Posts Tagged ‘திராவிட பத்தினி’

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

ஜூலை 7, 2021

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன (3)

அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
தனது கைகளினால் வேலை செய்யும் அர்ஜுன் – அணில் போன்று சேவை செய்யும் அர்ஜுன்
கும்பாபிஷேகம் முடித்து, ஸ்வாமிகள் பிரசாதம் கொடுக்கிறார்.

அர்ஜுன் போன்ற அணில்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றன: தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இந்துக்களுக்கு, மடங்களுக்கு, மடாதிபதிகளுக்கு, நம்பிக்கைகளுக்கு மரியாதை, பாதுகாப்பு, போற்றல், ஆதரவு முதலியவை தொடர்ந்து இருந்து வருகின்றன. மத்வ சம்பிரதாயத்தில், மண்ணிற்குத் தான் மகிமை. ஶ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் (மூல பிருந்தாவனத்தில் இருந்து புண்ணிய எடுக்கப் பட்ட மண் மிருத்திக என்று சொல்லப் படும். மண் மட்டுமல்லாது, அந்த வார்த்தையும் புனிதத்துடன் தொனிக்கப் படும், பாவிக்கப் படும். அத்தகைய புண்ணிய மண் எடுத்து மற்ற இடங்களில் பிருந்தாவனங்கள் நிறுவப்பட்டன, நிறுவப் படுகின்றன. அதனால், அவற்றிற்கு அதே மரியாதை, போற்றல், சடங்குகள், கிரியைகள் முறையாக நடக்கும். அதுபோல இங்கு, பேஜேவர் மட ஸ்வாமிஜி[1]  அயோத்தியாவிலிருந்து, புனித மண்ணை எடுத்து வந்து, இங்கு, இக்கோவில் நிறுவ ஆவண செய்து வைத்தார். இப்பொழுதும், கும்பாபிஷேகம் முடித்து வைத்தார்.  மண், சாம்பல், யாக ஆகுதி முதலியவற்றிற்கு அத்தகைய புனிதத் தன்மை உள்ளது, மதிக்கப் படுகிறது. அவற்றைப் பற்றிய சில உதாரணங்கள் கீழே விவரிக்கப் பட்டுள்ளன. ஆனால், இங்கோ – தமிழகத்தில் எல்லாமே பகுத்தறிவு, பெரியாரிஸம், நாத்திக போர்வைகளில், தொடர்ந்து தூஷிக்கப் படுகின்றன. இந்துக்கள் மனரீதியில், உடல் ரீதியிலும் தொடர்ந்து தாக்கப் பட்டு வருகிறார்கள்[2].

கொரோனா தடுப்பு விதிமுறைக்ளுடன் பக்தர்கள் வருகிறார்கள், சேவிக்கிறார்கள்.

அணில் வேலை செய்கிறது, அணில்கள் வேலை செய்கின்றன, கலியுகத்திலும் அணில்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன: எவ்வளவு சிறிய உயிரினம் ஆனாலும், மக்களுக்கு உதவ வேண்டும், சேவையில் ஈடுபட்டு பணியை செய்ய வேண்டும், அதில் உருண்டு திளைக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டு, வேலை செய்தது அணில். ராம பிரான் அதன் சேவையை மெச்சி, அன்பாக தடவிக் கொடுத்தார்.  அதாவது, லங்கைக்குச் சென்று படைகளோடு கடக்க குருக்கில் இருக்கும் கடலுக்கு, அத்தீவுக்கும் இடையே பாலம் கட வேண்டும். ராமரிடம் பலவித தொழிற்நுட்ப வல்லுனர்கள் இருந்தனர். பணிகள் நடந்து பாலம் கட்டியாகி விட்டது. அப்பொழுது, ஒரு அணில் மண்ணின் மேற்பரப்பில் உருண்டு கொண்டிருப்பதைக் கண்டு ராமர் கேட்டார், “நீ ஏன் அவ்வாறு செய்து கொன்டிருக்கிறாய்?” அணில், “நானும் உங்கள் பாலம் கட்டிய பணியில் கலந்து கொண்டு, நீங்கள் எல்லோரும் நடந்து செல்ல வசதியாக இவ்வாறு உருண்டு மண்ணை சமன் படுத்துகிறேன்”, என்றது. அதன் சேவையை மெச்சி, அப்பொழுது, அதன் முதுகில் அன்போடு தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. சேவையின் மேன்மையைப் போற்றும் வகையில், பணியின் மகத்துவத்தை சிறப்பிக்கும் முறையில், வேலையின் உழைப்பை மதிக்கும் நிலையில் பரிசாக, விருதாக, தெய்வத்தின் தானமாக கிடைத்த அடையாளமாக பாவிக்கப் பட்டது. பின்னர் மகாபாரத்தில் கீரிப்பிள்ளை சம்பவம் விவரிக்கப் படுகிறது.

ராமரின் அணிலும், மகாபாரத கீரிப்பிள்ளையும் – கற்க வேண்டிய படிப்பினைகள்

கீரிப் பிள்ளையும், குருக்ஷேத்திர யுத்தமும், தருமனின் யாக ஆகுதி சாம்பலும், கீரிப்பிள்ளையும்[3]: குருக்ஷேத்திர யுத்தத்திற்குப் பிறகு, இந்திரபிரஸ்தத்தில், தான் பெற்ற மகத்தான வெற்றிக்கு, அஸ்வமேத யாகம் சிறப்பாக நடத்தி முடிக்கிறான். யாகம் முடிந்து விட்டது. ஆகுதி குறைந்து விட்டது. சாம்பல் உருவாகி விட்டது. ஆனால், தருமனுக்கு கொஞ்சம் அகம்பாவம் வந்து விடுகிறது. ஆஹா, நான் வெற்றி பெற்று மஹாராஜன் ஆகிவிட்டேன் என்று நினைத்தபடி உட்கார்ந்து கற்பனை செய்து கொண்டிருக்கிறான். அப்பொழுது, ஒரு கீரிப்பிள்ளை வந்து, அந்த சாம்பலைப் பார்த்து, அதில் வந்து உருளுகிறது. தருமனுக்கு சிந்தனை சிதற கோபம் வருகிறது. கீரிப்பிள்ளையோ விடாமல் புரண்டு பார்க்கிறது.

யுதிஸ்ட்ரன் – தருமராஜன் தருமனாகிறான். “கீரிப்பிள்ளையே, உனக்கு என்ன வேண்டும்?,” என்று கேட்கிறான்.

“எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கோ ஏதோ மிகப் பெரியப-சிறந்த யாகம் நடந்தது என்று கேள்விப் பட்டேன். அதனால், இங்கு வந்தேன்”

“அப்படியா, சரி நீ என்ன எதிர்பார்க்கிறாய்?”

“முன்பு, ஒரு ஏழைப் பராரி பிராமணனின் வீட்டு அடுப்பு சாம்பலில் உருண்ட போது, என்னுடைய உஅலின் ஒரு பகுதி தங்கநிறமாகி விட்டது. பிறகு முனிவர்களிடம் வழி கெட்டபோது. எங்கெங்கெல்லாம் யாகம் நடக்கின்றனவோ, அங்கெங்கெல்லாம் சென்று ஆகுதி சாம்பலில் உருண்டு பார், மேன்மை இருந்தால், உனது ஆசை தீரும் என்றனர். ஆனால், இங்கும் ஒன்றும் நாக்கவில்லை”

“அதாவது, எனது யாகமும் அந்த அளவுக்கு சிறப்பில்லை போன்றிருக்கிறது,” என்று யோசித்து, ஆணவம் குறைந்து, சித்திக்க ஆரம்பித்தான்.

“தருமரே நன்றி நான் சென்று வருகிறேன், ” என்று அந்த கீரிப்பிள்ளை சென்று விட்டது.

தமிழக கொக்கோக கவிப்பெருங்கவிக்கோக்களுக்கு அணிலைப் பற்றி சரியாமல் இருபது அவர்களது பேதமையை வெளிப்படுத்துகிறது: தமிழகத்திற்கும், அணிலுக்கும் அடிக்கடி தொடர்பு, சந்தர்ப்பம், விவாதம்  வந்து விடுகின்றன. கொக்கோக திராவிட நாசகார கவிக்கோக்களுக்கு மூன்று கோடுகள், இரண்டு கோடுகளாகின்றன[4]. மூன்று என்பது, திராவிடத் தலைவர்களுக்குப் பிடித்த வார்த்தை மற்றும் செயல்பாட்டு எண் வடிவம், குறியீடு, அடையாளமும் ஆகும். மனை, துணைவி, கூட இருப்பவள் என்றெல்லாம் வாழ்க்கை கணக்குகள் நடந்தன, நடக்கின்றன[5]. ஆனால், பக்தர்களுக்கு அணில் மகிமை சரியாகத் தான் புரிந்திருக்கிறது. ராமர் அணிலின் சேவையை மெச்சி, அதன் முதுகில், தடவி கொடுத்தார். அப்பொழுது மூன்று கோடுகளாக மாறியது. அதாவது, மண் நிறைந்த அதன் முதுகை நான்கு விரல்களால் தடவிக் கொடுத்த போது, மூன்று விரலிடைகளில் மண் அப்படியே இருக்க அது அடையாளமாகியது. ஆனால், இந்த கொக்கோக சிறுமதி கவிஞர்களுக்கு கணக்கு தெரியாது போலும். அதனால், “அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி,” என்று எழுதினான் அவன்[6]. இவன்கள் எப்படி தடவுவார்கள் என்பது அவர்களுக்குத் தான் தெரியும். ஒரு கையில் ஐந்து விரல்கள், இரண்டு கைகளில் பத்து விரல்கள் என்றிருக்கும் போது, குடிபோதையில், எப்படி-எப்படியோ தடவி இருப்பார்கள்.  “ஐந்து விரலால் நான் உன்னை தொட்ட போது எப்படி? ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம், ஜிங்கிடிசாம்,” என்று பழைய பாடலும் உண்டு[7], ஆனால், இது போன்ற வக்கிரம் இல்லை. ராமர் எந்த இஞ்சினியரிங் காலேஜில் படித்தார், என்று கருணாநிதி கேட்டது, அத்தகைய வக்கிரத்தின் உச்சம். இன்று அதே திராவிட பாரம்பரியம் அணில்களால் மின்சார கம்பிகள் பாதிக்கப் படுகின்றன என்ற அளவுக்கு, பகுத்தறிவு வளர்ந்துள்ளது.

© வேதபிரகாஷ்

07-07-2021

ஸ்டாலின் துர்கா, அர்ஜுன் குடும்பத்தாருடன்
ஶ்ரீ ஆஞ்சநேயர் விக்கிரகத்தின் பீடம்
விக்கிரகத்தின் மேலே அபிஷேகம், விசேஷ பூஜைகள் செய்ய, ஒரு மேடை அமைக்கப் பட்டுள்ளது.
அதில் 40 பேர் இருந்து தெய்வ காரியங்களை செய்யலாம்


[1] உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார்.

[2]  இவற்றைப்பற்றி என்னுடைய பிளாக்குகளில் விவரமாக பதிவு செய்துள்ளேன்.

[3]  மகாபாரதத்தில் அஸ்வமேத மற்றும் அனுகீத பருவங்களில் (1. Aswamedhika Parva (Chapters: 1–15) 2. Anugita Parva (Chapters: 16–96)) வரும் இந்த கதை சிறிது வேறுபாடுகளுடன் உரையாசிரியர்கள் எழுதி வருகிறார்கள். யாகமறுப்பு போன்ற கருத்துகள் இருப்பதால், இது ஜைன-பௌத்த இடைச்செருகல்கள் என்றும் கருதப் படுகின்றது.

[4] இரண்டு மனைவிகளை (தெரிந்தும், தெரியாமலும்) வைத்திருக்கும் நிலை. இது திராவிட பாரம்பரியத்தில் சிலருக்கு சகஜமாகி விட்டது.

[5]  சில திராவிடத் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் கூட பின்பற்றியது, இன்றைக்கு ஆதரித்து பேசும் நிலைக்கு வந்தாகி விட்டது.

[6]  திருவாச்சி படத்தில் வைரமுத்து எழுதின சினிமா பாடல்.

[7] 1969ல் வெளிவந்த மேஜர் சந்திரகாந்த் பாடலில், “நேற்று நீ சின்ன பாப்பா இன்று நீ அப்பப்பா ஆயிரம் கண் ஜாடையோ,” இந்த வரி வரும். வாலியின் பாடல்.

கோவிலுக்கு வருகிறவர்கள் தியானம் செய்ய, தியான மண்டமும் கட்டப் பட்டுள்ளது.
சுற்றியுள்ள சன்னிதிகள் – நாகதேவதைகள்.
விநாயகர் சன்னிதி
ஶ்ரீ ராமர் கோவில், சன்னிதி
உள்ளே இருக்கும் ஶ்ரீ ராமர், சீதை, லக்ஷ்மணர் விக்கிரங்கள்

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

ஏப்ரல் 17, 2010

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

1960களிலிருந்து, திராவிடத் தலைவர்கள், அவர்களின் பேச்சு, எழுத்து முதலியவற்றைக் கவனித்து வருவதில் நானும் ஒருவன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், மனோகரன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா………………போன்றவர்கள், மற்றும் வீரமணி, அசோகன் (நடிகர்), வெடிகுண்டு / தீப்பொரி ஆறுமுகம், ………..முதலியோரின் மேடைப்பேச்சு, மற்ற பேச்சாளர்களின் பேச்சு, குறிப்பாக இரவு நேரத்தில் அப்பொழுதெல்லாம் 10 மணிக்கு மேலே மறுநாள் காலை 2-3 மணி வரை நடக்கும் கூட்டங்களில் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் (நடிப்போடு ஆடிக்கொண்டும், மற்றவர்களைப் போல நடித்துக் காட்டியும்), கேட்டிருந்தால் (ஆபாச, அசிங்கமான) அவர்களைப் பற்றி, இக்கால இளைஞர்கள் தமது கருத்தை அப்படியே மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கும்.

கருணாநிதிக்கு இந்த வயதில் அத்தகைய பழக்கதோஷம் வந்து விட்டது போலும்.

அதே பாணியில் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சை மிகவும் உன்னிப்பாகக் கவனிக வேண்டும்.

ஏனெனில், ஜெயலலிதாவைத் திட்டியிருக்கிறார், அவதூறு பேசியிருக்கிறார் என்பதைவிட அதிக-பிரசங்கித்தனமாக, திராவிடக் கொழுப்போடு, பகுத்தறிவு திமிரோடு, பக்தி, பதிபக்தி, பதிர்விதா தர்மம், கற்பு, போன்ற விசயங்களையும் சம்பந்தப் படுத்திப் பேசியுள்ளதை தமிழர்கள், இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா : முதல்வர் கருணாநிதி கடும் தாக்கு
ஏப்ரல் 17,2010,00:00  IST
Front page news and headlines today

சென்னை :”பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா,” என, முதல்வர் கருணாநிதி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் சேர்ந்த போது, என் முன் இருந்த மேஜையின் மீது ஏராளமான கட்சி உறுப்பினர் அட்டைகளை மூட்டையாக கட்டி வந்து கொட்டினர். மூட்டையில் அடைபட்டிருந்த உறுப்பினர் அட்டைகள் வெளியில் விழுந்தன. அதில் அடைபட்டிருந்தது உறுப்பினர் அட்டைகள் இல்லை. நீங்களே அதில் அடைபட்டு கிடந்ததாகத்தான் எனக்கு தெரிந்தது.நம்மை இங்கே இணைத்திருப்பது அன்பு. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு. நான் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. இப்போதாவது உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தெரிந்து, தெளிந்து தி.மு.க.,வில் இணைந்திருக்கிறீர்களே அதுவே மகிழ்ச்சி.


‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார். ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.


ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர். அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்.” இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.