Archive for the ‘கலைஞர் டிவி’ Category

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

பிப்ரவரி 28, 2013

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி!

விஷமத்தனமான பிரச்சாரம்: சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் கொண்டாடும் சாக்கில் யார்-யாரோ அவரைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டனர். கிருத்துவர்கள் அவர் ஏதோ ஏசுவை ஏற்றுக் கொண்டது போல பிட் நோட்டிசுகள் விடுகின்றனர், கிறிஸ்தவர்கள் அவர் கிருஸ்துவை ஏற்றுக் கொண்டதை போல பொய் பிரச்சாரம் செய்கின்றனர்[1]. அதுபோல நமது கருணாநிதியும் இப்படித்தான் 2008ல் பேசினார்[2]. இன்று திமுகவிற்குப் பிறகு, அதிமுக பதவிக்கு வந்ததும், முதலமைச்சர் ஜெயலலிதா விழாவில் பங்கு கொண்டு பேசியுள்ளார்[3]. “அண்ணா நாமம் வாழ்க, பெரியார் நாமம் வாழ்க” என்பவர், சுவாமி விவேகானந்தர், ஶ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

விவேகானந்தர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர் – சொன்னவர் பகுத்தறிவுவாதி கருணாநிதி! 2008ல் பேசியதை இப்பொழுது ஏன் ஞாபகத்தில் கொண்டு வரவேண் டும் என்று கேட்கலாம். ஆனால், இதை வைத்துக் கொண்டுதான், 2013லும் கிருத்துவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள் என்று பார்க்கும் போது விவகாரம் புரிகின்றது. கருணாநிதியின் நக்கலான பேச்சை படிக்கவும்:

 

விவேகானந்தர்புகைபிடிப்பார்[4]: நீங்கள் சாமியாரிடத்திலே மோத விட்டாலும், மாமியாரிடத்திலே மோத விட்டாலும் நாங்கள் யாரும் அவைகளையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இல்லை. கட்டிடத்தைத்தான் எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச்சு என்று கேட்பீர்கள். விவேகானந்தரைப் பற்றி தலைவர்கள் பேசிக் கேட்க வேண்டும் என்ற ஆசையாலும், விவேகானந்தரைப் பற்றி பேசி அதிக நாளாகி விட்டது என்பதாலும்தான். மூட நம்பிக்கைகளை சாய்த்தவர் விவேகானந்தர். மத வெறி, ஜாதி வெறியைச் சாய்த்தவர். அப்படிப்பட்ட புரட்சிக்காரர் விவேகானந்தர். அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். மனம் சுத்தமாக இருந்தால் இவை எல்லாம் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல்பட்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தருடைய பெயரால் இருக்கின்ற அந்த மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சில அவசரக்காரர்கள் எழுதியிருக்கிறார்கள்.

கருணாநிதியைத் தொடர்ந்து வீரமணியின் விஷமத்தனம்: ஆக பகுத்தறிவாளிகள், பெரியார் தாசர்கள் என்ற போர்வையில் இப்படியும் தூசிக்கலாம், தூஷணம் செய்யலாம், அதனை சந்தோஷமாக கிருத்துவர்கள் எடுத்தாளலாம் என்று தான் எடுத்துக் காட்டப்படுகிறது. உதாரணத்திற்கு “விடுதலை”யில் இதைப் பற்றி வெளிவந்துள்ளவை:

… எந்த வழியிலாவது காட்டவேண்டும் என்கிற கோபம் இயல்பானதே! ####### விவேகானந்தர் ஆன்மிகம் மற்றும் சேவைக் கண் காட்சி என்ற பெயரில் இந்துத்துவா சக்திகள் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் ஏற்பாடு செய்துள்ளன. …

… வெளிப்படுத்து வார்கள். விவேகானந்தரின் அறிவுரைகள் என்ற நூல் சென்னை மயிலையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தினால் 2008இல் வெளியடப்பட்டுள்ளது. நூலின் 83ஆம் பக்கத்தில்விவேகானந்தர் பின்வரும் இந்து …

சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர்150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு  மட்டும் …

… விவேகானந்தர்   ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும். விவே கானந்தர் முற்போக்குப் பேசினார் – இளை ஞர்களை விழித்தெழச் செய்தார் என்றெல்லாம் அவரைப்பற்றித் துதி பாடுவார்கள். …

3.2.13 பிற்பகல் 11.00 மணி அளவில், தென் சென்னை மாவட்டத்தின் திருவல்லிக்கேணி  நீலம் பாசா தர்கா பகுதியில் அன்னி பெசன்ட் சாலை விவேகானந்தர் இல்லம் பின்புறம் திராவிடர் கழக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் …

… மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சி நடக்கிறதாம்.வெளியிடப்பட்டுள்ள பேச்சு முழுவதும் விவேகானந்தர்இயேசுவைப் போற்றிப் பேசுவதாக உள்ளதாம்.  ராம கிருஷ்ணா மடம் சார்பில் வெளியிடப்பட் டதைத்தானே எடுத்து போட்டிருக்கிறார்கள்? …

… நாத்திகன் என்று முழங்கினார் விவேகானந்தர். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில்தான் லட்சியம் இருக்கும். லட்சியம் – இருக்கும்போது அங்கே வளர்ச்சி நிச்சயமாக இருக்கும். (நம்பு தம்பி நம்மால் முடியும், ஆகஸ்டு 2008) …

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள். பல பேர் நினைத்துக் கொண்டு …

…  அதே நேரத்தில் சென்னைக் கடற்கரை சாலை என்ற மிக முக்கியமான பகுதியில் உள்ள விவேகானந்தர்இல்லத்திற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு வாரிக் கொடுப்பதும் இந்த அரசுதான். திருவள்ளுவர் என்றால் உதாசீனம் -விவேகானந்தர் …

… அனைத்து மாநில அரசுகளும், பள்ளிப் பாடத்திட்டத்தில், நாராயண குரு, ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற ஆன்மிக தத்துவவாதிகளின் போதனை களைப் பாடமாக இணைக்க வேண்டும் – இவ்வாறு அவர் பேசியுள்ளார். …

இப்படி நாத்திகர்கள், கிருத்துவர்கள், பகுத்தறிவுவாதிகள், கிறிஸ்தவர்கள் முதலியோர் எப்படி, ஏன், எதற்காக சொல்லி வைத்தால் போல இப்படி ஒரே நேரத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

 

செய்திகளைப் பரப்புகிறார்கள், இணைதளத்தில் பிரச்சாரம் செய்கிறார்கள்?

பிறகு இவற்றைத் தொகுத்து புத்தகம் வெளியிடலாம், ஆராய்ச்சிக் கட்டுரை போர்வையில் கருத்தரங்கங்களில் படிக்கப்படலாம்.

கிருத்துவ இலக்கியக் கழகம், ஏன் திராவிடர் கழகமே வெளியிடலாம்.

© வேதபிரகாஷ்

28-02-2013


[4] ஏப்ரல். 25, 2008 , தினத்தந்தியில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது என்று வெளியிடப்பட்டது.

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

ஜூன் 9, 2012

சினேகாவை அடுத்து, குஷ்புவின் இடுப்பு கிள்ளப்படுகிறதாம்!

பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக கொண்டாடப்படும் விழாக்கள், ஊடக தரிசனங்கள், தெரு உலாக்கள்: தமிழகத்தைப் பொறுத்த வரைக்கும், முதலமைச்சர் பதவியில் இல்லையென்றால் யாரும் அவ்வளவாக மதிக்க மாட்டார்கள். சுவரொட்டிகளுக்குக் கூட கணக்குப் பார்த்துதான் செலவழிப்பார்கள். ஆனால், திமுகவிற்கு எங்கிருந்துதான் பணம் வந்துள்ளது என்று தெரியவில்லை, லட்சக்கணக்கில் செலவழித்துள்ளார்கள். பதவியில் இல்லாமலிருந்தாலும் படோபடமாக விழாக்களை கொண்டாடியுள்ளர்கள். ஊடகங்கள் அவர்கள் கைகளில் இருப்பதனால் தரிசனங்கள் அதிகமாகவே இருந்துள்ளன[1]. பிறகு, தெரு உலாக்கள் தாம்! அக்கால மன்னர்கள் மாதிரி பவனி; பிறகு நாட்டிய மகளிர் வந்து ஆடவேண்டாமோ? ஜகத் ரெட்சகன்[2] மறந்து விட்டாரோ அல்லது ஒதுக்கப்பட்டாரோ?

குஷ்புவின் ஏக்கமும், நெருக்கமும், தரிசனத்திற்காக ஓடிய ஓட்டமும்: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[3]. முன்னர் சினேகாவின் இடுப்பை கிள்ளுகிறார்கள் என்று ஒரே பரபரப்பான செய்திகள்[4]. இப்பொழுது, பகுத்தறிவாளிகள் பாசறையில், பக்குவமாக, பக்கத்தில் வந்து, குஷ்புவின் இடுப்பை கிள்ளுகிறார்களாம். திமுகவில் இணைந்ததிலிருந்து, இவர் கருணாநிதிக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்[5]. எனவே, திட்டமிட்டே அந்த மர்ம நபரும் இதை செய்துள்ளாறர் போலும்! வயதான கூட்டத்தில் இப்படி, ஒரு அம்மாவைப் பிடித்து விட்டார்கள் போலும்!

கருணாநிதி கண்டித்தாலும், கமல் ஹஸன் குஷ்பு தமிழைக் கேட்டு வியக்கிறாராம்: ஒரு கூட்டத்தில் குஷ்பு, முந்தி கொண்டு ஏதோ தமிழில் பேசியதைக் கேட்டு, கருணாநிதி நன்றாகவே விமர்சனம் செய்து விட்டார்[6]. ‘தமிழை யாரும் அழிக்க முடியாது. குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழ் மொழி எந்த அளவு வலுவானது என்று பார்க்க வேண்டும்” என்றார்[7]. ஆனால் கமல் ஹஸனுக்கு குஷ்புவின் தமிழைக் கேட்டு புல்லரிக்கிறாராம்.

Adding, he said “I never envied Rajini’s growth or any one’s growth in the industry, but today I envy the Tamil spoken by Kushboo in this function.  Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language[8].  It seems she will be awarded for speaking a wonderful Tamil” ரஜினியின் உயர்வைக் கண்டு கூட நான் அதிசயிக்கவில்லை. ஆனால், நான் குஷ்பு தமிழ் பேசுவதைக் கண்டு பொறாமைப் படுகிறேன், என்றாராம். கருணாநிதி, ரஜினிகாந்த் முதலியோரும் குஷ்புவின் செந்தமிழைக் கேட்டு வியந்து விட்டனராம். அதற்காக அவர் பரிசளிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

அதெப்படி கருணாநிதி அதற்குள் மாறிவிட்டார் என்று தெரியவில்லை. “Even Karunanidhi and Rajini were surprised by the way Kushboo speaks out the classical language”, என்றால் என்ன கதைவிடுகார்களா என்று தெரியவில்லை. இல்லை மயக்கத்தில் இருந்தனரா? கதாநாயகிகளை தூக்கி புகழ்பெற்ற இவருக்கு, அதிகமான அனுபவம் இருக்கிறது. இன்றும் தூக்குகிறாரா என்று தெரியவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்த குஷ்பு: ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்றெல்லாம் குஷ்பு பேசியதை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், கருணாநிதி / திமுக தோற்க்கத்தான் நேர்ந்தது. அப்பொழுதும், நக்கலாக, அதிமுகவிற்கு ஓட்டுப் போட்டவர்கள் துன்பப்படப்போகிறார்கள் என்றெல்லாம் பேசியதும் ஞாபகத்தில் இருக்கலாம். திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவித்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.

கருணாநிதியை தொடர்ந்து சென்ற குஷ்பு: இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை. இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார். தலைவரை பிடிக்க வேண்டும் என்றால், இப்படியெல்லாம் துரத்திக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி, குஷ்புவின் இடையைக் கிள்ள வேண்டும் என்றால், அந்த ஆசாமியும் அதே மாதிரி பின் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்!

குஷ்புவின் இடுப்பைக் கிள்ளிய மர்ம ஆசாமி: கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்பட்டுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்[9]. பிறகு யாருக்கு இத்தகைய ரோமாஞ்சக செய்தியோ அல்லது தகவலோ தேவைப் படுகிறது? தனியாகவே போய் பார்த்திருக்கலாமே? எல்லோருக்கும் தெரியும் படி, துரத்திக் கொண்டு சென்றிருக்க வேண்டாமே?


[1] கலாநிதி மாறன் ஓரமாக நின்று கொண்டு முறைக்கும் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள் இருப்பது தெளிவாகவே தெரிந்தது.

[2] ஜெகத் ரெட்சகன் அரசவை மாதிரியே செட்டிங் அமைத்து, காவலாட்கள், பெண்கள் வைத்து, நாட்டிய மகளிரை வைத்து ஆடவைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். இப்பொழுது மறந்து விட்டார்களோ, மறைத்து விட்டார்களோ, தனியாக வைத்துக் கொண்டார்களோ தெரியவில்லை.

கனிமொழியை ஆதரிக்கும் கற்பில் அக்கறையில்லாத குஷ்பும், மதவாத பி.ஜே.பி.காரர் ராம்ஜெத்மலானியும் வாதமும்!

மே 10, 2011

கனிமொழியை ஆதரிக்கும் கற்பில் அக்கறையில்லாத குஷ்பும், மதவாத பி.ஜே.பி.காரர் ராம்ஜெத்மலானியும் வாதமும்!

கனிமொழியைக் காப்பாற்றுவது திமுகவை காப்பாற்றுவது: கற்பு பற்றி ஏடாகூடமாக பேசி, மழுப்பி, மன்னிப்புக்ல் கேட்டு, கோர்ட்டில் வழக்குகளை சந்தித்த குஷ்பு, இப்பொழுது, கனிமொழியை ஆதரிக்கிறேன் என்று கிளம்பியுள்ளார். திமுகவில் இருப்பதால், அத்தகைய நிலையை வெளிப்படுத்தியுள்ளதில், ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. அதற்கு பெண்ணாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. கருணாநிதியே, கனிமொழிக்ககக, திமுக எந்த அளவிற்கும் செல்லும், ஆதரிக்கும் என்று சொல்லியபிறகு, குஷ்பு தான் ஆதரிக்கிறேன் என்று சொல்வதில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[1]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[2].
கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் குஷ்பு[3]:  உண்மையில் கனிமொழியை விட மோசமான சூழலை சந்தித்தவர் இந்த குஷ்பு. தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து விமர்சித்துப் பேசி தமிழக மக்களின் ஒட்டுமொத்த கொந்தளிப்பை சம்பாதித்தவர். அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட்டன.  பின்னர் இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பு காங்கிரஸில் அவர் சேரப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தீர்ப்பு குஷ்புவுக்கு சாதகமாக வந்த அடுத்த நாளே அவர் அதிரடியாக திமுகவில் வந்து இணைந்து கொண்டார். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் தற்போது சொத்துக் குவிப்பு உள்ளிட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளவரான கே.ஜி.பாலகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

புவனேஸ்வரி, ஜெயலலிதா முதலியோரை ஏன் பெண்கள் என்று ஆதரிக்கவிக்ல்லை? இதே போல புவனேஸ்வரியை ஏன் ஆதரிக்கவில்லை என்று தெரியவில்லை. புவனேஸ்வரி விஷயத்தில், சினிமா துறையினர் மாறுபட்டு பிளவுண்டது அறிந்த விஷயமே. இன்று ஊழல் என்ற பிரச்சினையில், அதுவும் கோடிக்கணக்கில் நடந்துள்ள ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். பெண்ணாக-தாயாக, எல்லா இந்திய பெண்களும் தான் அவதி படுகின்றனர். அவ்வாறிருக்கும் போது, கனிமொழியை ஆதரிக்கிறேன் என்பது அரசியல் தானொழிய, அதில் பெண் என்ற உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை.

குஷ்பு ராம்ஜெத்மலானியாக முடியாது: முன்னால் நீதிபதி பாலகிருஷ்ணன் இருக்கும்போது, நிச்சயமாக, குஷ்பு விஷயத்தில் சாதகமான தீர்ப்பு வழங்கப் பட்டிருப்பது தெரிகின்றது. இப்பொழுது, ராம்ஜெத்மலானி கனிமொழிக்கு வாதாட வந்திருப்பது கோடிகளில் உள்ள பிரச்சினையை, கோடிகளை வைத்து அடிக்க தயாராகிவிட்ட நிலையும் தெரிகிறது. ராசாவுடன் அந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தவிட்ட பிறகு, ராசாவையே கழட்டி விட்டு, கனிமொழிக்கு ராம்ஜெத்மலானி வாதிட்டிருப்பது, அவர் பெண் என்பதால் அல்ல, ஆனால், கோடிகளில் கிடைக்கும் என்ற உத்தரவாதம் தான். இதனால் தான், அவர் பி.ஜே.பி காரர் / மதவாத கட்சிக்காரர் என்ற பேச்சுகள் எல்லாம் இல்லாமல் போகிறது.


கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


புளுமூட்டை குண்டு ஜெயலலிதா: பொன்முடி பேச்சு! கலைஞர் டிவி நேரடி ஒளிபரப்பு!

செப்ரெம்பர் 8, 2010

புளுமூட்டை குண்டு ஜெயலலிதா: பொன்முடி பேச்சு! கலைஞர் டிவி நேரடி ஒளிபரப்பு!

திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில், திமுகவினர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் நடக்கிறது. ராஜா ஜெயலலிதா மலம் தின்னும் நிலைமை ஏற்படும் என்று பேசியதும், பொன்முடி புளுமூட்டை குண்டு ஜெயலலிதா என்றெல்லாம் ஒருமையில் பேசியதையும் ஒளிபரப்பியது.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தித்தவர்கள். நீங்களே ஒப்புக் கொண்டீர்களே என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க்கொண்டிருக்கிறது சோபன்பாபுவோடு என்று. பேட்டி கொடுத்திருக்கிறீர்களே. அந்த சோபன்பாபு உங்களை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக்கொண்டது உண்டா? எம்ஜிஆர் உங்களை அரசியலில் அடையாளப் படுத்தினாரே? அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு மீண்டும் திரும்பியபோது, ராஜீவ்காந்திக்கு

பொன்முடி பேசியது: ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். சேலத்திலே சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம். நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யார் ஜெயலலிதா பேசலாமா? மனசாட்சி உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கோவையில் இருந்து சுற்றுலா சென்ற மாணவிகளை தடுத்து நிறுத்தி, தனக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தற்காக, குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்காக அந்த தாக்குதலை நடத்தி ஏவிவிட்ட ஜெயலலிதா, மூன்று மாணவிகளை கொலை செய்வதற்கு காரணமான ஜெயலலிதா, இன்று மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள், அதைப் பார்த்து நான் சும்மா இருப்பேனா என்கிறார்.
அரசு ஊழியர்கள், எஸ்மா டெஸ்மா சட்டத்தைப் பார்த்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார் சத்துணவு ஊழியர்களை பார்த்து. சத்துணவு ஊழியர்களே எண்ணிப் பாருங்கள். கையில் பச்சை குத்தியவர்கள் யார் என்று பார்த்து, அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் கலைஞர் அந்த அதிமுகவினரையும் நிரந்தரம் செய்தார்.
ஆனால் ஜெயலலிதா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுக்கு இருக்கிற துரோக மனப்பான்மை தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியினருக்காவது இருக்கிறதா? இவ்வாறு பொன்முடி பேசினார்.

செய்தி அனுப்பி, அவரால் முடியாது. இயக்க முடியாத முதலமைச்சர். என்னை முதலமைச்சராக ஆக்குங்கள் என்று தூது விட்டீர்களே அப்போது எம்ஜிஆர் உங்களை நல்ல சக்தி என்று சொன்னாரா? தீய சக்தி என்று சொன்னாரா? உங்களால் சொல்ல முடியுமா? வாஜ்பாய் ஒரு மகத்தான இந்திய நாட்டின் தலைவர். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். அவர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார். என் வாழ்நாளில் நான் பட்ட அவமானம். தூங்க முடியாத நாட்கள், விழித்திருந்து விழித்திருந்து என் விழிகள் நனைந்த நாட்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது. வேறு யாராலும் வரவில்லை என்று அந்த மகத்தான மனிதர் சொன்னார். அவர் சொன்னாரா உங்களை நல்ல சக்தி என்று. இவ்வாறு ஆ,ராசா பேசினார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேசியப்பிறகு, கருணாநிதி இப்படி பேசியது வேடிக்கையாக இருந்தது:

நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும்: நம்மைத் தூற்றுகிறார்கள், பழிக்கிறார்கள். இப்தார் நோன்பு நடைபெறும் காலம் இது.  நாமும் எதிர்வாதம் செய்துகொண்டிருக்காமல், நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக மறுப்புக்கு மறுப்பு, பதிலுக்கு பதில் என்றில்லாமல், மறுப்புக்கு விளக்கம், பகுத்தறிவு வியாக்யானமாக அளிக்க வேண்டும். அதுதான் நமக்குத் தேவை. நபிகள் நாயகம் செல்லும் வழியில் பெண் ஒருத்தி மாடி வீட்டிலிருந்து குப்பைகளை வீசி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவற்றை தட்டிவிட்டு எதுவும் நடக்காததுபோல் நபிகள் சென்றுகொண்டிருந்தார். ஒரு நாள் நபிகள் மீது குப்பைகள் விழவில்லை. அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு எனத் தெரிந்து நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இது எடுத்துக்காட்டு.

யார் நம் மீது குப்பை கொட்டினாலும், எந்த, “அம்மா’ கொட்டினாலும் அதை உதறிவிட்டு, தட்டிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். குப்பையா கொட்டுகிறாய், நான் சாக்கடையை உன் மீது கொட்டுகிறேன் என்ற காரியங்களில் கட்சியினர் இனி ஈடுபடக்கூடாது“.

கட்சியினர் இனி ஈடுபடக்கூடாது“. அதாவது, திமுகவினர் இதுவரை குப்பைக் கொட்டியது சரிதான். இனி, அதிமுகவினர் கொட்டவேண்டியதுள்ளது!