Archive for the ‘திராவிட பத்தினி’ Category

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

பிப்ரவரி 13, 2016

 

பூஜாரி வேலைக்கு பெரியார் சிலைக்கு மாலை போடுவது மாதிரி, நிர்வாண பூஜை செய்தால் “டீன்” பதவி கிடைக்குமா?

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

பெரியார் சிலைக்கு மாலை போட்ட ரங்கநாதன்நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

ramasamiyum-karunanidhisamiyum

ramasamiyum-karunanidhisamiyum

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

கலைமகளை தூஷித்த பெரியார்1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

தாலி அவிழ்ப்பு போராட்டம்கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

தாலி ஆரூஊ - அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

தாலி அவிழ்ப்பு போராட்டம்போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.தாலி அவிழ்ப்பு கழட்டும் போராட்டம்- பெற்ற குழந்தைகள் முன்பாக

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

 

நிர்வாண பூஜைக்கு மறுத்த மனைவியை அடித்த மருத்துவ கணவர்: இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் தன்னை அடித்து உதைத்ததால் காயம் அடைந்ததாக கூறி கார்த்திகா ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[1].  தன் கணவர் நிர்வாண பூஜையில் ஈடுபட்டதை, கார்த்திகா மொபைலில் படம் எடுத்து வெளியிட்டார். அதாவது, கணவரது நடவடிக்கையை அர்த்த ராத்திரியிலும் விழித்துக் கொண்டு நன்றாகவே கவனித்துள்ளார் என்று தெரிகிறது. நிர்வாண பூஜை குறித்து கார்த்திகா கூறுகையில், ”என் கணவர், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரியில், பிசியாலஜி துறை தலைவராக பணியாற்றி வருகிறார். ‘டீன்’ பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அடிக்கடி இப்படி நிர்வாண பூஜையில் ஈடுபடுகிறார்[2]. இது மூட நம்பிக்கை என்று எனது கணவரிடம் கூறியும் அவர் கேட்கவில்லை[3]. பூஜை நடத்துவதில் அவர் குறியாக உள்ளார். இந்த பூஜையை தட்டிக் கேட்ட என்னை அவர் தாக்கி விட்டார்,” என்றார்[4]. டாக்டரின் நிர்வாண படம் ஓமலுார், தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது[5]. நிர்வாண பூஜை குறித்து, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் செல்வராஜிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ”நான் வக்கீலை சந்திக்க சென்று கொண்டிருக்கிறேன். பின் பேசுகிறேன்,” எனக்கூறி, தொடர்பை துண்டித்தார்[6].

நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரிடீன்ஆக முடியுமா?: மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக, தமிழகத்தில் என்ன வேண்டும் என்ற சந்தேகம் வந்துள்ளது போலும். பல்கலைக் கழக வேந்தர் ஆக வேண்டுமானால், கோடி அல்லது லட்சங்கள் வேண்டும் என்று வெளிப்படையாக செய்திகள் வந்துகுள்ளன. தமிழகத்தில் “டாக்டர்” ஆவது சுலபமான செயலாக உள்ளது, ஆனால், “டீனாக” வேண்டும் என்றால், பற்பல வழிகளைப் பின்பற்ற வேண்டும் போலிருக்கிறது. பூஜாரியாக வேண்டும் என்று பெரியார் சிலைக்கு மாலைப் போட்டும் காலக் கட்டமாக உள்ளது. சாத்திரம் படித்தவர்களே பட்டை-கொட்டைகளுடன் அவ்வாறு மாலை போட்டுள்ளன. நானும் நான்கே மாதத்தில் எல்லாம் கரைத்துக் குடித்து விட்டேன், எனக்கும் வேலை கொடு என்று இப்பொழுதெல்லாம் கிளம்பி விடுகிறார்கள். “டாக்டர்” பட்டம் வாங்குவதும் அவ்வாறே உள்ளது[7]. போலி டாக்டர்களை கைது செய்யும் படலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்நிலையில் உண்மையான டாக்டர், நிர்வாண பூஜை நடத்தினால் மருத்துவக் கல்லூரி “டீன்” ஆக முடியும் என்ற எண்ணத்தை எப்படி கொண்டார் என்று தெரியவில்லை. போதாகுறைக்கு, மனையுடன் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று டாக்டருக்கு “பிரிஷ்கிரிப்ஸன்” யார் கொடுத்தது என்று தெரியவில்லை. ஒருவேளை, பெரியார் சிலைக்கு மாலை போட்டால் வேலை கிடைக்கும் என்று நம்பிய அக்கூட்டத்தவர், யாராவது இவருக்கு சொல்லியிருப்பார்களா?

தமிழகத்தில் படித்தவர்கள் இவ்வாறு முரண்பாடாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம் என்பதனை அறியவேண்டும்: கடந்த 60-100 ஆண்டுகளாக திராவிடத்துவம் போர்வையில், இந்துமதத்தினரின் நம்பிக்கைகள்-சடங்குகள்-கிரியைகள் முதலியவை கேலிப்படுத்தப்பட்டு, அவதூறாக பேசப்பட்டு, தூஷிக்கப்பட்டுள்ளன. “பார்ப்பன எதிர்ப்பு” என்ற ரீதியில் இந்துமத எதிர்ப்பை செய்து வந்தனர். ஆனால், அச்சித்தாந்திகள் சொல்லியதைப் போல, எந்த சமூக மேன்பாடும் தமிழகத்தில் ஏற்பட்டு விடவில்லை, மாறாக, சமூக சீரழிவுகள் தாம் அதிகமாக நடந்துள்ளன, நடந்து வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, தமிழகம் தாழ்ந்து வருவதை அறிவது மட்டுமல்லாது, அதற்கு காரணமே இவர்கள் தாம் என்றும் தெரிந்து கொண்டு வருகிறார்கள். “இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்றால், வடநாட்டில் இந்தி தெரிந்தவர்களுக்கு ஏன் வேலை கிடைப்பதில்லை” என்று விதண்டாவாதம் பேசினர், ஆனால், இன்றோ தமிழகத்தில் இந்தி பேசுபவர்கள் வந்து கடின உழைப்பு செய்ய வந்து விட்டனர். நாத்திகம், பகுத்தறிவு பேசியவர்கள் சோம்பேறிகளாகி விட்டனர். கற்பனை-விரோதிகளை உருவாக்கி, அவர்கள் மற்றும் மற்றவர்கள் மீது பழிபோட்டு, பொய்களை சொல்லி வந்ததும் தெரிந்து விட்டது.

1960 முதல் 2016 வரை ஏற்பட்டுள்ள இயற்கை சீற்றங்கள் திராவிடத்துவநாத்திகத்தை நீர்த்துவிட்டன: மேலும், இயற்கை சீற்றங்கள், அழிவுகள் முதலியனவும் அதிகமாகியுள்ளன. இவை படித்தவர்-படிக்காதவர், ஏழை-பணக்காரன் என்று எல்லோரையும் பாதித்துள்ளன. உயிர், பொருள் என்று எல்லாவற்றையும் இழந்துள்ளனர். ஆனால், நடந்து வந்த-வரும் திராவிடத்துவ-நாத்திக-பகுத்தறிவு ஆட்சியால் ஒன்றும் செய்யமுடியவில்லை. அதாவது, “கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக்கற்பித்தவன் முட்டாள், மடையன்” என்றெல்லாம் சொல்லியவர்களால், இவற்றையெல்லாம் ஒன்று தடுக்க முடியவில்லை. விஞ்ஞானம் பேசியவர்களாலும் முடியவில்லை. அதற்கும் மேலாக, இவர்கள் தாம் அதற்கு காரணம் என்று தெரிந்து கொண்டனர். அதாவது, புவியின் தன்மையினை பாதித்து, ஊழலில் திளைத்து, மழைநீர்-வடிகால் போக்குவரத்தை செய்ய முடியாமல் தடுத்து, மக்களை வாட்டியதில் உள்ல பங்கை நன்றாகவே புரிந்து கொண்டனர்.

கோவில், கோவில் இருப்பிடம், சுற்றமைப்பு இவற்றை பாதித்தனால் பாதிப்ப்பு ஏறட்டுள்ளது என்பதனை அறிந்து கொண்டனர்: ஆனால், ஏரி-குளங்கள் மறையாமல் இருந்திருந்தால், இப்பேரிடர்கள் தடுக்கப்பட்டிருக்கும் என்று புரிந்து கொண்டு விட்டார்கள். அதாவது, கோவில்கள் இருக்கும்வகையில் குளம், ஏரி முதலியவை சூழ இருந்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாம். அப்படியென்றால், கடவுளை மறுத்து, கோவில் சொத்துகளைக் கொள்ளையெடித்து, குளங்களை தூர்த்து, ஏரிகளை வளைத்துப் போட்டு, எல்லாவற்றையும் நாசமாக்கியது யார் என்று பார்த்தால், திராவிடத்துவ அரசியல்வாதிகள் தாம்[8]. கருப்பு-சிவப்பு நிறங்களின் அமைப்பு மாறினாலும், “திராவிட” சொல்லுக்கு முன்னும்-பின்பும் எதை சேர்த்து புது கட்சி வந்தாலும், ஆட்கள் மாறாமல் தான் இருக்கிறார்கள். கடவுள் பயம் மட்டுமல்லாது, எந்த பயமும் இல்லாமல் போய், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்னை யாரும் செய்யமுடியாது, என்ற நிலையில் இறங்கி விட்டார்கள்.

கோவில் மட்டுமல்ல, சமூகமும் சீரழிந்தது: கோவில் பகிஷ்காரம் ஏன் என்று திகவினர் புத்தகங்களை வெளியிட்டனர். சுயமரியாதை-சீர்திருத்த-பகுத்தறிவு திருமணங்கள் சட்டரீதியில் செல்லாமல் போய், மரியாதை போனபோது, இந்தி திருமண சட்டத்தில் நுழைந்து மரியாதை பெற்றன. தாலியறுப்பு போராட்டங்களினால், பெண்களின் மனங்கள் புண்பட்டன[9]. இதனால், கொலை-கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புகள், அதிகமாகின. திருமணங்கள் முறிந்தன, கணவன்-மனைவியர் பிரிந்தனர், குடும்பங்கள் சிதறுண்டனர்; சிறுவர்-சிறுமியர், இளைஞர்கள் பரிதவித்தனர்; காப்பர்-கேட்பர்-பேணி காப்போர் என்று யாரும் இல்லாத நிலையில், திசை மாறி குற்றவாளிகளாகவும் மாறினர். ஆனால், இதகைய சீரழிவுகளை திராவிட சித்தாந்தம், நாத்திக-பகுத்தறிவு முதலிய விதண்டாவாதங்கள் ஆதரித்தன. இதனால் தான் முரண்பாடுகள் பெருகி, மக்களின் நம்பிக்கைக்கள் தேட ஆரம்பித்து விட்டன.

போலி மருத்துவர்கள் போன்று போலி ஜோதிடர்கள் முதலியவற்றை உருவக்கியது திராவிட அரசாட்சி மற்றும் கொள்கைகள் தாம்: மக்கள் அமைதி தேடி அலையும் நேரத்தில் தான், மற்றவர்கள் அமைதியாக இருக்கும் நிலையை கவனிக்க ஆரம்பித்தனர். கடந்த 60 ஆண்டுகளாக நாத்திகக் குடும்பங்கள் சிதறியுள்ள நேரத்தில், ஆத்திகக் குடும்பங்கள் மாறாமல் இருக்கின்றனர் மற்றும் மேலோங்கியும் உள்ளனர் என்பதனை அறிந்து கொண்டனர். இவர்கள் முன்னமே தங்களது தாய், மனைவி, மகள், சகோதரி என்று அவர்களை வைத்து சாமி மும்பிட வைப்பது, படையல் வைப்பது, கோவில்களுக்குச் சென்று பூஜைகள் செய்வது, யாகங்கள் செய்வது என்றெல்லாம் செய்து வந்தனர். இப்பொழுது, கொஞ்சம் வெளிப்படையாக செய்ய ஆரம்பித்தனர். அதாவது, புகைப்படம், டிவி முதலிய சாதனங்கள் மூலம், இவர்களது போலித்தனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதினால், இனிமேல் மறைப்பதில் பிரயோஜனம் இல்லை என்று கொஞ்சம் வெளியில் வந்து செய்ய ஆரம்பித்து வுட்டனர். “நானும் இந்து தான்” என்று கூறிக் கொள்ளும் அளவுக்கு தைரியம் வந்துள்ளது.

.

முறையற்ற நிர்வாண பூஜைகள்: இப்படி ஜோதிடம், பூஜை, பரிகாரம், படையல் என்று இவர்களும் செய்ய ஆரம்பித்த போது, அவர்கள் ரகசியமாக செய்ய வேண்டும் என்று விரும்பினார்கள். அப்பொழுது, அவர்களது அடியாட்கள் தேடியலைந்து, யாரையாவது பிடித்துக் கொண்டு வந்தன. அந்நிலையில், அரைகுறைகள் நுழைந்து மக்களை ஏமாற்றப் பார்க்கின்றன, பார்க்கின்றன. இதனால், பூஜை-புனஸ்காரம், கிரிய-சடங்கு போன்றவற்றில் அத்தகைய தெறிகெட்டவர்கள் நுழைந்துள்ளனர். இதனால் தான் மேன்மேலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. ஒழுங்காக பக்தியை வளர்த்துக் கொண்டு அமைதியாக செய்ய வேண்டியவற்றை, குறுக்கு வழிகளில் சென்று, மந்திரம்-தந்திரம்-யந்திரம் போன்ற வழிகளில் பெற்று விடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட ஆரம்பித்து விட்டது. அந்நிலயில் தான் இதைப் போன்ற நிர்வாண பூஜை போன்ற சடங்குகளை சிலர் பரிந்துரைக்க, குறுக்கு வழியில், சீக்கிரம் விரும்பியதைப் பெற்று விடலாம், என்று சபலம் கொண்டவர்கள் மற்றும் பேராசைக் கொண்டவர்கள் அவற்றில் நுழைகின்றனர்.

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[2] http://www.maalaimalar.com/2016/02/12161725/Why-Dharmapuri-Medical-College.html

[3] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=88036

[4] மாலைமலர், தர்மபுரி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை நடத்துவது ஏன்?: மனைவி பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2016. 4:17 PM IST.

[5] தமிழ்முரசு, முதல்வராக வேண்டும் என்பதற்காக நிர்வாண பூஜை செய்த பேராசிரியர் மனைவியே புகைப்படம் வெளியிட்டதால் பரபரப்பு, பெப்ரவரி 12, 2016.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1455606

[7] தமிழகத்தைப் பொறுத்த வரையில் “டாக்டர்” மோகம் 1970களிலிருந்து அதிகமாக உள்ளது என்பதனை ஞாபகப்படுத்திக் கொள்லவேண்டும். அதிலும் எம்.பி.பி.எஸ் டாக்டர்களை விட, “ஹானரெரி” டாக்டர் பட்டங்கள் தமிழக பல்கலைக்கழகங்கள் வாரி, அரசியல்வாதிகளுக்குக் கொடுத்தன. இல்லை, விலை கொடுத்து வாங்கவும் செய்தனர்.

[8] “Ecological Imbalance” ஐ உருவாக்கி, சென்னையை சீரழித்தவர்கள் இவர்கள் தாம் என்று மக்கள் தெரிந்து கொண்டு விட்டனர்.

[9] திராவிடப் புரோகிதர்கள் திருமணங்களை செய்வித்து, தாலிகளையும் அறுக்க ஆரம்பித்தனர், அதாவது “திருமண முறிவு விழா”க்களையும் சந்தோஷமாக நடத்தினர். ஆனால், பெண்கள் வருத்தப்படத்தான் செய்தனர்.

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

பிப்ரவரி 13, 2016

 

பெரியார் பூமியில் நிர்வாண பூஜையில் ஈடுபட்ட உடல் இயக்கவியல் மருத்துவ பேராசியர், மனைவியையும் துணைக்குக் கூப்பிடதால், போட்டோவை வெளியிட்ட மனைவி!

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - டாக்டர் செல்வராஜ்

தமிழகமும், பெரியார்பகுத்தறிவும், நிர்வாணமும்: பெரியார் பிறந்த மண், நாத்திகத்திற்கு வேரிட்ட தலைவரின் கால் பதிந்த பாதை, பெரியாரிஸம் ஊன்றிய பூமி, என்றெல்லாம் தமிழகத்தை மேடைகளில் கருப்புச் சட்டைகள் வர்ணிப்பதுண்டு. பெரியாரே எல்லாவற்றையும் துறந்தவர் தாம், அதனால் தான் அவர் நிர்வாண கிளப்பின் உறுப்பினர் ஆகி, அவர்களோடு சேர்ந்து கொண்டு நிர்வாண புகைப்படமும் எடுத்துக் கொண்டார் என்றேல்லாம் அவருடைய முற்றும் துறந்த நிலையை விவரிப்பர். ஆனால், அதே கருஞ்சட்டைகள் ஜைன துறவிகள் தெருக்களில் நடந்து சென்றால், கல்லேறிந்து தாக்கவும் செய்வார்கள். அதாவது நிர்வாணத்திலும் வித்தியாசம் பார்ப்பது நாத்திகமா, திராவிட ஜாதித்துவமா, சாதிவெறித்துவ நாத்திகமா, பகுத்தறிவா என்பதை அவர்கள் தாம் விளக்க வேண்டும். அரசு கோவில்களுக்குள் செல்பவர்களுக்கு “உடை ஒழுக்கம்” வேண்டும் என்ற போது, “சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?” என்று அத்தகைய அறிவிஜீவித்தனத்துடன் சமீபத்தில் ஒருவர் எழுதி கேட்டுள்ளார்[1].

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை-டிரஸ் கோட் இல்லையா

தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்க துணிவு உண்டா?: நிர்வாண உரிமைக்காக எழுதிய அவர்[2], இம்மருத்துவரும் தனது உரிமை என்றால், ஆதரிப்பாரா, எதிர்ப்பாரா? அதாவது அந்த நிர்வாணம் வேறு, இந்த நிர்வாணம் வேறு என்று வாதிப்பாரா அல்லது திகவினர் போன்று கல்லெறிந்து தடுப்பாரா? போதாகுறைக்கு, தமிழக அரசு மருத்துவர் நிர்வாண பூஜையிலும் ஈடுபட்டுள்ளார். மனைவி இதெல்லாம் மூடத்தனம் என்று தட்டிக் கேட்டபோது, இதெல்லாம் எனது உரிமை என்றும் சண்டை போட்டுள்ளார். “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?”, என்றோ, “தமிழகத்து மருத்துவருக்கு டிரஸ்கோட் உண்டா மருத்துவரே?” என்று கேட்டு எந்த சமத்தும் கட்டுரை எழுதவில்லை! ஒருவேளை, அவர் இதைத் தெரிந்து கொண்ட பிறகு எழுதலாம், எழுத முயற்சிக்கலாம்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்வாண பூஜை

விதவையைத் திருமணம் செய்து கொண்ட விதவர்: தர்மபுரி இலக்கியம்பட்டி பாரதிபுரம் மருத்துவ குடியிருப்பில் வசித்து வரும் டாக்டர் செல்வராஜ் (50), தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பிசியாலஜி – உடல் இயக்கவியல் – துறை தலைவராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி கல்பனா இறந்து விட்டார்.   இவருக்கு, அவர் மூலம் பிறந்த அதிதர் என்ற மகன் உள்ளார்.  இவ்வாறு “விதவர்” நிலையில் இருந்த இவர், மனைவி இறந்ததைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியை சேர்ந்த வையாபுரி மகள் கார்த்திகாவை (28) செல்வராஜ் 2–வது திருமணம் செய்து கொண்டார்[3]. தன்னைவிட 22 வயது குறைவான பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். ஏற்கனவே கார்த்திகாவுக்கு இன்னொருவருடன் திருமணம் ஆகி இரண்டு வருடத்தில் அவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார்[4]. அதாவது கார்த்திகாவும் கைம்பெண் / விதவைதான். திருமணம் நடைபெற்று 1 வருடம் அவர்கள் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினர். இவ்வாறு விதவையைத் திருமணம் செய்து கொண்டு புரட்சி செய்திருக்கிறார்.

பெரியாரைப் பின்பற்றிய செல்வராஜ்

பிசியோலாஜி புரொபசர் சைக்கோலாஜியாக செய்து வந்த சில காரியங்கள்: பிசியாலஜி – உடல் இயக்கவியல் டாக்டர் செல்வராஜ், மனோதத்துவ ரீதியிலும் சில பரிசோதனைகள் செய்ய ஆரம்பித்தார் போலும்! அடிக்கடி இரவு நேரத்தில், வீட்டில் தன் அறையில் நீண்ட நேரம் தனியாக பூஜை செய்தபடி இருப்பதுண்டு. இந்த நிலையில் அவ்வப்போது பூஜை செய்ய செல்வராஜ் வெளியில் சென்று வந்தார். இதை கண்ட அவரது மனைவி கார்த்திகா ஏதோ ஆன்மீகத்தில் அதிக நாட்டம் உள்ளதால் சென்று வருவதாக நினைத்து அதை கண்டு கொள்ளவில்லை[5]. இதனால் வெளியில் பூஜை செய்து வந்த பேராசிரியர் செல்வராஜ் நாளடைவில் தனது வீட்டில் ஒரு நாற்காலியில் நிர்வாணமாக அமர்ந்து பூஜை செய்ய ஆரம்பித்தார்[6]. அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். சந்தேகமடைந்த கார்த்திகா, டாக்டருக்கு தெரியாமல் அவருடைய அறைக்கு சென்ற போது, அவர் நிர்வாணமாக பலகையில் அமர்ந்து பூஜையில் ஈடுபட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்[7]. மேலும், அவரது டைரியில் ஆபாசமான வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன[8]. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி பல முறை மருத்துவராகிய நீங்கள் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்று கூறியும் அவர்கேட்கவில்லை. தொடர்ந்து அவர் நிர்வாண பூஜை செய்து வந்தார்.

அரசு தர்மபுரி மருத்துவக் கல்லூரி - Photo courtesy - Jeyakoopi

நிர்வாண பூஜையில் ஈடுபட்டு வந்த கணவனை நினைந்து வருந்திய மனைவி: கார்த்திகா எவ்வளவு சொல்லியும் பிசியாலஜி – உடல் இயக்கவியல் பேராசியர் நிர்வாண பூஜையை விடவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத கார்த்திகா ஏற்கனவே கணவனை இழந்து தற்போது மற்றொரு கணவனும் இது போன்ற செயலில் மூழ்கி உள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்[9]. இருந்தாலும் கணவரின் ஆதரவில் வாழ்ந்து வருவதால் அவர் ஏதோ ஒன்றை செய்து கொள்ளட்டும் என்று கண்டும் காணாமலும் இருந்து வந்தார்.  அர்த்தஜாம பூஜை நடந்து கொண்டிருந்தது. கணவன் – மனைவி உடல்-உள்ளம் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. மனம் உடலைக் கட்டுப்படுத்துமா, உடல் மனத்தை ஆட்டிப் படைக்குமா என்ற போராட்டம் தொடர்ந்தது போலும்!

Dravida desa Physiology professor indulging in Nude worship psychologically

தன்னுடன் நிர்வாண பூஜையில் பங்கு கொள் என்று வற்புருத்திய டாக்டர்: இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது மனைவி கார்த்திகாவையும் நிர்வாண பூஜை செய்யவேண்டும் என்று டாக்டர் செல்வராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு கார்த்திகா உடன் படாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு அடிக்கடி அவரது பெற்றோர்கள் வீடான ஓமலூர் அருகே உள்ள எலத்தூருக்கு கார்த்திகா வந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் விவாகரத்து செய்வதாக கார்த்திகாவுக்கு பேராசிரியர் நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.  இதை கண்டு மீண்டும் அதிர்ச்சி அடைந்த கார்த்திகா தனது பாட்டி மற்றும் தாய் ஆகியோரை அழைத்து கொண்டு கணவர் வீட்டிற்கு சென்றார். அப்போது நிர்வாண பூஜையில் இருந்த கணவனை பார்த்து இனி சேர்ந்து வாழலாம் என்றும், இது போன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றும் கூறினார்.  ஆனால் பேராசிரியர் செல்வராஜ் என்னுடன் வாழ வேண்டும் என்றால் நான் கூறுவது போல் நீயும் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் உன்னை விவாகரத்து செய்து விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என்றும் மிரட்டியதாக அவரது மனைவி கூறினார்[10].

© வேதபிரகாஷ்

13-02-12016

[1] சமஸ், சாமிக்கு டிரஸ்கோட் உண்டா சாமீ?, Published: December 29, 2015 09:13 ISTUpdated: December 29, 2015 09:14 IST.

[2]http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80/article8040900.ece

[3] நக்கீரன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : 12, பிப்ரவரி 2016 (18:6 IST), மாற்றம் செய்த நாள் :12, பிப்ரவரி 2016 (18:17 IST).

[4]  மாலைமலர், ஓமலூரில் நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர் தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி பரபரப்பு புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[5] http://www.maalaimalar.com/2016/02/12141712/Professor-of-the-Medical-Colle.html

[6] http://nakkheeran.in/users/frmNews.aspx?N=160581

[7] சென்னை.ஆன்.லைன், நிர்வாண பூஜை நடத்தும் மருத்துவ கல்லூரி பேராசிரியர்: மனைவி போலீஸில் புகார், பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, பெப்ரவரி 12, 2:17 PM IST.

[8] தினமலர், அரசு டாக்டரின் நிர்வாண பூஜை தன்னையும் வற்புறுத்துவதாக மனைவி புகார், பிப்ரவரி.13, 2016.00.36

[9] http://tamil.chennaionline.com/news/tamilnadu/newsitem.aspx?NEWSID=d538d071-abed-4cb6-beed-bb5562d76a2f&CATEGORYNAME=TTN

[10] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=195934

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

ஓகஸ்ட் 14, 2011

சாணக்யாவிற்குப் பிறகு திராவிடம் – கெட்ட வார்த்தை பட்டியல் நீள்கிறது!

 மூதறிஞரை வெல்ல முயன்ற கலைஞர், கலைஞரை மிஞ்சும் மருத்துவர்: தமிழகத்தில் தமிழ் பேசும் தமிழர்களுக்கு, தமிழில் இல்லாத வார்த்தைகள் மீதுதான் அன்பு, காதல், போகம், பிணைப்பு, இணைப்பு எல்லாமே. ஆனால், திடீரென்று அவற்றை வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள். இது ராமசாமி நாயக்கர், அண்ணாதுரை, கருணாநிதி முதலியோர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது.  இப்பொழுது ராமதாஸுக்கும் அந்த பித்துப் பிடித்து விட்டது போலும். ஆண்டுக்கு ஆண்டு, வார்த்தைகளுக்கு, புதிய வியாக்ரானம் / விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிரிவினைவாதங்களை வைத்துக் கொண்டு, பிழைப்பு நடத்தி, மக்களை மயக்கப் பார்த்தது பாமக. ஆனால், ராஜதுரோகக் குற்றட்திற்குள்ளாவோம் என்று பயந்து, அண்ணாதுரையைப் போல, அமைதியாக கொள்கைளை மாற்றிக்கொண்டனர்.

சங்கராச்சாரியார், ரஜினிகாந்த் இந்த இருவர்களால் தான் தமிழகமே கெட்டுவிட்டது: இப்படி ஒருமுறை பேசிக் கலக்கியுள்ளார் ராமதாஸ். அதாவது, தெய்வநம்பிக்கை இளைஞர்களிடம் இவர்களால்தான் வளர்ந்தது, அதனால் இவர்களை ஒழித்துக் கட்டவேண்டும் என்ற அளவிற்கு பேசினார். ரஜினி படங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தியேட்டர் முதலாளிகளை மிரட்டி எல்லாம் செய்து பார்த்தனர். ஆனால், நாத்திகத்தினால் கடந்த 60 ஆண்டுகளில் என்ன சாதிக்க முடிந்தது என்று இந்த பகுத்தறிவாளியால் சொல்லமுடியவில்லை.

“திராவிடம்’ என்ற சொல் கெட்டவார்த்தை: ராமதாஸ் புது அர்த்தம்[1]கிருஷ்ணகிரி: “”திராவிடம் என்ற சொல்லை, நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல் திட்டத்தை, ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம்,” என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டில் இருந்து, முழுமையான சமச்சீர் கல்வி திட்டத்தை, நடைமுறைப்படுத்த வேண்டும். காமராஜர் காலத்தில், 12 மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், 11 ஆயிரம் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் துவங்கப்பட்டன. திராவிட கட்சிகள், கல்வியை கொள்ளையர்களுக்கு தாரை வார்த்துவிட்டன.
சமச்சீர் கல்வி முழுமையாக செயல்படுத்தப்பட்டால், மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு வேலையே இல்லை. 1,200 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு பூட்டி வைக்கப்பட்டுள்ள தலைமைச் செயலக கட்டடத்தை, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேண்டும். வரும் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் கூட்டணி வைப்பது குறித்து நாங்கள் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். “திராவிடம்’ என்ற சொல்லை நாங்கள் கெட்ட வார்த்தையாக கருதுகிறோம். இனி வரும் தேர்தல்களில், பா.ம.க., தனித்து போட்டியிடும் என்ற நிலையில், “மக்களுக்காக அரசியல்’ என்ற செயல்திட்டத்தை ஒரு மாதத்தில் சென்னையில் வெளியிட உள்ளோம். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

 

சாணக்யன்ஒருதுரோகி’ : பா..., ராமதாஸ்பேச்சு[2]திண்டிவனம் : திண்டிவனத்தில் நடந்த சாணக்யா பள்ளி திறப்பு விழாவில், “சாணக்யன் துரோகி, சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை’ என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்[3].

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில்  நடந்த சாணக்யா மெட்ரிகுலேஷன் பள்ளி திறப்பு விழாவிற்கு, மரகதாம்பிகை கல்வி அறக்கட்டளை தலைவர் தேவராஜ் தலைமை தாங்கினார். பள்ளி வளாகத்தை திறந்து வைத்து, பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:அரசு தேர்வுகளில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது. 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் முதலிடத்தில் இருக்க என்ன காரணம்? விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான தனியார் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குகின்றன. இதற்கு அரசை தான் குறை கூற வேண்டும்.

பல நாடுகளில் கல்வியை அரசுகளே தான் தருகின்றன.கல்வி தற்போது வணிகமாகி விட்டது. புற்றீசல் போல் கிளம்பி உள்ள ஆங்கிலப் பள்ளிகள் மக்களிடையே ஒரு மோகத்தை ஏற்படுத்தியுள்ளன.  ஏழைகளுக்கும் பள்ளியில் இடம் கிடைக்க வேண்டும். சாணக்யன் மிகவும் கெட்டவன். சாணக்யா என்ற பெயர் கெட்ட வார்த்தை. சாணக்யனும், வெளிநாட்டைச் சேர்ந்த மாக்கியவல்லியும் துரோகிகள். அடுத்த பள்ளிக்காவது தேவராஜ் வேறு பெயர் சூட்டுவார் என்று நம்புகிறேன்.இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

 

திராவிட மாயையிலிருந்து என்று திராவிடர்கள் அல்லது தமிழர்கள் வெளிவரப்போகிறர்கள் என்று தெரியவில்லை: பி. ராமமூர்த்தி 1980களில் “ஆரிய மாயையா, திராவிட மாயையா” என்று திராவிட இயக்கத்தை விமர்சித்தார்[4]. குணா “திராவிடத்தால் வீழ்ந்தோம்!” என்று 1990களில் எழுதியுள்ளார்[5]. அப்பொழுது கருணாநிதி அவரை சிறையில் அடைத்தார். ஆனால், தமிழர்கள் அந்த மாயையிலிருந்து மீளவில்லை. திராவிட மாயையும் தொடர்ந்தது. “திராவிடம்” இல்லாமல் அரசியல் கட்சியே இல்லை என்ற நிலையில் தான் இருந்துவந்தது. பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள், விடுதலை சிறுத்தைகள் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் “திராவிட” அடைமொழி இல்லாத கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. “ஆரியர்” இனம் பொய், மாயை, கட்டுக்கதை என்றெல்லாம் மெய்ப்பிக்கப் பட்ட பிறகும், அந்த இனவாதம், இனவெறி, இனசெருக்கு, இனமாயை வாதங்களை வைத்துக் கொண்டு, திராவிட கட்சிகள் அரசியல் நடத்தி வருகின்றன. பணபலம் மிக்க வீரமணி கோஷ்டியர்கள் கூட கருணாநிதி-ஜெயலலிதா என்று மாறி-மாறி தங்களது திராவிடப் பற்றைக் காட்டிக் கொண்டிருந்தனர். மற்றவர்களுக்கு பணம், பதவி ஏதாவது கொடுத்தால் போதும், மாறிக்கொண்டேயிருப்பார்கள், மாற்றிக்கொண்டேயிருப்பார்கள்! கேட்டால் அரசியலில் இதெல்லாம் சகஜம், அரசியலில் நண்பனும் இல்லை-எதிரியும் இல்லை என்றெல்லாம் பேசுவார்கள். இனியேனும், உண்மையை அறிந்து தெளிவார்களா பார்ப்போம்!

வேதபிரகாஷ்

14-08-2011


[3] பதிவு செய்த நாள் : ஜூன் 06,2010,23:55 IST

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=13883

[4] பி. ராமமூர்த்தி, “ஆரிய மாயையா, திராவிட மாயையா” – விடுதலைப் போரும், திராவிட இயக்கமும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 1983.

[5] குணா, திராவிடத்தால் வீழ்ந்தோம்!, தமிழக ஆய்வரண், பெங்களூர், 1994.

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

ஜூலை 7, 2010

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

http://www.viduthalai.periyar.org.in/20100707/news05.html

ஏற்கெனவே கோர்ட்டுகளில் வெளிவந்த செய்திகள், ஒரு தெலுங்கு டிவி செனல் ஒளிபரப்பிய கலப்படக் காட்சிகள்…………..முதலியவற்றை வைத்துக் கொண்டு முன்பே கதையளந்து கொண்டிருந்தனர்.

கல்கி ஆசிரமத்திலிருந்து பிரிந்து சென்ற சீடர்கள், ஆளுக்கு ஆள் இப்படி புகார்கள் கொடுப்பது, வழக்குகள் போடுவது என்று சாதாரணமாகி விட்டது.

எப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரை, அவர் வெளியேறி கணக்குக் கேட்டபோது, , வசைபாடினாரோ, அதே ரீதியில்-தொணியில், இந்த சீடர்கள் பேசிவருகிறார்கள்.

கல்கியின் மகன், ஏற்கெனெவே.இந்த பிரச்சாரங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

அந்நிலையில், மறுபடியும், அரைத்த மாவையே அரைக்கும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வீரமணி, கோபால் முதலியோர்களுக்கு நித்யானந்தா, கல்கி……………….முதலியோர் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டாலும், இவர்கள் மறக்கமாட்டார்கள்.

பிற இதழிலிருந்து…இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணு-வின் 10_ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தக-வல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்-தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வ-நாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்-கப்-படும் விஜயகுமார், 1984_இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்-தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி… முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10_ஆவது அவ-தார-மான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்ப-வில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10_ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்-தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்-களுக்கு அனுப்பி வைத்தார். விஜய-குமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது… பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாச-லுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்… கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்-டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்-டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்-றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிட-மும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளி-நாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவர-மாகச் செய்திகள் வந்தன. இந்தக் களி-யாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்-பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90_களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்… ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி… 33 வெளி-நாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயி-ரம் கோடியில் கட்டுமான பிசினஸ்… இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்… ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக…

நான் அவருக்கு எதிரான உண்மை-களைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்-டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்-வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

ஜூன் 15, 2010

சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்கின்ற ஆட்சி கலைஞருடைய ஆட்சி!

http://viduthalai.periyar.org.in/20100615/news18.html

திருத்துறைப்பூண்டியில் பெரியார் சிலை திறப்பில் தமிழர் தலைவர் பாராட்டு!

திருத்துறைப்பூண்டி, ஜூன் 15_ சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக் கூடிய ஆட்சி திமுக ஆட்சி என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவு-ரையாற்றினார்.

சிறீ ரவிசங்கர், ஸ்ரீ ரவிசங்கர், வீரமணி, நாத்திகம்…………….

ஜூன் 7, 2010

வாழும் கலை ரவிசங்கரின் பின்னணி என்ன?

http://www.viduthalai.com/20100607/news06.html

வீரமணி ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர். மற்ற பல கல்லூரிகளுடன் தொடர்பு கொண்டவர். திகவின் இப்பொழுதைய தலைவர். ஆளும் திராவிட கட்சிகளுடன் மாறி-மாறி உறைவை வைத்துக் கொண்டுப் பிழைத்து வரும் போலி அரசியல்வாதி. விடுதலை என்ற நாளிதழின் ஆசிரியர், இதத பெரும்பாலாக இந்து விரோத சித்தாந்தத்தையேக் கொண்டுள்ளது. சில ஆண்டுகளுகாக அதை நான் கடுமையாக விமர்சித்து, ஈ-மெயில்களை அனுப்பி வந்தேன். அதற்கு பதில் இல்லை என்றாலும், மறைமுகமாக எனக்கு எதிர்ப்பு வந்தது. தனது “நாத்திக செக்யூலரிஸத்தை” மெய்பித்துக் கொள்ள சில மேனாட்டு இஸ்லாமிய-கிருத்துவ விமர்சனக் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிட்டது. “மின்தமிழ்” எனக்கு தடை விதித்தது. இப்பொழுது, குறிப்பிட்ட இந்து சந்நியாசிகள், குரு முதலியவற்றை மட்டும் இலக்காகத் தாக்கி வருவது தொடர்கிறது. உலகளவில், ஏன் இந்தியாவிலும் கிருத்துவ-இஸ்லாம் மதங்களில் மிகக்கொடுமையான தீவிரவாதம், அடிப்படைவாதம், மக்கள் உரிமைகள் மீறல், பாலியல் வன்மம், சிறுவர்-சிறுமியர்களை கலவியில் ஈடுபடுத்தும் குரூரங்கள் முதலியவை அளவிற்கு அதிகமாக இருந்தாலும், கண்களை மூடிக்கொண்டு, இத்தகைய பாட்டுகளைப் பாடிவரும் போலித்தனத்தை காட்டவே, அத்தகைய படித்த, பகுத்தறிவுள்ள வீரமணி எழுது தனது விடுதலையில் தலையங்கமாக வந்துள்ளதை இங்கு வெளியிடப்பட்டு அலசப் படுகிறது

பார்ப்பனர் / பிராமணர் ரவிசங்கர்: வாழும் கலை போதிக்கும் சிறீ ரவிசங்கர் என்பவர் பார்ப்பன ஊடகங்களால் தூக்கிப் பிடித்து நிறுத்தப்-படுகிறார். ஆசிரமவாசிகளின் அந்தரங்கங்கள் எல்லாம் ஆபாசமானதாகவும், அருவருப்பானதாகவும், மக்களைச் சுரண்டுவதாகவும், பொருள் குவிப்பதாகவும்தான் இருந்து வருகின்றன. அன்றாடம் வரும் தகவல்கள் எல்லாம் இதனை உறுதிப்படுத்துகின்றன.

ரமணரிஷி துறவியா, கிரஸ்தரா? ரமணரிஷி என்ற ஒருவர் திருவண்ணாமலையில் இருந்தார். ஆன்மிகத்தின் பெயரால் கோடி கோடியாக பணம் சம்பாதித்தார். கடைசியில் தன் அண்ணன் மகனுக்கு அந்தச் சொத்துகளை எழுதி வைத்தார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றம் சென்றது. துறவிக்கு_ – சந்நியாசம் வாங்கியவருக்கு அண்ணன் மகன் என்ற உறவெல்லாம் கிடையாதே என்று நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடந்தபோது, நான் துறவியல்லவே! நான் எப்போது சந்நியாசம் வாங்கினேன்? என்று பல்டி அடித்தாரா இல்லையா?

பெங்களூரைத் தேர்ந்தெடுப்பது ஏன்? பெரிய பெரிய ஆசிரமம் நடத்துபவர்கள் எல்லாம் பெங்களூருவை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வியாகும். அரசியல்வாதிகளாக அங்கு இருப்பவர்கள் பெரும்பாலோர் ஆன்மிகவாதி-களாக இருக்கிறார்கள் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். யோகா என்று கூறப்படும் உடற்பயிற்சிக் கலையை ஆன்மிகக் குதிரையில் பூட்டி சவாரி செய்கிறார்கள் இந்த ஆசிரமவாசிகள். இடை இடையே வசீகரமான, ஆளை மயக்கும் உபந்நியாசங்கள்! அதில் ஏமாந்த சீட கோடிகள் இவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

ரவிசங்கரின் பூர்வோத்திரம் என்ன? இந்த ரவிசங்கரின் பூர்வோத்திரத்தை அறிந்தவர்கள் ஆசாமி ஏதோ வேடம் போடுகிறார் என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். ஊரை விட்டு ஏன் ஓடிவந்தார் என்பதெல்லாம் அவருக்கு மரியாதையைச் சேர்க்கக்-கூடியதல்ல.

சாமியாருக்கு  நெருக்கடி ஏற்படுவது ஏன்?: நித்தியானந்தா சாமியாருக்கு ஏற்பட்ட நெருக்கடிக்குப் பிறகு இந்த சாமியார்களுக்கு எல்லாம் நெரி கட்டிவிட்டது. தங்களைத் தக்க வைத்துக் கொள்வதில் அதிக அளவு கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகி விட்டனர். பெங்களூருவில் உள்ள ரவிசங்கரை நோக்கி யாரோ சுட்டதாக ஒரு தகவல்! காவல்துறையின் புலன் விசாரணை ஒரு விதமாக இருக்கிறது; ரவிசங்கர் தரப்பில் வேறு வகையாகச் சொல்லப்படுகிறது. ரவிசங்கர் சீடர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதன் விளைவாக இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்திருப்பதாகக் காவல் துறை கூறுகிறது.

சாயிபாபாவை கொலை செய்ய முயன்றது: இதுபோல பல சாமியார்களுக்கும் ஏற்கனவே பல நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. புட்டபர்த்தியில் சாயிபாபாவைக் கொலை செய்வதற்குச் சீடர்கள் முயற்சித்த போது, அறைக்குள் ஓடிப்போய் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டதால் உயிர் தப்பித்தார்.

அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்றது: அமிர்தானந்த மயி அம்மையாரை ஒரு சீடன் கத்தியால் குத்த முயன்ற நிகழ்ச்சியும் இந்த இடத்தில் நினைவு கூரத்தக்கதாகும். அதுபோல இப்பொழுது ரவிசங்கர் விஷயத்திலும் நடந்திருக்கிறது.

ஆண்டவனோடு அந்தரங்கத்தில் பேசுபவர்களுக்கு ஒய் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பு தேவையா? ரவிசங்கர் விஷயத்தில் வேறு சில கருத்துகளும் கூறப்படுகின்றன. ரவிசங்கருக்கு இப்பொழுது ஒய் பிரிவு பாதுகாப்புத்தான் அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆர்வக் கோளாறினால் அவருடைய சீடர்கள், பக்தர்கள் இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்ற ஒரு கருத்தும் வெளிவந்துள்ளது. தன் மீது பக்தர்கள் மத்தியில் அனுதாபம் வரு-வதற்குக்கூட கில்லாடி சாமியார் இது போன்ற சித்து விளையாட்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். எது உண்மையோ அது வெளியில் கொண்டு வரப்-பட்டே தீர வேண்டும்! கெட்ட நோக்கத்தோடு துப்பாக்-கிச் சூடு நடந்திருந்தால், குற்றவாளி கண்டு பிடிக்கப்-பட்டு கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

சாமியார்களிடம் எப்படி கோடிகள் வருகின்றன? அதே நேரத்தில் இந்தச் சாமியார்களின் அன்றாட வேலைகள் என்ன? அவர்களால் மேற்கொள்ளப்படும் பணிகளால் சமுதாயத்திற்கு நன்மையா? அல்லது தனி மனிதருக்கு நன்மையா? என்பதெல்லாம் அறிவியல் ரீதியில் ஆராயப்பட வேண்டும். இந்தச் சாமியார்களின் வேடத்தை நம்பும் மக்கள் தங்கள் ;பொருள்களை இழக்கிறார்கள், காலத்தைக் கரியாக்கு கிறார்கள். இந்த மனிதசக்தி நாசத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். மேலும் இவர்களுக்கு இவ்வளவு சொத்துகள் எப்படி குவிகின்றன? வரவுக்கான கணக்குகள் என்ன? வெளிநாடுகளில் கூட சொத்துகளைக் குவித்து உள்-ளார்களே, இது எப்படி சாத்தியம்? (சந்திரா சாமியார்கள் ஆயுத பேரம் நடத்தி கோடீஸ்வரர்கள் ஆக-வில்லையா?)

சாமியார்கள் மீது விச்சரணை தேவை: சமுதாயத்தில் பல அவலங்கள் தலை தூக்குவதற்கு இந்தச் சாமியார் தொழில் கரணியாக இருப்பதால் இதன் பின்னணியைக் கண்டறிந்து தீர்வு காணவேண்டியது மிகவும் அவசியமாகிறது. சாமியார்களால் சமுதாய முன்னேற்றத்திற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ ஒன்றும் ஆகப் போவதில்லை; மாறாக மனித சக்தி பாழ்படுத்தப்படுகிறது. இது குற்றங்களிலேயே மாபெரும் குற்றமாகும். எனவே இவர்கள் மீது விசாரணைகள் அவசியம்தேவை! மத்திய மாநில அரசுகள் அலட்சியப்படுத்தக்கூடாது!

வீரமணியின் பின்னணி என்ன?

  1. வீரமணி எப்படி திகவின் தலைவர் ஆனார்?
  2. வீரமணி பெரியாரின் வாரிசு என்று அந்த டிரஸ்டின் தலைவர் ஆனாரா இல்லை, வலுக்கட்டயமாக பறித்துக் கொண்டாரா?
  3. நாத்திகம் பேசும் வீரமணியிடம் எப்படி கோடிகள் வருகின்றன?
  4. தான் நடத்தும் நிகர்நிலை பல்கலைக்கழகம் தகுதியற்றது என்று உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப் பட்டது குறித்து வெட்கமாக இல்லையா?
  5. பெரியார் மணியம்மை பல்கழகம் மற்ற ஊழல்களில் மாட்டிக் கொண்டது அழகாக இருக்கிறதா?
  6. உள்ள நிலையைக் காப்பாற்றக் கொள்ள லட்சங்களில் சேகரிக்க – வசூலில் இறங்கியிருப்பது நியாயமானதா?
  7. தமிழ்நாடு சரித்திர பேரவை மாநாட்டின்போது, பேராளர்களை சரியாக உபசரிக்காமல், குளிக்கக் கூட வழியின்றி அலையவிட்டது முதலியன நன்றான விஷயங்களா?
  8. நாத்திக வேஷத்தில் இந்து விரோத பிரச்சாரத்தை மட்டும் செய்துவருவது “சமதர்மம்” / செக்யூலரிஸம் ஆகுமா? இதனை அவர் பல்கலை மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் புரிந்து கொண்டு கேட்டால், என்ன செய்வார்?
  9. ………………………………………

இப்படி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

எம்.ஜி.ஆர். தான் கரூணாநிதியை முதல்வராக்கினார், கணக்குக் கேட்டார், அதிமுக ஆரம்பித்தார்! கருணாநிதிதான் அவரை பதிலுக்குத் திட்டினார், வசவு பாடினார்!!

மே 14, 2010

எம்.ஜி.ஆர். தான் என்னை முதல்வராக்கினார்: முதல்வர் கருணாநிதி

First Published : 14 May 2010 01:09:34 AM IST

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D…………%E0%AE%9C%B0=&SectionName=Tamilnadu

கருணநிதிக்கு கொஞ்சம் கூட மனசாட்சி, வெட்கம், மானம்………….முதலியவை இல்லை என்று தெரிகிறது.

எம். ஜி. ஆரைத் திட்டியது, வசவு பாடியது ……………….முதலியவற்றை இங்கு எழுதினால் நாறிவிடும்.

ஏன், பெரியார், அவரது மனைவி பற்றிக் கூறியது……..முதலியவற்றை ஞாபகப் படுத்திக் கொண்டால், மனங்கள் கூசிக் குறுகிவிடும்.

இன்றைய தமிழ் இளைஞர்கள், ஆஹா,  இவர்களா, இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக, கேவலமாக………………..பேசியிருக்கிறார்கள் ………..இவர்களைப் போய், நாம் தலைவர்கல் என்ரு எண்ணியிருந்தோமே………………என்று வெட்கப்பட்டு, தங்களது எண்ணங்களையே மாற்றிக் கொண்டு விடுவர்.

எங்களைப் போன்ற, இந்த ஆட்கள் பேசியதையெல்லாம் 50களினின்று நன்றாக கேட்டிருப்பதனால், அவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம்

சென்னை, மே 13: அண்ணா மறைவுக்குப் பிறகு நான் தமிழக முதல்வர் ஆனதற்கு எம்.ஜி.ஆர்.தான் காரணம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

முதல்வர் பதவியில் 18 ஆண்டுகளை பூர்த்தி செய்து 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதல்வர் பதவியில் 19-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், நிதியமைச்சர் அன்பழகன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து பேசினர். அப்போது குறுக்கிட்டு முதல்வர் கருணாநிதி பேசியது:

அண்ணா மறைந்த பிறகு யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்தது. அப்போது எம்.ஜி.ஆர். எனது வீட்டுக்கே வந்து முதல்வர் பதவியை ஏற்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கெல்லாம் முன்பு அறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது அடுத்து யார் முதல்வராக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்த நேரத்தில், என்னுடைய வீட்டிற்கே வந்து, என்னுடைய வீட்டிலே உள்ள அனைவரும் நான் முதல்வராக வேண்டாம் என்று தடுத்தும்கூட, அவர்களையெல்லாம் சமாதானப்படுத்தி, இவர்தான் முதலமைச்சராக வேண்டும்; நீங்கள் யாரும் தடுக்கக்கூடாது என்று என்னுடைய வீட்டிலே உள்ளவர்களையெல்லாம் சமாதானப்படுத்த இரண்டு, மூன்று நாட்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தார். என் துணைவியாரைச் சமாதானப்படுத்தினார். என் சகோதரிகளைச் சமாதானப்படுத்தினார்.

குறிப்பாக முரசொலி மாறன், நீ வர வேண்டாம்; முதலமைச்சராக ஆகவேண்டாம்; அடுத்து மூத்தவரான நாவலர்தான் அதற்கு ஏற்றவர் என்று சொல்லியும்கூட, நானும், மாறன் வழியிலே நின்று கழகத் தோழர்களுக்கு எடுத்துச் சொல்லியும்கூட, அதையெல்லாம் கேட்காமல், உங்களை கொண்டுபோய் முதல்வர் நாற்காலியிலே உட்கார வைத்துத்தான் தீருவேன் என்று என்னைக் கொண்டுவந்து, முதலமைச்சர் பதவியிலே உட்கார வைக்கும் பெரும் பொறுப்பை ஏற்றவர், அருமை நண்பர் மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களாவார்.நான் முதல்வராக பொறுப்பேற்க எதிர்ப்பு தெரிவித்த எனது குடும்பத்தினரையும், குறிப்பாக நாவலர் தான் முதல்வராக வேண்டும் என்று கூறிய முரசொலி மாறனையும் அவர் தான் சமாதானப்படுத்தினார்.

நான் இதை ஏதோ இன்றைக்கு வாழ்த்துரை அரங்கம் என்பதால் சொல்வதாகக் கருதிக் கொள்ளக்கூடாது. எத்தனையோ நிகழ்ச்சிகளில் இதைச் சொல்லியிருக்கிறேன். நானும் அவரும் வேகமாக ஒருவரையொருவர் தாக்கிப் பேசிக் கொண்டதுண்டு. ஆனால், அவரும் நானும் வாழ்ந்த, பழகிய நாற்பதாண்டு கால நட்பை நான் என்றைக்கும் மறந்ததில்லை.

அப்படி மறக்காத காரணத்தினால்தான், அவர் மறைந்தார் என்ற செய்தி கேட்டதும், புகைவண்டியில் வந்து நான் இறங்கி நின்றபோது, ரயிலடியில் அந்தச் செய்தி கிடைத்ததும் உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்குச் சென்று முதல் மாலையை அணிவித்தேன். இது மாதவன், ஜேப்பியார் போன்றவர்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும்.

எனக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தவர்களுக்கும், வாழ்த்த இயலாத சூழ்நிலையில் அவையில் இருப்பவர்களுக்கும் கனிவான அன்பை வழங்கக் கடமைப்பட்டுள்ளேன். எந்தப் பண்பாடும், நாகரிகமும் அரசியலில் தலைகாட்ட வேண்டும் என்று இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் பாடுபட்டார்களோ, அந்த நாகரிகம் சட்டப் பேரவையில் ஒரளவுக்கு ஈடேறியுள்ளது. அந்த நாகரிகம் முழுவதும் ஈடேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

நீதிமன்றத்தில் வாதாடி விட்டு வெளியே வந்து இரண்டு வக்கீல்களும் தோழமையோடு கைகோர்த்துக் கொள்வது போன்ற நிலைமை அரசியலிலும் வர வேண்டும்.

தில்லியில் சோனியா காந்தியும், அத்வானியும் திருமண விழாக்களில் அருகருகே அமர்ந்து குசலம் விசாரித்துக் கொண்டு அன்போடு பழகுகிறார்கள். இந்த நிலை தமிழகத்தில் இல்லையே என்ற பொறாமை எனக்கு ஏற்படுகிறது.

அண்ணா முதல்வராக இருந்தபோது சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டை காமராஜர் தான் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற உலகத் தமிழ் மாநாடுகளில் நான் கலந்து கொள்ளவில்லை. அதனை விவாதப் பொருளாக மாற்ற விரும்பவில்லை.

இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், அரசியல் காழ்ப்புணர்ச்சி தனிப்பட்ட வாழ்க்கையையும், பழக்கத்தையும், நட்பையும் கெடுக்கும் நிலை உருவாகி விடக் கூடாது.

திமுக தலைவர்களில் ஒருவரான என்.வி. நடராஜன் மறைந்தபோது அதிமுகவில் இருந்த நாஞ்சில் மனோகரன் 50 பேருடன் கருப்பு சட்டை அணிந்து வந்து அஞ்சலி செலுத்தினார். காமராஜர் காலம் வரையிலும், எம்ஜிஆர் காலம் வரையிலும் இந்த அரசியல் பண்பாடு இருந்தது.

என் தாய் மறைந்தபோது மருத்துவமனையில் இருந்து நான் வீடு திரும்பும் முன்பாக காமராஜர் என் வீட்டுக்கு வந்து என் தாயின் உடலுக்கு இறுதி மரியாதை செய்ததை என்னால் என்றும் மறக்க முடியாது.

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்த போதும், மூதறிஞர் ராஜாஜி மறைந்தபோது தேம்பி, தேம்பி அழுதவர் பெரியார். அரசியலில் நட்பையும், நாகரிகத்தையும் பேணிக்காத்த தலைவர்கள் இவர்கள்.

காயிதே மில்லத் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருந்த போது நான் அவர் அருகே சென்று ”ஐயா” என்று சொன்னதும், எங்கள் சமுதாயத்திற்கு நீங்கள் ஆற்றிய நன்றியை என்றும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.

அதைப்போலவே, பெருந்தலைவர் காமராஜர் வாழ்ந்தபோது அவருக்கும் எனக்கும் இருந்த அரசியல் காழ்ப்புணர்வு எல்லோருக்கும் தெரியும். அவர் மறைந்தபோது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த நான், அவருக்கு சகலவிதமான அரசு மரியாதைகளோடும் அவரைத் தகனம் செய்கின்ற அந்தப் பணியை மேற்கொண்டதும் உங்களுக்கெல்லாம் மறந்து போய் விடக்கூடிய விஷயமல்ல.

அதைப்போலவே நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் வாழ்ந்த அந்தக் காலத்தில் ஒன்றாகவே இருந்த அந்தக் காலத்தில், சட்டசபையில் அவர் சொன்ன ஒரு கருத்து இன்னமும் என்னுடைய காதுகளிலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.காமராஜருக்கும் எனக்கும் எத்தனையோ அரசியல் மாறுபாடுகள் இருந்தாலும் அவர் மறைந்தபோது சகலவிதமான அரசு மரியாதைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. அதுபோல எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஹிந்தி மொழி எதிர்ப்பில் நானும், கருணாநிதியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என்று எம்.ஜி.ஆர். பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது.

அரசியலில் ஏற்படும் காழ்ப்புகள் தனிப்பட்ட தோழமைக்கு விரோதமாக ஆகி விடக்கூடாது என்பதற்காக இதனைக் குறிப்பிடுகிறேன். நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருக்கலாம். எல்லாவற்றையும் விட தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதனைக் காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு உள்ளது என்றார் கருணாநிதி.

ஒரு நிலையில், தான் ஒரு பெரிய ராஜ தந்திரி, தேர்தல் வரும் சமயத்தில் இப்ப்டியெல்லாம் பேசினால், ஓட்டுகள் கிடைக்கும். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் எல்லாம் இவர்க்கு ஓட்டு போடுவார்கள் என்று இவருக்கே உரித்தான சூழ்ச்சியுடன் பேசலாம்.

ஆனால், மக்கள் மறக்க மாட்டார்கள்.

இன்றைய நிலையில், அரசியலை மக்களை வெகுவாக பாத்திதுள்ளது.

தங்களை பிழிந்தெடுத்துள்ளது, கசக்கிப் பிழிந்துள்ளது; சாப்பிட்டிற்கே கஷ்டப்பட்டு ஒழைக்க வேண்டியிருக்கிறது.

ஆனால், கோடிகலில் கொள்ளையெடித்த அரசியல்வாதிகள், ஜாலியாக வாழ்க்கையை குளு-குளு கார்களில், அறைகளில்……………….அனுபவித்துக் கொண்டிருக்கிறர்கள்.

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

ஏப்ரல் 17, 2010

உச்சத்திற்கு ஏறும் கருணாநிதியின் பித்தம்!

1960களிலிருந்து, திராவிடத் தலைவர்கள், அவர்களின் பேச்சு, எழுத்து முதலியவற்றைக் கவனித்து வருவதில் நானும் ஒருவன்.

பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், மனோகரன், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா………………போன்றவர்கள், மற்றும் வீரமணி, அசோகன் (நடிகர்), வெடிகுண்டு / தீப்பொரி ஆறுமுகம், ………..முதலியோரின் மேடைப்பேச்சு, மற்ற பேச்சாளர்களின் பேச்சு, குறிப்பாக இரவு நேரத்தில் அப்பொழுதெல்லாம் 10 மணிக்கு மேலே மறுநாள் காலை 2-3 மணி வரை நடக்கும் கூட்டங்களில் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் (நடிப்போடு ஆடிக்கொண்டும், மற்றவர்களைப் போல நடித்துக் காட்டியும்), கேட்டிருந்தால் (ஆபாச, அசிங்கமான) அவர்களைப் பற்றி, இக்கால இளைஞர்கள் தமது கருத்தை அப்படியே மாற்றிக் கொள்ளவேண்டியிருக்கும்.

கருணாநிதிக்கு இந்த வயதில் அத்தகைய பழக்கதோஷம் வந்து விட்டது போலும்.

அதே பாணியில் பேசியிருக்கிறார்.

அந்த பேச்சை மிகவும் உன்னிப்பாகக் கவனிக வேண்டும்.

ஏனெனில், ஜெயலலிதாவைத் திட்டியிருக்கிறார், அவதூறு பேசியிருக்கிறார் என்பதைவிட அதிக-பிரசங்கித்தனமாக, திராவிடக் கொழுப்போடு, பகுத்தறிவு திமிரோடு, பக்தி, பதிபக்தி, பதிர்விதா தர்மம், கற்பு, போன்ற விசயங்களையும் சம்பந்தப் படுத்திப் பேசியுள்ளதை தமிழர்கள், இந்தியர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும்.

பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா : முதல்வர் கருணாநிதி கடும் தாக்கு
ஏப்ரல் 17,2010,00:00  IST
Front page news and headlines today

சென்னை :”பதிபக்தி இல்லாதவர் ஜெயலலிதா,” என, முதல்வர் கருணாநிதி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மற்றும் ஒன்றியத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., – தே.மு.தி.க., – பா.ஜ., கட்சிகளைச் சேர்ந்த மூவாயிரம் பேர் நேற்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர்.

அவர்களை வரவேற்று முதல்வர் பேசியதாவது:நீங்கள் எல்லாம் தி.மு.க.,வில் சேர்ந்த போது, என் முன் இருந்த மேஜையின் மீது ஏராளமான கட்சி உறுப்பினர் அட்டைகளை மூட்டையாக கட்டி வந்து கொட்டினர். மூட்டையில் அடைபட்டிருந்த உறுப்பினர் அட்டைகள் வெளியில் விழுந்தன. அதில் அடைபட்டிருந்தது உறுப்பினர் அட்டைகள் இல்லை. நீங்களே அதில் அடைபட்டு கிடந்ததாகத்தான் எனக்கு தெரிந்தது.நம்மை இங்கே இணைத்திருப்பது அன்பு. நீங்கள் என் மேல் வைத்திருக்கும் அன்பு. நான் உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பு. இப்போதாவது உங்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு தெரிந்து, தெளிந்து தி.மு.க.,வில் இணைந்திருக்கிறீர்களே அதுவே மகிழ்ச்சி.


‘எம்.ஜி.ஆரை மதிக்கத் தெரியாதவர் ஜெயலலிதா. அதனால், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைகிறேன்’ என, அன்பு பேசினார். ஜெயலலிதா இப்போது தான் என்று இல்லை. எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றியிருந்த போதே, அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்த பதவியில் அமர்த்தும்படி கடிதம் எழுதியவர் தான் ஜெயலலிதா.இங்கு ஏராளமான பெண்கள் உள்ளனர். உங்கள் சகோதரருக்கு, தந்தைக்கு, ஏன் கணவருக்கு உடல் நலம் குன்றினால், கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் காளியம்மன், மாரியம்மன் போன்ற தெய்வங்களிடம் வேண்டுவர். இது தான் கிராமங்களில் உள்ள நடைமுறை. நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் செய்யும் நடைமுறை.


ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர். அன்பு போன்ற எம்.ஜி.ஆர்., மீது விசுவாசம் கொண்டவர்களுக்கு இப்போதாவது விழிப்புணர்வு வந்ததே என்ற வரையில் மகிழ்ச்சி. இது வரை அண்ணா அறிவாலயத்தைப் பார்த்துக் கொண்டுதான் சென்றிருப்பீர்கள். இனி அதன் உள் வந்து அமரலாம். உங்கள் அனைவரையும் உள் அன்புடன் வரவேற்கிறேன்.” இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.