரெம்பர் 12, 2010

விநாயகர் கைது: நாத்திக சத்திரியரான கருணாநிதியின் மகத்தான சாதனை!

Coimbatore Vinayakar arrested with women!

Coimbatore Vinayakar arrested with women!

மக்களோடு மக்களாக விநாயகரும் கைது: போலீசார் அரங்கேற்றிய சதுர்த்திநாடகம்[1]: கஞ்சி குடிக்கும் கருணநிதிக்கு, இந்துக்களை தூஷிக்கும் கருணாநிதிக்கு, போலீஸ் துறையை தன்னிடம் வைத்திருக்கும் கருணாநிதிக்கு, வேறு வேலையில்லை என்றதால், விநாயகரை கைது செய்ய ஆணையிட்டு விட்டாதாகத் தெரிகிறது. கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் கல்லாமேடு பகுதியில், பிரதிஷ்டை செய்த விநாயகர் சிலையை போலீசார் அப்புறப்படுத்தியபோது தடுத்ததாக, ஆண், பெண், குழந்தைகள் உள்ளிட்ட 146 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிலை வைக்கக்கூடாதுஎன எதிர்ப்புத் தெரிவித்து அனுமதி மறுத்த போலீஸார்: கோவை செல்வபுரம் கல்லாமேடு பண்ணாரிமாரியம்மன் கோவில் பகுதியில், இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்றரை அடி உயர விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். சதுர்த்தி விழாவையொட்டி, 20 ஆண்டுகளாக இங்கு இந்து முன்னணியினர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது வழக்கம். கடந்த ஆண்டு இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவர் இறந்ததால், சிலை பிரதிஷ்டை செய்யவில்லை. இந்த ஆண்டு வழக்கம் போல் சிலை பிரதிஷ்டை செய்ய போலீசாரிடம் இந்து முன்னணியினர் அனுமதி கோரினர். வேண்டுகோளை நிராகரித்த போலீசார், சிலையை வைக்கக்கூடாது என தடை விதித்தனர்[2]. இதை ஏற்றுக்கொள்ளாத இந்துமுன்னணியினர், பொறுப்பாளர் குணசேகரன் தலைமையில் மூன்றரை அடி விநாயகர் சிலையை நேற்று முன் தினம் இரவு பிரதிஷ்டை செய்தனர். தகவலறிந்த போலீஸ் துணை கமிஷனர் நாகராஜன், உதவிகமிஷனர்கள் குமாரசாமி, பாலாஜிசரவணன் ஆகியோர், “சிலை வைக்கக்கூடாது’ என எதிர்ப்புத்தெரிவித்தனர்[3].

வேண்டுமென்றே சட்டப்பிரச்சினையை ஏற்படுத்தி கைது செய்யும் போலீஸார் – கைது செய்யப்பட்ட விநாயகர்: போலீசாரோ, முறையாக அனுமதி பெறாமல் விநாயகர் சிலையை வைக்கக்கூடாது எனக் கூறி, அப்புறப்படுத்த முயன்றனர். இதை கவனித்த பெண்கள் விநாயகரை சுற்றிவளைத்து அப்புறப்படுத்தவிடாமல் தடுத்தனர். இதையடுத்து, போலீசார் அங்கிருந்த இந்து முன்னணி தொண்டர்களை கைதுசெய்து வேனில் ஏற்றினர். விநாயகரை சுற்றி வளைத்து நின்ற பெண்களை தவிர்த்து விநாயகர் சிலையை போலீசாரால் கைப்பற்ற முடியவில்லை. அதனால் விநாயகர் சிலையையும் பெண்களையும் சேர்த்து கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்[4]. ஆண்கள், பெண்கள், சிறுமிகள், சிறுவர்கள் என்று மொத்தம் 146 பேரை போலீசார் கைது செய்தனர். கைதுசெய்தவர்களை பாதுகாப்பாக வைக்க கோவை நகரிலுள்ள பல திருமண மண்டபங்களை போலீசார் தேடி அலைந்தனர். விசேஷ நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்ததால் காலியாக எதுவும் இல்லை.

கைது செய்யப்பட்ட விநாயகர் மைதானத்தில் விடுதலை! கோவை அண்ணாமலை ஓட்டல் பகுதியில் வாகனத்தை நிறுத்தி கைது செய்தவர்களை இறங்க அறிவுறுத்தினர். ஒருவரும் இறங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஸ்டேட் பாங்க் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நிலைமை மோசமாவதை உணர்ந்த போலீசார் கைது செய்தவர்களை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்திற்கு கொண்டுசென்றனர். அங்கு கைது செய்யப்பட்டவர்களை இறக்கி விட்டனர் அங்கு விநாயகர் சிலையும் இறக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து கைதுசெய்யப்பட்டவர்களுக்கு மதிய உணவு போலீசாரால் வழங்கப்பட்டது. வாங்க மறுத்து அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை நைட்டி அணிந்த நிலையில் கைது செய்யப்பட்ட பெண்கள் பலர் உணவருந்தாமல் போலீஸ் பயிற்சி மைதானத்திலேயே வைக்கப்பட்டனர்[5]. இதனிடையே இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் போலீசாருக்குமிடையே சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக பேச்சு நடந்தது. இதில் எந்த முன்னேற்றமும் நேற்று மாலை வரை ஏற்படவில்லை.

இந்து முன்னணி பேனர் கிழிப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை[6]: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி வைத்த “பிளக்ஸ்’ பேனரை யாரோ கிழித்து விட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, இந்து முன்னணியினர் நகரில் 10 இடங்களில் “பிளக்ஸ்’ பேனர்கள் வைத்தனர். காரமடை, ஊட்டி மெயின் ரோடு, காந்தி மைதானம், சிறுமுகை ரோடு ஆகிய இடங்களில் வைத்திருந்த ஏழு விளம்பர போர்டுகளை, சிலர் நள்ளிரவில் பிளேடால் கிழித்து விட்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர்கள் ராஜ்குமார், சதீஸ்குமார் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேசனுக்கு காலை 10.00 மணிக்கு சென்று புகார் தெரிவித்தனர். 11.00 மணி ஆகியும் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை செய்யவில்லை. இதையடுத்து, இந்து முன்னணியினர் கோஷம் போட்டு ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். பின்னர், டி.எஸ்.பி., ராஜாராம், இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் வந்து, இந்து முன்னணி நிர்வாகிகளிடம் பேசினர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக டி.எஸ்.பி., கூறியதை அடுத்து 12.30 மணிக்கு இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்[7].

விநாயகர் சதுர்த்தியை வெற்றி விழா ஆக்கப் பாடுபடுவோம் என்று ராம.கோபாலன் கூறினார்[8]: இதுகுறித்து இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 11.9.2010 அன்று உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடவிருக்கிறார்கள். தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சிப் பெருவிழாவாகப் பட்டி தொட்டி எங்கும் கொண்டாடப்பட்டு, இன்று மக்கள் விழாவாக வளர்ந்து வருவதைக் காணமுடிகிறது. சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தவும், தெய்வீகத்தின் மூலம் தேசிய எழுச்சி, தேச பக்தி வளரவும் இவ்விழா உதவியாக அமைகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாம் வல்ல எம்பெருமான் விநாயகர் அருளால் தடைகளெல்லாம் நீங்கி, இந்து எழுச்சி ஓங்கி விநாயகர் சதுர்த்தி விழா வெற்றிகரமாக நடைபெற இந்துக்கள் தாங்கள் வாழும் பகுதியில் உள்ள எல்லா விநாயகர் ஆலயங்களிலும் மனமார பிரார்த்தித்து சிதறு தேங்காய் உடைக்கக் கேட்டுக்கொள்கிறேன். கிராமம்தோறும், வீதி தோறும் உள்ள எல்லா விநாயகரிடமும் நமது பிரார்த்தனையை வைப்போம். எளியோனுக்கு எளியோனாக வீதியில் நின்று நம்மைக் காத்துவரும் கணபதியைக் கைத்தொழுவோம்.

இந்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்த அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் முயற்ச்சியா? அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள், காவல்துறையினர் விழா நடத்தும் சாமான்யனான இந்துக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக செய்திகள் வருகின்றன[9]. இடையூறு செய்வோர் நியாய உணர்வோடு மனம் திருந்தி விழா வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைக்கவும், விழா எடுக்கும் இந்துக்களுக்குத் தைரியமும், உத்வேகமும், நம்பிக்கையும் ஏற்படவும் விநாயகப் பெருமானைப் பிரார்த்திப்போம். நாம் ஆழ்ந்த பக்தி சிரத்தையோடு விநாயகர் பெருமானை வணங்குவோம், தடைகளைக் கடந்து, விநாயகர் சதுர்த்தியை வெற்றிவிழாவாக்கப் பாடுபடுவோம். விநாயகர் அருள் நமக்கு என்றும் துணை. எல்லோரும் விநாயகர் பெருமான் அருளால் எல்லா நலன்களும், வளங்களும் பெற பிரார்த்திக்கிறேன். இவ்வாறு ராம.கோபாலன் கூறியுள்ளார்.

விநாயகர் கோயில் சிலை உடைப்பு, கல்வீச்சால் பதட்டம் :பழநியில் மர்ம நபர்களால் பரபரப்பு[10]; பழநியில் விநாயகர் கோயில் சிலை உடைப்பு, காளியம்மன் கோயில் கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.பழநி கருப்பண தேவர் சந்தில், காக்கும் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக, இப்பகுதி மக்கள் இங்கு கோயில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இங்கு ஒரு விநாயகர், இரண்டு நாகங்கள், ஒரு மூஞ்சுறு(விநாயகர் வாகனம்) சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாதந்திர சதுர்த்தி மற்றும் விசேஷ நாட்களில், இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதிகாலை, விநாயகர் முன் உள்ள மூஞ்சுறு சிலையின் தலைப்பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் வீரப்பபிள்ளை சந்தில் உள்ள பணக்கார காளியம்மன் கோயிலில், நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கற்களை வீசியுள்ளனர். இது குறித்து அங்கு தங்கியிருந்த பூசாரி முருகேசன், போலீசில் புகார் செய்தார். பா.ஜ., நகர தலைவர் தீனதயாளன், இந்து முன்னணி பிரமுகர் ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.டி.எஸ்.பி., பாண்டியராஜன், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். செப். 11ல் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள், பல்வேறு அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பழநி விநாயகர், காளியம்மன் கோயில்களில் நடந்த சம்பவங்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டி.எஸ்.பி., பாண்டியராஜன் கூறுகையில், “”சிலையின் தலைப்பகுதி வட்ட வடிவில் அறுத்து எடுக்கப்பட்டது போன்று காட்சியளிக்கிறது. இப்பிரச்னைக்கு காரணம் விஷமிகளா? வேட்டையாடும் நபர்கள் செய்ததா? என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். இச்சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

பெருந்துறை அருகே விநாயகர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம்[11]: பெருந்துறை அருகே விநாயகர் கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டன.ஈரோடு மாவட்டம் பெருந்துறை – கோபி ரோட்டில் ஆறாவது கி.மீ.யில், துடுப்பதி அருகே துலுக்கபாளையத்தை சேர்ந்த பொது மக்கள், விநாயகர் கோவிலை கட்டியுள்ளனர். 2009 ஜூலை 2ம் தேதி கோவில் கும்பாபிஷேம் நடந்தது. இன்று கோகுலாஷ்டமி என்பதால், பக்தர்கள் சிலர் காலையில் கோவிலுக்கு சென்றனர். கோவில் கோபுரத்திலுள்ள சில சிலைகள் மற்றும் கோவிலின் பக்கவாட்டு  ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.கோபுரத்தின் முகப்பில் உள்ள விநாயகர் சிலையின் இரு கைகளும், மூன்று பக்கவாட்டிலும் உள்ள அம்மன் சிலைகளின் இரு கைகளும், கோபுரத்தை தாங்கி நிற்கும் சிலையின் இரு கைகளும் உடைக்கப்பட்டுள்ளன. வரும் 11ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் கோவில் கோபுர சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பெருந்துறை போலீஸார் விசாரிக்கின்றனர்.

சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி: அனைத்து கட்சிகளுடன் போலீஸ் ஆலோசனை[12]: திருத்தணி, ஆக. 25, 2010: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அனைத்து கட்சிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை திருத்தணி காவல் துறை புதன்கிழமை நடத்தியது. செப்டம்பர் 11-ம் தேதி விநாயகர் சதுர்த்தி நடைபெறும் விழாவில் சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் திருத்தணி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மாணிக்கம் பேசியதாவது[13]:

  • விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட உள்ள சிலைகளின் உயரம், உள்ளிட்ட குறிப்புகளை காவல் நிலையத்தில் தர வேண்டும்.
  • எந்த நேரமும் சமூக விரோதிகளால் அசம்பாவிதமும் சட்ட விரோத செயலும் நடைபெற கூடும்.
  • ஆகவே அந்தந்த பகுதியில் குழுக்கள் அமைத்து காவல் துறையின் கவனத்திற்கு கொண்டு வரவேண்டும்[14].
  • விழாக்கள் நடைபெறும் இடங்களில் பூஜைகள் செய்வதில் குறிப்பிட்டவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
  • இரவில் அங்கேயே தங்கியிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்.
  • எந்தெந்த பகுதிகளில் ஊர்வலம் நடத்தப்படுகிறது, எங்கே தொடங்கி, எங்கே முடியும், யார் தலைமையில் நடைபெறுகிறது உள்ளிட்ட அனைத்து தகவல்களை முன்கூட்டியே எழுத்து மூலம் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தெரிவிக்கவேண்டும்.
  • பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் விழாவை நடத்த வேண்டும்.
  • விநாயகர் சிலைகள் வெறும் களிமண்ணால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • அந்ததந்த பகுதிகளில் விளம்பர பேனர்கள் விழாவிற்கு முன்னதாக இரண்டு நாளும், விழாவிற்கு அடுத்து இரண்டு நாட்களும் வைத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை கவனத்தில் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நடந்துகொள்ள வேண்டும்”, என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், உதவி ஆய்வாளர் ஏ.அண்ணாதுரை, ஆகியோரும் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, திருவாலங்காடு, கம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த அனைத்து கட்சியினர் கலந்துகொண்டனர்.

கருணாநிதியின் நாத்திக தாக்கத்தில் / இந்து விரோத போக்கில் வேலை செய்யும் போலீஸார், போலீஸ் அதிகாரிகள்: பூஜைப் பொருட்களின் விலையை அடாவடித்தனமாக உயர்த்தி விற்ப்பது, கிருத்துவர்[15]-முஸ்லீம்கள்[16] இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு கொள்ளையடிப்பது, முதலிய செயல்களும், இதில் கவனிக்க வேண்டியுள்ளது. தினமலர் கூட (பார்ப்பனப் பத்திரிக்கை என்று சொல்லப்படுகிறது), தலைப்புகளில் “விநாயகர்” என்று குறிப்பிடாமல், செய்திக்குள் விநாயகர் என்று குறிப்பிட்டிருப்பது, இவ்வாறான சேதங்கள் ஏற்படுத்தியிருப்பது, ஒருவேளை ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளக் கட்டுப்பாடா? ரம்ஜானிற்கு வாழ்த்து தெரிவித்து, விநாயக சதுர்த்திற்கு வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது, முதலியவை மறைமுகமாக சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் அதிகாரிகளின் மீது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.. ஏனெனில், கருணாநிதிக்கு பிடிக்கவில்லை, ஆகையால், நாமும் அவ்வாறே இருப்பதாகக் காட்டிக் கொள்ளவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அத்தகைய போகுதான் கோவை போலீஸ் அதிகாரிகளிடம் காணப்படுகிறது எனலாம்.

வேதபிரகாஷ்

12-09-2010


[1] தினமலர், மக்களோடு மக்களாக விநாயகரும் கைது: போலீசார் அரங்கேற்றிய சதுர்த்திநாடகம், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=82807

[2] இது நிச்சயமாக, தொடருகின்ற பாரம்பரியங்களைத் தடுக்க மேற்கொள்ளும் முயற்ச்சிதான். இந்துக்களின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் செயல்தான். இந்து அமைப்புகள், இதனை சட்டரீதியாக எடுத்து அதற்கான உரிய விடையைக் காணவேண்டும்.

[3] சட்டத்தை நிர்வாகிக்கின்ற அதிகாரிகள், இவ்வாறு பேசுவது-பேசியது வியப்பாக இருக்கிறது. இந்துக்களின் உரிமைகள் என்பதைப் பற்றியும், இந்த அதிகாரிகள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

[4] இந்த புகைப் படங்களை பிரசுரிக்காததும் வேடிக்கைத்தான். ஏனெனில், மற்ற விஷயங்களில் அத்தகைய படங்களை வெளியிட்டு இரக்கத்தை ஏற்படுத்த ஊடகங்கள் கையாளுகின்றனர். ஆனால், இந்துக்கள் என்று வரும்போது, ஏன் மறைக்கின்றனர் என்று தெரியவில்லை!

[5] இப்படி கைது செய்யப்படுவதற்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா, முதலியவற்றை சட்டம் தெரிந்த பெரியோர்கள்தாம் ஆராயவேண்டும்.

[6] தினமலர், இந்து முன்னணி பேனர் கிழிப்பு போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81436

[7] இதே முஸ்லீம்கள் என்றால், ஓடி வந்து விடுகிறார்களே, ஆனால் இந்துக்கள் என்றால், இப்படி ஆசுவாசமாக வந்து, நிதானமாக வருவார்கள் போலும்!

[8]

[9] இதற்கான ஆதாரங்களை, இவர் குறிப்பிடாவிட்டாலும், போலீஸாருக்கு நிச்சயமாக ரகசிய அறிக்கைக்கள் வந்திருக்கும். அந்நிலையில், இந்துக்களுக்காகத்தானே, உரிய பாதுகாப்புக் கொடுக்கப் பட்டிருக்க வேண்டும்?

[10] தினமலர், சிலை உடைப்பு, கல்வீச்சால் பதட்டம் :பழநியில் மர்ம நபர்களால் பரபரப்பு, ஆகஸ்ட் 24, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=69393

[11] தினமலர், பெருந்துறை அருகே கோவில் கோபுரத்தில் சிலைகள் சேதம் , செப்டம்பர் 01, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=75439

[12] தினமணி, சட்ட ஒழுங்கு பிரச்னை இல்லாமல் விநாயகர் சதுர்த்தி: அனைத்து கட்சிகளுடன் போலீஸ் ஆலோசனை,, 26 Aug 2010, http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Chennai&artid=293128&SectionID=135&MainSectionID=135&SEO=…………………… %88

[13] அப்பா, இத்தனை கண்டிஷன்கள் போட்டுமா, விநாயகர் ஊர்வலங்கள் நடத்துகிறார்கள்? ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஏனெனில், இவையெல்லாமே, மறைமுகமாக, அத்தகைய விழாக்களை நடக்கவிடாமல் தடுப்பதைப் போலத்தான் உள்ளது. அதாவது, மக்களின் விழா கொண்டாடும் மனப்பாங்கை, ஊக்கத்தைக் குலைப்பதாக உள்ளது.

[14] பாவம் போலீஸாருக்கு அது தெரியாது போலும், இதையும் மக்களே அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் போலும்!

[15] தாம்பரம், மைலாப்பூர், பழைய மாம்பலத்தில், கிருத்துவ வியாபாரிகள் களிமண் பிள்ளையார்களை ரூ.100/- விலை வைத்து கொள்ளையடிக்கிறார்கள். இப்பொழுது, இவர்கள் மொத்தமாக வாங்கி விற்ப்பதனால், மற்ற சிறு வியாபரிகள் குறைவான விலையில் விற்பதற்க்க்கும் முடியவில்லை. மேலும், லாரிகள்-வேன்களிலிருந்து இறக்கும்போது, சேதப்பட்டுள்ள பிள்ளையார்களை அங்குள்ள பெண்களிடம் கொடுத்து, விலை குறைவாக விற்கின்றனர்.

[16] பூ, வெற்றிலை, பாக்கு, பன்னீர் முதலிய வாசனைத் திரவியங்கள் முதலியவற்றில், இவர்கள்தாம் “ஒட்டு மொத்த வியாபாரம்” செய்கிறார்கள், இவர்கள் வைப்பதுதான் விலை! இவர்கள் நினைத்தால்க், ஒருவேளை, பூஜைக்கு வேண்டிய பொருட்களே மார்க்கெட்டில் வரவிடாமல் செய்துவிடலாம்! அந்த ஆலவிற்கு அவர்கள் ஆதிக்கத்தைச் செல்லுத்துகிறார்கள்!

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

செப்ரெம்பர் 11, 2010

பிள்ளையார் சிலையுடைப்பு வழக்கில் ஓடி ஒளிந்த ராமசாமி நாயக்கர் (எ) பெரியார்!

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1956

ராமசாமி நாயக்கர் பிள்ளையார் உடைப்பு 1953

ஐந்தாண்டுகள் போராடிய வீரபத்ரன் செட்டியார்:  ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை மட்டுமல்லாது, மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்றம் என்று அலைய வைத்து, உயர்நீதி மன்றத்திற்கு செல்லவைத்த, கீழ்கோர்ட்டார், மெத்தப் படித்த நீதிபதிகள் முதலியோரையும் எதிர்த்து, உச்சநீதி மன்றம் வரை சென்று நீதிபதிகளின் போலித்தனம் மற்றும் ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரின் முகத்திரையை அன்றே கிழித்துள்ளார். நீதிமன்றங்கள் என்றால் எங்களுக்கு பயமா, நாங்கள் பார்க்காத நீதிமன்றங்களா என்றெல்லாம் வாய் சவடால் விடும் இந்த வீரர்கலின் தலைவர், கோர்ட்டிற்கு செல்லாமலே ஓடி ஒளிந்து கொண்டார். அவ்வறாக சொல்வதே கோர்ட்டுதான்!

Equivalent citations: 1958 AIR 1032, 1959 SCR 1211

Bench: Sinha, B P.

PETITIONER:

S. VEERABADRAN CHETTIAR

Vs.

RESPONDENT:

E. V. RAMASWAMI NAICKER & OTHERS

DATE OF JUDGMENT:

25/08/1958

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

BENCH:

SINHA, BHUVNESHWAR P.

IMAM, SYED JAFFER

WANCHOO, K.N.

CITATION:

1958 AIR 1032 1959 SCR 1211

ACT:

Insult to Religion-Ingredients of offence–Interpretation of statute-Duty of Court-Indian Penal Code (Act XLV of 1860), s. 295.

Idol breaker, iconoclast became an idol to be protected

Idol breaker, iconoclast became an idol to be protected

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் ஓடி ஒளிந்ததைக் கண்டு உச்சநீதி மன்றமே வருத்தப்பட்டதாம்! இதுதான் அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. கோர்ட் சொல்வது “No one appeared for the respondents”! பிரதிவாதிகளின் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை! மற்றொரு இடத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “It is regrettable that the respondents have remained ex parts in this Court.”!! “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது”, என்று சொல்வது உச்சநீதி மன்றத்தின் நீதிபதி!

EVR statue at Vaikam 31-01-1994

EVR statue at Vaikam 31-01-1994

ராமசாமி நாயக்கர் (எ) பெரியார் பிள்ளையார் விக்கிரகத்தை உடைத்தது, வழக்குப் போடப்பட்டது: எஸ். வீரபத்ரன் செட்டியார் என்பவர் இந்துமதத்திற்கு எதிராக பேசியும் எழுதிதியும் வருவதாக ராமசாமி நாயக்கர் மற்ற மூன்று நபர்கள் மீது ஜூன் 5, 1953 அன்று புகார் கொடுத்தார். அதுமட்டுமல்லாது மே 27, 1953 அன்று திருச்சி டவுன்ஹாலில் பிள்ளையார் சிலையை உடைப்பதாக சொல்லியிருப்பதால், சைவப்பிரிவைச் சேர்ந்த இந்து சமூகத்தினரது மனங்களில் பீதி, வருத்தம் மற்றும் உணர்ச்சிகள் கிளம்பியுள்ளன. அதுமட்டுமல்லாது, அன்று மாலை 5.30 அளவில் டவுன்ஹால் மைதானத்தில் ஒரு விக்கிரத்தை உடைத்து, அவதூறாக பேசியும் உள்ளார் என்று புகாரில் சொல்லப்பட்டது. இவ்வாறு பேசியது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 295 மற்றும் 295ஆ கீழ், மத உணர்வுகளைப் புண்படும் வகையில் உள்ளது என்ரு சொல்லப்பட்டது. மாஜிஸ்ட்ரேட் சர்கிள் இன்ஸ்பெக்டரை குற்றவியல் நடத்தை விதி பிரிவு 202ன் கீழ் விசாரிக்க ஆணையிட்டார். ஜூன் 26, 1953 அன்று, அறிக்கைக் கொடுக்க மாஜிஸ்டிரேட், “மண்ணால் செய்யப்பட்ட கணேசனுடைய விக்கிரம் புனிதமானதாகாது. அது கணேசனுடையது போன்று இருப்பதனால் அது புனிதமான வஸ்து ஆகாது. மக்களால் விடப்படுகின்ற விக்கிரங்கள் வழிபாட்டிற்கு ஆகாது. ஏனெனில் அத்தகைய விக்கிரங்கள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆகவே ஒரு மனிதன் அத்தகைய விடப்பட்ட விக்கிரத்துடன் மோதினால் குற்றாமாக்சது. ஆகையால் இது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295 கீழ் குற்றாமாகாது”

செட்டியாரை அலையவிட்ட நயக்கருக்கு சாதகமான கீழ் கோர்ட்டார்: “குற்றஞ்ச்சாட்டப் பட்டவர் வேண்டுமென்றே, கெட்ட எண்ணத்துடன் மத உணர்வுகளைப் புண்படும் வகையில் பேசியிருந்தால், சந்தேகமில்லாமல், அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான்.  ஆனால், அத்தகைய புகார் கொடுக்க வேண்டுமானால், அரசாங்கத்தின் அனுமதி தேவைப் படுகிறது. அத்தகைய தகுந்த அனுமதி இல்லாததனால், இதற்கு மேல் இவ்வழக்கில் குற்றவியல் நடத்தை விதி பிரிவு 203ன் கீழ் தொடர ஆதாரம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கிறேன்”

இதனால் வீரபத்ரன் செட்டியார், தனது புகாரை செஸன்ஸ் கோர்டிற்கு ஜூலை 9, 1953 அன்று எடுத்துச் செல்கிறார். ஆனால், ஜனவரி 12, 1954 அன்று நீதிபதி, வழக்கைத் தள்ளுபடி செய்கிறார், “மாஜிஸ்ட்ரேட் சொல்லியபடியே, அத்தகைய நடத்தைகள் குற்றாமாகாது என்று ஒப்புக்க் கொள்கிறேன். குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒரு பொதுகூட்டத்தை ஏற்பாடு செய்து, உருவ வழிபாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து, மண்ணல் செய்யப் பட்ட கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார். அந்த உருவம் குற்றஞ்சாட்டப்பட்டவருடைய சொந்தப் பொருளாகும், ஆகையால் அது மற்றவர்களால் புனிதமாகக் கருதப்படும் பொருளாகாது. அதே மாதிரி, நானும், ஒரு நம்பிக்கையில்லாதவன், இம்மாதிரி நம்பிக்கையுள்ளவனை புண்படுத்த முடியும்ன் என்று நினைக்கவில்லை. ஆகையால் அது பிரிவு 295ஆ கீழ் குற்றம் தான் என பெய்பிக்க வேண்டிய கூறுகளுக்கு ஏற்றபடி இல்லை”.

இதனால், செட்டியார் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இங்கேயும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் மீது குற்றத்தை மெய்ப்பிக்க போதியா ஆதாரங்கள் காட்டப்படவில்லை, என்று சில வழக்கு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டினார்.

(1) (1887) I.L.R. 10 All. 150.

(2) (1890) I.L.R. 117 Cal. 852.

உயர்நீதி மன்ற நீதிபதியும் அலைய விட்டார்; செட்டியார் இதற்கு எதிராக அப்பீல் / முறையீடு செய்ய தேவையான சான்றிதழ் கொடுக்குமாறு வேண்டிக் கொண்டார். ஆனால், இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தின் பிரிவு Art. 134(1)(c) கீழ், மேல்முறையீடு செல்வதற்கான வழக்கு இல்லை என்று மறுத்து விட்டார். ஆகையால், அவர் மறுபடியும் நீதிமன்றத்திற்கு சென்று, தேவையான அனுமதி பெற்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு வராமலேயே இருந்தது வருத்ததிற்கு உகந்தது [It is regrettable that the respondents have remained ex parts in this Court.].

தீர்ப்பில் பதிவாகியுள்ள உச்சநீதி மன்றத்தின் கருத்து: இந்த வழக்கில், புண்படுத்தக்கூடிய செயல் நடந்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது என்னவென்றால், கடவுள் கணேசனுடைய உருவத்தை உடைத்துள்ளார்கள் என்பதாகும். அத்தாட்சி என்பதைவிட, இந்துக்களுக்கு கணேசனுடைய உருவம் அல்லது அம்மாதிரி, வழிபடுவதற்கு என்று ஸ்தாபிக்கப்பட்டாலும் இல்லையென்றாலும் புனிதமானது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கீழ்கோர்ட்டின் நீதிபதிகள் நிச்சயமாக சரத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மிகவும் குறுகிய அர்த்ததைக் கொண்டு அதற்கேற்றபடியான விளக்கத்தை அளித்துள்ளனர். அதாவது கோவிலில் உள்ள விக்கிரங்கள் அல்லது ஊர்வலத்தில், விழாக்களில் எடுத்துச் செல்லப்படகுடியவைதான், இந்த விளக்கத்தில் வரும் என்பது போல பொருள் கொண்டுள்ளர்கள். அத்தகைய குறுகிய விளக்கம் அளிக்க அச்சரத்தில், அத்தகைய வரையரைகள் கொடுக்கப்படவில்லை. ஆகையால், மெத்தப்படித்த நீதிபதி அத்தகைய தவறான வேலையில் பொருட்கொண்டுள்ளார்.

பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவற்றை எரித்தால் என்னாகும்? புனிதமான புத்தகம், பைபிள், குரான், குரு கிரந்த சாஹப் முதலியவையெல்லாம் இந்த வார்த்தைகளில் வரும். ஆக கீழ் கோர்ட்டாரின் திரிபுவாத விளக்கத்தின்படி பார்த்தால் அல்லது அவர்கள் சொன்னது சரியென்றால், அத்தகைய புனித நூல்களை அவமதிப்பு செய்தால், சேதப்படுத்தினால் அல்லது எரித்தால் இந்த சட்டப் பிரிவிலிலேயே வராது என்றாகும். ஆனால், எங்களுடைய கருத்தின்படி, அத்தகைய குறுகிய விளக்கம் மற்றும் அந்த வார்த்தைகளுக்கு அத்தகைய விளக்கத்தை வலியப் பெறுவது ஏற்படுத்தப்பட்டுள்ள எல்லா சட்டமுறைகளும் விரோதமானது ஆகும்.

புனிதமான எந்த வஸ்துவும் அவமதிக்கப்படக்கூடாது, சேதப்படக்கூடாது: எந்த வஸ்து, எவ்வளவு அற்பமேயாகிலும் அல்லது விலையில் மிகவும் குறைவானதாக இருந்தாலும், மற்றவர் அது புனிதமானது என்று மதித்தால், இந்த சட்டப்பிரிவில் வரும். அவமதிப்பவர்களை சட்டம் கவனித்துக் கொள்ளும். ஆகையால் அந்த புனிதமானதாக மதிக்கப்படும் வஸ்து, வழிபாட்டிற்குட்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை தேவையில்லை. ஆகையால் கீழ் கோர்ட்டார்கள் பலத்ரப்பட்ட மக்களின் மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்காமல், விஷயத்தை மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கொடுத்த புகாரை அணுகியுள்ளர்கள். இந்த பிரிவானது பலதரப்பட்ட மத நம்பிக்கையாளர்களின்  மத உணர்வுகள், நம்பிக்கைகளை மதிக்க ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகும். ஆகவே, கோர்ட்டாரே அத்தகைய நம்பிக்கைகளை ஏற்கிறார்களோ இல்லையோ, இத்தகைய விஷயங்களில் மற்றவர்களின் உணர்ச்சிகளை நம்பிக்கைகளை நிச்சயமாக மதிக்க வேண்டும். அத்தகைய விஷயங்களில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

பெரியார் செய்தது மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது: அகையால், நிச்சயமசக கீழ் கோர்ட்டார்கள் இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 295ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை தவறாகத்தான் விளக்கஙம் கொடுத்துள்ளார்கள். இருப்பினும் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டபடியினால், கீழ் கோர்ர்ட்டாருடன் மாறுபட்டாலும், வழக்கின் புகாரை விசாரிக்க வேண்டுமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் நடத்தை உண்மையானால், மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது, இருப்பினும், இவ்வழக்கு காலந்தாழ்ந்து விட்டபடியால், விசாரிக்க ஆணையிடவில்லை. இருப்பினும் மறுபடியும் அத்தகைய முட்டாள்தனமன நடத்தை சமூகத்தின் எந்த பிரிவினராவது செய்ய முற்பட்டால், நிச்சயமாக சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்படித்த அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அதார்கு சட்டப்பிரிவுகள் பொறுந்தும் என்று நாங்கள் விளக்கம் கொடுத்துள்ளோம். அதன்படியே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை கடுமையாக விமர்சித்ததற்காக ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? உச்சநீதி மன்றம் இவ்வாறு கடுமையாக ராமசாமி நாயக்கர் (எ) பெரியாரை விமர்சனம் செய்ததற்கு, திட்டியதற்கு மேல்முறையீடு செய்யவில்லையே? அப்படியென்றால், “மென்மையான வார்த்தைகளில் சொல்வதானால், அது மிகவும் மட/முட்டாள் தனமானது”, என்றதை ஒப்புக்க்கொள்கிறார்களா? இன்றைக்கு திகவினர், பகுத்தறிவு புல்லர்கள், நாத்திக நொண்டிகள், உண்மைகளை மறைத்து எப்படி பொய்களைப் பரப்புகின்றனர் என்பதனை, இந்த உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

வேதபிரகாஷ்

11-09-2010