Posts Tagged ‘திருவண்ணமலை’

மறுபடியும் நித்யானந்தா, லெனின், ரஞ்சிதா முதலியோர் பரஸ்பர புகார்!

ஜனவரி 3, 2011

மறுபடியும் நித்யானந்தா, லெனின், ரஞ்சிதா முதலியோர் பரஸ்பர புகார்!

லெனின்மீது புகார் (30-12-2010): செந்தமிழ் மாநாட்டில் லெனின் பெயர் அடிபட்டது. அவர் பெயரைக் குறிப்பிட்டதே கோபால் தான்! அதற்குப் பிறகு காணாமல் இருந்த லெனின் மறுபடியும் பழைய கதையை அவிழ்த்து விட ஆரம்பித்துள்ளார். பதிலுக்கு நித்யானந்தா, ரஞ்சிதா, மா நித்ய சுப்ரியானந்தா முதலியோரும் புகார்களைக் கொடுத்துள்ளனர். இதெல்லாம் நித்யானந்தா, திருவண்ணமலைக்கு வந்தது, அப்பொழுது சில இயக்கங்கள் தர்ணா செய்தது, ஆஸ்ரமத்திற்குச் சென்று வழிப்படு செய்தது முதலியவற்றிலிருந்து தொடங்கியுள்ளது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்கெனெவே தெரிந்ததுதான், இருப்பினும் சில முரண்பாடுகள் தெரிகின்றன.

நடிகை ஜூஹி சாவ்லா, மாளவிகா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து கூறி ஆசிர்வாதம் பெற்றனர் (01-01-2011):. இதற்கிடையில், சாமியார் நித்யானந்தா தனது 39வது பிறந்த நாளை பிடதி ஆஸ்ரமத்தில் கோலாகலமாக கொண்டாடினார். அப்போது நடிகைகள் ஜூஹி சாவ்லா, மாளவிகா உட்பட சிலர் நித்யானந்தாவை தனியாக சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து, ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்[1]. இவரது பிறந்த நாள் விழாவை “ஆனந்தோற்சவம் ” என்ற பெயரில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். இந்நிகழ்ச்சியின் போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பிடதியில் கூடுவதுண்டு. இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

நித்யானந்த-ரஞ்சிதா வீடியோவை நான் எடுக்கவில்லை லெனின் இப்பொழுது (ஜனவரி 2011) கூறுவது!: முன்பு லெனின் தான் கேமராவை மறைத்து வைத்து அத்தகைய வீடியோ காட்சியை படமெடுத்ததாக செய்திகள் வந்தன. ஆனால், இப்பொழுது, லெனின் அதனை மறுக்கிறார். “நித்தியானந்தாவும், ரஞ்சிதாவும் படுக்கை அறையில் இருந்த காட்சிகள் அடங்கிய வீடியோவை நான் எடுக்கவே இல்லை. எனக்கு வந்ததை நான் வெளியிட்டேன், அவ்வளவுதான்”, என்று கூறியுள்ளார் இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்ட லெனின் கருப்பன்[2]. அப்படியென்றால், யார் அந்த வீடியோவை எடுத்தது என்ற கேள்வி எழுகிறது.

கிருத்துவ மிஷனரி ஒன்று பின்னணியில் உள்ளது: ரஞ்சிதா, “நான் தொடர்ந்து லெனின் மற்றும் கிருத்துவ மிஷனைச் சேர்ந்த ஒரு நபர் இருவர்களாலும் மிரட்டப் பட்டேன், அச்சுறுத்தப் பட்டேன். நான் உயிருடன் வாழ விரும்புகிறேன். அதனால், அந்த பெயர்களைக் குறிப்பிடவில்லை. கருணாநிதி தனக்கு பாதுபாப்பு கொடுத்து காப்பாற்றுவேன் என்று உறுதியளித்தால் அந்த பெயர்களை வெளியிடுவேன்”, என்றும் சொன்னார்[3]. [“I was being blackmailed and threatened by the accused and also by another man who belongs to a Christian mission,” said the actress. “I want to live, so I shall not name them. If the CM of Tamil Nadu promises to protect me, I shall reveal the names.”]. நித்யானந்தா முன்னரே இத்தகைய குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஆனால், ஊடகங்கள் அதனை அப்பொழுது வெளியிடவில்லை. இப்பொழுது கூட, ஆங்கில இதழ்களில் சில வெளியிட்டுள்ளன.

மா நித்ய சுப்ரியானந்தா புகார் (30-12-2010): நித்யானந்தா மீது புகார் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்திய லெனின் கருப்பன் மீது கற்பழிப்பு புகார் ஒன்றை, நித்யானந்தாவின் சிஷ்யை நித்ய சுப்ரியானந்தா போலீசில் கூறியுள்ளார். சாமியார் நித்யானந்தாவுக்கும், நடிகை ரஞ்சிதாவுக்கும் இடையே தொடர்பிருப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டுகளை அவரது சீடராக இருந்த லெனின் கருப்பன் வெளிப்படுத்தினார். அவர் மீது நித்ய சுப்ரியானந்தா, பிடதி போலீசில் கொடுத்த புகாரில் கூறியுள்ளதாவது: “டிசம்பர் 30ம் தேதியன்று காலை 8 மணியளவில் பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலையில் அச்சுதானந்தா மற்றும் எனது சகோதரருடன் நடந்து சென்ற போது, அவ்வழியே காரில் இருவருடன் வந்த லெனின் கருப்பன், எனது ஜாதியைக் குறித்து தரக்குறைவாக பேசினார்[4]. தமிழகம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான், 2009ம் ஆண்டு ஜூலை மாதம் குரு பூர்ணிமா நடந்து சில நாட்கள் கழித்து, என்னை லெனின் கருப்பன் கற்பழிக்க முயன்றார். என்னை நிர்வாணமாக மொபைல் போனில் படமெடுத்து மிரட்டினார். பின்னர், மறுநாள் மாலை லெனின் கருப்பன் அவரது மொபைல் போனில் இருந்த படத்தைக் காட்டி முந்தைய நாள் நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டினார். மீறி இதை வெளிப்படுத்தினால், எனது தற்கொலைக்கு சாமியாரும், நானும் காரணம் என்று கடிதம் எழுதுவேன் என்று மிரட்டினார். இதனால் புகாரை முன்பே தாக்கல் செய்யவில்லை”, என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்[5].

போலீஸார் பாரபட்சமாக உள்ளனரா? புகாரை முதலில் வாங்க மறுத்ததாகவும், பின்னர் எஃப்.ஐ.ஆர். போடாமல், மனுமாதிரி ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்[6]. இதை விசாரித்த பிடதி போலீசார், சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில், லெனின் கருப்பன் எங்கிருந்தார் என்பதை விசாரித்தனர். அன்றைய தினம் அவர் சென்னையில் இருந்தது தெரிந்தது. கடந்த ஏழு நாட்களாக அவர் பெங்களூரிலோ, பிடதியில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமம் அருகிலோ அவர் வந்து சென்றதற்கான அறிகுறி ஏதுமில்லை என்றும் தெரிவித்தனர். சுப்ரியானந்தா தாக்கல் செய்துள்ள புகாரை அறிந்த லெனின் கருப்பன், தன் மீது வீண் குற்றச்சாட்டை போலீசில் அளித்ததற்காக மானநஷ்ட வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளார்.

ரஞ்சிதாவின் புகார் (30-12-2010): நித்தியானந்தாவின் அந்தரங்க செயலை அம்பலப்படுத்திய அவரது முன்னாள் சீடரும், டிரைவருமான லெனின் கருப்பன், தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும், அவர் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால் தான் தப்பித்ததாகவும் நடிகை ரஞ்சிதா புதிய புகாரைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பெங்களூர் அருகே, ராம்நகர் காவல் நிலையத்தில் அவர் சார்பில் ஒரு புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது[7]. ரஞ்சிதா, நித்யானந்தாவின் முன்னாள் கார் ஓட்டுநர் லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், ஸ்ரீதர் ஆகியோர் மீது ராமநகரம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி புகார் அளித்தார்[8].

“வீடியோவில் இருப்பது நானல்ல, என்று ரஞ்சிதா கூறுகிறார் (30-12-2010): இந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று (30-12-2010) ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், “நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை. எனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும். நான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன”, என்றார் ரஞ்சிதா[9].

திடீரென்று இப்பொழுது இந்த விஷயங்களை ஏன் வெளியிடவேண்டும்? புத்தாண்டு சமயத்தில், இவையெல்லாம் மக்களுக்கு வேண்டிய விஷயங்களா? குற்றஞ்செய்தவர்கள் யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும் அதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. ஆனால், இதையே வைத்துக் கொண்டு வியயபாரம் செய்வது போல இருப்பது அசிங்கமாக உள்ளது. உதாரணத்திற்கு, நேற்று மாலை, “மாமா மாப்ளே” என்ற தொடரில் “குஜால்” சாமி என்றெல்லாம் கூறி இந்த நித்யானந்தாவை மையமாக வைத்துக் கொண்டு காட்டப்பட்டது அருவருப்பாக இருந்தது. அந்த வார்த்தையை வைத்துக் கொண்டு, எதோ மந்திரம் சொல்வது மாதிரியும் காட்டப்பட்டது. இதில் வேடிக்கையென்னவென்றால், அதே சன் டிவிதான் இந்த கண்ராவியையும் வெளியிட்டது. இதே போல மற்ற செக்ஸ் சாமியார்களைப் பற்றி, தொடர்களில் காட்டுவார்களா?


[4]Ma Nithya Supriyananda has filed a complaint of attempted rape, threat to life and verbal abuse of her community (scheduled caste) at Bidadi police station. http://www.hindustantimes.com/Two-devotees-of-Nityananda-file-complaints-against-former-aide/Article1-645605.aspx