Archive for the ‘சிந்தனா உரிமை’ Category

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

ஓகஸ்ட் 14, 2011

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

 மூதறிஞரை வெல்ல முயன்ற கலைஞர், கலைஞரை மிஞ்சும் மருத்துவர்: தமிழகத்தில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தமிழில் இல்லாத வார்த்தைகள் மீதுதான் அன்பு, காதல், போகம், பிணைப்பு, இணைப்பு எல்லாமே. ஆனால், திடீரென்று அவற்றை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி முதலியோர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.  இப்பொழுது ராமதாஸுக்கும் அந்த பித்துப் பிடித்து விட்டது போலும். ஆண்டுக்கு ஆண்டு, வார்த்தைகளுக்கு, புதிய வியாக்ரானம் / விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரிவினைவாதங்களை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தி, மக்களை மயக்கப் பார்த்தது பாமக. ஆனால், ராஜதுரோகக் குற்றட்திற்குள்ளாவோம் என்று பயந்து, அண்ணாதுரையைப் போல, அமைதியாக கொள்கைளை மாற்றிக்கொண்டனர்.

சங்கராச்சாரியார், ரஜினிகாந்த் இந்த இருவர்களால் தான் தமிழகமே கெட்டுவிட்டது: இப்படி ஒருமுறை பேசிக் கலக்கியுள்ளார் ராமதாஸ். அதாவது, தெய்வநம்பிக்கை இளைஞர்களிடம் இவர்களால்தான் வளர்ந்தது, அதனால் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற அளவிற்கு பேசினார். ரஜினி படங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தியேட்டர் முதலாளிகளை மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால், நாத்திகத்தினால் கடந்த 60 ஆண்டுகளில் என்ன சாதிக்க முடிந்தது என்று இந்த பகுத்தறிவாளியால் சொல்லமுடியவில்லை.

“திராவிடம்’ என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்[1]கிருஷ்ணகிரி: “”திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். “திராவிடம்’ என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சாணக்யன்ஒருதுரோகி’ : பா..., ராமதாஸ்பேச்சு[2]திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்[3].

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

திராவிட மாயையிலிருந்து என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிவரப்போகிறர்கள் என்று தெரியவில்லை: பி. ராமமூர்த்தி 1980களில் “ஆரிய மாயையா, திராவிட மாயையா” என்று திராவிட இயக்கத்தை விமர்சித்தார்[4]. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்!” என்று 1990களில் எழுதியுள்ளார்[5]. அப்பொழுது கருணாநிதி அவரை சிறையில் அடைத்தார். ஆனால், தமிழர்கள் அந்த மாயையிலிருந்து மீளவில்லை. திராவிட மாயையும் தொடர்ந்தது. “திராவிடம்” இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை என்ற நிலையில் தான் இருந்துவந்தது. பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள், விடுதலை சிறுத்தைகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் “திராவிட” அடைமொழி இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. “ஆரியர்” இனம் பொய், மாயை, கட்டுக்கதை என்றெல்லாம் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், அந்த இனவாதம், இனவெறி, இனசெருக்கு, இனமாயை வாதங்களை வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன. பணபலம் மிக்க வீரமணி கோஷ்டியர்கள் கூட கருணாநிதி-ஜெயலலிதா என்று மாறி-மாறி தங்களது திராவிடப் பற்றைக் காட்டிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு பணம், பதவி ஏதாவது கொடுத்தால் போதும், மாறிக்கொண்டேயிருப்பார்கள், மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்! கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், அரசியலில் நண்பனும் இல்லை-எதிரியும் இல்லை என்றெல்லாம் பேசுவார்கள். இனியேனும், உண்மையை அறிந்து தெளிவார்களா பார்ப்போம்!

வேதபிரகாஷ்

14-08-2011


[3] பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

[4] பி. ராமமூர்த்தி, “ஆரிய மாயையா, திராவிட மாயையா” – விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983.

[5] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம்!, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1994.

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

செப்ரெம்பர் 11, 2010

திகவின் விநாயக சதுர்த்தி வியாபாரம்!

வித்தியாசமான முறையில் விநாயகர் சதுர்த்தி பற்றிய துண்டு அறிக்கைகள் தயார்[1]! விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுளுக்கு தமிழ்நாட்டில் பண்டிகையாம்! தமிழர் தலைவர் அவர்கள் 3.9.2010 அன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டபடி, இவ்வாண்டு விநாயகர் சதுர்த்தி ஆபாசத்தை – அருவருப்பை மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவோம்! வித்தியாசமான வகையில் 4 பக்க அளவில் துண்டு அறிக்கைகள் அச்சிடப்பட்டுள்ளன. ஆயிரம் துண்டு அறிக்கைகளுக்கு நன்கொடை ரூ.300 தான். கழகத் தோழர்கள் வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை சென்று விநியோகியுங்கள்! விநியோகியுங்கள்!! திராவிடர் கழகம் தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை – 600 007 போன்: 044-26618163.

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

திகவின் விநாயக சதுர்த்தி அவதூறு பிரச்சாரம்

இறக்குமதி செய்யப்பட்ட கடவுளர்களும், வியாபாரமும்: விநாயகர் என்கிற இறக்குமதிக் கடவுள் என்றால், அல்லா, முஹமது, ஜேஹோவா, மேரி, ஏசு, ………………..முதலியவை என்ன ரகத்தில் வரும்? இவையெல்லாம் என்ன இந்தியாவில் இருந்தனவா? நாத்திகம் என்றால் அறிவு தேவையில்லையா? பகுத்தறிவு என்றால் புத்தி வேண்டாமா?

மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகமா, மக்களை ஏமாற்றும் வேலையா? மதசார்பற்ற / செக்யூலரிஸ நாத்திகத்தை மெய்ப்பிக்க ரம்ஜானுக்கு, பக்ரீதுக்கு, கிருஸ்துமஸுக்கு………………………இத்தகைய துண்டு அறிக்கைகள் வளியிடுவார்களா? அதிலுள்ளவற்றை எடுத்துக் காட்டி மக்கள் மத்தியில் தீவிரமாகப் பரப்புவார்களா?

கோவையில் விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ்[1] : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார்: விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் நடக்கும் நிலையில் கோவையில், விநாயகரை அவமதிக்கும் வகையில் பிரசுரம் வெளியிட்ட தி.க.,வினர் மீது கோவை போலீசில், இந்து அமைப்பினர் புகார் கொடுத்தனர். கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பொதுமக்களும் பக்தியுடன், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகரை வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தி.க.,வைச் சேர்ந்த சிலர், கோவை ரேஸ்கோர்ஸ், சுங்கம் பகுதியில் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நான்கு பக்க துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வினியோகித்தனர். இப்பிரசுரத்தை படித்து பார்த்த பொதுமக்களும், இந்து அமைப்புகளும் மிகுந்த வேதனையும், கடும் அதிருப்தியும் அடைந்தனர்.

இந்து அமைப்புகள் போலீஸாரிடம் புகார்: இது தொடர்பாக, வேதனை அடைந்த இந்து முன்னணி, பாரத் சேனா, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளைச் சேர்ந்த தொண்டர்கள், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நேற்று காலை சுங்கம் பகுதியில் மறியலில் ஈடுபட முயன்றனர். நேற்று, இந்து முன்னணி மாநகர் மாவட்ட செயலர் சதீஷ் தலைமையில் இந்து முன்னணி, பாரத்சேனா, வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசனிடம் புகார் கொடுத்தனர். புகாரில்,” முழுமுதற் கடவுள் விநாயகரை பல்வேறு வகையில் அவமதிக்கும் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நோட்டீஸ் சென்னை, வேப்பேரியில் உள்ள திராவிடக் கழகம், தலைமை நிலையத்தில் இருந்து வெளியிட்டதாக அச்சிடப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட நோட்டீசை கைப்பற்றுவதோடு, இந்துக்கள் மனம் நோகும்படியாக, நோட்டீஸ் வினியோகித்தவர்களை கைது செய்து, கடுமையான தண்டனை விதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட போலீசார், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு[2]:திண்டுக்கல்: கலவரத்தை தூண்டும் வகையில் விநாயகர் குறித்து சர்ச்சைக்குரிய வாசகம்,போட்டோ அடங்கிய நோட்டீஸ் விநியோகித்த தி.க.,வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோயில் முன்பு நேற்று முன்தினம் சிலர் “விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு’ என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகித்தனர். இதில் பார்வதியின் அழுக்கு உருண்டையில் பிள்ளையார் பிறந்ததுள்ளார்.பகவான் பிறப்பு இவ்வளவு அசிங்கமா சிந்திப்பீர். யானை தலையை மனிதருக்கு வைத்தால் பொருந்துமா என்று விநாயகர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து இந்துமுன்னணி மாவட்ட பொது செயலாளர் ரவிபாலன் திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார்.விநாயகர் பிறப்பை கேவலப்படுத்தியது, போட்டோக்கள் வெளியிட்டது, கெட்ட வார்த்தையால் திட்டியது, விநாயகர் சதுர்த்தியில் கலவரத்தை தூண்ட முயற்சித்தது ஆகிய குற்றத்திற்காக தி.க., மாவட்ட தலைவர் வீரபாண்டி உட்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குபதிவு செய்துள்ளார்.


[1] தினமலர், விநாயகரை அவமதிக்கும் நோட்டீஸ் : கோவையில் பரபரப்பு; போலீசில் புகார், செப்டம்பர் 12, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=83176

[2] தினமலர், கலவரத்தை தூண்டும் நோட்டீஸ் தி..,வினர் மீது வழக்கு, செப்டம்பர் 10, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=81504


[1] விடுதலை, 07-09-2019, ப.8, http://www.viduthalai.periyar.org.in/20100907/news27.html

கருத்துரிமைப் பற்றி கருவும் கண்மணிகள் இதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்!

ஜூன் 4, 2010

கருத்துரிமைப் பற்றி கருவும் கண்மணிகள் இதையும் கொஞ்சம் கவனிக்க வேண்டும்!

மனத்தை அது கொண்ட மனிதானாலேயேக் கட்டுப் படுத்த முடியாது.

பிறகு, மற்ற மனிதர்கள், அவர்களுடைய மனங்கள், அம்மனங்களின் சிந்தனைகள், சிந்தனையோட்டத்தின் எல்லைகள், ஆழங்கள் முதலியவற்றிப் பற்றி யாரும் அறியமுடியாது, தடுக்கமுடியாது, கட்டுப்படுத்தமுடியாது.

ஆக கருத்துரிமை என்று என்னவேண்டுமானாலும் கருதலாமே ஒழிய, கருதியதை எல்லாம் வெளிப்படையாகச் சொல்லமுடியாது. அவ்வாறும் ஒருவன் / ஒருத்தி சொல்லலாம் என்று தீர்மானித்தாலும், எந்த அளவிற்கு முழுவதுமாகச் சொல்லப்படுகிறது, மறைத்துச் சொல்லப்படுகிறது, …………..என்பதெல்லாம் மற்றவர்களால் அறியமுடியாது.

உதாரணத்திற்கு, இந்த பிரச்சினையை எடுத்து கொள்வோம்:

சோனியாவைப் பற்றிய புத்தகம்: தடை ஏன்?

சோனியாவின் கணவர் எல்.டி.டி.ஈயால் கொலை செய்யப் பட்டார். காங்கிரஸுக்கு இதனால்தான், எல்.டி.டி.ஈ என்றால் எதிர்ப்பார்கள். திருமா போன்ற வேடதாரிகள் கூட  சோனியாவைப் பற்றி பலவாறு விமர்சனம் செய்துள்ளார்கள். கருணாநிதி சோனியாரின் மாமியார் இந்திராவை கந்தபடி திட்டியயுள்ளது மட்டுமன்றி, கொலை செய்யவே திட்டமிட்டு, மாட்டியும் கொண்டனர். பிறகு, இந்திராவே அந்த கொலை வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டார். இதையெல்லாம் திரட்டி ஒரு புத்தகத்தை எழுதினாலும், ஒருவேள, காங்கிரஸார் அதை எதிர்க்கலாம்.

el_sari_rojo_javier_moroel_sari_rojo_javier_moro

ஜேவியர் மோரோ என்பவர், “எல் சாரி ரோஜோ” (The Red Sari, subtitled When Life is the Price of Power) என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே மில்லியன் கணக்கில் இப்புத்தகம் விற்றுவிட்டதாம். அனால், காங்கிரஸ் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுமைக்கும், இதனை தடை செய்ய வேண்டும் என்று உறுதியாக இருக்கிறதாம்!

சோனியா தனது வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது: சோனியா ஏற்கெனெவே இந்த ஆசிரியருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அபிஷேக் சிங்வி என்ற காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், “இந்த புத்தகம் கடைகளிலிருந்து திரும்பப் பெர வேண்டும்”, என்று இத்தாலிய, ஸ்பானிஸ் பதிப்பாளர்களுக்கு எழுதி மிரட்டியுள்ளதாக, இந்த ஆசிரியர் கூறுகிறார்.

2008ல் ஸ்பானிய மொழியில் எழுதி வெளியிடப் பட்ட இப்புத்தகம், பிறகு, இத்தாலி, பிரெஞ்சு, டச்சு மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு வெளியாகி, இப்பொழுது, ஆங்கிலத்திலும் பீட்டர் ஹிரான் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிட தயாராக உள்ளதாம்.

சோனியாவின் ஆரம்பகால வாழ்க்கையை குறிப்பதால், சோனியா இதனை எதிர்க்கிறார் என்று தெரிறது:

கிரிஸ்டியன் வோன் ஸ்டீஜ்லிட்ஸ் என்ற நண்பர் தான் சோனியாவை ராஜிவ் காந்திக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டாராம். அவர், ராஜிவ்காந்தி இறுதி சடங்கு போதும் கலந்து கொண்டார்.

ராஜிவ் இறந்தவுடன், காங்கிரஸ் இவரை தலைவராகத் தூண்டியபோது, சோனியா ஆல்ப்ஸ் மலையடிவாரத்தில் உள்ள ஆசியகோ மலைப்பிரதேசத்தில் உள்ள லூசியானா என்ற கிராமத்திற்கு சென்று விட தீர்மானித்தாராம்.

சோனியா பிறந்தது: 1946ல் சோனியா பிறந்தபோது, போருக்குப் பின் பிறந்த குழந்தை என்று அடையாளங் காட்ட,  பாரம்பரிய முறைப்படி, அயல்வீட்டார் முதலியோர் கத்தரிப்புக் கலரிலான ரிப்பனை ஜன்னல்-கதவு முதலியவற்றில் உள்ள கம்பிகளுக்குக் கட்டினர்.

பெயர் வைத்தது: அங்கிருந்த கத்தோலிக்க புரோகிதர் / ஐயர் அந்த குழந்தைக்கு  எட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) என்ற பெயரைச் சூட்டினார். ஆனால், அக்குழந்தையின் தந்தை ஸ்டெஃபானோ மைனோ சோனொயா என்றுதான் அழைத்து வந்தாராம்.

ருஷ்ய பெயரை வைத்த மகத்துவம்: ருஷ்ய படையிலிருந்து விலகிய பிறகு, இந்த விதமாக, தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றினாராம். ஸ்டெஃபானோ முசோலினியின் ராணுவத்தில் பணியாற்றிவர். ருஷ்யவால் தோற்கடிக்கப்பட்டபோது, தப்பிப் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். அப்படி தப்பிக்க ஒரு ருஷ்ய விவசாயி பண்ணைவீட்டில் ஒளிந்து கொண்டார்களாம். அந்த விதத்தில், அந்த ருஷ்ய குடும்பத்தினரின் நினைவாக, மதிக்க தனது குழந்தைக்கு, மற்ற பெண் குழந்தைகளைப் போன்றே, ருஷ்ய பெயரை வைத்தாராம்.

சோனியாவின் குணம், ஆரோக்யம் முதலியன: சோனியா கியாவெனோ என்ற இடத்தில் உள்ள கான்வென்டிற்கு படிக்கச் செல்கிறாள். அவள் எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பாளாம், சண்டைபோடும் நண்பர்களுக்கு மத்தியஸ்தம் செய்து வந்தாளாம். அவள் தனியாக இருந்து படித்து வந்தாலும், ஆஸ்துமா மற்றும் இருமல்-வலிப்பு முதலியவற்றால் பாதிக்கப் பட்டிருந்ததால், தனியாக தூங்க மாட்டாளாம். பிறகு, டூரினில் படிக்கும்போது, அலிடாலியாவின் பணீப்பென் / சேவகியாகி (Alitalia stewardess) உலகம் சுற்றிவரவேண்டும் என்ற ஆசைக் கொண்டாளாம்.

In any case, Sonia was not particularly interested in history, or the sciences either, or anything to do with politics. She had always liked languages, for which she had a certain facility. Her father had encouraged her to learn Russian and had paid for a private teacher for her. Sonia understood Russian and spoke it, although she had difficulty reading it. She also learned French at home. In addition, languages were useful if you wanted to travel, for getting to know other people, other customs, other worlds, to discover those places that she had been able to glimpse in the lives of the missionaries.

பல மொழிகள் கற்கும் விருப்பம், ஈடுபாடு, திறமை: சோனியாவிற்கு சரித்திரம், விஞ்ஞானம், அரசியல் முதலியவை பிடிக்காது. ஆனால், மொழிகள் கற்றுக்கொள்வது பிடிக்கும், அதற்கானத் திறமையும் அவளிடத்தில் இருந்தது. பிறகுதான், ஏதாவது ஒரு அன்னிய மொழியைக் கற்றுக் கொண்டு, மொழிபெயர்ப்பாளர் வேலையை ஐக்கிய நாடுகள் சங்கம் போன்ற இடத்தில் தேடலாம் என்று நினைத்தாராம்.  அவர் வைத்துக் கொண்டிருந்த நாயின் பெயர் ஸ்டாலின் ஆகும்.

On January 7th, 1965, she said goodbye to her sisters and gave Stalin, the old dog, who had been her playmate throughout her childhood, a big squeeze. Her parents went with her to Milan airport, just one oretta away. The morning mist lifted and gave way to a cold, sunny day. Sonia was excited about travelling alone for the first time and also afraid of the unknown. She was 18 years old and had her life in ahead of her. A life that she could not have imagined in her wildest dreams.

லூஸியானா மற்றும் ஓர்பேஸனோ கிராமங்களுக்குச் சென்றால், இப்பொழுது கூட இந்த கதைகளை அங்குள்ள மக்கள் கூறுவார்கள். ஆகவே இவையெல்லாம், தெரிந்த விஷயங்கள் தாம். நான் ஒன்றும் சட்டத்திற்கு புறம்பாக எதனையும் எழுதிவிடவில்லை என்று மோரோ கூருகின்றார்.

ராஜிவ் இறந்த பிறகு, சோனியா இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தாரா? சோனியா இந்தியாவை விட்டு, இத்தாலிக்குச் சென்றுவிட தீர்மானித்தது குறித்து காங்கிரஸ்காரர்கள் கோபம் கொண்டது குறித்து, மோரோ குறிப்பிடுவதாவது, “இதைப் பற்றி இத்தாலிய நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன. தன்னுடைய கணவன் இறந்தவுடன், அவளது தாயார், “எப்பொழுது இங்கு வருகிறாய்”, என்று கேட்டது, அப்படியொன்றும் யாருக்கும் புரியாதது அல்ல, அதற்கு ஒன்றும் பெரிய இலக்கிய நுண்ணறிவுத் தேவையில்லை“.

Javier Moro defended his claim that she had wanted to leave India. “There were articles in the Italian papers. After her husband died, her mother called, and it’s logical that she asked ‘when are you coming home’. It’s not far-fetched it’s a literary licence,” he said.

மேலும், சோனியாவின் அந்நிய குடிமகள், இந்தியக்குடிமகள், ஓட்டுரிமை, தேர்தலில் நிற்பது, பிரதமர் ஆவது, முதலிய பிரச்சினைகளைப் பற்றி, பலர் வழக்குகள் தொடர்ந்த்த போது, இவ்விஷயங்கள் வெளிவந்துள்ளன.