Posts Tagged ‘சன் டிவி’

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

மே 20, 2016

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

பெரிய கருப்பன் வீடியோ - திமுக பெயில்ஸ்

ஆபாச வீடியோ பரவலும் (07-05-2016), பெரியகருப்பன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த புகாரும் (08-05-2016): திருப்புத்துார் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி, ‘வாட்ஸ் ஆப்’பில் 07-05-2016 அன்று பரவியது[1]. பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது[2] என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இது குறித்து பெரியகருப்பன், தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரில் கூறியுள்ளதாவது[3]: “நேற்று, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்மூலமாக வந்த ஒரு வீடியோவில், நான் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல சித்தரித்த காட்சியை பரப்பியிருந்தனர். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பொது வாழ்வில் தொடர்பில்லாத செயல் பற்றிய விமர்சனங்களை, போலியான ஆவணத்தைப் பின்பற்றி பொய்யான செய்தி தொகுப்பை வெளியிடும், ‘ஜெயா டிவிமீது நடவடிக்கை எடுக்கவும், ‘டிவிசேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கவும் வேண்டுகிறேன்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்[4].

பெரிய கருப்பன் வீடியோ - ஆறு போஸ்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைகோரி வழக்கு (10-05-2016): தேர்தல் கமிஷன் அடுத்து, இவர், ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது[5]: “தி.மு..வில் தீவிர உறுப்பினராக உள்ளேன். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளதால், அடுத்தடுத்து வெற்றி பெற்றேன்.  16-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும், அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனஇந்த நிலையில், யாரோ ஒரு பெண்ணுடன் நான் இருக்கும் ஆபாச வீடியோவை, உள்நோக்கத்துடன் ஜெயா டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ளதாக எனக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நவீன டிஜிட்டல் முறையில் என் உருவத்தை பொய்யாக சித்தரித்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதுஇதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தேர்தலில் என் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர். தற்போது, இந்த ஆபாச வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதித்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த படத்தை ஒளிபரப்ப ஜெயா டி.வி.க்கு தடை விதிக்கவேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[6].

பெரிய கருப்பன் வீடியோ - ஜெகத்ரட்சகன்

ஜெயாடிவி ஒலிபரப்பு நிறுத்தம் (09-05-2016), வழக்கு தள்ளுபடி (11-05-2016): இந்த மனு கோடை கால நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை தன்னுடைய சேம்பரில் வைத்து நீதிபதி நேற்று காலையில் விசாரித்தார்.  அப்போது ஜெயா டி.வி. நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், வைரமூர்த்தி ஆகியோர், ‘திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கடந்த 9-ந் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட விவகாரம் குறித்த வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது”, என்று கூறியுள்ளார். அதன்படி, அந்த காட்சியை ஒளிபரப்புவது 9-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது’ என்று கூறினார்[7]. அதனால், வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டுக் கொண்டனர். பின்னர், அந்த தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தையும் நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்[8].

பெரிய கருப்பன் வீடியோ - நித்தியானந்தா

ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்: இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்புவதை எதிர்மனுதாரர் தரப்பு நிறுத்தி விட்டதாக கூறியுள்ளதுஎனவே, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை. அதேநேரம், ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளதுஅப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர். இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்ப தடை கேட்ட மனுதாரரின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[10].

lenin karuppan - ranjitha video

நீதிபதி தீர்ப்பின் அம்சங்களும், ஊடகங்கள் மற்றும் திமுக போன்ற திராவிட கட்சியினர் நடந்து கொண்டுள்ள விதமும்: நீதிபது குறிப்பாக பின்குறிப்பிட்டவற்றை பார்த்தால், கடந்த ஆண்டுகளில், திமுக முதலிய திராவிட கட்சிகள் எவ்வாற்று நடந்து கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

  1. ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளது.
  2. அப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.
  3. ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர்.
  4. இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன.
  5. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  6. எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நித்தியானந்தா வீடியோ விசயத்தில் சன்–டிவி மற்றும் நக்கீரன் எவ்வாறு நடந்து கொண்டது, இப்பொழுது அமைதி காக்கிறது என்பதனை கவனிக்கலாம். வீடியோ, ஒரு ஆண்-பெண் விவகாரம், யாரோ வீடியோ எடுத்தது, சுற்றில் விட்டது-பரப்பியது என்றால், ஏன் வேறுபடவேண்டும்? இப்பொழுது வக்கிரம் படங்களில், வீடியோக்களில் உள்லது என்றால், முன்னர் வாய்ப்பேச்சுகளில், எழுத்துகளில் இருந்தன. ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி, முதலியோர்களும், தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு வகையறாக்களும் 1960களிலிருந்து பேசி, எழுதி வந்தவற்றை, இப்பொழுது ஞாபகப்படுத்திப் பார்த்தால், அவர்களது யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

12-05-2016 / 20-05-2016

[1] தினமலர், மாஜி திமுக அமைச்சரின் ஆபாச வீடியோ?, மே.9, 2016. 16:49.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1518740

[3] தினமலர், பெண்ணுடன் இருக்கும்வீடியோ‘ ‘மாஜிபெரியகருப்பன் புகார், மே.10, 2016. 02:01.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1519182

[5] தினத்தந்தி, தனியார் டி.வி.க்கு எதிரான முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , மே 12,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:வியாழன் , மே 12,2016, 12:11 AM IST.

[6] மாலைச்சுடர், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, Wednesday, 11 May, 2016   04:10 PM

[7] http://www.maalaisudar.com/newsindex.php?id=51390%20&%20section=19

[8] The Madras High Court on 11-05-2016 dismissed a suit filed by a former DMK minister and a candidate in the May 16 assembly polls in Tamil Nadu seeking to restrain Jaya TV from telecasting a ‘morphed’ video purportedly showing him in a compromising position with a woman as the channel informed the court that it had already stopped the telecast. Justice M V Muralidharan recorded a memo filed by Jaya TV Network that the telecast had been stopped immediately on receipt of a notice from the Election Commission on May 9 and ruled that since the defendant had stopped telecasting the news nothing survives in the suit for adjudication by the court

[9] http://www.dailythanthi.com/News/India/2016/05/12001102/Former-Minister-of-the-pleaHigh-Court-Orders.vpf

[10] Petitioner R Periakaruppan, a former state minister who is contesting the polls from Tirupattur constituency, filed the suit seeking to restrain Jaya TV and demanding Rs.26 lakh as damages for telecasting the ‘highly defamatory, false news report of alleging immoral conduct on his part together with digitally morphed video graph contents.’ He contended the video allegedly depicting him in a compromising position with an unknown woman was telecast to bring disrepute to him with an ulterior motive of shattering his prospects in the coming elections and tarnish his image and it was a clear violation of the model code of conduct.

http://zeenews.india.com/news/tamil-nadu/jaya-tv-stops-telecast-of-morphed-video-of-dmk-candidate_1884267.html

குஷ்புவின் சாபம்: “இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை”.

மே 16, 2011

குஷ்புவின் சாபம்: இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி.  அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. 

சினிமாக்காரர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதற்கு குஷ்பு மறுபடியும் உதாரணமமக உள்ளார். முன்பு கற்பு பற்றி பேசி, கலாச்சாரத்தை இழிவு படுத்திய அம்மணி இப்பொழுது, மக்களின் தேர்தல் முடிவுகளையும் இழிவு படுத்தி பேசியுள்ளது விநோதமாக உள்ளது. அதிமுக வெற்றி பெற்றதும், அதிர்த்து பிரச்சாரம் செய்த திரையுலகப் புள்ளிகள் திகைத்துள்ளன. சிலர் ராஜினாமா செய்துள்ளனர். சிலர் மறைந்துள்ளனர்; சிலர் தங்களுக்கு பாதுபாப்பு கேட்டு நடிக்கின்றனர்.

மக்களுக்குத்தான் தோல்வி: நடிகை குஷ்பு[1]: 13-05-2011, காலை 10.30 மணியளவில் கலைஞரை பார்க்க மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, நெப்போலியன், நடிகை குஷ்பூ ஆகியோர் வந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு,

திராவிடத்தில் ஊறிய அம்மணி கற்பு ஒன்றும் பெரிதல்ல என்றெல்லாம் வியாக்யானம் கொடுத்தார். இப்பொழுது, அதிமுக அதிக இடங்களில் வென்றுள்ள நிதர்சனத்தையும் மறந்து, தமிழ் மக்களை சாடியுள்ளது எந்த பகுத்தறிவின் வெளிப்பாடு என்று புரியவில்லை.

இது தி.மு.க.விற்கு ஏற்பட்ட தோல்வி அல்ல. மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட போகிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. தி.மு.க. கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பான திட்டங்களை வழங்கி மக்களை காப்பாற்றியிருக்கிறது. இதை அவர்கள் உணரவில்லை. ஸ்பெக்ட்ரம் வழக்கில் மீடியாக்கள் அதிகமாக விளையாடி விட்டன. இந்த வழக்கில் இருந்து தி.மு.க. மீண்டு வரும்”, என்றார்[2]. சில நாட்களுக்கு முன்புதான் கனிமொழிக்கு ஆதரவாக பேசினார்[3].

ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன்[4]: ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு இந்த நெருக்கடியான நேரத்தில் நான் ஆதரவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுகுறித்து குஷ்பு கூறுகையில், “ஒரு பெண்ணாக, ஒரு தாயாக கடும் நெருக்கடியான சூழலை சந்தித்துப் போராடி வருகிறார் கனிமொழி. இதேபோன்ற சூழ்நிலையை நானும் சந்தித்துள்ளேன். கனிமொழி மிகுந்த மன உறுதி படைத்தவர். அவரும் இந்த சூழலைத் தாண்டி வருவார்.நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார். ஒரு பெண்ணாக இந்த சமயத்தில் நான் கனிமொழிக்கு ஆதரவாக உள்ளேன்”, என்றார் குஷ்பு[5].

சின்னத்திரை சங்கத்திலிருந்து ராஜினாமா செய்த குஷ்பு: இப்படி வீராப்பாக பேசினாலும், சின்னத்திரை சங்கத்தின் [Chinna Thirai Producers Council (CTPC)[6] ] தலைவி பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்திருப்பது[7] வேடிக்கைத்தான்! “ஷூட்டிங் செட்யூல்” அதிகமாக உள்ளது என்று காரணம் வேறு சொல்லியிருக்கிறார். திமுகவின் தோல்வி குறித்து ஆராய்ச்சி செய்யபோகிறாராம்[8]. பார்ப்போம் என்ன முடிவு சொல்லப் போகிறார் என்று.

சகநடிகையின் எதிர்ப்பு குரல்: இதற்கு விந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்[9]. அவர் கூறுகையில், “குஷ்பு அரசியலில் பக்குவப்படாதவர் என்பதை நிரூபித்துள்ளார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அந்த தீர்ப்பை குறை சொல்வதும் கேலி செய்வதும் குஷ்புவின் அறியாமையை காட்டுகிறது. சினிமாவுக்கு வந்ததில் இருந்து வாழ்க்கையில் ஏற்றங்களையே பார்த்து இருக்கிறார். சிறந்த நடிகை என்ற புகழ் கிடைத்தது. சிறப்பான வாழ்க்கையும் அமைந்தது. கஷ்ட நஷ்டங்களை சந்தித்தது இல்லை. இந்த தேர்தலில்தான் முதல் முறையாக தோல்வியைப் பார்த்திருக்கிறார் அவர். என்வேதான் அவரால் தாங்க முடியவில்லை. தமிழக மக்கள் ஒட்டு மொத்தமாக தி.மு.க. ஆட்சி போக வேண்டும் என வாக்களித்துள்ளனர். அப்படியெனில் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதா…. எல்லா தொகுதிகளிலும் கணிசமான ஓட்டுகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வென்றுள்ளனர். அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக கண்ணுக்குத் தெரியாத பெரிய அலையே வீசி இருக்கிறது.

குஷ்புவின் ஆணவப்பேச்சு: இதை தவறான தீர்ப்பு என்பது ஆணவ பேச்சு. நான் தேர்தல் பிரசாரம் செய்தபோது மக்களிடம் எழுச்சியை காண முடிந்தது. ஜெயலலிதா முதல்வராகவும் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் வருவது உறுதி என்று பேசினேன். அது நடந்துள்ளது. அ.தி.மு.க. வெற்றி பெற்றதை கட்சிக்காரர்கள் மட்டும் கொண்டாடவில்லை. மக்களே கொண்டாடுகிறார்கள். நிறைய வீடுகளில் பெண்கள் வெளியே வந்து பட்டாசுகள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. நான் மூன்று தேர்தல்களை பார்த்துள்ளேன். வெயில், கஷ்ட நஷ்டம் ஆகியவை எனக்கு பழகி விட்டது. குஷ்புவுக்கு அது தெரியாது. சினிமா உலகில் சந்தோஷமாக இருந்தார். முதல் தடவையாக தேர்தல் பிரசாரம் செய்து வெயில் கொடுமைகளை அனுபவித்தார். இதனால் தோல்வியை தாங்கிக்கொள்ள முடிய வில்லை. தப்புத் தப்பாக பேசுகிறார். அரசியலுக்கு வந்த பிறகு கட்டுப்பாடு வேண்டும். எது வேண்டுமானாலும் பேசக் கூடாது. குஷ்பு இதை உணர்ந்து செயல்பட வேண்டும்,” என்றார்.

குஷ்புவைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர்: திமுகவுக்கு இது தோல்வி அல்ல. மக்களுக்குத்தான் இதுதோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று சாபம் விடுவது போல நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்[10]. சட்டசபைத் தேர்தலில் திமுக படு தோல்வி அடைந்தது குறித்து குஷ்புவிடம் போய் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். பெண்களின் கற்பு குறித்து பேசி தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட குஷ்பு அதற்குப் பதிலளிக்கையில், இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. உண்மையில் மக்களுக்குத்தான் தோல்வி. அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு அவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று மக்களைப் பழித்தும், சாபம் விடுவது போலவும் பேசினார் குஷ்பு. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை விந்தியா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குஷ்பு அடங்க வேண்டும் என்று விந்தியா காட்டமாக கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற அதிமுக வக்கீல்கள் பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில், நடிகை குஷ்புவுக்கு எச்சரிக்கை. தேர்தல் முடிவுகள் மக்களுக்கு தோல்வி என்று கூறி, 202 தொகுதி மக்களின் மன உணர்வுகளைப் புண்படுத்தி, பேட்டி கொடுத்த, நடிப்பில் காலம் சென்ற நடிகை குஷ்புவை மிக வன்மையாக கண்டிக்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


சன் குழுமத்தின் முதன்மை ஆணையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!

செப்ரெம்பர் 3, 2010

சன் குழுமத்தின் முதன்மை ஆணையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்!

Checkers-hotel-chennai

Checkers-hotel-chennai

கிழக்குக் கடற்கரை சாலையில் ஆரம்பித்தப் பிரச்சினை[1] : ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா என்பவர் சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டிவி முதலிய நிறுவனங்களில் பொறுப்பை வகித்து வருகிறார். இவர் கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, இவர் கார் இளைஞர்களின் வண்டியின் போது உரசியதாகத் தெரிகிறது. அதைத் தட்டிக் கேட்ட அவர்களை, ஹன்ஸ்ராஜின் ஆட்கள் அடித்துள்ளனர். இரண்டு பேரை அடித்த பிறகு, மூன்றாவது ஆளைத் தேடி சென்றபோது, கிண்டி அண்ணாசாலையில் உள்ள “தி செக்கர்ஸ் ஹோட்டலில்” பதுங்கியிருப்பதாக செய்தி கிடைத்ததும், அந்த ஹோட்டலில் சென்று செவ்வாய் கிழமை (31-08-2010) ராத்திரியில் அடித்து நொறுக்கியிள்ளனர்.

Hansraj-Saxena-sun-pictures

Hansraj-Saxena-sun-pictures

“தி செக்கர்ஸ் ஹோட்டலில்” நடந்த அடிதடி, நொறுக்கல்: டி. சந்திரசேகர் என்ற துணை மேனேஜர், சாதிக் என்பவர் 100 ஆட்களுடன் வந்து அடித்து நொறுக்கியதகவும், பெண்களிடம் தவறாக நடந்து கொண்டும், கல்லாப் பெட்டியிலிருந்து ரூ. 2.6 லட்சம் எடுத்துச் சென்று விட்டதாக கூறியுள்ளார். கிண்டி போலீஸார், சௌமித்ரி தர்மசேனன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா மற்றும் 30 பேர்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை ஒன்றை பதிவு செய்துள்ளார்களாம்[2]. இதனால், வடிவேலு, வெங்கிடேசன், அருண், ரவி, கிருஷ்ணமூர்த்தி முதலியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Rajini-sunpictures-2008

Rajini-sunpictures-2008

ஷூட்டிங் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்த போலீஸ்[3]: நடு இரவில், இப்படி நூறு ஆட்கள், ஆட்டோ, வண்டிகள் என்று வந்து, ஹோட்டலில் புகுந்து, எல்லோரையும் மிரட்டி, அடித்து நொறுக்கி, கலாட்டா செய்து, வந்த வண்டிகளியே பறந்து விட்டபோது, அங்கிருந்த போலீஸார், ஷூட்டிங் எடுக்கிறார்கள் என்று அமைதியாக இருந்து விட்டார்களாம்!

Swami_laxmanananda

Swami_laxmanananda

கிருஷ்ண ஜெயந்தி அன்றுதான் எத்தனை பிரச்சினைகள்: இரண்டு வருடங்களுக்கு முன்பு, இதே மாதிரி இரவில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடிக் கொண்டிருந்த 90 வயதிற்கும் மேற்பட்ட கிழச்சாமியார் – சுவாமி லட்சுமணானந்தா என்பவர், மற்றும் இரண்டு பெண்கள், ஒரு சிறுவன் முதலியோர், பலர் உள்ளே நுழைந்து, ஏ.கே-47 போன்ற நவீன துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கிருத்துவர்கள், கிருத்துவ மாவோயிஸ்ட்டுகள், மாவோயிஸ்ட் கிருத்துவர்கள் என்றெல்லம் பத்திரிக்கைகள் குழப்பினர். அதே மாதிரி இந்த கிருஷ்ண ஜெயந்தியில் இப்படி நடந்துள்ளது! வாழ்க, திராவிடம்!!

ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா, ஒரு ஏதோ திராவிர்களுக்கு மத்தியில் ஒரு ஆரியர்” போல இருக்கிறார்: திராவிட நோக்கில் / பாஷையில் / பாடையில்  சொல்வதானால், ஹன்ஸ்ராஜ் சேக்ஸேனா, ஒரு ஏதோ திராவிர்களுக்கு மத்தியில் ஒரு ஆரியர்” போல இருக்கிறார். ஆனால், கலாநிதி மாறனுக்கு இதெல்லாம் கைவந்த கலை. முன்னர் மே 2007ல், ஸ்டாலின்-அழகிரி விவகார சண்டையில், இவருக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக, போலீஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்[4]. அதாவது, யாரோ பொதுதொலைபேசியிலிருந்து பேசி, சன் டிவிக்கு வேலைக்குச் செல்லாதே, சென்றல் தொலைத்து விடுவோம், என்று மிரட்டினார்களாம்.

கீழே தினமலரில் வந்துள்ள செய்தியும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையும், இந்த பிரச்சினையைப் பற்றியதாக இருப்பினும், சில வேறுபாடுகள் தெரிகின்றன. ஆங்கில நாளிதழ்களில் வந்துள்ளவற்றிற்கும், இதர்கும் கூட அத்தகைய வித்தியாசம் காணப்படுகிறது.


[1] DC Correspondent,  Hotel attack follows road rage, September 2nd, 2010
http://www.deccanchronicle.com/chennai/hotel-attack-follows-road-rage-779

[2] The Hindu dated Thursday, Sep 02, 2010, http://www.hindu.com/2010/09/02/stories/2010090254460400.htm

DC Correspondent , Mistook attack for shoot, says police, September 3rd, 2010
http://www.deccanchronicle.com/chennai/mistook-attack-shoot-says-police-108

[4] http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1180107536

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

ஜூலை 7, 2010

நித்துவிற்குப் பிறகு கல்கி பாட்டு ஆரம்பித்து விட்டது!

http://www.viduthalai.periyar.org.in/20100707/news05.html

ஏற்கெனவே கோர்ட்டுகளில் வெளிவந்த செய்திகள், ஒரு தெலுங்கு டிவி செனல் ஒளிபரப்பிய கலப்படக் காட்சிகள்…………..முதலியவற்றை வைத்துக் கொண்டு முன்பே கதையளந்து கொண்டிருந்தனர்.

கல்கி ஆசிரமத்திலிருந்து பிரிந்து சென்ற சீடர்கள், ஆளுக்கு ஆள் இப்படி புகார்கள் கொடுப்பது, வழக்குகள் போடுவது என்று சாதாரணமாகி விட்டது.

எப்படி, கருணாநிதி எம்.ஜி.ஆரை, அவர் வெளியேறி கணக்குக் கேட்டபோது, , வசைபாடினாரோ, அதே ரீதியில்-தொணியில், இந்த சீடர்கள் பேசிவருகிறார்கள்.

கல்கியின் மகன், ஏற்கெனெவே.இந்த பிரச்சாரங்கள் நிறுத்தப்படவேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்.

அந்நிலையில், மறுபடியும், அரைத்த மாவையே அரைக்கும் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.

வீரமணி, கோபால் முதலியோர்களுக்கு நித்யானந்தா, கல்கி……………….முதலியோர் அவ்வப்போது ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள் போல இருக்கிறது. மற்றவர்கள் மறந்து விட்டாலும், இவர்கள் மறக்கமாட்டார்கள்.

பிற இதழிலிருந்து…இதுதான் கல்கி குடும்பம்!

கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றிப் பணம், பொன், பொருள், நிலம் எல்லாம் சம்பாதிக்கிறார். பக்தர்களுக்கு தீட்சை தந்து மோட்சம் தருவதாகச் சொல்லி, போதை ஊட்டி காம வக்கிரங்களை அரங்கேற்றுகிறார். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை ஹவாலா மோசடி செய்து வருகிறார். இப்படிப்பட்ட பகீர் செய்திகள் அவ்வப்போது மீடியாக்களில் கசிந்தபோதும், மனிதர் எதற்கும் சளைக்கவில்லை. நான்தான் விஷ்ணு-வின் 10_ஆவது அவதாரம் எனத் தொடர்ந்து இயங்கி வருகிறார் கல்கி பகவான்!!

இந்த நிலையில், முன்பு கல்கி பகவானின் நண்பராக இருந்தவரும், போலி சாமியார்களுக்கு எதிரான அமைப்பின் தலைவருமான விஸ்வநாத் சுவாமி, கன்னட மீடியாக்களிடம் கல்கி பகவான் பற்றிக் காட்டமான சில தக-வல்களை வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்-தினார். பெங்களூருவில் இருந்த விஸ்வ-நாத் சுவாமியை சந்தித்தோம்.

கல்கி பகவான் என்று அழைக்-கப்-படும் விஜயகுமார், 1984_இல் என்னோடு ஆந்திர மாநிலம் குப்பத்தில் ஒரு நடு-நிலைப்பள்ளியில் சக ஆசிரியராக இருந்-தவர். போதிய வருமானம் இல்லாததால், அதை விட்டுவிட்டு, எல்.அய.சி. ஏஜென்ட் ஆனார். அப்போதே அவருக்குப் பணவெறி… முதலில் நான் சாமியின் வரம் பெற்றவன என்று மக்களிடம் காணிக்கையாகப் பணம் வசூலிக்கத் தொடங்கினார். அப்புறம் நான் விஷ்ணுவின் 10_ஆவது அவ-தார-மான கல்கி பகவான் என்று கூற ஆரம்பித்தார். யாரும் அதை நம்ப-வில்லை. அப்போது இவர், ஒரு புது டெக்னிக்கைக் கையாண்டார். அதாவது கிராமங்களில் 10_ம் வகுப்பு முடித்த 125 ஆண்கள் மற்றும் பெண்களைத் தேர்ந்-தெடுத்து, அவர்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மசிய வைத்து, அனைவருக்கும் வெள்ளை உடுப்பு கொடுத்து, அக்கம்பக்கக் கிராமங்-களுக்கு அனுப்பி வைத்தார். விஜய-குமார் நாயுடுவின் மீது கல்கி பகவான் இறங்கி உள்ளார் என்று பிரசாரம் செயயவைத்தார். மக்கள் காணிக்கை கொடுக்க முன் வந்தனர். நாளடைவில இவரே சிலரை ரெடி பண்ணி, எனக்கு கேன்சர் குணம் ஆகாமல் இருந்தது… பகவான் தொட்டார், சரியாகிவிட்டது என்று மேடைகளில் சொல்ல வைத்தார்.

அதோடு, ஷில்பா ஷெட்டி, மனீஷா கொய்ராலா போன்ற நடிகைகளை, நான் பகவானிடம் வேண்டிக்கொண்ட பிறகுதான் பெரும் வாய்ப்புகள் வாச-லுக்கு தேடி வரத் தொடங்கின என்று லட்சக்கணக்கில் ரூபாய் செலவழித்துப் பேசவைத்து விளம்பரம் தேடினார். இதுதான் விஜயகுமார்… கல்கி பகவான் ஆன கதை! என்று ஒரு முன்னோட்-டம் கொடுத்தவர் தொடர்ந்தார்.

இவர், நான் உலகத்தையே தீட்சை அடையச் செய்கிறேன். தீட்சைக்கு மூன்று நிலைகள் உள்ளன என்று கூறி, முதல் நிலைக்கு 5,000 ரூபாயும் இரண்-டாம் நிலைக்கு 10,000 ரூபாயும் மூன்-றாம் நிலைக்கு 21,000 ரூபாய் என்று தன்னை நாடி வரும் ஒவ்வொருவரிட-மும் கறந்துவிடுகிறார். அதுவும் வெளி-நாட்டினர் சிக்கிவிட்டால், அவர்களது மொத்தச் சொத்துகளும் அம்போதான்!

கல்கி பகவான் ஆசிரமத்தில் நடக்கும் கஞ்சா, களியாட்டங்கள் பற்றி ஏற்கெனவே உங்கள் ஜூ.வி. உள்பட பல பத்திரிகைகளில் விவர-மாகச் செய்திகள் வந்தன. இந்தக் களி-யாட்டங்களை அரங்கேற்றவே, ஒரு ஸ்பெஷல் ஸ்டூடியோவை உருவாக்கி இருக்கிறார். இதன் உள்ளே 25 வயதுக்கும் குறைவான பெண்களை மட்டும் அழைத்து ஸ்பெஷல் தீட்சை தருவார். ஆந்திர மாநில சேனலில் வெளியான அதிர்ச்சிக் காட்சிகள் மிகக் குறைவுதான். ஆசிரமத்தில் நடப்-பவை முழுதாக இன்னும் வெளிவர-வில்லை.

இவருக்கு 90_களில் வெறும் 43,000 ரூபாய் மட்டுமே வருட வருமானம். ஆனால் இன்று 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர், தமிழ்நாடு, கர்நாடகா என அத்தனை மாநிலங்களிலும் கோடிக் கணக்கில் சொத்துகள்… ஆசிரமங்கள். தனது வீட்டின் நீச்சல் குளத்துக்கு ஸ்பெயினில் இருந்து டைல்ஸ் வாங்கி வந்து பதித்து இருக்கிறார். ஒரு சந்நியாசிக்கு இதெல்லாம் எதற்கு? இவரது மகன் கிருஷ்ணாவுக்கு லாஸ்-ஏஞ்ஜல்ஸில் கம்பெனி… 33 வெளி-நாட்டுகார்கள், பெங்களூருவில் ஆயி-ரம் கோடியில் கட்டுமான பிசினஸ்… இவை எல்லாம் எப்படி வந்தன?

மக்களுடைய நிலங்களையும், பணத்தையும் பறித்துக்கொண்டு பகவான் பெயரில் உலா வருவதால், வரிச் சலுகை பெற்று, மும்பையில் உள்ள தனது ஆட்கள் மூலமாகக் கறுப்பு பணத்தை லாஸ்ஏஞ்ஜலீஸில் இருக்கும் மகனுக்கு அனுப்பி, அதை மாற்றிவிடுகிறார்.

அதோடு, இவரது அந்தரங்க உண்மைகள் எல்லாம் தெரிந்த மேனேஜர்களான பவன், விகாஷ் என்ற இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். அதெல்லாம் விபத்துகள் என்று கூறி போலீஸார் கேஸை முடித்ததும் இவருடைய தாராளம் காரணமாகத்தான்!.

நித்தியானந்தா விவகாரம் குறித்த விசாரணை நடத்துபவர்கள், கல்கி பகவானை மட்டும் ஏன் கண்டும் காணாமல் இருக்கின்றனர்? இவரை போலீஸ் செமத்தியாக விசாரித்தால் போதும்… ஆயிரம் நித்தியானந்தா கதைகள் வெளிவரும் என்று நிறுத்தியவர், கடைசியாக…

நான் அவருக்கு எதிரான உண்மை-களைச் சொல்வதால், பலமுறை என் மீது கொலை முயற்சிகள் நடந்தன. அவற்றில் இருந்து தப்பி சென்னை உயர் நீதி மன்றத்திலும், சைதாப்பேட்டை கீழ் நீதிமன்றத்திலும் அவர் மீது நில அபகரிப்பு, கொலை முயற்சி, ஹவாலா மோசடி ஆகிய வழக்குகளை நடத்தி வருகிறேன். எந்த நேரத்திலும் என் உயிர் போகலாம். ஆனாலும், கல்கி பகவானுக்குக் கடவுளாவது தண்டனை தர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்! என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து சித்தூர், வரதபாளையத்தில் உள்ள கல்கி பகவான் தலைமை ஆசிரம செயலாளர் நமன் தாஸாவிடம் விளக்கம் கேட்-டோம். கல்கி பகவான் மீது விஸ்வநாத் சுவாமி மூன்று வழக்கு போட்டிருக்கிறார். அதில் ஒரு வழக்கு தள்ளுபடியாகி விட்டது, மற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. கல்கி பகவான் மீது கூறப்படும் அத்தனை குற்றச்சாட்டுகளும் தவறானவை என்று நாங்கள் சொல்-வதைவிட, நீதிமன்றம் அறிவிப்பதே சரியாக இருக்கும்! என்கிறார்.

நன்றி: இரா.வினோத்
(ஜூனியர் விகடன், 7.7.2010)

மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசை முழங்க உற்சாக வரவேற்பு!

மே 21, 2010

தூத்துக்குடி: அறிவுலக ஆசான் சிலை திறப்பு விழா: தமிழர் தலைவருக்கு பேண்டு வாத்தியம் இசை முழங்க வரவேற்பு

பகுத்தறிவு போர்வையில் எதையுமே மாறாக – எதிர்மறையாக செய்யும் இவர்கள் வீரமணி வரும் போது ஒப்பாரி வைக்கலாமே?

ஐயோ, ஐயய்யோ, வந்துட்டாரய்யா, வந்துட்டாரய்யா, என்று கூவலாமே?

மேள தாளங்கள், பேண்டு வாத்திய இசைகளுக்குப் பதிலாக பறைமேளம் அடிக்கலாமே?

மாலை-சால்வைக்கு பதிலாக வேறு ஏதாவது போடலாமே?

சிரிப்பதற்கு பதிலாக அழலாமே?

பகுத்தறிவு, தன்மானம், சுயமரியாதை, இனமானம் முதலியவை அப்பொழுது மழுங்கிவிடடகின்றனவோ?

தூத்துக்குடி, மே 20_ தூத்துக்குடியில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவில் கலந்து-கொள்ள தூத்துக்குடி வந்த தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலை-வர் கி. வீரமணி அவர்-களுக்கு ரயில் நிலை-யத்-தில், மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மேள தாளங்கள் முழங்க உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

இன்று பெரியார் சிலை திறப்பு: தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலை தென்பாகம் காவல் நிலையம் அருகில் அறிவுலகப் பேராசான் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா இன்று மாலை சுமார் 6 மணி-யளவில் நடைபெறுகிறது. தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழர் தலைவரும், திரா-விடர் கழகத் தலைவரு-மான கி. வீரமணி அவர்-கள் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றுகிறார்.

மாலை பேரணி: முன்னதாக மாலை 4 மணியளவில் கழகத் தோழர்கள் பங்கேற்கும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், தீமிதி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு மூட நம்பிக்கை ஒழிப்பு நிகழ்ச்-சிகளை தலைமை நிலை-யச் செயலாளர் வீ. அன்பு-ராஜ் 3 ஆவது மைல் என்ற இடத்தில் தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச் சிறப்பு-மிக்க இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று (20.5.2010) காலை தூத்-துக்குடி வந்து சேர்ந்த தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு அளிக்கப்-பட்டது.

தூத்துக்குடியில் இன்று நடைபெறும் நிகழ்ச்சிக்கு, பெரியார் சிலை அமைப்-புக் குழு புரவலரும், தமிழக சமூக நலத்துறை அமைச்சருமான பெ. கீதாஜீவன் தலைமை வகிக்க, மாவட்ட திரா-விடர் கழகத் தலைவர் பேரா. கனகராசு வர-வேற்புரை வழங்குகிறார்.  நிகழ்ச்சிக்கு, திராவிடர் கழகப் பொதுச்செய-லாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், தூத்துக்குடி மாவட்ட தி.மு.க. செய-லாளர் என். பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை, திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்-ணன், மேயர் கஸ்தூரி தங்கம், தென் மாவட்ட திராவி-டர் கழகப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் தே.எடிசன் ராஜா ஆகி-யோர் முன்னிலை வகிக்-கின்றனர். திராவிடர் கழகம் நடத்தும் சமூக விழிப்பு-ணர்வூட்டும் நிகழ்ச்சியை-யொட்டி தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் முனிய-சாமி நன்றியுரை நிகழ்த்து-கிறார்.

தூத்துக்குடி ரயில் நிலையத்தில், பேண்டு வாத்திய இசை முழங்க தமிழர் தலைவருக்கு உற்-சாக வரவேற்பு கொடுக்கப்-பட்டது. தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுடன் தலைமை நிலைய செயலா-ளர் வீ. அன்புராஜ் அவர்-களும் உடன் சென்றிருந்-தார்.

மாலத்தீவில் அழகிரி

மே 11, 2010

பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடனே அழகிரி மாலத்தீவு பயணம்

10 May 2010 02:48:21 PM IST
http://dinamani.com/edition/print.aspx?artid=239933

புதுதில்லி, மே 10- பிரதமர் அலுவலகத்தில் ஒப்புதல் பெற்றுதான் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாலத்தீவுக்கு பயணம் மேற்கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, அவைக்கு வராமல் அழகிரி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டது குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர். அமைச்சரவைக் கூட்டத்திலும் அழகிரி கலந்துகொள்வதில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, மாலத்தீவு செல்வதற்கு அழகிரி பிரதமர் அலுலகத்தில் முறைப்படி அனுமதி பெற்றாரா என்பது குறித்து தெரிவிக்கும்படி தில்லியைச் சேர்ந்த சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு பிரதமர் அலுவலகம் சார்பில் அளிக்கப்பட விளக்கத்தில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகிரி மாலத்தீவில் தங்கியிருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம்: கம்யூ. தலைவர் தாக்கு !

வெள்ளி 23, ஏப்ரல் 2010 2:42:40 PM (IST)

ஏப்ரல் 17-ம் தேதி முதல் ஏப்ரல் 28 வரை 10 நாள் மாலத்தீவு பயணத்திற்கு அழகிரி, ஏப்ரல் 12-ம் தேதி பிரதமர் அலுவலத்தில் அனுமதி பெற்றார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright 2008 Dinamani

பாராளுமன்றத்தில் 27ம் தேதி வெட்டு தீர்மானம் கொண்டு வரும் நேரத்தில் மத்திய அமைச்சர் முக.அழகிரி மாலத்தீவில் தங்கியிருப்பது நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என சிபிஎம் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கூறினார்.

அனல் பறக்கும் நாடாளுமன்றம்-மாலத்தீவில் நண்பர்களுடன் அழகிரி டூர்
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 20, 2010, 9:58[IST]

http://thatstamil.oneindia.in/news/2010/04/20/azhagiri-maldives-madurai-dmk-parliament.html

நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு, ஐபிஎல் விவகாரம் என அனல் பறந்து கொண்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது நண்பர் பட்டாளத்தோடு மாலத்தீவில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றத்திற்கு சரியாக வருவதில்லை. முக்கிய விவாதங்களில் கலந்து கொள்வதே இல்லை என்று ஏற்கனவே அழகிரி மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ்  தலைமையும் கூட அழகிரி மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

இந் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையாக ஐபிஎல், சசி தரூர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் முக்கிய கேபினட் அமைச்சரான மு.க.அழகிரி, நாடாளுமன்றத்திலும், நாட்டிலும் இல்லாமல் மாலத்தீவில் நண்பர்களோடு ஹாயாக ரெட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பது டெல்லி வட்டாரத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.

மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஷ் பாபு, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், ஒரு டாக்டர் உள்பட 10 பேருடன் அழகிரி மாலத்தீவுக்கு ஏப்ரல் 16ம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார். அழகிரியுடன் சென்றுள்ள அனைவருமே நண்பர்களாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லையாம்.

தனது மாலத்தீவு பயணம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அழகிரி தெரிவித்து விட்டாராம். அதேசமயம், அழகிரியின் மாலத்தீவு பயணம் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதற்குக் காரணம், இது தனிப்பட்ட கோடை விடுமுறைப் பயணம் என்பதால் என்று கூறுகின்றனர் அழகிரி தரப்பினர். அதேசமயம், அழகிரியின் இந்த மாலத்தீவு பயணம் குறித்து வேறு மாதிரியான கருத்துக்களும் திமுக வட்டாரத்திலேயே கூறப்படுகிறது. மத்திய அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. தமிழக அரசியலுக்குத் திரும்புவதே தனது நோக்கம் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க விரும்பும் அழகிரி, கருணாநிதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே வேண்டும் என்றே நாடாளுமன்றத்திற்குப் போகாமல் டூர் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: தமிழகம் முன்னேறும் விதம்!

ஏப்ரல் 10, 2010
கேபிள் இணைப்பையும் அரசே இலவசமாக தர வேண்டும்: சட்டசபையில் பா.ம.க., கோரிக்கை
ஏப்ரல் 10,2010,00:00  IST

Latest indian and world political news information

சென்னை:”அரசு கேபிள், ‘டிவி’ இணைப்பையும் இலவசமாக வழங்க முன்வர வேண்டும்,” என, சட்டசபை பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.பட்ஜெட் மீது சட்டசபையில் நேற்று நடந்த பொது விவாதம்: ஜி.கே.மணி – பா.ம.க: பென்னாகரம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியின் மிகப்பெரிய கூட்டணி, பிரதான எதிர்க்கட்சியை எதிர்த்து பா.ம.க., தனித்து போட்டியிட்டு 41 ஆயிரத்து 285 ஓட்டுகளை பெற்றுள்ளது. வாக்காளர்களுக்கு நன்றி.வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கை, கடந்த ஆண்டு திட்டங்கள் எந்த அளவு நிறைவேற்றப்பட்டன என்ற அறிக்கை, கடந்த ஆண்டு மக்களை போய்ச்சேர்ந்த திட்டங்களால் எந்த அளவு விளைவு, தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கை ஆகியவற்றையும் தாக்கல் செய்ய வேண்டும்.

மாவட்ட வாரியாக குடிசைகளை கணக்கெடுத்து, முன்னுரிமை கொடுத்து, எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கலைஞர் வீட்டுவசதித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கழிவறைகள் அதிகம் இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது. அவ்வாறு கட்டப்படும் வீடுகளில் கட்டாயம் கழிவறை வசதியும் செய்ய வேண்டும். கிராமப்புறங்களிலும் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்து, போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

குடும்பத்திற்கு மாதம் 5,000 ரூபாயும், கிணறு வைத்திருக்கும் குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும் கொடுக்க வேண்டும்.இயற்கை இடர்பாடு நிதி உருவாக்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில், இடைக்கால தடை கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதன்பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேசிய அளவில் விவசாயிகள் கடனாளிகளாக இருப்பதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

நிதியமைச்சர் அன்பழகன்: தமிழகத்தில் தான் விவசாயிகளின் 7,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.ஜி.கே.மணி: சிறப்பு வேளாண் பொருளாதார மண்டலம் உருவாக்க வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதையை, தமிழகத்திற்கு நுழைய விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்க மாநில, மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிந்துரை செய்யும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் எதுவும் இல்லை என்ற நிலை 2012ம் ஆண்டிற்குள் ஏற்படுத்தப்படும் என அரசு அறிவித்தது. இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ள நிலையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் எண்ணிக்கை எவ்வளவு என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்.ஸ்ரீபெரும்புதூரில் குட்டி ஜப்பான் உருவாகவுள்ளது என 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசு விவசாய நிலத்தை ஏன் அடிமாட்டு விலைக்கு வாங்கித்தர வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களாகவே வாங்கட்டும். விலைவாசி உயர்வு குறித்து துணை முதல்வர் ஸ்டாலின், டில்லியில் பேசியுள்ளார். விலைவாசியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக எடுக்க வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன்: இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, விவசாயிகள் ஏற்றுக் கொண்டால் தான் விவசாய நிலம் பன்னாட்டு நிறுவனத்திற்காக வாங்கப்படுகிறது. ‘சிப்காட்’டில், தவிர்க்க முடியாத நிலையில் அரசு திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. வெளிநாட்டு முதலாளிகளுக்காக அரசு விவசாய நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கவில்லை.

ஜி.கே.மணி: கிராமப்புற மாணவர்களுக்கான 15 சதவீத இடஒதுக்கீடு, கோர்ட் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது. அதை, மீண்டும் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பொன்முடி: கோர்ட் உத்தரவால் தான், கிராமப்புற மாணவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. முதல் தலைமுறையாக பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால், கிராமப்புற முதல்தலைமுறை மாணவர்கள் பயனடைவர்.

ஜி.கே.மணி: அரசு இலவச கலர், ‘டிவி’யை, 1,500 ரூபாய்க்கும் மேல் வாங்கி வழங்கி வருகிறது. கேபிள், ‘டிவி’க்கு தனித்தொகை செலுத்த வேண்டியுள்ளது. கிராமங்களில் 100 ரூபாய், நடுத்தர நகரங்களில் 120 ரூபாய், பெரிய நகரங்களில் 150 ரூபாய் என கேபிள், ‘டிவி’ கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.இதனால், ஏழைகள் ஆண்டிற்கு 1,200 முதல் 1,800 ரூபாய் செலவழிப்பது, சிரமமாக உள்ளது. கேபிள், ‘டிவி’ இணைப்பையும் அரசு இலவசமாக வழங்க முன்வர வேண்டும்.இவ்வாறு ஜி.கே.மணி கோரினார்.

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……இவர்களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நிலையில், ஒரு அமெரிக்க சாமி, அமெரிக்கா ஸ்டைலில் செக்சஸ்-புகார் கொடுத்துள்ளது (மார்ச் 2010), அனைவர்க்கும் ஜொல்லுவிடும் வகையில் உள்ளது.

டக்ளஸ் மெக்கல்லர் மெகா டகிள் விட்டுள்ளரா, இல்லை உண்மையா என்று அந்த “நடிகைகள்” தாம் வந்து விளக்கம் சொல்லவேண்டும்.

லெனின் குருப் வீடியோவைவிட இந்த டக்ளஸ் சொல்வது, புளூ ஃபிலிமையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது!

# அமெரிக்கா வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார் [அதென்ன “அழகான பெண்கள்” என்று புரியவில்லை. அப்பொழுது அந்த அமெரிக்க சாமியும் நல்ல சாமி இல்லை என்று தெரிகிறது. அதாவது கூட்டிக்கொடுக்கும் சாமி போல!].

# ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார் [ஆஹா, இப்படி எந்த சாமியாவது, நான் மாமா வேலை இப்படித்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா?].

இது நம்ம ஆட்களின் கொசுரு!

அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே, இதில் சம்பந்தப் பட்டுள்ள ஊடகங்கள் நிச்சயாமாக இந்திய சமுதாயத்தைக் கெடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றன என்றுத் தெரிகின்றது.

அவை ஏற்கெனவே ஒத்திகை பார்த்து புளூ ஃபிளிம் எனப்படுகின்ற ஆபாசமான ஆண்-பெண் புணர்ச்சி படங்களை வெளிப்படையாக ஆனால் சூசகமாக பொது ஊடகத்தில் பட்டப்பகலில், அதுவும், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்தில், திரும்ப-திரும்ப ஒளிப்பரப்பியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த அமெரிக்க சாமியின் புகாரும் அதே ரிதியில்தான் உள்ளன. இங்கு இந்தியாவிலேயே லெனின் குருப் / குருப் லெனின் / நித்ய தர்மானந்தா இத்தகைய படங்களை தனக்குத்தெரிந்த தொழிற்நுட்பத்துடன் எடுத்துள்ளான் என்றால், நிச்சயமாக அந்த மாமா வேலை பார்த்த அமெரிக்க சாமி அதையும் மிஞ்சி புளூ ஃபிளிம் எடுத்தேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றும் இல்லை!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……முதலியவையெல்லாம் பிரத்யேகமாக ஒளிபரப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

அன்று சரோஜாதேவி புத்தகம் என்ற நிலையில் இருந்து, சில குறிப்பிட்ட பிரபலமான நடிகை-நடிகர்களுடன் புளூ ஃபிளிம் என்ற நிலையில் இருந்து, இப்பொழுதைய “நித்யானந்தா-ரஞ்சிதா மாதிரி” வெளிப்படையான ஒளிப்பரப்பிற்கு வந்து விட்ட விஷயங்கள், நாளைக்கு புளூ ஃபிளிமே ஒளிபரப்பப் பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நிர்வாண ஓவியன், ஹுஸைன் அன்றே துச்சாதனையும் விஞ்சி ஆடைகளைக் களைந்து படம் காட்டினான். பாரத மாதாவையும் கற்பழித்தான். எந்த இந்தியனுக்கும் சொரணை வரவில்லை!

குஷ்புவின் கற்பின்மை தன்மைப் பற்றி உச்சநீதி மன்றமே உச்சம் குளிர இல்லை சூடேறும் வகையில் தீர்ப்புக் கொடுத்துள்ளது.

இனி கற்ப்பைப் பற்றியோ, உட்லுறவுக் கொல்வது பற்றியோ கவலைப் படவே வேண்டாம்.

திருமணத்திற்கு முன்போ, பின்போ நீதிமன்றமே சொல்லிவிட்டது!

நித்யானந்தாவிடம் இருந்து மகனை மீட்டு தாருங்கள்: பெற்றோர் கண்ணீர் புகார்!

மார்ச் 5, 2010
நித்யானந்தாவிடம் இருந்து மகனை மீட்டு தாருங்கள்: புறநகர் கமிஷனரிடம் பெற்றோர் கண்ணீர் புகார்
மார்ச் 05,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=16732

மகனை மீட்டுத் தாருங்கள் தந்தை புகார்: செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள நித்யானந்தாவிடமிருந்து தங்களது மகனை மீட்டுத் தரும்படி புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் பெற்றோர் கண்ணீர் புகார் அளித்துள்ளனர். சென்னை மணலி நியூடவுனை சேர்ந்த வாசன், புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் நேற்று ஒரு புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: “எனது மகன் மெய்யிறை (24), டிப்ளமோ இன்ஜினியரிங் படித்துள்ளார். யோகா பயிற்சியில் ஈர்க்கப்பட்டதால், நித்யானந்தாவிடம் எனது மகனுக்கு தொடர்பு ஏற்பட்டது. நித்யானந்தா வசியம் செய்ததால் கடந்த 2007ம் ஆண்டு பெங்களூரு ஆசிரமத்தில் எனது மகன் சேர்ந்துவிட்டான். பல முறை பெங்களூருக்கு சென்று, மகனை வரும்படி அழைத்தேன். “தன்னை அடிக்கடி வந்து தொல்லை செய்ய வேண்டாம்’ என அவன் கூறிவிட்டான். தாய் அழைத்தால் வருவான் என்பதற்காக எனது மனைவியையும் பெங்களூரு ஆசிரமத்திற்கு அழைத்து சென்றேன். அப்போது, “என்னை தேடி இங்கு வர வேண்டாம்’ என்று கண்டிப்பாக கூறிவிட்டான்.

“நித்யானந்தாவிடம் என்னை அர்ப்பணித்துவிட்டேன்”: இரண்டு மாதங்களுக்கு முன், அவனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது வாழ்க்கை கல்வி கற்பதாகக் கூறினான். பின், நித்யானந்தாவிடம் தன்னை அர்ப்பணித்துவிட்டதாகத் தெரிவித்தான். கடந்த சில நாட்களாக நித்யானந்தா பற்றி பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன. இதனால், எனது மகனுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

“அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்”: “நித்யானந்தாவின் அந்தரங்கம் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆசிரமத்தை விட்டு வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்’ என்று மெய்யிறை தொலைபேசியில் கூறினான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாங்கள், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மகனை மீட்பதற்காக பெங்களூரு சென்றோம். ஆனால், எங்களை ஆசிரமத்தின் உள்ளே அனுமதிக்கவில்லை. காவலாளிகள் எங்களை அடிக்காத குறையாக விரட்டி, வெளியேற்றினர். நித்யானந்தா ஆசிரமத்தில் அடைபட்டுள்ள எனது மகன் மெய்யிறைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. நித்யானந்தாவிடம் இருந்து எனது மகனை மீட்டுத் தர வேண்டும்.இவ்வாறு மெய்யிறையின் பெற்றோர் புகாரில் கூறியுள்ளனர். புகாரை பெற்ற புறநகர் கமிஷனர் ஜாங்கிட், எண்ணூர் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

மத்திய குற்றப்பிரிவில் வழக்குபதிவு: சாமியார் நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சிலர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தனர்.இப்புகாரின் பேரில் சாமியார் நித்யானந்தா மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளனர். வக்கீல்கள் புகாரில், “சாமியார் பொதுமக்களை ஏமாற்றி நன்கொடையாக பணம் வசூலித்து, கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ளார். அச்சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும்’ என கூறியிருந்தனர். அதன்பேரில், சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டு, சாமியார் நித்யானந்தா மீது கிரிமினல் சட்டப் பிரிவு 420ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

விமர்சனம் [இப்பொழுதுள்ள நாத்திக அரசு – அதாவது இந்துக்களுக்கு எதிராக அவதூறு பேசிவரும் கருணாநிதி தலைமையில் இருக்கும் – பாரபட்சமாக செயல்படுகிறது என்பதை எடுத்துக் காட்டதான் இவ்வினாக்கள் எழுப்பப் படுகின்றன]:

  1. “………………வாழ்க்கை கல்வி கற்பதாகக் கூறினான். பின், நித்யானந்தாவிடம் தன்னை அர்ப்பணித்துவிட்டதாகத் தெரிவித்தான்‘, என்று சொல்லிவிட்டு, “நித்யானந்தாவின் அந்தரங்கம் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஆசிரமத்தை விட்டு வெளியே விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்‘ என்று மெய்யிறை தொலைபேசியில் கூறினான், என்பதால், இவ்விஷயத்தை ஆராய வேண்டியுள்ளது.
  2. கல்கி விஷயத்திலும், ஆரம்ப காலங்களில் இத்தகைய புகார்கள் வந்தன. ஆனால், அந்த மகன்கள், மகள்கள் தாம்தான் தன்னிச்சையாக சேர்ந்தோம், யாரும் எங்களை வற்புறுத்தவில்லை என்றதும் வழக்கு நொடித்துவிட்டது.
  3. இத்தகைய புகார்களை பொறுப்புள்ள பெற்றோர்கள் யார் மீது வேண்டுமானலும் கொடுக்கலாம்.
  4. எந்த சாமியார், நண்பன், ஆசிரியர், அரசியல்வாதி அல்லது மகனை-மகளை கெட்டபாதையில் ஒருவன் / ஒருவர் இட்டுச்செல்கிறார், என்று பெற்றோர்கள் நினைத்தால் புகார் கொடுக்கலாம். [டுயூஸன் வாத்தியார் ஒழுங்காகச் சொல்லித்தரவில்லையென்றல் அவரை மாற்றுவதில்லையா?] ஆனால், அப்பொழுது செய்யாமல் ஏன் இருக்கிறர்கள்?
  5. ஜக்கி வாசுதேவன் அல்லது எந்த சாமியார் மேலேயும் இத்தகைய புகார்களை தாராளமாக, ஏன் எளிதாகக் கொடுக்கலாம். ஏன் செய்யவில்லை.
  6. கிருத்துவம் மற்ற இதர சாமியார்கள் கற்பழிப்பு, அபாசம், சிறுவர் பாலியல் குற்றாவாளிகள் (phedophiles), ஆபாச படங்கள், திரைப்படங்கள் (pornography), வன்முறை கலவிகள்…………..என்றெல்லாம் நுற்றுக்கணக்கான புகார்கள், செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவோ, தண்டிக்கப்படுவதாகவோ தெரிவவில்லை.
  7. ஊடகங்களும் செய்திகளை மட்டும் வெளியிட்டு விட்டு சமர்த்தாக, சாமர்த்தியமாக மௌனிகளாகி விடுகின்றனர் [இதைப் பற்றி வில் ஹுயூம், ஜோ, என்ற விஷயங்களில் பதிவுகளைக் காணலாம்].
  8. கருணாநிதியோ அதைப் பற்றி மூச்சுக்கூடவிடுவதில்லை. ஒருவேலை அவர்களுடைய கடவுளர்களைக் கண்டால் பயம் போலும், இல்லைக் கஞ்சிக் கூடக் கிடைக்காது என்ற ஏக்கம் போலும்!
  9. “சும்மா பார்த்துக் கொண்டு இருக்க முடியாது”, என்ற மிரட்டல்களோ, “பகலில் சாமி, இரவில் காமி, என்ற ரம்மியமான ரைம் செர்ந்த செம்மொழிகளோ உதிர்க்கப் படவில்லை. இத்தகையவற்றை பாரபட்சம் மிக்கவை என்று சொல்லாமல் என்ன சொல்வது?
  10. சட்டத்தின் முன்னால் எல்லொருமே சமம் எனும்போது, எல்லா குற்றாவாளிகளும் ஒரே மாதிரிதான் நடத்தப் படவேண்டும். பிறகு எதற்கு சலுகைகள், தளர்த்தல்கள், ரகசியங்கள், மர்மங்கள், மௌனங்கள் எல்லாம்?