Archive for the ‘படுக்கையறை’ Category

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

மே 20, 2016

ஆபாசவீடியோக்கள்-ஒளிபரப்பு, நித்தியானந்தா-பெரியகருப்பன், சன்-டிவி மற்றும் ஜெயா-டிவி நடந்து கொண்ட விதம்!

பெரிய கருப்பன் வீடியோ - திமுக பெயில்ஸ்

ஆபாச வீடியோ பரவலும் (07-05-2016), பெரியகருப்பன் தேர்தல் கமிஷனிடம் கொடுத்த புகாரும் (08-05-2016): திருப்புத்துார் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான பெரியகருப்பன், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சி, ‘வாட்ஸ் ஆப்’பில் 07-05-2016 அன்று பரவியது[1]. பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது[2] என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இது குறித்து பெரியகருப்பன், தேர்தல் அலுவலர் உள்ளிட்டோருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரில் கூறியுள்ளதாவது[3]: “நேற்று, ‘வாட்ஸ் ஆப், பேஸ்புக்மூலமாக வந்த ஒரு வீடியோவில், நான் ஒரு பெண்ணுடன் அமர்ந்திருப்பது போல சித்தரித்த காட்சியை பரப்பியிருந்தனர். தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பொது வாழ்வில் தொடர்பில்லாத செயல் பற்றிய விமர்சனங்களை, போலியான ஆவணத்தைப் பின்பற்றி பொய்யான செய்தி தொகுப்பை வெளியிடும், ‘ஜெயா டிவிமீது நடவடிக்கை எடுக்கவும், ‘டிவிசேனல்கள் ஒளிபரப்ப தடை விதிக்கவும் வேண்டுகிறேன்”, இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்[4].

பெரிய கருப்பன் வீடியோ - ஆறு போஸ்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தடைகோரி வழக்கு (10-05-2016): தேர்தல் கமிஷன் அடுத்து, இவர், ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது[5]: “தி.மு..வில் தீவிர உறுப்பினராக உள்ளேன். கடந்த 2006 மற்றும் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். மக்கள் மத்தியில் எனக்கு நற்பெயர் உள்ளதால், அடுத்தடுத்து வெற்றி பெற்றேன்.  16-ந் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும், அதே தொகுதியில் போட்டியிடுகிறேன். இந்த தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெறுவேன் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டு வருகின்றனஇந்த நிலையில், யாரோ ஒரு பெண்ணுடன் நான் இருக்கும் ஆபாச வீடியோவை, உள்நோக்கத்துடன் ஜெயா டி.வி. நிறுவனம் வெளியிட்டுள்ளதாக எனக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. நவீன டிஜிட்டல் முறையில் என் உருவத்தை பொய்யாக சித்தரித்து இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதுஇதன்மூலம் பொதுமக்கள் மத்தியில் எனக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி, தேர்தலில் என் வெற்றி வாய்ப்பை சீர்குலைக்க திட்டமிடுகின்றனர். தற்போது, இந்த ஆபாச வீடியோவை தொடர்ந்து ஒளிபரப்ப அனுமதித்தால், அது எனக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அந்த படத்தை ஒளிபரப்ப ஜெயா டி.வி.க்கு தடை விதிக்கவேண்டும்”, இவ்வாறு அதில் கூறியிருந்தார்[6].

பெரிய கருப்பன் வீடியோ - ஜெகத்ரட்சகன்

ஜெயாடிவி ஒலிபரப்பு நிறுத்தம் (09-05-2016), வழக்கு தள்ளுபடி (11-05-2016): இந்த மனு கோடை கால நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கை தன்னுடைய சேம்பரில் வைத்து நீதிபதி நேற்று காலையில் விசாரித்தார்.  அப்போது ஜெயா டி.வி. நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் நவநீதகிருஷ்ணன், வைரமூர்த்தி ஆகியோர், ‘திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கடந்த 9-ந் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட விவகாரம் குறித்த வீடியோ காட்சியை ஒளிபரப்பக் கூடாது”, என்று கூறியுள்ளார். அதன்படி, அந்த காட்சியை ஒளிபரப்புவது 9-ந் தேதி முதல் நிறுத்தப்பட்டு விட்டது’ என்று கூறினார்[7]. அதனால், வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டுக் கொண்டனர். பின்னர், அந்த தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தையும் நீதிபதி முன்பு தாக்கல் செய்தார்[8].

பெரிய கருப்பன் வீடியோ - நித்தியானந்தா

ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்: இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது[9]: “தேர்தல் அதிகாரி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்புவதை எதிர்மனுதாரர் தரப்பு நிறுத்தி விட்டதாக கூறியுள்ளதுஎனவே, இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை. அதேநேரம், ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளதுஅப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர். இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். சர்ச்சைக்குரிய வீடியோ காட்சியை ஒளிபரப்ப தடை கேட்ட மனுதாரரின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்கிறேன்”, இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது[10].

lenin karuppan - ranjitha video

நீதிபதி தீர்ப்பின் அம்சங்களும், ஊடகங்கள் மற்றும் திமுக போன்ற திராவிட கட்சியினர் நடந்து கொண்டுள்ள விதமும்: நீதிபது குறிப்பாக பின்குறிப்பிட்டவற்றை பார்த்தால், கடந்த ஆண்டுகளில், திமுக முதலிய திராவிட கட்சிகள் எவ்வாற்று நடந்து கொண்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

  1. ஜனநாயக அடிப்படையில் அரசியல் கட்சிகளை ஊடகங்கள் மூலம் விமர்சனம் செய்ய உரிமை உள்ளது.
  2. அப்படிப்பட்ட விமர்சனம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும்.
  3. ஆனால் சில நேரம் எல்லை மீறி, அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்து விடுகின்றனர்.
  4. இதனால், அந்த நபர் இதுநாள் வரை சேர்த்து வைத்திருந்த அனைத்து நற்பெயர்களுக்கும் களங்கம் ஏற்பட்டு விடுகின்றன.
  5. மேலும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்யும்போது, அந்த தலைவருக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
  6. எனவே, ஒரு நபரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விவரங்களை வெளியிடுவதில் ஊடகங்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

நித்தியானந்தா வீடியோ விசயத்தில் சன்–டிவி மற்றும் நக்கீரன் எவ்வாறு நடந்து கொண்டது, இப்பொழுது அமைதி காக்கிறது என்பதனை கவனிக்கலாம். வீடியோ, ஒரு ஆண்-பெண் விவகாரம், யாரோ வீடியோ எடுத்தது, சுற்றில் விட்டது-பரப்பியது என்றால், ஏன் வேறுபடவேண்டும்? இப்பொழுது வக்கிரம் படங்களில், வீடியோக்களில் உள்லது என்றால், முன்னர் வாய்ப்பேச்சுகளில், எழுத்துகளில் இருந்தன. ஈவேரா, அண்ணாதுரை, கருணாநிதி, முதலியோர்களும், தீப்பொறி ஆறுமுகம், அணுகுண்டு வகையறாக்களும் 1960களிலிருந்து பேசி, எழுதி வந்தவற்றை, இப்பொழுது ஞாபகப்படுத்திப் பார்த்தால், அவர்களது யோக்கியதையை அறிந்து கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

12-05-2016 / 20-05-2016

[1] தினமலர், மாஜி திமுக அமைச்சரின் ஆபாச வீடியோ?, மே.9, 2016. 16:49.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1518740

[3] தினமலர், பெண்ணுடன் இருக்கும்வீடியோ‘ ‘மாஜிபெரியகருப்பன் புகார், மே.10, 2016. 02:01.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1519182

[5] தினத்தந்தி, தனியார் டி.வி.க்கு எதிரான முன்னாள் அமைச்சரின் மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு, மாற்றம் செய்த நாள்: வியாழன் , மே 12,2016, 3:00 AM IST; பதிவு செய்த நாள்:வியாழன் , மே 12,2016, 12:11 AM IST.

[6] மாலைச்சுடர், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, Wednesday, 11 May, 2016   04:10 PM

[7] http://www.maalaisudar.com/newsindex.php?id=51390%20&%20section=19

[8] The Madras High Court on 11-05-2016 dismissed a suit filed by a former DMK minister and a candidate in the May 16 assembly polls in Tamil Nadu seeking to restrain Jaya TV from telecasting a ‘morphed’ video purportedly showing him in a compromising position with a woman as the channel informed the court that it had already stopped the telecast. Justice M V Muralidharan recorded a memo filed by Jaya TV Network that the telecast had been stopped immediately on receipt of a notice from the Election Commission on May 9 and ruled that since the defendant had stopped telecasting the news nothing survives in the suit for adjudication by the court

[9] http://www.dailythanthi.com/News/India/2016/05/12001102/Former-Minister-of-the-pleaHigh-Court-Orders.vpf

[10] Petitioner R Periakaruppan, a former state minister who is contesting the polls from Tirupattur constituency, filed the suit seeking to restrain Jaya TV and demanding Rs.26 lakh as damages for telecasting the ‘highly defamatory, false news report of alleging immoral conduct on his part together with digitally morphed video graph contents.’ He contended the video allegedly depicting him in a compromising position with an unknown woman was telecast to bring disrepute to him with an ulterior motive of shattering his prospects in the coming elections and tarnish his image and it was a clear violation of the model code of conduct.

http://zeenews.india.com/news/tamil-nadu/jaya-tv-stops-telecast-of-morphed-video-of-dmk-candidate_1884267.html

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

திசெம்பர் 31, 2010

கருணாநிதிக்கு நித்யானந்தா பகிரங்க கடிதம்: தமிழகத்தில் தான் மடங்கள் தாக்கப்படுகின்றன, பக்தர்களிடம் பணம் பறிக்கப்படுகிறது, மத உரிமைகள் மிதிக்கப்படுகின்றன!

கேட்ட பணம் கொடுக்காததால் அவதூறு செய்திகள் பரப்பப்பட்டன: “மிகப்பெரிய அளவில் பணத்தொகை கேட்டு மிரட்டப்பட்டேன். அதற்கு நான்

சென்னை உயர்நீதி மன்றத்தில் அஃபிடேவிட் தாக்கல் செய்யப்பட்டபோதே, இது சொல்லப்பட்டது. சன்-குழுமம் என்றும் மறைமுகமாக குறிப்பிடப்பட்டது. அத்தகைய வீடியோ ஒலிப்பரப்பாமல் இருக்கப் பணம் கேட்டதாகவும், பேரம் பேசியதாகவும் சொல்லப் பட்டது.

மறுத்ததால் என் மீது அவதூறான செய்திகளை பரப்பினர், ” என, சாமியார் நித்யானந்தா பேசினார். திருவண்ணாமலையில், சாமியார் நித்யானந்தாவின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நித்யானந்த தியான பீடம் சார்பில் சத் சங்கம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு ஆசி வழங்கி நித்யானந்தா பேசியதாவது[1]:

தமிழக முதல்வர் அய்யாவுக்கு நான் கூறிக்கொள்வது; “மிகப்பெரிய ஆன்மிகநிறுவனம் நித்யானந்த தியானபீடம். இதில், தமிழகத்தை சேர்ந்த 12 லட்சம் பேர்

அப்படி தாக்கப்பட்டது நித்யானந்தா விரோதம் என்பதா அல்லது வேறேதாவது உள்நோக்கம் உள்ளதா?.

பக்தர்களாக உள்ளனர். இவர்களின் வேதனைகளையும், குமுறல்களையும், புண்படுத்தப்பட்ட மத உணர்வுகளையும், பழிக்கப்படுவதோடு அல்லாமல் மீண்டும் மீண்டும் நாங்கள் தாக்கப்படுவதால், எங்கள் வாழ்வுரிமையை நாங்கள் எங்கு சென்று தான் மீட்டெடுப்போம். மொத்தம் 197 நாடுகளில் தியானபீடத்தின் சத்சங்க மையம், கோவில், வழிபாட்டு தலங்கள் உள்ளன. ஒன்பது மாதங்களில் 120 வழிபாட்டு தியான பீடங்கள் சமூக விரோதிகளால், அடித்து நொறுக்கப்பட்டன.

தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும் தாக்கப்படவில்லை: “தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும், எங்களின் எந்த ஒரு மையமும்

தமிழகத்தில் மட்டும் ஏன் தாக்கப் படவேண்டும்?  அப்படியென்றல், பெரும்பாலான கிருத்துவ நிறுவனங்கள் அடித்து நொறுக்கப் பட்டிருக்க வேண்டுமே? ஆனால், ஒன்றுமே நடக்கவில்லையே? மாறாக, இது மட்டும் நடக்கிறது என்றால், என்ன அர்த்தம்?

தாக்கப்படவில்லை. சில தமிழ்தொலைக்காட்சிகளும், சில தமிழ்பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை அழிப்பதற்கு எல்லாவிதமான முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய பணத்தொகைக்காக மிரட்டப்பட்டேன். யார் தான் இதற்கு பதில் சொல்வது; யார் தான் முடிவு சொல்வது. யார் தான் முற்றுப்புள்ளி வைப்பது. நாங்களும் எங்கள் அகிம்சை கொள்கையிலிருந்து மாறமாட்டோம். இதை அகிம்மையினாலேயே எதிர்கொள்வோம். எங்களை தாக்குபவர்கள் தாங்களாகவே ஒழிந்து போவார்கள்.

கருணாநிதி ஆளும் மாநிலத்தில் பக்தர்கள் தாக்கப் படுகிறார்கள்: “நீங்கள் ஆளும் இந்த நாட்டில், வாழும் என் மக்களுக்கு, என் பக்தர்களுக்கு சாத்தியமில்லை என்பதனால், தமிழகத்தின் முதல்வராகிய உங்களுக்கு,

கருணாநிதியின் பெயரைப் பயன்படுத்தி தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன என்றால் அதன் பின்னணி என்ன? இதற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்? அதனால்தான் பகலில் சாமி, இரவில் காமி என்றெல்லாம் கருணாநிதி நக்கல் அடித்தாரா?

உங்களின் பார்வைக்கு இந்த கோரிக்கையை நேரடியாக எடுத்து வந்து, உங்களிடம் கொடுத்து உடனடி நிவாரணத்துக்காக காத்திருக்க போகிறோம்.
உங்கள் பெயரை பயன்படுத்தி, எங்களை எல்லாம் தாக்குகின்ற, ஊடகங்கள் சொல்லுகின்ற தகவல்களை மட்டும் கேட்காமல், உளவுத்துறை மூலம் இந்த புள்ளி விவரங்களை சரிபார்த்து கொள்ளுமாறு உங்களை கேட்டு கொள்கின்றேன்.

பக்தர்களையும் மிரட்டி பணம் பறிக்கப் படுகிறது: “என் பக்தர்கள் பாதுகாப்போடு கல்லூரிகளுக்கும், பள்ளிகளுக்கும் செல்லமுடியவில்லை. எங்கள் காப்பு அணிவது என்பது, எங்கள் மத உரிமை; என் படம் பொறித்த டாலர்களை, காப்புகளை அணிந்து வர பள்ளி, கல்லூரிகள் தடை விதித்துள்ளன. இது மத உரிமை மீறிய செயல். என் பக்தர்கள் அமைதியை விரும்புபவர்கள்,

இப்படி யாருக்கும் தெரியாமல் ஒரு ஆணையை அரசு எப்படி வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரி வெப்சைட்டில் இன்னும் ராஜரத்தினம் புகை படம் உள்ளது.

எங்கள் மத சின்னம். தியான பீடத்தின் கோரிக்கை கடிதத்தை கோடிக் கணக்கான பக்தர்கள் கண்ணீரோடு, சில லட்சக் கணக்கான மக்களின் ரத்தத்தோடும், உங்களிடம் சமர்ப்பிக்க விரும்புகிறேன். நான் சொல்ல முடியாத அளவிற்கு எங்களை சில நிறுவனங்கள், ஊடகங்கள் தொடர்ந்து மிரட்டுகின்றன. என் பக்தர்கள் எனக்கு தெரியாமல் மிரட்டப்பட்டு, மிகப்பெரிய பணமும் பறிக்கப்பட்டது”, இவ்வாறு அவர் பேசினார்.

ரத்தக் கையெழுத்துடன் கலைஞருக்கு நித்யானந்தா கடிதம்[2]: “அவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகின்றன. அவர்களை காக்கவே இக்கடிதத்தை எழுதுகிறேன். இதில் இறுதியில் என் ரத்தத்தால் ஆன கையெழுத்தும், கை நாட்டும் வைத்துள்ளேன்”, என்று நக்கீரனில் உள்ளது!


திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

செப்ரெம்பர் 6, 2010

திராவிட புரோகிதர் கருணாநிதி நடத்தி வைத்த கல்யாணம்!

தாலி-மாலை எடுத்துக் கொடுத்து திருமணம் செய்து வைக்கும் கருணாநிதி: திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி மணமக்களுக்கு மாலையையும், மங்கல நாணையம் எடுத்துக்கொடுத்து[1] நடத்தி வைத்தார்[2]. இப்படி செய்திகள் வந்துள்ளன. திராவிடத் திருமணத்தில், எங்கு தாலி வந்தது[3] என்று எந்த பகுத்தறிவு ஜீவியும் கேட்கவில்லை[4]. அந்த அடிமைச்சின்னத்தை ஏன், இந்த புரோகிதர் எடுத்துத் தரவேண்டும்? சரி, ஏன் ஒரு ஆண் எடுத்துத் தரவேண்டும், ஒரு பெண் எடுத்துத் தரலாமே? பகுத்தறிவு பதில் சொல்வதில்லை போலும்!

திருமண விழாக்களில் விளக்க உரை தேவையானால், அது எப்போது என்பது எனக்கும், வீரமணிக்கும் நன்றாகத் தெரியும்[5]: “திருமண விழாவில் அனைவரிடத்திலும் உள்ள உரிமை காரணமாக கவிஞர் வைரமுத்து நன்றி உரை என்ற பெயரில் மணமக்களுக்கான வாழ்த்துரையுடன், விளக்க உரையும் இங்கு ஆற்றியுள்ளார். ………. இதுபோன்ற திருமண விழாக்களில் விளக்க உரை தேவை. ஆனால், அது எப்போது என்பது எனக்கும், திராவிட கட்சித் தலைவர் வீரமணிக்கும் நன்றாகத் தெரியும். எனவே, தேவைப்படும்போது மட்டுமே நீண்ட நேரம் பேச வேண்டும்”, என்றார் முதல்வர் கருணாநிதி. ஆக, திராவிட திருமணத்தில் இவர்கள் இருவரும்தான் விற்ப்பன்னர்கள் என்று சொல்லிக்கொள்கிறர் போலும்!

திராவிடத்தில் இப்படி பலதார மணம் புரிந்த ஆண்கள்-பெண்கள் மற்றவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன் என்று வரலாமா? அதற்கு ஏதாவது யோக்கியதை, அந்தஸ்து முதலியவை இருக்கின்றனவா?

புரோகிதரின் மகன் இன்னொரு புரோகிதர் மு.. ஸ்டாலின் சாட்சி சொல்கிறார்: தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது. ஆனால், 1967ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அங்கீகாரத்தை அப்போதைய முதல்வர் அண்ணா பெற்றுத் தந்தார். அந்த வகையில் இப்போது நடைபெற்றிருக்கும் கபிலன் – ரம்யா தம்பதியினரின் சீர்திருத்தத் திருமணம் சட்டப்படி செல்லுபடியாகும். தமிழகத்தில் அங்கீகாரம் அளிக்கப்பட்டிருப்பதுபோல், நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை தமிழக முதல்வர் கருணாநிதி பெற்றுத் தருவார்.

ஸ்டாலின் போட்டு உடைத்த உண்மை: “………..அண்ணா பெற்றுத் தந்தார். …………….நாடு முழுவதும் சீர்திருத்தத் திருமணங்கள் செல்லுபடியாகும் என்ற உரிமையை கருணாநிதி பெற்றுத் தருவார்”, என்று ஸ்டாலின் சொல்லும் போது, மற்ற உண்மைகளையும் சொல்லவேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[6]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள்! அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[7] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது! அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர்..

மாப்பிள்ளை, மணப்பெண் எதற்காக இப்படி பட்டு வேஷ்டி, சட்டை, புடவை-ஜாக்கெட் என்று வரவேண்டும்? இப்பொழுது, மணத்தில் இத்தகைய முடநாற்றம்[8]! இதெல்லாம், தமிழனின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியமா? பிறகு எதற்கு இதே தமிழன் நடத்திவைக்கும் கல்யாணங்களில் பெண்கள் நெற்றியில் வைத்துக் கொண்டு வருகிறர்கள்? பட்டுப்புடவை, பூ, நகைகள் சகிதம் வருகிறார்கள்? இதென்ன பார்ப்பான்கள் கலாச்சாரமா, இல்லை சூத்திரன்கள் கலாச்சாரமா? தட்டுகளில், தாம்பாளங்களில் தேங்காய், பழம், பூ, குங்குமம், மஞ்சள்………..இவையெல்லாம் எதற்கு? ஒரு நண்பர், எனக்கு இப்படி கேட்டுள்ளார்[9]:

சங்க காலத்தில், பெண்கள் தழையுடைத்தான் அணிந்து கொண்டார்களாம். ரவிக்கையெல்லாம் போட்டார்களா என்று தெரியவில்லை. 

ஆகவே அத்தகைய முறையையும் கையாலலாம்.

சங்க இலக்கியத்தில் “ஒருவனுக்கு ஒருத்தி” என்ற எண்ணம் இருந்ததே இல்லை. தலைவன் எப்பொழுதும், மற்ற பெண்டிருடன் காமத்தில் ஈடுபட்டிருப்பான். தலைவி அவன் வருவானா என்று ஏங்கிக் கொண்டிருப்பான்.

இல்லை பரத்தையருடன் இருப்பான். ஆக, தமிழரிடத்தில் காமம்தான் மேலோங்கி இருந்தது போலும்.

ஊடல், கூடல் என்ற நிலையில் அகம் மேலோங்கி நின்ற நிலையில், பிறகுதான் புறம் வருகின்றது.

அந்நிலையில் எங்கு இருந்தது சுயமரியாதை?

கருணாநிதி விழாவுக்கு தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்து, ஆசிவாதம் செய்து,……………மணமக்கள் காலில் வீழ்ந்து…………………………..இப்படி திராவிட புரோகிதம் வளர்கிறது[10].

  • இந்து கலாச்சாரம், நாகரிகம், பண்பாடு…………..முதலியவற்றை தூஷிக்கும் இந்த மானங்கெட்ட கூட்டம், எதற்கு அதே சின்னங்களை, சடங்குகளை பின்பற்றி போலி வேடம் போட வேண்டும்?
  • என்ன நெற்றியில் காயம் பட்டிருக்கா என்று நக்கலாக கேட்ட கருணாநிதியின் காலில் ஏன் குங்குமம் இட்டுக் கொண்டு ஒரு தமிழச்சி விழவேண்டும்?
  • தாலியைக் கழற்றி, மணமுறிவு விழா நடத்தும் அயோக்கியர்கள் முன்னிலையில் ஏன் தாலிகாட்டிக் கொள்ளவேண்டும்?
  • எதற்கு அந்த பாட்டுப்புடவை, தேங்காய் …………………………………எல்லாம்?
  • தூஷிக்கும் அந்த ஆள் ஆசிர்வதிக்கமுடியுமா?
  • ஒரே மனத்தில் எப்படி அத்தகைய நல்ல-கெட்ட-சிந்தனைகள் காழ்ப்புகள் வரும்?
  • நாத்திகர்களுக்கு எதற்கு ஆத்திக சடங்குகள், சம்பிரதாயங்கள்?

[1] http://www.maalaisudar.com/newsindex.php?id=35276%20&%20section=19

 

[2] http://thatstamil.oneindia.in/movies/news/2010/09/5-kapilan-vairamuthu-marriage-karunanidhi-rajini.html

[3] வேதபிரகாஷ், தமிழர் கல்யாணம்: தாலி இருந்ததா?, http://dravidianatheism.wordpress.com/2010/02/27/தமிழர்-கல்யாணம்-தாலி-இரு/

[4] வேதபிரகாஷ், திராவிட புரோகிதர்கள் நடத்திவரும் திருமணங்கள்!,

http://dravidianatheism2.wordpress.com/2010/02/02/திராவிட-புரோகிதர்கள்-நடத/

[5] தினமலர், வைரமுத்து வெளிப்படையானவர் : முதல்வர் பேச்சு, பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2 010 ; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 06, 2010; http://www.dinamalar.com/News_Detail.asp?Id=78433

[6] DMK introduced an amendment in “The Hindu Marriage Act, ” by inserting Section 7A and thus saving their disgrace, through the TN Act XXI of 1967 (20-01-1968). Also, see at:

கே. வீரமணி, அண்ணாவும், சுயமரியாதைத் திருமணச் சட்டமும், விடுதலை 01-09-2008. For full details, see at: http://www.unmaionline.com/20080901/page19.html

[7] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்!,

https://rationalisterrorism.wordpress.com/2010/01/29/பகுத்தறிவு-தீவிரவாதம்/

[8] மன்னிக்கவும், இதெல்லாம் திருவாளர் வீரமணியின் விடுதலையில், உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள்! ஆகவே, உபயம் – வீரமணி

[9] வேதபிரகாஷ், சுயமரியாதை திருமணத்தில் கருப்பு ஆடைகளை ஏன் அணியக்கூடாது: திராவிட புரோகிதர்கள் விளக்குவார்களா?, http://dravidianatheism.wordpress.com/2010/07/17/சுயமரியாதை-திருமணத்தில்/

[10] வேதபிரகாஷ், நவீன திராவிட புரோகிதர்கள், http://dravidianatheism.wordpress.com/2010/05/24/திராவிட-புரோகிதர்கள /

ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்!

ஏப்ரல் 3, 2010

புளுஃபிலிம் மாதிரி படம் எடுத்த லெனினின் படமெடுத்தது பற்றிய விளக்கம்!

நித்யானந்தாவை படம் பிடித்தது எப்படி? லெனின் விளக்கம்

  • நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
  • சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார்.
  • இதற்காக வருந்துகிறேன்.
ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்: நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.
லெனின் குருப் ஜஞ்சிதாவிற்காக வருத்தப்படுவது ஆச்சரியமான விஷயம்தான்!
பிறகு நித்யானந்தாவிடம் ரஞ்சிதாவிற்காக பதிலாக இருக்கவேண்டிய நடிகை அல்லது பெண் யார்?
லெனின் குருப்பிற்கு ரஞ்சிதா மீது மட்டும் ஏன் அவ்வளவு கரிசனம்?
ஒருவேளை மலையாளம் ஸ்டைலில் ரஞ்சிதா வேலை செய்தது காட்டிக்கொடுத்துவிட்டதா?
அத்தகைய ஸ்டைலை குருப் தான் சொல்லிக்கொடுத்ததா?
இதனால் திசைத் திருப்ப விரும்பும் படலம் தான் இத்தகைய வெளிப்பாடா?
“.…………சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை“!
  • துவும் வேடிக்கையாகவே உள்ளது –…….சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை
  • அப்படியென்றால், படுக்கையறை காட்சிகளை படம் எடுத்தது யார்?
  • இல்லை தா சாமியாரை மட்டும் வீடியோ எடுத்தேன் என்றால், ரஞ்சிதாவை, யாரோ எடுத்தார்கள் என்று அர்த்தமா?
  • லெனின் சொல்லவருவது என்ன?

நித்யம் அனந்தம் தரும் ஊடக விபச்சாரிகள்: நித்யானந்தா நடிகை ரஞ்சிதா விவகாரத்தில் புதுப்புது தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சிகளை சாமியாரின் சீடர் லெனின் வெளியிட்டார். இது சம்பந்தமான வழக்குகள் அனைத்தும் கர்நாடக போலீசிடம் தமிழக போலீஸ் ஒப்படைத்து விட்டது. கொலை மிரட்டல் உள்பட 2 வழக்குகள் மட்டும் சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தைப் பின்பற்றும் கர்நாடகம்: நித்யானந்தா வீடியோ வெளியான பின்பு முதல் முறையாக லெனினிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து 7 மணி நேரம் விசாரணை நடந்தது. அப்போது நித்யானந்தாவின் நடவடிக்கைகள் பற்றி போலீசார் பல்வேறு கேள்விகளுக்கு லெனின் பதில் அளித்துள்ளார்.

இதுபற்றி லெனின் குருப் / குருப் லெனின் / ஸ்ரீநித்ய தர்மானந்தா கூறியதாவது: நித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் நான் பணிபுரிந்தேன். அப்போது நித்யானந்தா தவறான நடவடிக்கையில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதனால் அவரது தவறான நடவடிக்கைகளை வெளி உலகுக்கு காட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். எனவே சாமியாரை வீடியோ படம் எடுத்தேன். வீடியோ கேமராவை நான் சாமியாரின் படுக்கை அறையில் வைக்கவில்லை. அங்குள்ள சிலர் எனக்கு உதவி செய்தார்கள். அவர்கள் தான் கேமராவை வைக்க உதவினர். வீடியோவில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டுள்ளன.

லெனினுக்கே மாமா வேலைசெய்தவர்கள்
: முழு சி.டி.யை கர்நாடக போலீசிடம் ஒப்படைத்து இருக்கிறேன். வீடியோ எடுக்க உதவியவர்களை வெளியிட மாட்டேன். அவர்கள் உதவியதால் தான் வீடியோ எடுக்க முடிந்தது. அந்த வீடியோவை நான் வெளியிட்டேன். இதில் என் பங்கு அவ்வளவுதான். நித்யானந்தாவை ஆயிரக்கணக்கானவர்கள் கடவுளாக பாவித்து வழிபடுகிறார்கள். அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டு நித்யானந்தாவின் உண்மையான சொரூபத்தை காட்டினேன். ஆசிரமத்தில் உள்ள மேலும் 2 பெண்கள் நித்யானந்தா பற்றி என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர்களையும் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி உள்ளார். ஒரு ஆணும், பெண்ணும் நித்யானந்தா பற்றி என்னிடம் தெரிவித்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதன் பிறகு தான் நித்யானந்தா பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். 3 மாதத்துக்கு முன்புதான் இந்த வீடியோ எடுக்கப்பட்டது. நித்யானந்தாவால் பாதிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் இன்னும் ஆசிரமத்தில் உள்ளார். அவர் நித்யானந்தாவுக்கு எதிராக முறைப்படி புகார் தெரிவித்துள்ளார்.

ரஞ்சிதாவிற்காக வருந்தும் லெனின் குருப்: நித்யானந்தா பற்றி ஒரிஜினல் சி.டி.யை கர்நாடக போலீசாரின் விசாரணையின் போது ஒப்படைத்து இருக்கிறேன். என்னுடன் அவர் டெலிபோனில் பேசி மிரட்டிய ஆடியோ கேசட்டையும் போலீசாரிடம் ஒப்படைத்து இருக்கிறேன். நித்யானந்தா என்னை சமரசத்துக்கு வருமாறு அழைத்தார். நான் மறுத்ததால் என்னை மிரட்டினார். நான் ரஞ்சிதாவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. சாமியாரின் நடவடிக்கைகள் பற்றி வீடியோ எடுக்கும் போது அவர் சிக்கிக் கொண்டார். இதற்காக வருந்துகிறேன். எனது எண்ணம் சாமியாரைப் பற்றி வெளி உலகுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

மார்ச் 31, 2010

இமயமலையில் பதுங்கியுள்ள நித்யானந்தாவை ரஜினியை விட்டுத் தேடச் சொல்லலாமா?

தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

சொல்வதெல்லாம் “நிஜம்” தான்: அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அதாவது சொல்வதெல்லம் “நிஜம்” தான்!

இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

தலைமறைவாக உள்ள நித்யானந்தா! பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார். இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

பெங்களூரு, நித்யானந்தா, கருணாநிதி: ஜெயலலிதாவிற்கு எப்படி ஹைதராபாதோ, கருணாநிதிக்கு பெங்களூரும், மஹாபலிபுரமும். பெங்களூரில் எல்லாமே உண்டு. ஆனால், மஹாபலிபுரம், இப்பொழுது “செக்ஸ்-டூரிஸ’த்திற்கு உலகப் புகழ் பெற்றுவிட்டது. ஜோ அங்குதான் ஜாலியாக இருந்தான். வில்-ஹியூம் சின்னவீடு வைத்திருந்தான். அவன் ரஜினி படத்திலும் நடித்து இருக்கிறான்!

பெங்களூரு, நக்கீரன் கோபால், ரஜினி காந்த், கருணாநிதி: இவற்றிற்கெல்லாம் நெருங்கிய தொடர்பு உள்ளது. முன்னம், சந்தனக் கடத்தல் வீரப்பன் விஷயத்தில் கோடிகள் பறிமாற்றங்கள் நடந்தன என்றெல்லாம் சட்டசபையிலேயே பேச்சு அடிபட்டபோது, இவர்கள் அதில் சம்பந்தப் பட்டுள்ளதாக விவாதம் வந்தது.

இமயமலை, ரஜினி காந்த், நித்யானந்தா: தினகரன் இப்பொழுது “இமயமலையில் நித்யானந்தா பதுங்கலா?” என்று கேள்வி எழுப்பியுள்ளதால், இந்த சம்பந்தமும் இன்று முக்கியத்துவம் பெறுகிறது. இனி கருணாநிதி ஆணையிடுவது தான் பாக்கி. ஆணையிட்டால், உடனே ரஜினியை இமயமலைக்கு அனுப்பி, நித்யனந்தாவைப் பிடித்துவிடலாம்!

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

மார்ச் 30, 2010

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……இவர்களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நிலையில், ஒரு அமெரிக்க சாமி, அமெரிக்கா ஸ்டைலில் செக்சஸ்-புகார் கொடுத்துள்ளது (மார்ச் 2010), அனைவர்க்கும் ஜொல்லுவிடும் வகையில் உள்ளது.

டக்ளஸ் மெக்கல்லர் மெகா டகிள் விட்டுள்ளரா, இல்லை உண்மையா என்று அந்த “நடிகைகள்” தாம் வந்து விளக்கம் சொல்லவேண்டும்.

லெனின் குருப் வீடியோவைவிட இந்த டக்ளஸ் சொல்வது, புளூ ஃபிலிமையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது!

# அமெரிக்கா வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார் [அதென்ன “அழகான பெண்கள்” என்று புரியவில்லை. அப்பொழுது அந்த அமெரிக்க சாமியும் நல்ல சாமி இல்லை என்று தெரிகிறது. அதாவது கூட்டிக்கொடுக்கும் சாமி போல!].

# ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார் [ஆஹா, இப்படி எந்த சாமியாவது, நான் மாமா வேலை இப்படித்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா?].

இது நம்ம ஆட்களின் கொசுரு!

அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே, இதில் சம்பந்தப் பட்டுள்ள ஊடகங்கள் நிச்சயாமாக இந்திய சமுதாயத்தைக் கெடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றன என்றுத் தெரிகின்றது.

அவை ஏற்கெனவே ஒத்திகை பார்த்து புளூ ஃபிளிம் எனப்படுகின்ற ஆபாசமான ஆண்-பெண் புணர்ச்சி படங்களை வெளிப்படையாக ஆனால் சூசகமாக பொது ஊடகத்தில் பட்டப்பகலில், அதுவும், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்தில், திரும்ப-திரும்ப ஒளிப்பரப்பியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த அமெரிக்க சாமியின் புகாரும் அதே ரிதியில்தான் உள்ளன. இங்கு இந்தியாவிலேயே லெனின் குருப் / குருப் லெனின் / நித்ய தர்மானந்தா இத்தகைய படங்களை தனக்குத்தெரிந்த தொழிற்நுட்பத்துடன் எடுத்துள்ளான் என்றால், நிச்சயமாக அந்த மாமா வேலை பார்த்த அமெரிக்க சாமி அதையும் மிஞ்சி புளூ ஃபிளிம் எடுத்தேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றும் இல்லை!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……முதலியவையெல்லாம் பிரத்யேகமாக ஒளிபரப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

அன்று சரோஜாதேவி புத்தகம் என்ற நிலையில் இருந்து, சில குறிப்பிட்ட பிரபலமான நடிகை-நடிகர்களுடன் புளூ ஃபிளிம் என்ற நிலையில் இருந்து, இப்பொழுதைய “நித்யானந்தா-ரஞ்சிதா மாதிரி” வெளிப்படையான ஒளிப்பரப்பிற்கு வந்து விட்ட விஷயங்கள், நாளைக்கு புளூ ஃபிளிமே ஒளிபரப்பப் பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நிர்வாண ஓவியன், ஹுஸைன் அன்றே துச்சாதனையும் விஞ்சி ஆடைகளைக் களைந்து படம் காட்டினான். பாரத மாதாவையும் கற்பழித்தான். எந்த இந்தியனுக்கும் சொரணை வரவில்லை!

குஷ்புவின் கற்பின்மை தன்மைப் பற்றி உச்சநீதி மன்றமே உச்சம் குளிர இல்லை சூடேறும் வகையில் தீர்ப்புக் கொடுத்துள்ளது.

இனி கற்ப்பைப் பற்றியோ, உட்லுறவுக் கொல்வது பற்றியோ கவலைப் படவே வேண்டாம்.

திருமணத்திற்கு முன்போ, பின்போ நீதிமன்றமே சொல்லிவிட்டது!

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)!

மார்ச் 14, 2010

நித்யானந்தா பரபரப்பு பேட்டி(முழுவதும்)!

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=28671

நக்கீரன் இவ்வாறு ஆங்கிலத்தில் உள்ளதை தமிழில் வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது!

அது மட்டுமல்ல – நித்யனந்தா – ரஞ்சிதா – கோபிகா! வெளிவராத வீடியோ

என்றெல்லாம் போட்டிருக்கிறது! ஆனால், சொடிக்கியதும் “The video has been removed due to terms of use violation”! அப்படியென்றால் உண்மை என்ன?

http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=337

எந்த உபயோகிப்பு சரத்துகளை யார் மீறுகிறர்கள்?

அத்தகைய உபயோகிப்பு சரத்துகள் என்ன?

நித்யானந்தா சாமியார் பிரபல தமிழ் திரைப்பட நடிகை ரஞ்சிதாவோடு படுக்கையறையில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பின. அதைத் தொடர்ந்து, நித்யானந்தா மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரஞ்சிதா விவகாரம் தவிர, வேறு குற்றச்சாட்டுகள் எதுவும் அவருக்கு எதிராக ஆதாரங்களுடன் வெளிவரவில்லை.

இந்த சூழ்நிலையில், அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவர் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. ஆன்மிக சுற்றுலா சென்று இருப்பதாக அவருடைய ஆசிரம நிர்வாகிகள் கூறி வருகின்றனர். எனினும், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு வீடியோ மூலமாக நித்யானந்தா பதிலளித்து வருகிறார்.

இதற்கிடையே தனியார் டெலிவிஷன் சேனல் ஒன்று நித்யானந்தாவை சந்தித்து பேட்டி எடுத்து ஒளிபரப்பியது. அந்த பேட்டியின் போது பரபரப்பான தகவல்களை வெளியிட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா தனது பக்தை என்றும், அவர் தனக்கு சேவை செய்ததாகவும் கூறினார். இதன் மூலம் ரஞ்சிதாவுடன் தான் இருக்கும் வீடியோ காட்சியை அவர் மறைமுகமாக ஒப்புக்கொண்டு உள்ளார்.

அவரது பேட்டி விவரம்:

கடந்த 2 வாரங்களாக தங்களைப் பற்றிய  தகவல்களை கேள்விப்படுகிறோம், பார்க்கிறோம். இதுபற்றி நீங்கள் என்ன உணர்கிறீர்கள்?

எனது 33 ஆண்டுகள் பொதுவாழ்வில் நான் புகழின் உச்சத்தையும் சந்தித்து உள்ளேன். என்னை ஆன்மிக குருவாக ஏராளமானவர்கள் பார்த்து உள்ளார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக நான் வாழ்க்கையின் உச்சத்தையும், தாழ்வையும் சந்தித்து வருகிறேன்.

வாழ்க்கையின் பல பரிமாணங்களை நான் கற்று வருகிறேன். ஆனால் எனக்கு எதிராக இந்த அளவுக்கு ஒரு பகைமை இருக்கும் என்று நான் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. என்னை மக்கள் ஒரு எதிரியாக பார்ப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

இந்த கஷ்டமான நேரத்திலும் எனக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கான இ-மெயில் கடிதங்கள், போன் அழைப்புகள், ஆதரவு குரல்கள் உலகின் பல்வேறு மூலை முடுக்குகளில் இருந்தும் வந்து கொண்டு இருப்பதை, ஒரு கெட்டதிலும் ஒரு நல்ல விஷயமாக உணர்கிறேன். எனது பக்தர்கள் அல்லாதவர்கள் கூட ஒரு தனி மனிதனை தவறாக சித்தரிக்கும் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை அந்த வீடியோ காட்சிகள் ஏற்படுத்தி உள்ளன. உண்மையிலேயே அந்த வீடியோ காட்சிகளில் இருப்பது நீங்கள்தானா?

நிச்சயமாக அந்த வீடியோ காட்சிகள் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. வீடியோ காட்சிகளில் சில உண்மைகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன. அதில் சதி நடந்து உள்ளது.

என் சம்பந்தபட்ட வீடியோ காட்சிகளை பயன்படுத்தி சில இடங்களில் `மார்பிங்’ (நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாறாட்டம் செய்தல்) செய்யப்பட்டு உள்ளது.

அந்த வீடியோ காட்சிகளில் எந்தெந்த பகுதிகள் சதி நோக்கத்துடன் ரெக்கார்டிங் செய்யப்பட்டு உள்ளது என்பதை தற்போது ஆராய்ந்து வருகிறோம். இந்த சூழ்நிலை குறித்து அது தொடர்பான நிறைய விஷயங்களை என்னால் கூறமுடியும். எனது தனிப்பட்ட வாழ்க்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது.

நான் குளித்த பிறகு துணிகளை மாற்றிய காட்சி படங்களை சில பத்திரிகைகள் வெளியிட்டு உள்ளன. வீடியோக்கள் எனக்கு எதிராக அவதூறாக சித்தரிக்கப்பட்டு காட்சிகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் எந்த அளவு காட்சிகள் மாறாட்டம் செய்யப்பட்டு உள்ளன என்று எனக்கு தெரியவில்லை.

இது தொடர்பாக எங்களுக்கு எதுவெல்லாம் (வீடியோ காட்சிகள்) கிடைத்து இருக்கிறதோ அவற்றை எல்லாம் ஆய்வுக்காக அனுப்பி இருக்கிறோம். அதன் முடிவுகள் தெரியவருவதற்கு முன் எனது கருத்துகளை சொல்லாமல் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன்.

வீடியோவின் சில பகுதிகள் திரிக்கப்பட்டு இருப்பதாக கூறுகிறீர்கள். அந்த நடிகை உங்களுக்கு சேவை செய்தாரா? இந்த வீடியோ காட்சிகள் டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டவை என்று அவர்கள் கூறுகிறார்கள். அதன் பிறகு அந்த நடிகை ஆசிரமத்தில் இருந்தாரா?

அந்த நடிகை (ரஞ்சிதா) நீண்ட காலமாக எனக்கு சேவை செய்து இருக்கிறார். அவர் தானாக முன்வந்து எனக்கு சேவை செய்தார். எனது உடல் நலம் குன்றி இருக்கும்போது எல்லாம் எனது நலனில் அக்கறை கொண்டு அவர் என்னை கவனித்து கொண்டார். அவர்களது மொத்த குடும்பமும் எனது பக்தர்கள். அதை நான் மறுக்கவில்லை. அந்த நடிகையும் ஒரு பக்தர்.

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நீங்கள் உடல் நலம் குன்றி இருந்தீர்களா?

ஆமாம். நான் பல நாட்கள் உடல் நலம் குன்றி இருந்தேன். உடல் ரீதியாக நான் சரியாக இல்லை என்பதை உணர்ந்தேன்.

இந்த சம்பவம் ஒரு தவிர்க்க முடியாத மன வருத்தம் கொடுத்து இருக்கிறது. உங்களை பின்பற்றுபவர்களுக்கு நீங்கள் உண்மையானவராக இல்லையே?

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பிரமச்சரியம் என்பது தனி நபர்களின் விஷயம். அவற்றை அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் எப்போதுமே சொன்னேன். என்ன நடக்கிறது என்பதை உணரும் தன்மையுடன் உங்களுக்கு “பயோ-மெமரி” (பயோ-நினைவாற்றல்) அதிகமாக இருந்தால் மற்றவர்களின் சேவை குறைவாக இருக்கும்.

உங்களது “பயோ-மெமரி” வேறு சிலரின் தேவையில் இருந்தால் திருமண வாழ்க்கையுடன் சந்தோஷமாக வாழலாம். தனி நபர்கள் அவர்கள் விரும்பியபடி தங்களது நிலையை தேர்வு செய்து வாழ வேண்டும் என்று நான் எப்போதும் கூறுகிறேன்.

உங்கள் மீது எங்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?

வாழ்க்கையில் எனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்பதை நான் நம்புகிறேன். மற்றவர்களுக்காக என்னிடம் எதுவும் இல்லை.

மீண்டும் 2009-ம் ஆண்டு சம்பவத்துக்கே போகலாம். அந்த நேரத்தில் நீங்கள் சுயநினைவு இழந்த நிலையில் இருந்ததாக சொன்னீர்கள்? அது பற்றி நீங்கள் தற்போது என்ன சொல்கிறீர்கள்?

சில நபர்கள் தவறாக விரும்பியதால் அவற்றை தவறாக செய்து இருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியும்.

இந்த வீடியோ காட்சிகளுக்கு பின்புலத்தில் சதித் திட்டம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

எனது சொந்த விஷயத்தில் சிலர் ஏன் நுழைந்தார்கள்? இதில் சதி திட்டமோ அல்லது வேறு ஏதோ இருக்கிறது என்பது உறுதி. அவர்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டனர்.

இவ்வாறு பேட்டியில் சாமியார் நித்யானந்தா கூறி இருக்கிறார்.

நித்யானந்தா ஏற்கனவே 2 வீடியோ கேசட்டுகளை வெளியிட்டு உள்ளார். இப்போது அவரது சார்பில் 3-வதாக வெளியிடப்பட்டுள்ள வீடியோ கேசட் ஒன்றில் அவர் கூறி இருப்பதாவது:-

நாங்கள் ஒரு அமைதியான குழுவினர். எளிமையான மக்கள். பக்தர் என்ற பெயரில் எங்களுக்கு எதிராக இதுபோன்ற ஒரு எதிரி தோன்றுவார் என ஒருபோதும் கருதியது இல்லை. மேலும், ஆசிரமத்தின் மீதான தாக்குதல்களை சமாளிப்பதற்காக நாங்கள் பயிற்சி பெறவில்லை. அத்தகைய தாக்குதல்கள் குறித்து நாங்கள் சிந்தித்து பார்த்தது கூட கிடையாது.

சமூகத்தில் பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்படாத எதையும் நான் செய்துவிடவில்லை. அந்த வீடியோவில் சட்டத்திற்கு புறம்பாக எதுவும் இல்லை. அதில் 2 பேர் உடைகளுடன்தான் உள்ளனர். அதில் ஒருவர் மற்றவர் மீது எதையும் கட்டாயப்படுத்தவில்லை.

வீடியோ வெளியானதும் ஏராளமான கட்டுப்பாடற்ற நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தி உள்ளனர். எனவே, பக்தர்கள் மிகவும் அச்சம் அடைந்தனர். எனக்கு ஏதாவது ஆகுமோ என்றும் பயந்தனர். அப்போது, ஆசிரமத்தை பாதுகாப்பதில் முனைப்புடன் பணியாற்றினர். தற்போது, ஆசிரமத்தை மறு நிர்மாணம் செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.

எங்களுடைய மக்கள் தொடர்பு துறை அழிக்கப்பட்டு விட்டது. தற்போதைய சூழ்நிலையில், நான் என்ன விளக்கம் கூறினாலும் இந்த சமூகமும், மக்களும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை. உடலில் உள்ள சக்தியை ஒருமுகப்படுத்தும் `ஹீலிங்’ கலையை பயின்றவர்கள், யாரையும் தொடுவதில் தவறு கிடையாது. டி.வி. சேனல்களில் காட்டப்பட்ட இருவரும் முழு ஆடைகளுடன் இருப்பதாக தெரிகிறது. எனவே, அதில் எந்த வித சட்டவிரோதமும் கிடையாது.

எங்களுடைய ஆசிரமத்திலும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. பார்க்கவும் விரும்பவில்லை. ஒரு தரப்பு கருத்தை மட்டுமே எடுத்துச் சொல்வதற்கு முன்பாக, எங்களுடைய பதிலையும் டி.வி. சேனல்கள் பெற்றிருக்க வேண்டும். எங்களுடைய கருத்துகளையும் டி.வி. சேனல்கள் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும். என்னை விட, ஊடகங்கள் மிகவும் பிரபலமானவை.

எனவே, ஊடகங்களால் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பும் நிலைமை உருவாகிறது. இது ஒரு அமைப்பு ரீதியான தாக்குதல். இத்தகைய அச்சுறுத்தலை, ஒருபோதும் நாங்கள் பார்த்தது இல்லை. சமூகத்தால் நாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டபோது, யாரும் எங்களுடைய உதவிக்கு வரவில்லை. இந்த இக்கட்டான தருணத்தில் கூட, எந்த உதவியையும் நாங்கள் பெறவில்லை.

அதே நேரத்தில், ஆசிரமம் அமைந்துள்ள உள்ளூர் வாசிகள் கூட, எங்களுக்கு எதிராக திரண்டனர். ஒரு தரப்பு கதையை மட்டுமே வெளியிட்ட ஊடகங்கள், எங்களுடைய ஒரு பக்தரை கூட அணுகி விளக்கம் கேட்கவில்லை. டி.வி. சேனல்கள் உள்ளிட்ட ஊடகங்களின் ஒருதலைப்பட்ச தன்மையே இந்த விவகாரங்களுக்கு காரணம்.

திசை மாறும் நித்யானந்தா விவகாரம்!

மார்ச் 9, 2010

திசை மாறும் நித்யானந்தா விவகாரம்!

பரபரப்பு-பிரச்சாரம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கவனத்தை சிதறடித்தல், சிற்றின்ப-செக்ஸ் ரீதியில் செய்திகளைப் பரப்பி டிவி-செனல்கள் எல்லாம் புளூ ஃபிலிம் ஒளிபரப்புதல்: பாமரர் முதல் போலீஸார் வரை, நிதயானந்தா விஷயத்தை ஒரு பரபரப்பு செய்தி, வக்கிர மனங்களுக்குத் தீனி போடும் ஒளிபரப்புக் காட்சிகள், யாருமேத் தட்டிக் கேட்கமுடியாது என்ற நிலையில் எல்லாமே தொடரும் நிலை தான் ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம் 8 என்று ஏதோ உலக மளிர் தினம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டால்கூட, இவ்விஷயத்தில் எந்த நிலையும் மாறுவதாகத் தெரியவில்லை. போலீஸார்கூட ஏதோ இதை கைகழுவிவிடவேண்டும் என்ற போக்கில் செயல்படுவது போலத் தெரிகிறது. குற்றம் நடந்துள்ளது என்ற உணர்ச்சியை, நிலையை உருவாக்கியப் பிறகு, ஏதோ விதத்தில் எல்லாம், திசைத் திருப்புவதில் முயற்சிகள் நடப்பது காணும்பொது, பொருளற்றதாகி விடுவதைப் போல உள்ளது. இதை ஒரு சமூகத் தீவிரவாதக் குற்றமாகக் கருதும் போது, குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யாரானாலும் தண்டிக்கப் படவேண்டும். இல்லையென்றால், மறுபடியும் பாரபட்சமுறையில், அரசியல் காரணங்களுககாக, இவ்விஷயம் மறைக்கப் படுகிறது என்றே எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். பல கொடி சொத்துகள், பினாமி சொத்துகள், என்றெல்லாம், இதில் விஷயத்தை நுழைப்ப்து ஏன் என்றுத் தெரியவில்லை.

நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லை – கமிஷனர்[1]: நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நித்யானந்தா மீதான கற்பழிப்பு வழக்கு கர்நாடக போலீசுக்கு மாற்றப்படுகிறது. இதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளேன். நித்யானந்தா மீதான மோசடி வழக்கை நாங்கள் தான் விசாரிப்போம். கற்பழிப்பு வழக்கில் கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் சட்டப்பிரிவில் கர்நாடக போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்வோம். கொலை மிரட்டல் சம்பவம் சேலத்தில் நடைபெற்றுள்ளது. நித்யானந்தா மீது அவரது சீடர் லெனின் கொடுத்த புகார் அடிப்படையில் கற்பழிப்பு வழக்கு போட்டுள்ளோம். அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை புகார் கொடுக்கவில்லை.

தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை: முன்பு நிதனந்தரைப் பிடிக்க தனிப்போலீஸ் படை கிளம்பியுள்ளது, என்றெல்லாம் கதை விட்டார்கள். ஆனால், இப்பொழுது, தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை என்று கமிஷனரே சொல்ல்ல ஆரம்பித்து விட்டார். நித்யானந்தா பற்றி விசாரிக்க வெளிமாநிலங்களுக்கு இதுவரை தனிப்படை போலீசார் அனுப்பப்படவில்லை. நித்யானந்தா சென்னைக்கு வரும்போது எங்கெங்கு தங்குவார், யார், யார் அவரை சந்திப்பார்கள், யார், யாரோடு அவருக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது, அவரது பண பரிவர்த்தனை எப்படி நடைபெற்றது என்பது பற்றி இப்போது பூர்வாங்க விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. மோசடி வழக்கு தொடர்பாக நித்யானந்தாவை கண்டிப்பாக விசாரிப்போம். கர்நாடக போலீசுக்கு, தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. மேற்பார்வையில் இந்த வழக்கில் தமிழக போலீசார் அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்றார்.

லெனின் கருப்பனுக்குத்தான் சிக்கல்? இதற்கிடையே, நித்யானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் நெருக்கமாக இருப்பதைப் போன்ற காட்சிகளை வீடியோவில் படம் பிடித்த அவரது சீடர் லெனின் கருப்பன் என்கிற நித்ய தர்மானந்தாவைக் கைது செய்ய வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளது. தமிழக இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் அலுவலக மாநில செயலாளர் குமரவேல் இந்த மனுவை கொடுத்தார். அதில், நித்யானந்தா மீது புகார் கொடுத்துள்ள லெனின் ஒரு மோசடி நபர் ஆவார். சேலத்தில் காந்த படுக்கை விவகாரத்தில் பொதுமக்களை ஏமாற்றியவர். ஆசிரமத்தின் தனி அறையில் நடைபெற்ற சம்பவத்தை ரகசியமாக படம் பிடிக்கும் விலை உயர்ந்த அதிநவீன கேமரா லெனினுக்கு எப்படி கிடைத்தது. இதற்காக பின்னணியில் அவருக்கு துணைபுரிந்தவர்கள் யார்?, டிசம்பர் மாதத்தில் பதிவு செய்த வீடியோ படங்களை ஏன் அப்போதே காவல்துறையிடம் கொடுத்து புகார் செய்யவில்லை. மேலும், முதலில் காவல்துறையினரை அணுகாமல் வீடியோ படங்களை செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியது ஏன்?, சேலத்தில் நித்யானந்தா சாமியாரால் மிரட்டப்பட்டதாக சொல்லும் இவர் உடனடியாக ஏன் புகார் செய்யவில்லை. இப்படி அடுக்கடுக்கான சம்பவங்கள் லெனின் மீது எழுந்துள்ளது. அவர் கொடுத்த புகார் மனுவிலும் இந்த சந்தேகங்கள் உள்ளன. மிரட்டி பணம் பறித்தல், மற்றும் இந்து சமயத்தை அவமானப்படுத்துதல் ஆகியவற்றை உள்நோக்கமாக கொண்டு லெனின் செயல்பட்டுள்ளதாக அறிகிறோம். எனவே, இவர்மீதும் விசாரணை நடத்தி, உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

லெனின் எங்கே…? இதற்கிடையே கமிஷனர் ராஜேந்திரனை நேரில் சந்தித்து, அவரிடம் நித்தியானந்தா தொடர்பான புதிய வீடியோவைக் கொடுத்துத புகார் செய்த லெனின் கருப்பன் தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரனிடம் கூறுகையில், லெனின் புகார் கொடுத்ததோடு சரி, அதன்பிறகு அவர் எங்கு சென்றார் என்பது தெரியாது. போலீஸ் கட்டுப்பாட்டில் அவர் இல்லை. காந்தப் படுக்கை மோசடி குறித்து எனக்குத் தெரியவில்லை. இப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள். அதுபோன்ற வழக்கு உள்ளதா என்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் விசாரிக்கிறேன் என்றார் ராஜேந்திரன். இதுவும் விசித்திரமாக உள்ளது. ஏனெனில் முன்பு வந்த செய்திகள் என்னவென்றால், லெனின் உயிருக்கு ஆபத்து, அதனால் ஏதோ ஒரு போலீஸ் அதிகாரியே பாதுகாப்பு தருகிறார் என அறிவிக்கப்பட்டது.

ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள்[2]: “நித்யானந்தா தனது பிரம்மச்சரியத்தைத் துறந்து, ரஞ்சிதாவைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டார். ஆனால் அப்படி திருமணம் செய்தால் பல ஆயிரம் கோடி சொத்துக்களைக் காப்பாற்ற முடியாது என்பதால் கடைசி நேரத்தில் மறுத்தார். அதன் விளைவுதான் ரஞ்சிதாவும் லெனின் கருப்பனும் திட்டமிட்டு சாமியாரைக் கவிழ்த்தனர்”, என்று புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஞ்சிதா ஆரம்பத்தில் நடிகை ராகசுதா மற்றும் ஒரு சினிமா தயாரிப்பாளர் மூலம்தான் சாமியாருக்கு அறிமுகமானாராம். அந்த சமயங்களில் எப்போதாவது ஒருமுறை பெங்களூர் போய் வருவாராம். ஆனால் நித்யானந்தாவுக்கு தன்மேல் ஒரு ஈர்ப்பு இருப்பது புரிந்ததும் அங்கே தங்க ஆரம்பித்தாராம். அவரது அந்தரங்க அறைக்குச் சென்று பணிவிடை செய்யும் அளவுக்கு இது வளர்ந்தது. பின்னர் சாமியாரின் பிரம்மச்சரியத்தை பனிக்கட்டியாய் உருக வைத்துவிட்டதாம் ரஞ்சிதாவின் கவர்ச்சி. சாமியாரை விட ரஞ்சிதா மூன்று வயது மூத்தவராம். ரஞ்சிதாவின் அழகில் கட்டுண்ட சாமியார், அவர் சொன்னதையெல்லாம் கேட்க ஆரம்பித்தாராம். லெனின் கருப்பனுக்கு இந்த விவகாரம் முழுமையாகத் தெரியும் என்கிறார்கள் பெங்களூர் ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் ஆரம்பத்திலிருந்தே ரஞ்சிதாவை ‘அண்ணி’ என்ற முறை சொல்லி அழைக்க ஆரம்பித்தாராம் லெனின். இதனை நித்யானந்தரின் செய்லாளர் உள்ளிட்ட ஆசிரம நிர்வாகிகள் வெளிப்படையாகவே இப்போது சொல்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தபோது, தனது சீடர்கள் மற்றும் மத அமைப்புகளை நினைத்து பயந்தாராம் நித்யானந்தம். அப்போதுதான், பிரம்மச்சர்யத்தைத் துறந்து இல்லற வாழ்க்கையை அனுபவிப்பதாக வெளிப்படையாக அறிவித்த குக்கே சுப்பிரமணிய மடத்தின் சாமியாரை உதாரணமாகச் சொல்லி நித்யானந்தா மனதை சமாதானப்படுத்தியுள்ளார் ரஞ்சிதா.

லெனின், ரஞ்சிதா கூட்டு: இருவரும் திருமணத்துக்கு தயாரான போது, அதற்கு மடத்தின் முக்கிய நிர்வாகிகள் எதிர்ப்பு தெர்வித்ததோடு, ஆசிரம சொத்துக்களை முடக்கிவிடுவோம் என்றும் எச்சரிக்க, மிரண்டு போன நித்யானந்தா, திருமணத்துக்கு முரண்டு பிடித்துள்ளார். அதே நேரம் வேறு சில பெண்களையும் ஆசிரமத்துக்கு வரவழைத்து உல்லாசம் அனுபிவித்துள்ளார். இதை ரஞ்சிதா பார்த்து அதிர்ச்சியடைந்து லெனின் கருப்பனிடம் கூறினாராம். அப்போது உருவானதுதான் இந்த வீடியோ திட்டம் என்கிறார்கள் ஆசிரமத்தைச் சேர்ந்த சிலர். இந்த செக்ஸ் வீடியோ எடுக்கப்பட்டதில் ரஞ்சிதாவின் பங்கை லெனினும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பெங்களூர் நித்யானந்தா மடத்தில் உள்ள நித்யானந்தாவின் அந்தரங்க செயலாளர் சேவானந்தா இப்படிக் கூறியுள்ளார்: நாங்கள் ஆரம்பத்திலேயே ரஞ்சிதாவையும் லெனினையும் சந்தேகப்பட்டோம். இருவரும்தான் மிக நெருக்கமாக இருப்பார்கள். இருவரும் சேர்ந்து போட்ட சதித்திட்டம்தான் இது என்பது இப்போது தெரிகிறது. இதற்கு மேல் எதுவும் கேட்காதீர்கள்!” என்றார்.

நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி[3]: நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா. நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது. இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர். கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

ரஞ்சிதா பேட்டி: அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:

  • அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?

ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்… அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்… அந்த ஆபாச காட்சிகள்… காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

  • சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?

நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?

  • உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?  பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி?

எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே? அதான் இப்போது சொல்லிட்டேனே… நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்…” -இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.

இலக்கணப் பிழையாகும் நித்யானந்தன்ரஞ்சிதாவின் லீலை[4]! சைக்கிள் கேப்பில் லாரியே ஓட்டும் சினிமாக்காரர்களுக்கு, தேசிய நெடுஞ்சாலை கிடைத்தால் விடுவார்களா…நித்யானந்தா- ரஞ்சிதா விவகாரத்தை சுறுசுறுப்பாக சுட்டு சூடான சினிமாவாகத் தர முடிவு செய்துவிட்டது ஒரு குழு. அதுதான் ‘இலக்கணப் பிழை’ என்ற பெயரில் படமாகிறது!. சாமானியன் முதல் சாமியார்கள் வரை சபலப்பட்டு தங்களின் எல்லைகளை மீறும்போது ஏற்படும் பிழையால் அவர்களின் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடப்படுகிறது என்பதுதான் இலக்கணப்பிழை படத்தின் கதை. யுவா எண்டர்டெய்ண்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வரத் தயாராகயிருக்கும் இலக்கணப் பிழை படத்தில் ஆட்டோகாரனான கதாநாயகன் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்கும் படுக்கையறைக் காட்சி ஒன்று இடம்பெற்று இருக்கிறது. சமீபத்தில் ஊடகங்களில் வெளியான சாமியார் நித்யானந்தாவின் படுக்கையறைக் காட்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலமாகி தொடந்து பேசப்பட்டு வருவதால், ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள படுக்கறைக் காட்சியை நீக்கிவிட்டு, கொஞ்சமும் மாற்றமில்லாமல், சாமியாரின் படுக்கையறைக் காட்சிகள் போல அதே கோணத்தில் படமாக்கவுள்ளாராம் இயக்குநர் ஜோ. இதில் கதாநாயகன் காலை கள்ளக் காதலி அமுக்கி விடுவது, உணவு அளிப்பது, மாத்திரை வழங்குவது, தண்ணீர் கொடுப்பது உள்பட, தமிழர்களுக்கு ‘நன்கு பரிச்சயமான’ அத்தனை காட்சிககளும் இந்தப் படத்தில் உண்டாம். இந்தப் படத்தில் நடிக்கும் நாயகன் மற்றும் நாயகி புதுமுகம். இலக்கணப் பிழை படத்தின் சில காட்சிகளை எடிட்டிங்கில் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர், பெரிய தொகை கொடுத்து தெலுங்கு உரிமையை வாங்கிக் கொண்டார் என்றார் இயக்குநர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளிவருகிறதாம் இலக்கணப் பிழை!

மெல்வின் பாய்ட் டயமன்ட் (Melvin Boyd Diamond ) என்பவரின் இறப்பு: தினமலர் போன்ற பத்திரிக்கைகள் எல்ல்லம் கூட அரைத்த மாவையே அரைப்பது ஆச்சரியமாக உள்ளது[5]. மெல்வின் பாய்ட் டயமன்ட் (Melvin Boyd Diamond) என்ற கனடாவைச் சேர்ந்தவர் யோகா ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் திடீரென்று ஒரு விபத்தில் இறந்தார். பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை அவ்வாறே நிரூபித்தது[6]. அதாவது, அந்த பெண்மணியின் கும்பத்தினருக்கு இதய நோய் இருந்தது. ஒருநாள் அவர், இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்து இறந்து விட்டார்[7]. லெனின் இதை ஒரு சிஷ்யை தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்லிவிட்டான். இன்னொரு பேட்டியில் ஒரு பெண் மர்மமாக கொலைசெய்யப் பட்டாள் என்றும் கூறியுள்ளான். இதிலிருந்து, இப்பிரச்சினையைப் பற்றி உண்மைகளை அறியவேண்டும் என்பதைவிட, அதில் எந்த அளவிற்கு, பரபரப்பு-பிரச்சாரம், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கவனத்தை சிதறடித்தல், சிற்றின்ப-செக்ஸ் ரீதியில் செய்திகளைப் பரப்பி டிவி-செனல்கள் எல்லாம் புளூ ஃபிலிம் ஒளிபரப்புதல், ……….என்ற கீழ்த்தரமான நிலைக்கு வந்துவிட்டன.


[1] தடீஸ்தமிழ், நித்யானந்தா மீது எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கொடுக்கவில்லைகமிஷன, http://thatstamil.oneindia.in/news/2010/03/09/no-rape-complaints-from-any-woman.html

 

[2] தடீஸ்தமிள், ரஞ்சிதாவைத் திருமணம் செய்ய சம்மதித்த நித்யானந்தா!- புதிய தகவல்கள், திங்கள்கிழமை, மார்ச் 8, 2010, 14:17[IST],

http://thatstamil.oneindia.in/movies/gossip/2010/03/it-was-the-joint-conspiracy-lenin.html

[3] நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி, http://thatstamil.oneindia.in/movies/interview/2010/03/ranjitha-s-interview-magazine.html

[4] ‘இலக்கணப் பிழை’ யாகும் நித்யானந்தன்-ரஞ்சிதாவின் லீலை!,

http://thatstamil.oneindia.in/movies/shooting-spot/2010/03/nithyanandan-ranjitha-sexcapades-be.html

[5] தினமலர், பினாமி’கள் பிடியில் பல கோடி ரூபாய் சொத்துகள் நித்யானந்த மடம் , ‘வெறிச்’ , மார்ச் 09,2010,00:00  IST

http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6838

[6] http://www.hindu.com/2010/03/09/stories/2010030955501300.htm

[7] http://m.timesofindia.com/PDATOI/articleshow/5659498.cms

நித்யானந்தா, சன்-டிவி, கார்ட்டூன், குழந்தைகள்!

மார்ச் 8, 2010

நித்யானந்தா, சன்-டிவி, கார்ட்டூன், குழந்தைகள்!

இன்றைய “டி ஹிந்து”வில் ஒரு கார்ட்டூன் வந்துள்ளது.

மிகவும் அருமையாக எல்லாவற்றையும் அடக்கி அந்த கார்ட்டூன் பல விஷயங்களை நமக்க்கு எடுத்துக் காட்டுகிறது!

The-Hindu-cartoon-obscene-TV

The-Hindu-cartoon-obscene-TV

“தி ஹிந்து”, அந்த கார்ட்டூனிஸ்ட் மற்றும் ஆசிரியருக்கு நன்றி.!

நித்யானந்தா பேய் – மோகம் பிடித்துள்ள ஊடகங்கள்!

மார்ச் 7, 2010
நித்யானந்தா பேய் – மோகம் பிடித்துள்ள ஊடகங்கள்!
குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010

பிற இதழ்களிலிருந்து சுவாமி நித்யானந்தாவின் காதல் லீலை – ஆ.விஜயானந்த்

http://viduthalai.periyar.org.in/20100307/news06.html

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தலைமையகம். 33 நாடுகளில் கிளைகள். 32 வயதில் இரண்-டாயிரம் கோடி ரூபாய்களுக்கு அதிபதி. உலகம் முழுவதும் 1,500 கிளைகள். விவேக் ஓபராய் முதல் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா வரை விசிறிகள் என காவி சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிய சுவாமி நித்யானந்த பரமஹம்சர், தன்னுடைய காவி உடைக்குள் ஒளித்து வைத்திருந்த காமம், நடிகை ரஞ்சிதா ரூபத்தில் அம்பலப்பட்டுப் போகும் என கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். கதவைத் திற காற்று வரட்டும் என்றவர் கதவைச் சாத்து காதல் வரட்டும் என்று அம்பல-மாகட்டும் என எதிர்பார்த்திருக்க மாட்டார். இப்போது சர்வதேச மீடியாக்களின் பக்கங்களில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் நித்தியானந்தர், தான் நடத்திய ஆபாச வேட்டை சி.டி. அம்பலமாகாமல் இருக்க நடத்திய கடைசி கட்ட சேஸிங் ஒரு விறுவிறுப்பான ஆங்கிலப் படம் போன்றது.

பெயர் வைத்த ரஜினியின் குரு! மன அழுத்தத்தைக் குறைக்கும் ஹீலிங் தெரபியில் எக்ஸ்பர்ட்டான நித்யானந்தரை முதன் முதலில் அடையாளம் கண்டுகொண்டது திருவண்ணாமலை விசிறி சாமியார்தான். எட்டு வயதில் இருந்தே ஆன்மிகத்தில் பற்று கொண்டிருந்த ராஜசேகருக்கு, இமயமலையில் வைத்து பரமஹம்ச நித்யானந்தர் எனப் பெயர் சூட்டியது நடிகர் ரஜினியின் ஆன்மிக குருவான பாபாஜி. மெக்கானிக்கல் டிப்ளமோ பட்டம் மட்டுமே வாங்கியிருந்த நித்யானந்தருக்கு சரளமாகப் பேசத் தெரிந்த ஆங்கிலமும், தீவிர புத்தக வாசிப்பும் தனித்த புகழைத் தேடித் தந்தது. இதுவரை யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளாத நித்யானந்தர், தனக்கென ஒரு பெருங் கூட்டத்தை ஏற்படுத்திக் கொண்டார். பெங்களூரு தமிழ்ச் சங்கத்தை நடத்தி வந்த சண்முகசுந்தரம் நித்யானந்தரிடம் பக்தியைக் காட்ட மைசூரு நெடுஞ்சாலையில் உள்ள பிடாடியில் 200 ஏக்கர் ஆசிரமம் எழுந்தது.

ஆனந்த நடன அசிங்கம்! இந்த ஆசிரமம் உருவாவதற்கும் ஒரு பின்னணியைச் சொல்கிறார்கள். பெங்களூரு ஆசிரமத்தில் அய்நூறு ஆண்டுகள் பழைமையான ஆலமரம் ஒன்று இருக்கிறது. அந்த ஆலமரத்தின்கீழ் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் சமாதியானாராம். அந்த சித்தர்தான் இந்த ஜென்மத்தில் அவதரித்துள்ள நான் என்றாராம் நித்யானந்தா. சாமியார் கைகாட்டிய அந்த இடத்திலேயே மிகப் பெரிய காம்பவுண்டு சுவர் எழுப்பப்பட்டு, நித்யானந்த தியான பீட ஆசிரமம் உருவானது. எட்டு ஆண்டுகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிர-மத்தின் அசிங்கப் பக்கங்கள் அம்பலமானது 2005 ஆம் ஆண்டில் சிறு வயதுப் பெண்களை நித்யானந்தா அருகில் அவரது சீடர்கள் அனுமதிக்கிறார்கள். ஹீலிங் தெரபியைக் கொடுக்கும் போது இளம்பெண்களின் உடல்களை வருடுகிறார். இவர் நடத்தும் ஆனந்த நடனத்தில் நடக்கும் காட்சிகள் அருவருப்பானவை. ஸ்டார் ஓட்டல்களை விஞ்சும் வகையில் ஆனந்த நடனம் இருக்கிறது என்றெல்-லாம் புகார் சொல்லப்பட்டது.

பெங்களூரு டூ சேலம் … இன்றைக்கு சுவாமிகளின் படங்களுக்குச் செருப்படி கொடுக்கிறார்கள். போராட்டம் ஆர்ப்-பாட்டம் எனத் தீவிரம் காட்டுகிறார்கள். முதலியார் இனத்தில் பிறந்தவரை வேற்று சாதி சன்னியாசிகள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அதன் விளைவுதான் இந்தப் பிரச்சினையெல்லாம் என புதுக் காரணத்தை அடுக்கிய ஆசிரம நிருவாகி ஒருவரிடம் அப்படியானால் வெளியான படங்கள் அவருடையது அல்ல என்கிறீர்களா? என்றோம்.

இது பற்றி உண்மைகளைப் பேச ஆரம்பித்தால் எனக்கு நேரும் விளைவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. இந்த ஆபாச சி.டி. விவகாரத்தின் பின்னணி எட்டுப் பேருக்குத் தெரியும். ஆசிரமத்தில் சுவாமிக்கு அடுத்தடியாக இருக்கும் இவர்கள் மூலம்தான் பெரும் தொகையைக் குறி வைத்துப் பேரம் நடந்தது. இரண்டு மாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்த சேஸிங் காட்சிகள் பெங்களூரு ஆசிரமத்தில் தொடங்கி, சேலம் அழகாபுரத்தில் முடிந்தது என்று சொன்னால்தான் பொருத்தமானதாக இருக்கும். இந்தப் பேரத்தில் பங்கெடுத்த ஒருவரிடம் அனுப்புகிறேன். அவரிடம் பேசுங்கள். இன்னும் விளக்கமாகத் தகவல் கிடைக்கும் என நம்மை அங்கிருந்து சென்னை நகரின் பிரதான பகுதியில் உள்ள அந்த நபரின் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

நாம் சந்தித்த ஆசிரமத்தின் அந்த முக்கிய நபர் கூறும் காட்சிகள் இனி அப்படியே.

ரஞ்சிதா என்ட்ரி … இதுவரை மீடியாக்களில் ஒளிபரப்பான காட்சிகள் இருபது நிமிடம் அய்ந்து செகண்ட். ஆனால், உண்-மையில் ஒரு மணிநேரம் 48 நிமிடங்கள் கொண்ட முழுநீளஆபாசப்படம் அது. நடிகை ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் அறை பெங்களூருவில் உள்ள அவரது படுக்கை அறைதான். அந்தப் படுக்கையறைக்குள் அவ்வளவு சுலபத்தில யாரும் நுழைய முடியாது. ராணுவத்தில் மேஜராக இருந்த ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார் ரஞ்சிதா. நாடோடித் தென்றல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி வரிசையில் வந்த நேரத்தில் திருமணமும் செய்து கொண்டார். காஷ்மீரில் சில காலம் சேர்ந்து வாழ்ந்த ரஞ்சிதாவுக்கு அந்த வாழ்க்கை பிடிக்காமல் விவாகரத்து வாங்கினார். மிகுந்த மனப் போராட்டத்தில் இருந்த அவரிடம் நடிகை ராகசுதா, சுவாமி நித்யானந்தாவிடம் ஹீலிங் தெரபி வாங்கினால், மனசாந்தி கிடைக்கும் என பெங்களூரு நெடுஞ்சாலைக்கு ரூட் போட்டுக் கொடுத்தார். இதன் பிறகு ஆசிரமத்திலேயே தங்கி சேவை செய்ய ஆரம்பித்தார் ரஞ்சிதா என தொடக்கத்தை விவரித்தவர்,

அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் . . .மரணத்தை மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை உருவாக்கவேண்டும். அடிமனதில் மன அமைதியை உருவாக்குவதன்மூலம் இறைவனை அடைய-லாம் என்ற சுவாமியின் அடிப்படை தியரி ரஞ்சிதாவுக்கும் பிடித்துப் போய்விட்டது. பெங்களூரு ஆசிரமம் ஒரு வினோதமானது. அங்கு ஆண், பெண் பாகுபாடெல்லாம் கிடையாது. ஓரிரு மணி நேர உறக்கம். மற்ற நேரமெல்லாம் தியானம்தான்.

எப்போதும் இளம் பெண் துறவிகளும், ஆண் துறவிகளும் நடந்து கொண்டேயிருப்பார்கள். இந்த வாழ்க்கையோடு ரொம்பவே பழக்கப்பட்டு விட்டார் ரஞ்சிதா. நித்யானந்தரின் படுக்கையறையைச் சுத்தம் செய்ய பல பெண்கள் வந்து போவார்கள். அவர்களைப் போல்தான் இவரும் ஒரு கட்டத்தில் சுவாமியோடு மிகவும் நெருக்கமாகிவிட்டார். இதை ஒரு சில துறவிகள் பார்த்துவிட்டாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை. அங்குள்ள வாழ்க்கை முறைகள் அப்படி. அளவுக்கு மிஞ்சிய செக்ஸ் தவறில்லை என்பது ஓஷோவின் தத்துவம்தான் என்றாலும், அதை வெளிப்படையாக யாரும் சொன்னதில்லை.

அமெரிக்க கேமரா அஸ்திரம் . . .இந்த நேரத்தில் சுவாமிகளின் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைப் பார்த்த ரஞ்சிதாவுக்கு சின்ன ஆசை ஏற்பட்டிருக்கிறது. சரியான நேரம் பார்த்துக் காத்துக் கிடந்தார். அவருக்குப் பின்புலமாக இருந்து தூண்டில் வீசியது ஆசிரமத்தின் ஒரு சில துறவிகள்தான்.  அவர் பயன்படுத்திய கேமிரா உளவுத் துறைக்குப் பயன்படுத்தும் அதிநவீன கேமரா. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டது என்பது நாங்கள் பின்பு நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. அந்த கேமிராவின் தொழில் நுட்பம் எப்படியென்றால் ஏதாவது பொருள்கள் அசைந்தால் மட்டுமே படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. சுவாமியோடு தான் இருக்கும் நாட்களில் உடலுறவுக் காட்சிகளைப் படம் பிடிக்கவேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரது அறையைச் சுத்தம் செய்யப் போனவர் படுக்கையில் இடதுபுறத்தில் உள்ள பூச்சட்டியில் இந்த கேமராவை சரியான கோணத்தில் பொருத்தியிருக்கிறார். வழக்கம் போல் அன்றிரவு இருவரும் இணைந்திருக்கிறார்கள். நீங்கள் பார்த்த ஒரு காட்சியின் போது விளக்கை அணைக்க சுவாமி முயலும்போது ரஞ்சிதா அதைத் தடுக்கும் காட்சிகள் தெளிவாகத் தெரியும். இதிலிருந்தே ரஞ்சிதாவின் சூழ்ச்சியைத் தெரிந்து கொள்-ளலாம்.

துணையோடு தூண்டில்: இதன்பிறகு எதையும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல் ஆசிரமத்தின் பணிகளில் தீவிரம் காட்டிய ரஞ்சிதா, சுவாமியின் அனுமதியோடுதான் டி.வி.சீரியல்களில் தலைகாட்டி வந்தார். இந்தக் காட்சிகளை வியாபாரமாக்கும் நோக்கத்தில் இருந்தவருக்கு தூபம் போட்ட சாமியார்களும் ஆசிரமத்தில் ஒரு சில பாலியல் விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள்தான். இவர்களது சீண்டல்களால் இதுவரை அய்ந்து இளம் பெண்கள் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். ஒரு கனடா நாட்டு இளம் துறவி மாடியில் இருந்து குதித்து தற்-கொலை செய்து கொண்டார். இதெல்லாம் ஆசிரம வளா-கத்திற்குள்ளேயே மூடி மறைக்கப்பட்ட உண்மைகள். இதில் நித்யானந்தா டார்ச்சரால் இரு பெண்கள் தற்-கொலை வரை போனதாகவும் சொல்கிறார்கள் என்றனர்.

ரஞ்சிதாவை இயக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் சுவாமி தர்மானந்தா. சேலத்தைச் சேர்ந்த இந்தத் துறவியின் இயற்பெயர் லெனின். 2004 ஆம் ஆண்டு காந்தப் படுக்கைமோசடியில் சேலம் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்த விவகாரத்தில் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்தான் லெனின். பின்னர் பெயரை மாற்றிக் கொண்டு சுவாமியின் நம்பிக்கைக்குரிய ஒருவராக மாறினார். ஆசிரமத்தின் முதல் பத்து முக்கிய நபர்களில் இவரும் ஒருவர். ரஞ்சிதா விவகாரத்தில் இருந்து சாமியைக் காப்பாற்ற, தான் பாடுபடுவதாகக் கடைசி வரை காட்டிக் கொண்ட இந்தத் துறவிதான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது மீடியாக்களுக்கு இதை அனுப்பி வைத்ததும் இந்த லெனின்தான்.

ஆபாசத்தின் விலை அய்ம்பது கோடி ரூபாய்: இரண்டு மாதங்களுக்கு முன்பு பேச்சு வார்த்தை தொடங்கியது. அப்போது லெனின் தன்னிடம் மிக ரகசியமாக இதை ரஞ்சிதா கொடுத்ததாக சில படங்களை ஆசிரமத்தின் தலைமை நிர்வாகியிடம் கொடுத்தார். அதில் ரஞ்சிதாவும், சுவாமியும் இருக்கும் ஆபாசப் படங்கள் மட்டுமே இருந்தன. இதற்கு மசியாத ஆசிரம நிர்வாகிகளிடம் சி.டி.யும் காட்டப்பட்டது. இது வெளி-யாகாமல் இருக்க ரஞ்சிதா நிர்ணயித்த தொகை அய்ம்பது கோடி ரூபாய். இதில், சரிபாதி லெனின் மற்றும் அவரது அண்ணன் குமார் ஆகியோருக்கு என்று முடிவானது.

நித்தியானந்தரின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சதானந்தா உள்ளிட்ட வெகுசிலருக்கு மட்டும் இந்த சி.டி.காட்டப்பட்டது. இந்தக் காட்சிகளைப் பார்த்த பெங்களூரு ஆசிரமத்தின் வி.அய்.பி. துறவி ஒருவர், இது பக்கா பிளாக்மெயில். இது சுவாமியே கிடையாது. அவளை உள்ளே அனுமதித்ததற்கு அய்ம்பது கோடி ரூபாய் என்பது டூ மச் என சத்தம் போட்டார். இவரது அவசர செயல்பாடுதான் முதலில் போடப்பட்ட அச்சாரம். இந்த சி.டி.விவகாரம் பல கட்டங்களாக சென்னை மற்றும் பெங்களூருவில் பேரம் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடக்கும் போது செல்போனில் மட்டுமே ரஞ்சிதா பேசுவார். தர்மானந்தாதான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டார்.

நேரடிப் பேச்சில் நித்தியானந்தா: பின்னர் விவகாரம் சீரியஸாகப் போன நேரத்தில் மட்டும் நான்கு முறை நேரடிப் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் நித்யானந்தா. பெங்களூரு ஆசிரமத்தில் பல கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும், சக துறவிக்கு இவ்வளவு பணம் செல்வதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. லெனினை சந்தேகத்துடன் பார்த்து வந்தனர். பணம் வருவதற்குத் தாமம் ஏற்பட்டதால் ரஞ்சிதாவுக்குச் சாதகமாக நேரடி வியாபாரத்திற்கு உதவி செய்ய முன்வந்தார் சென்னையைச் சேர்ந்த கிறிஸ்துவ தொழில் அதிபர் ஒருவர். சுவாமியின் பெயர் கண்டிப்பாக நாறிப்போகும். பணத்தைக் கொடுத்து செட்டில் பண்ணுங்கள் என அவர் சொல்ல, இரண்டு வாரத்திற்கு முன்பு சென்னையில் முக்கிய ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், ஆசிரம நிர்வாகிகள், தர்மானந்தா, தொழிலதிபர் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

ஃபைனல் ரேட் 15 கோடி ரூபாய்: நீண்ட நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் அய்ம்பது கோடி என்பது அதிகம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என கோரிக்கை வைக்கப்பட கடைசியாக யாருக்கும் பாதகமில்லாமல் முடிவாக 15 கோடி கொடுக்கிறோம். அந்த சி.டி.யின் ஒரிஜினல் பிரிண்ட் படங்கள் என அனைத்தும் செட்டில் செய்யப்பட வேண்டும் என ஆசிரம நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்தனர். இந்தத் தகவல் நித்யானந்தருக்கு அப்போதே செல்போனில் சொல்லப்பட நான் கட்டிக் காத்த பெயர் காற்றில் பறந்துவிடக்கூடாது. 15 கோடி ரூபாயை செட்டில் பண்ணுங்கள். தர்மானந்தாதான் இவ்வளவும் செய்திருக்கிறான். அவனை ஒன்றும் செய்ய வேண்டாம் எனப் பேசியிருக்கிறார். இதன் பிறகும், இந்தப் பணம் லெனினுக்குப் போய்ச் சேரக்கூடாது என ஆசிரம நிர்வாகிகள் வஞ்சம் பார்த்ததன் விளைவுதான் இப்படி ஊரெல்லாம் சிரிப்பாய் சிரிக்கக் காரணம் என பேரத்தின் உச்சத்தை அதிர்ச்சியோடு விவரித்தவர், லெனினுக்குச் சொந்த ஊர் சேலம். இதே சேலம்தான் நித்தியானந்-தருக்கு இறுதி சவக்குழி தோண்டக் காரணம். கடந்த 15 ஆம் தேதியில் கோவை சேலத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றார் சுவாமி. கோவை வ.உ.சி. மய்தானத்தில் அவரைப் பார்க்கத் திரண்ட கூட்டமே அவரது மகிமையைச் சொல்லும். சேலம் அழகாபுரத்தில் உள்ள ஆசிரமத்துக்குச் சென்றவர், முக்கிய வி.அய்.பி.களின் வீடுகளுக்குச் சென்று பூஜையும் செய்தார். சேலம் நேரு அரங்கில் மாபெரும் சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு ராம-கிருஷ்ணா தெருவில் உள்ள ஆசிரமத்தின் கிளைக்கு இரவு வந்தார். தர்மானந்தாவும் அங்கு இருந்தார். இந்தக் கிளையில் நள்ளிரவு இரண்டு மணி வரை நடந்த வாக்குவாதங்களை சாகும் வரையில் நித்யானந்தாவால் மறக்கமுடியாது.

தர்மானந்தா உள்பட பேரம் பேச அழைக்கப் பட்டவர்கள், தொகை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றெல்லாம் பேச, ஒரு கட்டத்தில் கடுப்-பின் உச்சிக்கே போன சுவாமி, ஆசிரமத்தில் தர்மானந்தா செய்த செயல்களைப் பற்றியும் ரஞ்சிதாவோடு சேர்ந்து கொண்டு என்னை பிளாக் மெயில் செய்வது சரியானதா? எனவேதனைப்பட்டார். அருகில் இருந்த ஆசிரம நிர்வாகிகள் சுவாமியின் நிலையைப் பார்த்து கண்ணீர் வடித்தனர். தர்மானந்தாவுக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவை, தான் அனுபவிப்பதாகப் புலம்பினார் சுவாமி. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் ரஞ்சிதா தரப்பினர் பணம் வந்தே தீரவேண்டும். இல்லாவிட்டால் ஊரெல்லாம் அம்பலமாகும். அதான் ஆசிரமத்தில் பல ஆயிரம் கோடிகள் இருக்கிறதே என அழுத்தமாகப் பேச ஒரு கட்டத்தில் தன் முகத்தில்தானே அறைந்து கொண்டு கதறி அழ ஆரம்பித்துவிட்டார் நித்யானந்தா.

நீண்ட நேரம் நீடித்த அவரது அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. பின்னர் ஒரு வழியாகத் தன்னைத் தேற்றிக் கொண்டவர், இத்தோடு செட்டில் செய்துவிடுங்கள். நான் இனி தர்மானந்தா முகத்தி-லேயே விழிக்கக் கூடாது என முடிவாகச் சொல்லிவிட்டார். அத்தோடு பிரச்சினை முடிந்தது. பணத்தை செட்டில் செய்வதற்குக் கால அவகாசம் கேட்கப்பட்டது. அந்த நேரத்தில் சுவாமியின் கதறலைப் பார்த்திருக்கிறார் வி.அய்.பி. பக்தர் ஒருவர். அவர் ஆசி-ரமத்தின் தலைமை நிர்வாகி ஒருவரிடம், தர்-மானந்தாவின் கதையை நான் பார்த்துக் கொள்-கிறேன். பணம் எதுவும் தரவேண்டாம். போலீஸ் அதிகாரிகள் நமக்குத் துணை நிற்பார்கள் எனச் சொல்லியிருக்கிறார்.

டி.ஜி.பி. இருக்கிறார்: இந்தத் தகவலை சுவாமியிடம் கூறிய ஆசிரமத்தின் துறவி தமிழ்நாட்டில் டி.ஜி.பி. லத்திகா சரணிடம் பேசப் போகிறார்கள். அவனை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடலாம். போலீஸ் விட்டாலும் உங்களுக்காக உயிரை விடக் காத்திருக்கும் மூன்றரை லட்சம் பக்தர்கள் அவனை சும்மா விடமாட்டார்கள். என ஆறுதல்படுத்த நிம்மதிப் பெருமூச்சில் ஆழ்ந்தார் நித்யானந்தா. இந்த விவரம் தர்மானந்தாவுக்குத் தெரிந்தால் திருந்திவிடுவான். 15 கோடி ரூபாய் மிச்சம் எனஆசிரம நிர்வாகி ஒருவர் கணக்கு போட்டார். இதைத் தெரிந்து கொண்ட தர்மானந்தா, இரண்டு மாதம் பாடுபட்டும் பைசா தராமல் ஏமாற்றுகிறார்கள். போலீசில் போனால் சிக்கிவிடு-வோம். போலீசிலிருந்து தப்பினால் இவர்கள் உயிரோடு விடமாட்டார்கள் எனப் பயந்து முதல் கட்டமாக செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார்.

இப்போது ரஞ்சிதா: நாங்கள் எவ்வளவோ முயற்சித்தும் தர்மானந்தாவைப் பிடிக்க முடியவில்லை. சேலத்திலும் தேடினோம். இதன் பிறகு ரஞ்சிதாவோடு சுவாமி இருக்கும் ஒரு சில காட்சிகளை மட்டும் அனைத்து மீடியாக்களுக்கும் சென்று சேரச் செய்தார். இதை வைத்து ஒரு மீடியா, இரண்டு கோடி ரூபாய் கொடுங்கள். செய்தியை வெளியிட மாட்டோம் என மிரட்டிய தகவலும் உண்டு. இதே மீடியா நடிகை ரஞ்சிதாவை நித்யானந்தாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கத் தூண்டியபோது நான் தவறு செய்துவிட்டேன். என் விவகாரத்தை நான் கையாளாமல் மூன்றாம் நபரிடம் பொறுப்பை ஒப்படைத்ததுதான் பெருங்குற்றம். சுவாமி-ஜிக்கு எதிராக நான் எந்தப் புகாரும் சொல்லமாட்டேன் என உறுதியாக மறுத்துவிட்டார்.

இப்போது நித்யானந்தாவிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டு பெங்களூரு ஆசிரமத்தில் ஹாயாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. மீடியாக்களின் பார்வை திசை மாறும்போது சீரியல் வேலைகளில் இறங்குவார். சுவாமி இப்போது வாரணாசியில் பூரண கும்பமேளாவில் இருக்கிறார். ஒரு வாரம் கழித்துதான் வருவார். அதற்குள் எல்லாம் மாறிவிடும். இதுதான் நடக்கப் போகிறது என்றவர், எது நடக்கக்கூடாது என சுவாமி நினைத்தாரோ அது நடந்து விட்டது. இதில் குற்றவாளி யார்? காமத்திற்கு சபலப்பட்டவரிடம் பணத்திற்கு சபலப்பட்டவர் விளையாட நினைத்தார். இரண்டு பேரின் பசியும் ஒன்றுமில்லாமல் மீடியாவின் பெரும் பசியைத் தீர்த்துவிட்டதுதான் இந்த இருவரும் செய்த அருஞ்செயல் என சேஸிங்கை படிப்படியாக விவரித்து முடித்தார். நமக்கு வியர்த்துக் கொட்டியது

மீடியாக்களில் நித்யானந்தரின் ஆலிங்கனங்கள் அம்பலமாகும் தகவல்கள் வாரணாசியில் இருக்கும் அவருக்குத் தெரிவிக்கப்பட, எல்லாம் எனது விதிப் பயன். உங்கள் எல்லோரையும் நான் மனதார நம்பினேன். என்னைக் கைவிட்டு விட்டீர்கள். இந்தச் செயலால் நான் காராஹிருகத்திற்குச் (சிறை) செல்ல வேண்டிய நிலை வந்தாலும் ஏற்றுக் கொள்வேன். கடவுளின் விருப்பம் எதுவோ அதுதான் நடக்கும் எனச் சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதாராம்.

இப்போது அவரைத் தேற்றுவதற்குப் புதிய வார்த்தைகளைத் தேடி அகராதியைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரம துறவிகள்.

– நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர், 11.3.2010